This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Thursday, July 14, 2011

புலமைபரிசிலில் சித்திபெற்ற 6 மாணவர் ஜப்பான் விஜயம்

ஆசிய பசுபிக் சிறுவர்கள் இணைப்புத் திட்டத்தின் கீழ் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் கடந்தாண்டு அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் ஆறுபேர் ஜப்பானுக்கான பயணத்தை இன்று கொள்ளவுள்ளனர்.

கடந்த மூன்று மாதங்களாக இவர்கள் ஜப்பான் மொழியை கொழும்பில் கற்றதுடன் ஜப்பான் நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில் அந்த நாட்டின் பழக்கவழக்கங்களை அறியவும் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் இருந்து ஒரு மாணவியும் ஏனைய இடங்களைச் சேர்ந்த ஐந்து மாணவ, மாணவிகளுமாக மொத்தம் ஆறு மாணவர்கள் இந்தச் சுற்றுலாவில் இடம் பெற்றுள்ளார்கள்.

இவர்களுடன் முகாமையாளராக ஸ்ரீயாணி ஹேவாஹடம் உதவியாளர்களாக ரி.எம். ரிலக்கமல் முதுஹம டில்சான் ஜெயதிலகவும் செல்லவுள்ளார்கள்.

இந்த அணியில் யாழ்ப்பாணம், உடுவில் மகளிர் கல்லூரியில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்தவரும் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியில் கல்வி கற்பவருமான தாரணி இந்திரன், களுத்துறை முஸ்லிம் பெண்கள் மகாவித்தியாலய பசிதா பாறுக், கொழும்பு றோயல் கல்லூரியைச் சேர்ந்த நவீன் ஆர்.பிறேமரத்தினா, கொழும்பு ஆனந்தாக் கல்லூரியைச் சேர்ந்த சானுஜா எதிரிசிங்கா, காலி மகிந்தா வித்தியாலயத்தைச் சேர்ந்த லகித் நவவோதயா, கொழும்பு விசாக வித்தியாலயத்தைச் சேர்ந்த ஜே. ஜீ.பி.களனி பயிசரா ஆகியோர் இந்த சுற்றுலாவுக்குச் செல்கின்றனர்.

இவர்கள் ஒரு மாத காலம் ஜப்பானில் தங்கி நின்று பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொத்துவில்லில் விபத்து : இருவர் படுகாயம்

பொத்துவில் கோமாரி பிரதேசத்தில் கதிர்காமத்தில் இருந்து பயணிகளுடன் அக்கரைப்பற்றுக்கு சென்ற இலங்கை போக்குவரத்து சபை பஸ் வண்டி இன்று அதிகாலை வீதியை விட்டு விலகி இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் படுகாயமடைந்தள்ளனர் என பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.

பொத்துவில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டி கதிர்காமத்திலிருந்து புதன் கிழமை இரவு 11.30 பயணிகளுடன் அக்கரைப்பற்றுக்கு சென்றபோது இன்று அதிகாலை 3.30 மணியளவில் கோமாரி முருகன் ஆலயத்திற்கு முன்னால் வீதியை விட்டு விலகி மின்சார தூண்களுடன் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் சாரதியும் சிறுமி ஒருவொரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

மனைவியை கொலை செய்த கணவன் : குருநாகலையில் சம்பவம்

குருநாகலையில் தித்தவல்ல தருமபால வீதியில் உள்ள வீட்டொன்றில் மனைவியை கொலை செய்து பொலித்தீன் உரைமூடையில் கட்டி கட்டிலின் கீழ் மறைத்து வைத்துவிட்டு கணவன் தலைமறைவாகியுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து சடலம் மீட்கப்பட்டுள்ளது. பொலிஸார் மேற்கொண்ட முதந்கட்ட விசாரணையின் மூலம் கணவனுக்கும் மனைவிக்கும் பிணக்கு அதிகம் காணப்பட்டமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கணவன் தலைமறைவாகி உள்ளதை அடுத்து அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுண்டக்காய் நாட்டில் மக்கள் எப்போதும் ஆதிவாசிகளாக இருக்க மாட்டர் - சங்கரி

நம் நாடு ஒரு சுண்டக்காய் நாடு. அதில் ஒரு சிறு பகுதியே வட மாகாணமாகும். வடமாகாணத்தின் ஒரு சிறு பகுதியிலேயே உள்ளூராட்சி சபைத் தேர்த்தல் நடைபெற உள்ளது. மக்களை இஷ்டம் போல் செயற்படவிடாது, நாம் எல்லோரும் ஆதிவாசிகள் என்ற நினைப்பிலேயே அரசும், அரசின் கையாட்களும் செயற்படுவது வேடிக்கையானதும் வேதனையை தரும் விடயமாகும் என தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் வீ.ஆனந்தசங்கரி அறிக்கை விடுத்துள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

வடக்கே வசந்தம் வீசவில்லை. மாறாக அமைதிப்புயல் வீசுகின்றது என்று ஐனாதிபதிக்கே நான் பலதடவை கூறியுள்ளேன். உண்மையும் அதுவே. நடந்து முடிந்தது போர் அல்ல. போர் என்பது இரு நாடுகளுக்கு இடையில் நடப்பது. இது உள்ளூர் கிளர்ச்சியை அடக்க அரசு அதனை போராகப் பயன்படுத்தியது. நோக்கம் நிறைவேறிவிட்டது. அரசு கண்ணியமான முறையில் தனது படைகளை வெளியேற்றியிருக்க வேண்டும்.

அதைவிடுத்து தொடர்ந்து இராணுவத்தை வடக்கு கிழக்குப் பகுதிகளிலேயே நிலைகொள்ள வைத்து மக்களின் அடிப்படை சுகந்திரத்தை அனுபவிக்க இடமளிக்காது மூலை முடுக்கெல்லாம் தற்காலிகமாக நிலைகொண்டிருந்த இரானுவத்தை நிரந்தரமாக நிலை கொள்ள வைத்து மக்களுக்கு நிரந்தர பயத்தையும், பீதியையும் ஏற்பபடுத்த எண்ணுவது அப்பாவி மக்களுக்கு அரசும், அரசுடன் இணைந்து செயற்படும் எம்மவரில் சிலரும் செய்யும் பெருந்துரோகமாகும்.

யுத்தம் முடிந்து இரண்டு ஆண்டுகள் கடந்தும் இன்னும் மக்கள் தமது வீடுகளில் நிம்மதியாக வாழ முடியவில்லை. அடிப்படை வசதிகள் கூட ஏற்படுத்தப்படவில்லை. இன்னும் மூன்று நேர உணவும் உண்ண வழியில்லாமல் பலர் பசியுடன் வாழ்கின்றார்கள். தமது உடைமைகளை முற்றும் இழந்த நிலையிலே, அரசு கொடுத்துவந்த நிவாரணங்களும் நிறுத்தப்பட்டு அனேகர் பிச்சை எடுக்கும் நிலையில் உள்ளார்கள்.

தினமும் நாலு திறப்பவிழா, நாலு அமைச்சர்களின் பவனி என்று மக்களை இங்கும் அங்கும் அலைத்து பஸ் வண்டிகளில் ஏற்றிச் சென்று புரியாணி சாப்பிட வைத்து அனுப்பப்படும் அப்பாவிகள், இராணுவத்தின் கட்டளைகளுக்குப் பயந்து தமது உழைக்கும் வாய்ப்பை இழந்து அலைக்களிக்கப்படுகின்றார்கள்.

சில பிரமுகர்கள் தம்மை மட்டும் நேசி என்று கேட்காது தாம் வளர்க்கும் செல்லப்பிராணிகளையும் நேசி என்கின்றார்கள். நம் மக்கள் இதுவரை காலமும் அனுபவித்ததிலும் பார்க்க இன்று படும் துன்பம் மிகப் பெரிதாகும்.

நடக்க இருக்கும் தேர்தல் வெறும் உள்ளூராட்சி சபைத் தேர்தல். இதற்கு ஐனாதிபதியோ, அமைச்சர்களோ படையெடுக்க வேண்டிய அவசியம் இல்லை. வயல் விதைப்பது, விதை நெல்லு இதுதான் என காட்டுவது, இப்படித்தான் உழுவது என்பதெல்லாம் நம் மக்களுக்கு கற்றுதர வேண்டியளவிற்கு நாம் ஆதிவாசிகள் அல்ல.

உண்மையாக ஐனாதிபதி அவர்கள் நம் மக்களுக்கு நன்மை செய்ய விரும்பினால் தனது அமைச்சர் பட்டாளத்தை உடனடியாக திரும்ப அழைத்து, திறப்பு விழாக்கள், அடிக்கல் நாட்டுதல் போன்ற வைபவங்களை நிறுத்தச் சொல்லி அதற்குச் செலவாகும் பெரும் தொகையை வறுமையாலும் பசியாலும் வாடும் நாடு முழுவதிலும் பரவியுள்ள சிங்கள, தமிழ், இஸ்லாமிய மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்குச் செலவிடுவதே நியாயமானதும், பொருத்தமானதுமாகும்.

இது அரச தலைவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட வேண்டிய விடயமகும். சுண்டைக்காய் அளவான எமது நாட்டுக்கு எவரும் சதி செய்யவுமில்லை. அதன் முன்னேற்றத்தை தடுக்கவுமில்லை. அதற்கு மாறாக அத்தனை நாடுகளும் வாரி வாரி வழங்குகின்றன. நாம் சரியாக நடந்தால் எவரின் சதிபற்றியும் நாம் கவலைப்படத் தேவையில்லை.

தேர்தலிற்கான பணிகளை பொலிஸாரிடம் ஒப்படைத்து விட்டு தேர்தல் முடியும் வரை இராணுவம் தேர்தல் சம்பந்தமான தலையீடுகளை மேற்கொள்ள வேண்டியதில்லையென படையினருக்கு கடுமையக எச்சரிக்க வேண்டும். விடுதலைப் புலிகளின் முக்கிய பொறுப்பில் இருந்தவர்கள் பலர் இன்று அமைச்சர்களின் இணைப்பாளர்களாகவும், ஆளும் கட்சியின் வேட்பாளர்களாகவும் உள்ளனர்.

இவர்களில் சிலர் கடந்த கால குற்றச் செயல்களிற்காக சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டும் அவர்கள் சேர்த்து வைத்துள்ள சொத்துகள் சம்பந்தமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். எனவே மக்கள் தான் அரசு தரப்பை பார்த்து பயப்பட வேண்டுமே தவிர, அரசாங்கம் பயப்படத் தேவையில்லை. அரசிடம் படையினரும், முன்னாள் புலி உறுப்பினர்களுமே உள்ளனர்.

தேர்தல் சம்பந்தமான சகல விடயங்களும், வாக்காளர் மற்றும் அதிகாரிகள் ஆகியோரின் பாதுகாப்பு உட்பட அனைத்து நடவடிக்கைகளும் அவசியமேற்படின் பிற மாநிலங்களிலிருந்து மேலதிக பொலிஸாரை வரவழைத்து பொலிஸ் அதிகாரிகளின் பொறுப்பில், கையளித்து இராணுவம் முற்று முழுதாக முடக்கிவைக்கப்பட வேண்டும்.

குருநாகலையில் விபத்து: ஒருவர் பலி மூவர் காயம்

குருநாகலை பொட்டுஹெர பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் மூவர் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று கோண்டதிலேயெ விபத்து சம்பவித்துள்ளது. சம்பத்தில் காயமடைந்த நால்வரையும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயெ ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் 36 வயதுடைய காமினி பதிராஜா என்பவரே உயிரிழந்தவர் ஆவார். சம்பவம் தொடர்பில் குருநாகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரானியப் பிரஜை இலங்கையில் கைது

போலி கடவுச்சீட்டு மூலம் இத்தாலி செல்ல முயன்ற ஈரான் நாட்டு பிரஜை ஒருவரை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய குற்றப்புலனாய்வுத் துறையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஈரானிய நாட்டு பிரஜை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து குறித்த நபரை ஜூலை 26ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மும்பை குண்டுவெடிப்பு: விருது நிகழ்ச்சியை நிறுத்திய ஐஸ்வர்யா

டெல்லி: மும்பை தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம் என்று ஐஸ்வர்யா ராய் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை மும்பையின் முக்கியப் பகுதிகளில் நடந்த வெடிகுண்டு தாக்குதல்களால் பாலிவுட் அதிர்ச்சி அடைந்துள்ளது. தாயாகப்போகும் ஐஸ்வர்யா ராயும் பேரதிர்ச்சி அடைந்துள்ளார். ஐஸ்வர்யா கணவர் அபிஷேக்குடன் நேற்று டெல்லிக்கு சென்றிருந்தார்.

அங்கு ஐஸ்வர்யாவுக்கு பிரெஞ்சு அரசு நேற்று விருது வழங்குவதாக இருந்தது. இந்த தாக்குதல் சம்பவம் பற்றி கேட்டவுடன் இந்த நிகழ்ச்சியை தள்ளிவைக்குமாறு ஐஸ்வர்யா கேட்டுக் கொண்டார்.

இது குறித்து ஐஸ்வர்யா ராய் கூறியதாவது,

மும்பையில் நடந்த வெடிகுண்டு தாக்குதல்கள் குறித்து கேள்விப்பட்டவுடன் அதிர்ச்சி அடைந்தோம். இந்த தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும், அவர்கள் குடும்பத்தினருக்காவும் நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம். இந்த நேரத்தில் இந்தியர்களாகிய நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து நம்மை யாரும் அசைத்துவிட முடியாது என்று தீவிரவாதத்தை ஊக்குவிப்பவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் நியாயம் கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

நான் விருது வாங்குவதற்காக டெல்லிக்கு வந்தேன். ஆனால் அதற்கு இது சரியான நேரம் அல்ல. இந்த விழாவை ஒத்திவைக்க வேண்டும் என்று பிரெஞ்சு தூதரை கேட்டுக் கொள்வது தான் சரி என்று நானும், என் குடும்பத்தாரும் நினைத்தோம் என்றார்.

இந்த விழாவில் கலந்து கொள்ள அமிதாப்பும் டெல்லிக்குச் சென்றிருந்தார். ஆனால் மும்பை சம்பவம் பற்றி கேட்டதும் அவர் விழாவிற்கு செல்லவில்லை.

அமிதாப்பின் டுவீட்:

மும்பையில் வெடிகுண்டு தாக்குதல்கள்...!!கடவுளே! மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று நம்புகிறேன்! என்று டுவிட்டரில் எழுதியிருந்தார்.

மற்ற நடிகர்-நடிகைகள் மற்றும் திரைத்துறையினரும் தங்கள் அனுதாபத்தை டுவிட்டரில் தெரிவித்திருந்தனர்.

தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நான் வருந்துகிறேன். கோழைத்தனமான தாக்குதல்கள் கண்டனத்திற்குரியது என்று இயக்குனர் மாதுர் பந்தர்கர் டுவிட்டரில் கூறியுள்ளார்.

நடிகர் ஷஹீத் கபூரின் டுவீட்:

மும்பையில் 3 வெடிகுண்டு தாக்குதல்கள்... தயவு செய்து வீடுகளுக்கச் செல்லுங்கள்!!!

பிரியங்கா சோப்ரா டுவீட்:

தயவு செய்து யாரும் வதந்திகள் மற்றும் உறுதிபடுத்தாத செய்திகளைப் பரப்பி மக்களை பீதியடையச் செய்ய வேண்டாம்.

ரித்தேஷ் தேஷ்முக் டூவீட்:

தாக்குதல்கள் பற்றி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இதி்ல பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள். பத்திரமாக வீட்டில் இருங்கள்.

சோனம் கபூர் டுவீட்:

மும்பையில் உள்ளவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று நம்புகிறோம். வீட்டில் இருங்கள், பத்திரமாக இருங்கள்.

அனுபம் கேர் கூறியதாவது,

மும்பை தாக்குதல்கள்: கோபம், ஏமாற்றம் மற்றும் உதவியின்மை பதில் அல்ல. அனைவருக்காகவும் பிரார்த்திக்கிறேன்.Topics: mumbai blast 2011, aishwarya rai, mumbai, ஐஸ்வர்யா ராய், பிரார்த்தனை, குண்டுவெடிப்பு

ரூ.45 லட்சம் கேட்டு மிரட்டல்: இணையதள ஆசிரியர் மீது நடிகர் வடிவலு போலீசில் புகார்

சென்னை: ரூ 45 லட்சம் கேட்டு தன்னை இணையதள ஆசிரியர் ஒருவர் தன்னை மிரட்டுவதாக சென்னை மாநகர போலீசில் புகார் செய்துள்ளார் நடிகர் வடிவேலு.

நடிகர் வடிவேலுவின் மேனேஜர் சங்கர் நேற்று போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அதில், "ரூ.45 லட்சம் பணம் கேட்டு, வடிவேலுவை இணையதள ஆசிரியர் ஒருவர் போனில் பேசி மிரட்டுகிறார். மலேசியாவில் கலைநிகழ்ச்சி நடத்த ஒப்புக்கொண்டுவிட்டு வரவில்லை என்றும் இதற்காக பணம் தரவேண்டும். இல்லாவிட்டால் இணைய தளத்தில் தவறான தகவல்களை வெளியிட்டு அசிங்கப்படுத்திவிடுவேன் என்றும் மிரட்டல் நபர் அடிக்கடி பேசுகிறார். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புகார் மனு மீது விசாரணை நடத்த விருகம்பாக்கம் போலீசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.Topics: vadivelu, website editor, இணையதள ஆசிரியர், வடிவேலு, மிரட்டல்

ரீமாசென் வங்க மொழியில் தாசியாக நடித்த படத்துக்கு ஏ சர்டிபிகேட்

தமிழ் சினிமாக்களில் முன்பு பிசியாக நடித்து வந்த ரீமா சென், தனது தாய் மொழியான வங்கத்தில் தாசி வேடத்தில், படுக்கை அறைக்காட்சிகள் உள்ளிட்ட கவர்ச்சிக் காட்சிகளில் நடித்த படம் ஒன்று தமிழுக்கு இளவரசி என்ற பெயருடன் மொழிமாற்றமாகி வருகிறது.

இந்தப் படம் 2004ம் ஆண்டு வங்கத்தில் வெளியான படம். படத்தின் பெயர் இதி ஸ்ரீகாந்தா. அப்படியென்றால், தங்கள் உண்மையுள்ள, ஸ்ரீகாந்தா என்று பொருள். இப்படத்தைத்தான் தற்போது இளவரசி என்ற பெயரில் மொழிமாற்றம் செய்துள்ளனர். படத்தைப் பார்த்து பயந்து போன சென்சார் போர்டு ஏ சர்டிபிகேட் கொடுத்துள்ளதாம். காரணம் படத்தில் ரீமா சென் நடித்த ஒரு படுக்கை அறைக் காட்சி.

கவர்ச்சிகரமான வேடங்களில் நடித்து பரபரப்பை ஏற்படுத்துவது இக்கால ஹீரோயின்களின் புதிய பழக்கமாகி வருகிறது. குறிப்பாக பாலுணர்வைத் தூண்டும் வகையிலான வேடங்களில் முன்னணி நடிகைகள் சிலர் நடித்து பரபப்பை ஏற்படுத்தி விடுகிறார்கள்.

காமசூத்ரா படத்தில் ரேகா படு கவர்ச்சிகரமாக நடித்து பயமுறுத்திறார். ஃபயர் படத்தில் நந்திதா தாஸ் ஓரினச்சேர்ககையில் ஈடுபடும் பெண்ணாக வந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஐஸ்வர்யா ராயே கூட ஒரு படத்தில் படு கவர்ச்சிகரமாக நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் நாயகிகள் யாரும் இப்படி நடித்ததில்லை என்றாலும் அவர்கள் தகுதிக்கேற்ற வகையில் கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார்கள்.

அந்த வகையில் ரீமா சென் நடித்த படம்தான் இந்த இதி ஸ்ரீகாந்தா. இதில் தாசி வேடத்தில் நடித்துள்ளார் ரீமா சென். தாசி வாழ்க்கையில் பல சித்திரவதைகளை சந்திக்கும் அவர் கடைசியில் அதை விட்டு விலகி சாதாரண குடும்ப வாழ்க்கைக்குத் திரும்புகிறார்.

படத்தில் ஒரு படுக்கை அறைக் காட்சியில் மிகவும் கவர்ச்சியாக நடித்துள்ளார் ரீ்மா சென். இதைப் பார்த்த சென்சார் போர்டு உறுப்பினர்கள் படத்துக்கு ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனராம்.Topics: ரீமா சென், இதி ஸ்ரீகாந்தா, இளவரசி, reema sen, bengali movie, iti srikantha, ilavarasi

திருமணம் முடிவாகட்டும், அறிவிக்கிறோம்: கரீனா

தானும், சைப் அலிகானும் பிரியவில்லை என்றும், திருமணம் முடிவானதும் அறிவிப்பதாக நடிகை கரீனா கபூர் தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டின் முன்னணி கதாநாயகி கரீனா கபூரும், நடிகர் சைப் அலி கானும் நீண்டடடடட காலமாக காதலிப்பது அனைவரும் அறிந்ததே. அன்மையில் இருவருக்கும் லடாய், அதனால் பிரிந்துவிட்டனர் என்று செய்திகள் வந்தன.

இந்த செய்தி காற்றோடு கலந்து கரீனா காதுக்கும் சென்றுள்ளது.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த கரீனாவை நிருபர்கள் மொய்த்துவிட்டனர். அப்போது கரீனாவிடம் சைப் அலி கானை பிரிந்துவிட்டீர்களாமே என்று கேட்க அதற்கு அவர் நாங்கள் இருவரும் ஒன்றாகத் தான் இருக்கிறோம். பிரிந்துவிட்டோம் என்று வரும் செய்திகள் எல்லாம் வெறும் வதந்தி. எங்களுக்கு திருமணம் நிச்சயமானதும், அனைவருக்கும் அறிவிப்போம் என்றார்.

கடந்த ஆண்டே கரீனாவும், சைப் அலி கானும் திருமணம் செய்துகொள்ளப்போவதாக செய்திகள் வந்தன. ஆனால் அடுத்த ஆண்டும் பிறந்துவிட்டது, இன்னும் திருமணம் முடிந்தபாடில்லை.

எப்பம்மா அறிவிப்பீங்க?Topics: kareena kapoor, saif ali khan, marriage, கரீனா கபூர், சைப் அலி கான், திருமணம்