This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Friday, July 15, 2011

நயன்தாராவுடன் விரைவில் திருமணம்: குருவாயூர் கோவிலில் பிரபுதேவா காணிக்கை

நயன்தாராவுடன் விரைவில் திருமணம்: குருவாயூர் கோவிலில் பிரபுதேவா காணிக்கை

நடிகர் பிரபுதேவா காதலி நயன்தாராவுடன் கேரளாவில் தங்கி திருமண ஏற்பாடுகளில் தீவிரம் காட்டி வருகிறார். இதற்கிடையே, நேற்று பிரபுதேவா நயன் தாராவுடன் குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு வந்தார். நயன்தாரா கிறிஸ்தவர் என்பதால் அவர் காரிலேயே அமர்ந்து கொண்டார்.
 
பிரபுதேவா தனது கார் டிரைவருடன் கோவிலுக்குள் சென்று 15 நிமிடங்கள் கிருஷ்ணனை வழிபட்டார். பின்னர் தங்க பட்டுச்சேலையில் தாலியை பொதிந்து வைத்து மேல்சாந்தியிடம் காணிக்கையாக கொடுத்து வழிபட்டார். அதோடு, கதலி வாழைக் குலை மற்றும் ஒரு கட்டு பணம் மற்றும் சந்தனம், நல்லெண்ணெய் ஆகியவற்றையும் காணிக்கையாக வழங்கினார்.
 
பிரபுதேவா கோவிலுக்கு வந்துள்ளார் என்பதை அறிந்த ரசிகர்கள் அவரைக் காண அங்கு திரண்டனர். இதனால் பிரபுதேவா அங்கிருந்து அவசர, அவசரமாக கிளம்பினார். பின்னர் நயன்தாராவுக்கு சொந்தமான அரியானூர் சாந்திமடம் பகுதியில் உள்ள பண்ணைத் தோட்டத்திற்கு சென்றனர்.

படங்கள் தோல்வி: இலியானா சம்பளம் 1 கோடியாக குறைப்பு

படங்கள் தோல்வி: இலியானா சம்பளம் 1 கோடியாக குறைப்பு

பிரபல தெலுங்கு நடிகை இலியானா. இந்தியில் இருந்து தமிழில் ரீ மேக் ஆகும் 3 இடியட்ஸ் படத்தில் விஜய்யுடன் நடித்து வருகிறார்.

 
இலியானாவின் தெலுங்கு படங்கள் வெற்றிகரமாக ஓடியதால் சம்பளத்தை பெருமளவு உயர்த்தினார். ரூ.1 கோடி வாங்கி வந்த அவர் ரூ.1 1/2 கோடியாக்கினார்.
 
தற்போது அல்லு அர்ஜுனுடன் தெலுங்கு பட மொன்றில் நடிக்க ரூ.2 கோடி கேட்டார். இது தெலுங்கு பட உலகினரை அதிர்ச்சியடையச் செய்தது. எந்த நடிகையும் இவ்வளவு சம்பளம் வாங்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  
 
இதனால் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களின் புதுப் படங்களில் இலியானாவை ஒப்பந்தம் செய்ய தயங்கினர். இவருக்கு வரவேண்டிய பெரிய பட்ஜெட் படங்கள் வேறு நடிகைகள் கைக்கு மாறியது.
 
இதனால் அதிர்ச்சியான இலியானா சம்பளத்தை ரூ.1 கோடியாக திடீரென குறைத்துள்ளார். சம்பள பிரச்சினையால் இழந்த படங்களையும் மீண்டும் கைப்பற்ற முயற்சிக்கிறார்

திரிபோலி நகரை குண்டு வைத்து தகர்க்க கடாபி திட்டம்: ரஷிய தூதர் தகவல்

திரிபோலி நகரை குண்டு வைத்து தகர்க்க கடாபி திட்டம்: ரஷிய தூதர் தகவல்

லிபியாவில், அதிபர் கடாபிக்கு எதிராக கடந்த 4 மாதங்களுக்கு மேலாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 புரட்சியாளர்கள் லிபியாவின் 2-வது பெரிய நகரமான பெங்காசி மற்றும் அதை சுற்றியுள்ள பலநகரங்களை கைப்பற்றி தங்கள் வசம் வைத்துள்ளனர். தற்போது தலைநகர் திரிபோலியையும் நெருங்கி விட்டனர். இவர்களுக்கு அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் உதவியாக உள்ளன.
 
இந்த நகரம் எந்த நேரமும் புரட்சியாளர்கள் வசம் ஆகலாம் என்ற நிலை உள்ளது.   ஆனால், திரிபோலியை புரட்சியாளர்கள் கைப்பற்றி விட்டால் அந்த நகரை பூண்டோடு அழிக்க அதிபர் கடாபி திட்டமிட்டுள்ளதாக ரஷியாவின் சிறப்பு தூதர் மிகைல் மார்கெலோவ் தெரிவித்துள்ளார். போர் நிறுத்தம் சமாதானம் குறித்து பேச கடந்த மாதம் (ஜூன்) 16-ந்தேதி அவர் லிபியா சென்று இருந்தார். அப்போது அந்த நாட்டின் பிரதமர் பாக்தாதி அல்- மக்முதியை சந்தித்து பேசினார். அப்போது இந்த தகவல் தனக்கு கிடைத்ததாக அவர் கூறியுள்ளார்.
 
இதை ரஷியாவில் இருந்து வெளிவரும் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.   மேலும் அவர் கூறும் போது, லிபியா அதிபர் கடாபியிடம் சக்தி வாய்ந்த ஏவுகணைகள் உள்ளன. அவற்றை அவர் இன்னும் பயன்படுத்தவில்லை. தலைநகர் திரிபோலியை புரட்சியாளர்கள் கைப்பற்றினால் ஏவுகணைகள் மற்றும் வெடிகுண்டுகள் மூலம் தற்கொலை தாக்குதல் நடத்தி அந்த நகரத்தை அழிக்க அவர் திட்டமிட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
 
இந்த தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தேர்தல் காலத்தில் பொலிஸார் இடமாற்றம் - பவ்ரல்

தேர்தல் சட்டங்களுக்கு எதிராக தேர்தல் நடைபெறும் இடங்களில் மேற்கொள்ளப்படும் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இடமாற்றம் தொடர்பில் உடனடியாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பவ்ரல் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், இதுகுறித்து தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்துக்கு பவ்ரல் அமைப்பு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இவ்வாறு தேர்தல் சட்டங்களை மீறி மேற்கொள்ளப்படும் இடமாற்றங்களினால் தேர்தல்கள் தொடர்பில் மக்களிடத்தே நம்பிக்கையின்மை அதிகரித்துவருவதாக பவ்ரல் சுட்டிக்காட்டியுள்ளது.

ஐ.நாவின் மனித உரிமை பிரகடனத்தை மீறியது இந்தோனேஷியா : சீமான்

இந்தோனேஷிய அரசால் நடுக்கடலில் சிறைப்படுத்தப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகளை விடுவிக்க முயற்சி எடுக்குமாறு மத்திய அரசை தமிழக முதல்வர் வற்புறுத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் :-

தங்களுடைய வாழ்வுரிமையை பாதுகாத்துக் கொள்ளவும், தங்கள் பிள்ளைகளுக்கு பாதுகாப்பான எதிர்காலம் அமைய வேண்டும் என்பதற்காக நியூசிலாந்து சென்ற அவர்களை இந்தோனேஷிய அரசு சிறைப்பிடித்து வைத்திருப்பது மனித உரிமைக்கு எதிரானது.

இலங்கையில் யுத்தம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆன பின்னரும் தமிழர்கள் மீது இலங்கை இனவாத அரசு தொடர்ந்து நடத்திவரும் இன அழித்தலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளவும், தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் பாதுகாப்பையும் உறுதிசெய்துக்கொள்ளவும், நியூசிலாந்து நாட்டை நோக்கி கப்பலில் பயணம் செய்த 87 ஈழத் தமிழ் அகதிகளை இந்தோனேஷிய அரசு நடுக்கடலில் சிறைபிடித்துள்ளது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.

ஈழத் தமிழ் அகதிகள் பயணம் செய்த கப்பல் சர்வதேசக் கடற்பரப்பில் பழுதாகி நின்றபோது இந்தோனிஷிய கடற்படையால் சுற்றி வளைக்கப்பட்டு, சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களை கப்பலில் இருந்து இறக்கி இந்தோனேசியா நாட்டிற்குக் கொண்டு செல்ல அந்நாட்டுப் படையினர் முயற்சித்தபோது, கப்பலில் இருந்து இறங்க அகதிகள் மறுத்துள்ளனர். தாங்கள் நியூசிலாந்து நோக்கி பயணிக்க அனுமதிக்க வேண்டும், இல்லையென்றால் கப்பலில் இருந்தே சாவோம் என்று கூறிவிட்டனர். இந்தத் தகவல்களையெல்லாம் அந்தக் கப்பலில் உள்ளவர்கள் என்னைத் தொடர்புகொண்டு என்னிடம் வேதனையுடன் தெரிவித்தனர்.

அந்த 87 அகதிகளில் 5 பேர் குழந்தைகள், 6 பேர் பெண்கள். அவர்களில் ஒருவர் 8 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். கப்பலை விட்டு இறங்க மறுத்த அகதிகளுக்கு கடந்த 13ஆம் திகதி முதல் உணவு அளிப்பதை நிறுத்தி துன்புறுத்தி வருகிறது இந்தோனேஷிய அரசு. ஆஸ்திரேலியாவிற்கும், நியூசிலாந்து நாட்டிற்கும் தப்பிச் செல்ல முயலும் ஈழத் தமிழ் அகதிகளை இதற்கு முன்னும் இப்படி தடுத்து நிறுத்தி சிறைப்படுத்தியுள்ளது இந்தோனிஷிய அரசு.

ஐ.நா.வின் சர்வதேச மனித உரிமைப் பிரகடனம் விதி 14ன் படி, தங்கள் நாட்டில் கொடூரமான ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்படும் எந்த ஒரு நபரும் வேறொரு நாட்டிற்கு அகதியாகச் சென்று தன்னை காத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

இந்தோனேசிய அரசின் இப்படிப்பட்ட நடவடிக்கைகள் ஐ.நா.வின் பன்னாட்டு மனித உரிமை பிரகடனத்திற்கும், ஐ.நா.வின் அகதிகள் பிரகடனத்திற்கும் முற்றிலும் முரணானதாகும். ஆனால் சர்வதேச பிரகடனங்களின் இந்த நெறிமுறைகளை மதிக்காமல், தனது நட்பு நாடான இலங்கை அரசுக்கு உதவும் வகையில் இந்தோனிஷிய அரசு செயல்பட்டு வருகிறது.

ஈழத் தமிழ் அகதிகள் வந்தால் நாங்கள் ஏற்க மாட்டோம் என்று நியூசிலாந்து நாடு கூறுவதும் ஐ.நா.அகதிகள் பிரகடனத்திற்கு முரணானதே.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும், அங்கு தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறை இன்னமும் நீடிப்பதால்தான் சொந்த மண்ணில் இருந்து அவர்கள் அகதிகளாக மற்ற நாடுகளுக்குச் செல்கின்றனர்.

அங்கு அமைதி ஏற்பட்டுள்ளதாக கூறும் அந்நாட்டு அரசின் குரலாக பேசிவரும் சிவ்சங்கர் மேனன் இதற்கு மேலாவது அமைதி என்ற வார்த்தைக்கு மயான அமைதி என்பது பொருளல்ல என்பதை உணர்ந்திட வேண்டும்.

எனவே, நடுக்கடலில் சிறைப்படுத்தப்பட்ட ஈழத் தமிழ் அகதிகளுக்கு உணவளித்து, அவர்கள் விரும்பும் நாட்டிற்கு செல்ல அனுமதிக்க தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு வலியுறுத்த வேண்டும், என குறிப்பிட்டுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் ரஜினியை அவமதித்தார்களா?

சென்னை: சிறுநீரக பாதிப்புக்குச் சிகிச்சை பெற்று, பூரண குணமடைந்து சென்னைக்குத் திரும்பிய நடிகர் ரஜினிகாந்தை, விமான நிலையத்தில் அவமதிக்கப்பட்டதாக அவரது ரசிகர்கள் கூறுகிறார்கள்.

சிங்கப்பூருக்கு சிகிச்சைக்காக சென்றிருந்த ரஜினிகாந்த் புதன்கிழமை இரவு ஊர் திரும்பினார்.அவரை வரவேற்க பெருமளவில் ரசிகர்கள் விமான நிலையத்தில் திரண்டிருந்தனர்.

ரஜினிகாந்த் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் புதன்கிழமை இரவு சென்னை திரும்பும் தகவல் கிடைத்ததால் அவரது ரசிகர்கள் புதன்கிழமை மதியம் முதலே மீனம்பாக்கம் விமான நிலையத்தில் குவியத் தொடங்கினார்கள்.

பாதுகாப்பு கருதியும், ரசிகர்களிடம் ரஜினி சிக்கி விடக் கூடாதே என்பதற்காகவும், ரஜினி எந்த வாயில் வழியாக வருவார் என்பதை இரவு 9.30 மணிவரை போலீஸார் ரகசியமாக வைத்திருந்தனர். இருப்பினும் ரஜினி வரும் பாதையைத் தெரிந்து கொண்ட ரசிகர்கள் அங்கு ஓடி காரை முற்றுகையிட்டனர். அவரை பத்திரமாக அங்கிருந்து அனுப்பி வைக்க தடியடி வரை போக வேண்டியதாயிற்று போலீஸாருக்கு.

முன்னதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்திறங்கிய ரஜினிகாந்தும் மற்றவர்களும் வழக்கம்போல விமானப் பாலம் மூலம் வெளியே வந்தனர்.

வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் இமிக்ரேஷன் என்று அழைக்கப்படும் அனுமதி சோதனைக்குப் பிறகுதான் விமான நிலையத்திலிருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். முக்கியமான பிரமுகர்கள் இதுபோல வெளிநாட்டுப் பயணம் முடித்து இந்தியா திரும்புவதாக இருந்தால், அவர்களை விமானத்திலிருந்து இறங்கும் இடத்திலேயே வரவேற்று, இமிக்ரேஷன் அனுமதி அளிப்பது உண்டு.

இருப்பினும், ரஜினிகாந்த், 'இமிக்ரேஷன்' சோதனைக்கு நடத்தியே அழைத்துச் செல்லப்பட்டார். அவர் மூச்சிரைக்க நடந்து வந்ததைப் பார்க்கவே சங்கடமாக இருந்தது' என்று கண்கள் கலங்க தெரிவித்துள்ளார் பணியில் இருந்த காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர்.

இதுபோன்ற நேரங்களில் பிரமுகர்களை ஏற்றிச் செல்ல டாடா சுமோ போன்ற வாகனங்கள்தான் பயன்படுத்தப்படும். ஆனால், ரஜினிகாந்த் ஒரு பழைய பஸ்ஸில் அழைத்துச் சென்று ஆறாவது வாயிலில் இறக்கிவிடப்பட்டார். ரஜினிகாந்த் ஒரு நோயாளியாக சிகிச்சை முடிந்து நாடு திரும்புகிறார் என்று தெரிந்தும் விமான நிலைய அதிகாரிகள் முன்னேற்பாடுகளைச் செய்திருக்க வேண்டாமா?'' என்று ஆதங்கம் எழுப்பியுள்ளனர் ரசிகர்கள்.

ரஜினி குடும்பத்தினர் மீதும் தவறு உள்ளது...

இத்தனை குளறுபடிகளுக்கும் ரஜினி குடும்பத்தினரும் ஒரு காரணம் என்கிறார் ரஜினி ரசிகர் ஒருவர்.

"1996-ல் ரஜினி வெளிநாட்டிலிருந்து திரும்பும்போது ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் சத்யநாராயணா முன்னேற்பாடுகளைக் கவனமாகச் செய்திருந்தார். அதேபோல, ரஜினி குடும்பத்தினர் முதல்வரின் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டிருந்தால், நிச்சயமாக அவர் தகுந்த ஏற்பாடுகளுக்கு உத்தரவிட்டிருப்பார். அவர்கள் சொல்லாதது தான் தவறு'' என்று கருத்துத் தெரிவித்தார் அவர்.Topics: rajini, chennai airport, insult, ரஜினி, விமான நிலையம், அவமதிப்பு

9வயது சிறுமியை கற்பழித்த பிக்கு கைது ..!

9வயது சிறுமியை கற்பழித்த பிக்கு கைது ..!   பிலிப்பைன்ஸ்  நாட்டில் ஒன்பது வயது சிறுமியை கற்பழித்தஇலங்கையை சேர்ந்த  பிக்கு ஒருவர் அந்தநாட்டு காவல்துறையினரால் கைது செய்ய  பட்டுள்ளார் ,. சிறார் துஸ் பிரோயோகத்தின் கீழ் இவர் கைது செய்யபட்டு சிறை அடைக்க  பட்டுள்ளார் .

இலங்கைக்கு இந்தியா பிரித்தானியா .பாகிஸ்தானியர் அதிகமா சென்றுள்ளனர் -அரசு குசி ..!

இலங்கைக்கு இந்தியா பிரித்தானியா .பாகிஸ்தானியர் அதிகமா சென்றுள்ளனர் -அரசு குசி ..! இந்த வருட தை மாதம் முதல் வைகாசி வரையிலான கல பகுதியில்மிக அதிகமாக இலங்கைக்கு உல்லாச பயணிகளாக  68,830இந்தியர்கள் வருகை தந்துள்ளனர் . அதை அடுத்து பிரித்தானியார் 41,474இரண்டாம் நிலையில் உள்ளனர் .அவர்களின்மூன்றாம் நிலையில்  6,027பாகிஸ்தானியர் வருகை தந்துள்ளனர் .என இலங்கை உல்லாசத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது ..!

அமெரிக்கா செனட் வரை சென்றுள்ள சனல் 4வின் இலங்கை கொலைக்களம் ..!

அமெரிக்கா செனட் வரை சென்றுள்ள சனல் 4வின் இலங்கை கொலைக்களம் ..! அமெரிக்காவின் செனட் சபயில் விரைவில் சனல் 4தொலைகாட்சி ஒளிபரப்பியஇலங்கை கொலைக்களம் திரையிட்டு காண்பிக்க படவுள்ளது . இதில் அமெரிக்க கொள்கைகளை வகுப்பவர்களுக்கும், செனட்டர்களுக்கும் மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கும்இந்த அதிர்ச்சி கரமான தமிழர் அழிப்பின் கொலைக்களம் ஆவண படுத்த படவுள்ளன . அவ்வாறு அனைவரும்  இந்த காட்சியினை பார்த்த பின்னர் இலங்கைக்கு பாரிய எதிர்ப்பு கிளம்புவதுடன்தமிழர்களுக்கு அவர்தாம் வாழ்வதற்கான   அரசியல் அழகு வழங்க படும் என நோக்கர்கள் தெரிவித்துள்ளனர் .>!

தேர்தல் வன்முறை 78பேர் கைது ..!

தேர்தல் வன்முறை 78பேர் கைது ..! இலங்கையில் நடைபெற இருக்கும் தேர்தலை முன்னிட்டு நடைபெற்று வரும் அரசியல்கட்சிகளின் பிரச்சார கூட்டங்களின் போது  இதுவரை ஐம்பத்தி எட்டு தேர்தல் வன்முறைகள் இடம்பெற்றுள்ளன . இந்த வன்முறைகளில் கலவரத்தில் ஈடுபட்ட எழுபத்தி எட்டு பேர் கைது செய்ய பட்டுள்ளனர் .இந்த வன்முறைகளிற்கு பதினெட்டு வாகனம்கள் பயன் படுத்த பட்டுள்ளன எனகாவல்துறையினர் தெரிவித்துள்ளனர் . இந்த வன்முறைகளில் துப்பாக்கி தாக்குதல்களும் அடங்கும் என குறிப்பிட பட்டுள்ளது ..!