வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளில் பூனையும் ஒன்றாகும். குழந்தைகள் முதல் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் பூனைகளின் அளவு ஒரே மாதிரியாகத் தான் காணப்படுவதைத் தான் பார்த்திருப்போம். சீனாவில் சாங்டங் மாகாணத்தில் காணப்படும் Monster என்ற 9 வயது பூனை 33 பவுண்ட்ஸ் எடையுடன் காணப்படுகிறது. இதன் உரிமையாளர் மீன், கோழி மற்றும் பன்றி இறைச்சிகளை தினமும் ஆறு பவுண்டுகள் இந்தப் பூனைக்கு உணவாக அளிக்கிறார்.







