This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Friday, July 15, 2011

முல்லையில் மலசல கூடத்தில் இருந்து பெரும் தொகை ஆயுதங்கள் மீட்பு ..!

முல்லையில் மலசல கூடத்தில் இருந்து பெரும் தொகை ஆயுதங்கள் மீட்பு ..! முல்லைத்தீவு -வள்ளிபுரம் பகுதியில் கைவிடப்பட்ட மலச கூட குழியில் இருந்து115 Chinese built assault துப்பாக்கிகள் மீட்க பட்டுள்ளன . மீள் குடியேற்ற படும் மக்கள் பாதுகாப்பான இடங்கள் என கூறாப்பட்ட பகுதிகளில்தேடுதல் மற்றும் பாதுகாப்பை உறுதி படுத்தும் நட வடிக்கையில்   ஈடு பட்டிருந்த போதே இந்தபோராயுதங்கள் மீட்க பட்டுள்ளதாக இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்  . இறுதி யுத்த கால பகுதியில் விடுதலை புலிகள் அவசர அவசரமாக  இந்த கழிவறையில்ஆயுதங்களை வீசி விட்டு சென்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார் ..!

வடக்கில் மனித உரிமை அமைப்புக்கள் தேர்தலை கண்காணிக்க வேண்டும்

வடக்கில் தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிக்கவென மனித உரிமை அமைப்புக்கள் அங்கு செல்ல வேண்டும் என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் தெரிவித்துள்ளது.

அவ்வாறு குழுவை அனுப்பும் பட்சத்தில் அம்மக்களின் அரசியல், ஜனநாயக உரிமையை உறுதிப்படுத்த முடியுமென அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் :-

சட்டவிரோத பிரச்சார நடவடிக்கைகள் குறித்து தேர்தல் ஆணையாளர் எடுக்கும் நடவடிக்கைகள் திருப்திகரமானதாக இல்லை. 50ற்கும் மேற்பட்டவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஆனால் சட்டவிரோத பிரச்சாரங்கள் தொடர்பில் அவர்களுடைய செயற்பாடுகளில் பிரச்சினை உள்ளது.

சட்டவிரோத பிரச்சாரங்களை அகற்ற அவர்கள் முயற்சி எடுப்பதாகத் தெரியவில்லை. இதுவரையில் 43 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. நாங்கள் இன்று மனித உரிமைகள் ஆணையகத்தில் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளோம்.

வடக்கின் நிலைமைகளை கருத்திற் கொண்டு அங்குள்ள உண்மை நிலைகளை கண்டறிந்து மத்தியஸ்த்தம் வகிக்கவென அவர்களுடைய விசேட குழுவை யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளோம்.

மக்களின் நம்பிக்கை அரசியல் கட்சிகளின் நம்பிக்கை என்பவற்றை உறுதிப்படுத்த இவ்வாறான விடயங்கள் அவசியம், என்றார்.

செங்கலடி பதுளை வீதியில் விபத்து: ஆசிரியர் பலி

செங்கலடி பதுளை வீதியில் தம்மானம்வெளிப் பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலியானதுடன் சாரதி காயமடைந்துள்ளார்

குறித்த சம்பவத்தில் பன்குடாவெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் பணியாற்றும் 45 வயதுடைய வே.கோவிந்தராஜா என்ற ஆசிரியரே பலியானவரென இனங்காணப்பட்டுள்ளதாக கரடியனாறுப் பொலிஸார் தெரிவித்தனர்.

கனரக வாகனத்தின் சாரதி படுகாயமடைந்த நிலையில் செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தம்மானம் வெளியில் வீதியோரத்தில் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் இருந்து கதைத்துக்கொண்டு நின்ற வேளையில் எதிரே வேகமாக வந்த கனரக வாகனம் கட்டுபாட்டை இழந்து ஆசிரியர் மீது மோதி வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் செங்கலடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சுண்டிக்குளியில் தீயில் எரிந்து பெண் பலி - மற்றொருவருக்கு எரிகாயம்

யாழ்ப்பாணம் சுண்டிக்குளிப் பகுதியைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர் தீயில் எரிந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் மற்றொருவர் படுகாயம் அடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இன்று பிற்பகல் 3.30 மணியளவில் சுண்டிக்குளிப் பகுதியில் இருந்து இவர்கள் இருவரும் எரிந்த நிலையில் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர்களில் மிகமோசமாக எரிந்த நிலையில் காணப்பட்ட பெண் உயிரிழந்ததாகவும் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

28 வயதுடைய அகிலா என்ற குறித்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் உள்ளதாகவும், பெண்ணின் காதலான மற்றைய நபருக்கும் இடையிலான வாக்குவாதத்தின் இறுதியில் அந்தப் பெண் கத்தியால் வெட்டப்பட்டே எரிக்கப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

சம்பவத்தில் படுகாயம் அடைந்தவர் தென்னிலங்கையினைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் குறித்து யாழ்.பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

நடிகை விஜயசாந்தியின் சென்னை நிலத்தை அபகரித்த முன்னாள் எம்.பியின் தம்பி கைது

சென்னை: சென்னை கோயம்பேட்டில் உள்ள தெலுங்கு நடிகை விஜயசாந்திக்குச் சொந்தமான நிலத்தை அபகரித்ததாக தமிழக முன்னாள் எம்.பி. ஒருவரின் தம்பியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

5.15 ஏக்கர் பரப்பளவிலான இந்த நிலம் விஜயசாந்தி உள்ளிட்ட 8 பேருக்குச் சொந்தமானதாகும். இதன் மதிப்பு ரூ. 130 கோடி என்கிறார்கள். இந்த நிலத்தை போலியான ஆவணங்களைத் தயாரித்து கடந்த 2008ம் ஆண்டு வெறும் ரூ. 8 கோடிக்கு விற்றுள்ளனர்.

இதுகுறித்து ஏற்கனவே போலீஸில் புகார் தரப்பட்டது. அதன் பேரில் மத்திய குற்றப் பிரிவு போலீஸார் 3 பெண்கள் உள்பட நான்கு பேரை கைது செய்துள்ளனர். இந்த நிலையில் தற்போது அதே நிலத்தை 70 கோடி ரூபாய்க்கு சிலர் விலை பேசி வருவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக புகாரும் வந்தது.

இதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இறுதியில் வில்வமணி என்ற புரோக்கர் கைது செய்யப்பட்டார். இவர் முன்னாள் எம்.பி. ஒருவரின் தம்பியாவார். அந்த முன்னாள் எம்.பி. யார் என்பதை போலீஸார் தெரிவிக்கவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.Topics: விஜயசாந்தி, நில அபகரிப்பு, vijayashanthi, land grabbing

விவகாரத்து செய்யவில்லை, ஒன்னாத் தான் இருக்கோம்: பூமிகா

தனக்கும், தனது கணவருக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை என்றும், ஒன்றாகத் தான் இருப்பதாகவும் நடிகை பூமிகா தெரிவித்துள்ளார்.

நடிகை பூமிகா, யோகா பயிற்சியாளர் பரத் தாகூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும், அதற்காக பூமிகா மும்பை நீதிமன்றத்தில் விவகாரத்து கேட்டு மனு தாக்கல் செய்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

குறிப்பாக பரத் தாகூர் படம் ஒன்றை எடுத்து நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பூமிகா கடுப்பாகியுள்ளதாகவும் பேசப்பட்டது.

இதைப் பார்த்து பூமிகா அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த செய்திகள் எல்லாம் வெறும் வதந்தி என்று கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

எனக்கும், எனது கணவருக்கும் இடையே எந்த கருத்துவேறுபாடும் இல்லை. நாங்கள் ஒன்றாகத் தான் இருக்கிறோம். நாங்கள் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்வதாக வதந்திகள் வந்த வண்ணம் உள்ளன. இதை நான் பலமுறை மறுத்துள்ளேன். ஆனாலும் வதந்திகள் நின்றபாடில்லை. இந்த வதந்திகளை நம்பாதீர்கள் என்றார்.Topics: பூமிகா, bharath thakur, பரத் தாகூர், விவாகரத்து, bhumika

ரூ 45 லட்சம் விவகாரம்: வடிவேலு மீது பதிலுக்கு இணையதள ஆசிரியர் புகார்

சென்னை: வடிவேலுவால் ரூ 1 கோடி நஷ்டப்பட்ட மலேசிய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சார்பாக நடிகர் வடிவேலு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார் இணைய ஆசிரியர் செல்வகுமார்.

நடிகர் வடிவேலுவின் மேனேஜர் சங்கர் நேற்று முன் தினம் போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து புகார் மனு ஒன்று கொடுத்தார்.

அப் புகார் மனுவில், "ரூ.45 லட்சம் பணம் கேட்டு, வடிவேலுவை ஒரு இணைய தள ஆசிரியர் செல்வகுமார் போனில் பேசி மிரட்டுகிறார். மலேசியாவில் கலைநிகழ்ச்சி நடத்த ஒப்புக்கொண்டுவிட்டு வரவில்லை என்றும் இதற்காக பணம் தரவேண்டும்.

இல்லாவிட்டால் இணைய தளத்தில் தவறான தகவல்களை வெளியிட்டு அசிங்கப்படுத்திவிடுவேன் என்றும் அந்நபர் அடிக்கடி மிரட்டுகிறார். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,"என்று கூறப்பட்டிருந்தது.

பதிலுக்கு புகார்...

இந்த நிலையில், வடிவேலு மீது இணையதள ஆசிரியர் செல்வகுமார் மோசடி புகார் மனு அளித்துள்ளார்.

அப்புகார் மனுவில், "நடிகர் வடிவேலு மலேசியாவில் நடந்த நட்சத்திர கலை விழாவுக்கு வருவதாக முன்பணம் பெற்றார். 2007-ம் ஆண்டு மலேசியாவை சேர்ந்த மைக்கேல் கானாவிடம் ரூ. 4 லட்சம் வாங்கினார். அந்த பணத்தை இன்றுவரை திருப்பித் தராமல் ஏமாற்றி வருகிறார்.

இந்திய தூதரகம் மூலமும் வடிவேலுக்கு பல கடிதங்கள் அனுப்பப்பட்டன. அப்போதைய முதல்வர் கருணாநிதிக்கும் கடிதம் அனுப்பப்பட்டது. ஆனாலும் பயன் இல்லை.

கலைநிகழச்சிக்கு வடிவேலு போகாததால் ரூ.1 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே வடிவேலு மீது புகார் அளிக்க எனக்கு பொது அதிகாரபத்திரம் வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் புகார் அளிக்கிறேன். வடிவேலு மீதான புகாருக்கு போதுமான ஆதாரங்களையும், வீடியோ பதிவையும் கொடுத்துள்ளேன்,’’ எறு குறிப்பிட்டுள்ளார்.Topics: வடிவேலு, elvakumar, website ditor, இணையதளம், vadivelu, compensation

ரூ 35 கோடி பட்ஜெட்டில் அஜீத் நடிக்கும் பில்லா -2 படம் நேற்று தொடங்கியது.

ரூ 35 கோடி பட்ஜெட்டில் அஜீத் நடிக்கும் பில்லா -2 படம் நேற்று தொடங்கியது.

சக்ரி டோலட்டி இயக்கும் இந்த படம், முன்பு வெளியாகி வெற்றி பெற்ற பில்லா படத்துக்கு முந்தைய கதையமைப்பைக் கொண்டதாகும்.

ஹதராபாதில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நேற்று படப்பிடிப்பு தொடங்கியது. முதல் நாள் ஷூட்டிங்கில் அஜீத், நாயகி ஹ்யூமா குரேஷி உள்ளிட்டோர் இந்தப் படப்பிடிப்பில் பங்கேற்றனர்.

ரூ 35 கோடி செலவில், இந்துஜா குழுமம் மற்றும் வைட் ஆங்கில் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத் மற்றும் கோவா ஆகிய பகுதிகளில் நடக்கிறது.

மதராசபட்டணம் புகழ் செல்வகுமார் கலையை கவனிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

ஏப்ரல் 2012 ல் இந்தப் படம் வெளியாகும் என்கிறார்கள். அஜீத்தின் பொன்விழாப் படமான மங்காத்தா அடுத்த மாதம் வெளியாகிறது.Topics: ajith, billa 2, அஜீத், பில்லா 2, shooting

சூதாட்டத்தில் 2.4மில்லியன் ரூபா பணத்தை இழந்த நபர் பொலிசாரால் கைது ..!

சூதாட்டத்தில் 2.4மில்லியன் ரூபா பணத்தை இழந்த நபர் பொலிசாரால் கைது ..! கசினோ சூதாட்டத்தின் போது 2.4மில்லியன் பணத்தினை இழந்த நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர் . இவர் பதின் ஐந்து வாகனம்கள் வாடகைக்கு அமர்த்தி அதனை போலி ஆவணம்கள் ஊடாக முறைகேடாகவிற்றுள்ளார் . இவர்மீது எட்டு குற்றங்கள் சுமத்த பட்டுள்ளன .இதேவேளை பிறிதொரு குற்றசாட்டின் அடிப்படையில்  இவர்ஐந்து லட்சம் பணம் மோசடி செய்துள்ளது கண்டு பிடிக்க அபட்டுள்ளது . இவரது மகன் ஒருவன் பிரித்தானியாவில் வசித்து வருவதாக தெரிவிக்க பட்டுள்ளது ..!

லஷ்கர் இ ஜங்வி பயங்கரவாத தலைவர் விடுதலை; பாக்.,கில் ஆயுத படைசூழ ரோஜா மலர் தூவி வரவேற்பு

லஷ்கர் இ ஜங்வி பயங்கரவாத தலைவர் விடுதலை; பாக்.,கில் ஆயுத படைசூழ ரோஜா மலர் தூவி வரவேற்பு

பயங்கரவாதம், சதிச்செயல், மற்றும் கொலை என 44 வழக்குகளில் தொடர்புடைய தடை செய்யப்பட்ட அமைப்பான லஷ்கர் இ ஜங்வி பயங்கரவாத தலைவர் மாலிக்முகம்மது ஈசாக் 14 ஆண்டுகளுக்கு பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.

 இவரை வரவேற்க பாகிஸ்தான் கோட்லாபாத் ஜெயிலில் ஆயுத படைபரிவாரங்களுடன் உள்ளூர் மத தலைவர்கள் மற்றும் பலர் வரவேற்றனர் என்பதுதான் கூடுதல் ஹைலைட்.

பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் லஷ்கர் இ ஜங்வி தலைவராக இருந்து வருபவர் மாலிக்முகம்மது ஈசாக் .இவர் பாகிஸ்தானில் பல்வேறு தீவிரவாத செயல்களில் தொடர்புடையவர். 1997 முதல் இவர் மீது 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதனால் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். இவர் பாக்., சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்திருந்தார். இந்த விசாரணையில் இவர் மீதான 34 வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என இவரது மீதான வழக்குள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் இவரை ஜாமீனில் விடலாம் என கோர்ட் உத்தரவிட்டது. இதன்படி இவர் நேற்று விடுதலையானார்.

இவரை வரவேற்க பாகிஸ்தானில் உள்ள ஏ.எஸ்.வால்ஜமாத் தலைவர் முகம்மது அகம்மது லூதியான்வி ஆயுத படைபரிவாரங்களுடன் வந்திருந்தார். ஜெயில் வாசலில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் கூடி நின்ற ஆதரவாளர்கள் ரோஜாமலர் தூவி வரவேற்பு அளித்து அவருக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பினர். பல கார்களில் அணிவகுத்து வந்த அவரை ஊர்வலமாக அழைத்து சென்றனர். வழிநெடுகிலும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
ஜெயிலில் இருந்து வெளியே வந்த மாலிக் ஈசாக் கூறுகையில் ; தம்மை பயங்கரவாத செயல்களுடன் தொடர்பு இல்லாதவன் என கோர்ட் ஏற்றுக்கொண்டது தமக்கு திருப்தி அளிப்பதாக கூறினார். அவர் மேலும் கூறுகையில்; ஒருங்கிணைந்த பாகிஸ்தானுக்கு தான் என்னவேண்டுமானாலும் செய்வேன், பாகிஸ்தானுக்காக தொடர்ந்து போராடுவேன் என்றார்.
இலங்கை வீரர்கள் மீதான தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர்: சமீபத்தில் 2009 ம் ஆண்டில் இலங்கை வீரர்கள் பாகிஸ்தான் சென்றிருந்த போது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்திற்கு மாலிக் ஈசாக் ஜெயிலில் இருந்து மூளையாக செயல்பட்டான் என்ற குற்றச்சாட்டும் நிலுவையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.