This is default featured post 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured post 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured post 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured post 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured post 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
Friday, July 15, 2011
பிரித்தானிய குறைடன் பகுதியில் போலீசார் மீது துப்பாக்கி சூடு ..!
இறுதிப்போர் சம்பவங்கள் பற்றி ஆராய வேண்டும் - இந்தியா முதல் குரல்
இலங்கைப் போரின் இறுதிக்கட்ட சம்பவங்கள் தொடர்பாக சனல் 4 தொலைக்காட்சியில் வெளியான காட்சிகள் தொடர்பாகவும், அந்தப் போர் தொடர்பாக ஐ.நா தலைமைச் செயலரால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாகவும் இந்தியா முதல் முறையாகக் கருத்துத் தெரிவித்துள்ளது.
சனல் 4 வெளியிட்ட இறுதிப் போர் தொடர்பான காட்சிகள் குறித்து, இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் விஷ்ணுபிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைப் போரின் இறுதிக் கட்டத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து தெளிவில்லாத நிலை உள்ளது.
இதுகுறித்து இலங்கை இன்னும் ஆழமாக ஆய்வு செய்ய வேண்டும். அதுதொடர்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ள கவலைகள் குறித்து ஆராயப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவைப் பொருத்தவரை, வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் பேசும் சிறுபான்மையினரின் நலன் மற்றும் நல்வாழ்வில் அக்கறை கொண்டுள்ளது. அவர்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகளை முன்னுரிமை அடிப்படையில் விரைவாக செயல்படுத்த வேண்டும் என இலங்கை அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இறுதிப் போரில் நடந்ததாகக் கூறப்படும் சம்பவமொன்றுஇறுதிப் போரில் நடந்ததாகக் கூறப்படும் சம்பவமொன்றுஇலங்கையில் உள்ள சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். போர் முடிவடைந்த நல்ல சூழ்நிலையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்துகிறது என விஷ்ணுபிரகாஷ் குறிப்பிட்டுள்ளார்.
போரின் இறுதிக்கட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, ஐநா நிபுணர் குழுவின் அறிக்கை குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம், அந்த அறிக்கை தொடர்பாக இன்னும் பல கேள்விகள் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. ஆனால் அது என்ன கேள்விகள் என்பதை அந்த அறிக்கை தெளிவுபடுத்தவில்லை.
ஐநா நிபுணர் குழு அறிக்கையைப் பொருத்தவரை, இலங்கை வெளியுறவு அமைச்சர் இந்தியா வந்திருந்த நேரத்திலும், கடந்த மாதம் கொழும்பில் நடந்த ஒரு மாநாட்டின் போதும் இலங்கை அரசின் கருத்துக்களை இந்தியா கேட்டறிந்திருப்பதாக விஷ்ணுபிரகாஷ் தெரிவித்துள்ளார்.
(2ஆம் இணைப்பு) பஸ் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை உயர்வு
விபத்தில் இரு பெண்களும் ஒரு ஆணும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
மேலும் விபத்தில் 18 பேர் படுகாயமடைந்துள்ளதோடு அவர்கள் சிகிச்சைகளுக்கென பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாத்தளையிலிருந்து கொழும்பு நோக்கி வந்த பயணிகள் பஸ்ஸும் ஹெம்மாத்தகம பிரதேசத்தில் இருந்து காமன்ட் தொழிலாளிகளை ஏற்றிவந்த பஸ்ஸும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இவ்விபத்து சம்பவித்துள்ளது.
பெருந்தோட்டங்களில் நிலவும் குறைப்பாடுகளுக்கு நிர்வாகமே பொறுப்பு - யோகா
குறிப்பாக இலங்கையின் தேயிலையின் மதிப்பு சர்வதேச சந்தையில் குறைந்திருப்பதாகவும், ஏனைய தேயிலை உற்பத்தி நாடுகளான இந்தியா மற்றும் கென்யாவை விட இலங்கையில் தொழிலாளர்களின் உற்பத்தித்திறன் மிகவும் பிந்தங்கிய நிலையில் காணப்படுவதாகவும் முதலாளிமார் சம்மேளன பிரதிநிதிகள் இரு தினங்களுக்கு முன்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கொழும்பில் தெரிவித்திருக்கிறார்கள்.
ஆனால் இலங்கை பெருந்தோட்ட உற்பத்தித்திறன் குறைவுக்கு தோட்டத்தொழிலாளர்களை காரணமாகக் கூற முடியாது என்று கூறுகின்ற இலங்கை பாராளுமன்ற உறுப்பினரான ஆர். யோகராஜன், முதலீடு போதாமையும், உரிய விவசாய யுக்திகள் பயன்படுத்தப்படாமையுமே அதற்கு முக்கிய காரணம் என்று கூறுகிறார்.
அத்துடன் பெரிய கம்பெனிகளின் தோட்டங்களில் மறு நடுகை போன்ற யுக்திகள் பயன்படுத்தப்படாததால் அங்கு உற்பத்தித்திறன் குறைந்திருக்கும் அதேநேரம், தென் பகுதியைச் சேர்ந்த தனியாருக்குச் சொந்தமான சிறு தோட்டங்களில் இந்த யுக்திகள் சரியாக பயன்படுத்தப்படுவதால் அவை உற்பத்தித்திறனில் இரு மடங்கு அதிகரிப்பைக் காட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கை தேயிலையின் மதிப்பு சர்வதேச சந்தையில் குறைந்திருப்பதாகக் கூறப்படுவதையும் அவர் மறுத்துள்ளார்.
87 இலங்கை அகதிகள் குறித்து நியூசிலாந்து பாராளுமன்றில் விவாதம்
இந்த அகதிகள் நியூசிலாந்தை நோக்கி வந்த வழியில் இந்தோனேஷியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்தார்.
அகதிகளை இங்கு வரவேற்கவில்லை என்பது ஒரு சாதாரண செய்தியாக இருக்கலாம். ஆனால் அது அந்த அகதிகளின் உயிர் பிரச்சினை என்பதை ஏன் உணரவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இது நியூசிலாந்து மக்களின் மனிதாபிமான உணர்வுகளுக்கு எதிரானதாகும். பெரும் துன்பங்களை அனுபவித்து துயரிலிருந்து தப்புவதற்காக தப்பி ஓடிவருபவர்களைப்பார்த்து இவ்வாறு கூறுவது இதயமற்றவர்களின் செயலாகும் என அவர் விமர்சித்துள்ளார்.
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று கப்பலில் வந்துள்ளவர்கள் கியூ வரிசையிலிருந்து பாய்ந்து வந்தவர்கள் என்று ஜோன் கீ கூறியுள்ளார்.
ஜோன் கீ யின் தாய் 1939 ஆண்டு யுத்தத்தில் நாஸி ஜேர்மனியிலிருந்து அகதியாக தப்பி வந்து பிரித்தானியாவில் தஞ்சம் கோரியவர்.
யூத அகதிகளுக்கு அப்போது கியூ வரிசையில் சேர வேண்டியிருந்ததில்லை. அவர்கள் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சட்டவிரோதமாக எல்லை தாண்டி கடவுச்சீட்டு இன்றி பிரித்தானியாவில் தஞ்சம் அமைந்தவர்கள் என்றும் கீய்த் லொக்கி தெரிவித்தார்.
இதன் போது குறுக்கிட்ட சபாநாயகர் தலைமை அமைச்சரின் தனிப்பட்ட குடும்ப விடயங்களை பேசுவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டார்.
தெய்வ திருமகள் - திரைப்பட விமர்சனம்
பாடல்கள் - நா முத்துக்குமார்
இசை - ஜீவி பிரகாஷ்குமார்
ஒளிப்பதிவு - நீரவ்ஷா
எடிட்டிங் - ஆண்டனி
தயாரிப்பு - எம் சிந்தாமணி & ரோனி ஸ்க்ரூவாலா
எழுத்து - இயக்கம் - விஜய்
மக்கள் தொடர்பு - ஜான்சன்
கண்களைவிட்டு அகல மறுக்கும் இயற்கை காட்சிகள், மனதை வருடும் இசை, எந்த இடத்திலும் இயல்பு மீறாத நடிகர்கள், இறுதிக் காட்சி முடிந்த பிறகும் இருக்கையோடு கட்டிப் போடும் திரைக்கதை, மனதின் நெகிழ்ச்சியை கண்களில் வழிய வைக்கும் உயிர்ப்பான இயக்கம்...
-நாம் பார்ப்பது தமிழ் சினிமாதானா என்று ஒருமுறை கிள்ளிப் பார்த்துக் கொள்ள வேண்டியிருந்தது, தெய்வத் திருமகள் படம் முடிந்ததும்.
ஹாட்ஸ் ஆஃப் விஜய்... . படத்துக்குப் படம் அதிகரிக்கும் சினிமா மீதான உங்கள் காதலை, ரசிகர்களுக்கு நல்ல விஷயங்களை மட்டுமே தர வேண்டும் என்ற உங்கள் வைராக்கியத்தை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
'ஐ யாம் சாம் என்ற ஆங்கிலப் படத்தின் தழுவல்தான் இந்த தெய்வத் திருமகள் என்றாலும், தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான படம். வக்கிர அழுக்கும் மசாலா தூசும் நிறைந்த கோடம்பாக்கத்தில் பொலிவுறத் துடைத்தெடுத்து வந்த ரவிவர்மா ஓவியம் மாதிரி அத்தனை நேர்த்தி இந்தப் படத்தில்.
மனவளர்ச்சி குன்றிய கிருஷ்ணா (விக்ரம்) வுக்கும், அவரது காதல் மனைவிக்கும் பெண் குழந்தை பிறக்கிறது. ஆனால் அந்தக் குழந்தை பிறக்கும்போதே தாய் இறந்துவிட, மகளை வளர்க்கும் பொறுப்பு மனதளவில் குழந்தையாகவே உள்ள விக்ரமுக்கு. நிலா எனப் பெயரிட்டு வளர்க்கிறார்.
மகள் பள்ளி செல்லும் போது வருகிறது பிரச்சினை. ஒருநாள் திடீரென்று அந்த செல்ல மகளை கிருஷ்ணாவின் பணக்கார மாமனார் தூக்கிக் கொண்டு போய்விடுகிறார். மனவளர்ச்சி குன்றியவனுடன் குழந்தையை விட முடியாது என நியாயம் பேசுகிறார்.
வழக்கறிஞர் அனுராதா துணையுடன் நீதிமன்றம் போகிறான் கிருஷ்ணா. மகளைப் பார்க்க முடியாமல் தவி்க்கிறான். இந்த பாசப் போராட்டத்திலும் சட்ட யுத்தத்திலும் யார் ஜெயிக்கிறார்கள் என்பதை நெகிழ வைக்கும் விதமாய் சொல்லியிருக்கிறார் விஜய்.
தமிழில் இதற்கு முன் இதே மாதிரி பெற்றால்தான் பிள்ளையா, சின்னக் கண்ணம்மா என மிகச் சில படங்கள் இப்படி வந்திருந்தாலும், இந்தப் படம் அவற்றிலிருந்து ரொம்பவே வித்தியாசப்படுகிறது. காரணம், கதையின் நாயகன்.
மனப் பிறழ்வு (autism) நோயால் பாதிக்கப்பட்ட தந்தையாக விக்ரம். இவரது நடிப்பை வர்ணிப்பது, 'இனிப்பு இனிப்பாக இருக்கிறது' என்பதைப் போன்றதுதான். தனது அடுத்த பரிமாணத்தை கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் தந்திருக்கிறார் மனிதர். இந்தக் காட்சி, அந்தக் காட்சி என பாகுபடுத்திப் பார்க்க முடியாத அளவுக்கு அசத்தியிருக்கிறார். நடிப்பு ராட்சஸன்!!
இவருக்கு அடுத்து நடிப்பில் இதயத்தைத் திருடுவது குழந்தை சாரா. அழகும் விவேகமும் நிறைந்த இந்தக் குழந்தை உண்மையிலேயே தெய்வத் திருமகள்தான் போங்கள்!
அனுஷ்காவுக்கு அருமையான வாய்ப்பு இது. அவரும் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டுள்ளார்.
குறிப்பிடத்தக்க இன்னொருவர் நம்ம சந்தானம். ஒரு வசனம் கூட எல்லைமீறாத அளவுக்கு அவரை சிறப்பாகக் கையாண்டிருக்கிறார் இயக்குநர் விஜய்.
குழந்தையின் சித்தியாக வருகிறார் அமலா பால். அழகாக வந்து போகிறார். எம்எஸ் பாஸ்கர், நந்தகுமாராக வரும் கிஷோர், சச்சின் கெடேகர், குறிப்பாக நாசர் என அனைவருமே உணர்ந்து நடித்துள்ளனர்.
நீதிமன்றக் காட்சிகள் வெகு யதார்த்தமாக சித்தரிக்கப்பட்டுள்ளன. கடைசி காட்சியில் நாசரின் முடிவான பதிலுக்காக பக்பக் இதயத்தோடு நீதிபதியே காத்திருக்க, அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், அப்பாவும் மகளும் சைகையால் அன்பைப் பரிமாறிக் கொள்ளும் காட்சியில் அழாத கண்களில் கண்ணீர் வற்றிவிட்டதென்று அர்த்தம்!
ஜீவி பிரகாஷின் இசை உண்மையிலேயே பிரமாதம். இப்போதுதான் அவர் காட்சிகளை உணர்ந்து இசை தருகிறார். தந்தை பாடும் தாலாட்டில் இசையும் முத்துகுமாரின் வரிகளும் அற்புதம். அந்த கதை சொல்லும் பாடலை படமாக்கிய விதம், விஜய்க்குள் இருக்கும் சூப்பர் ஆக்ஷன் பட ஆர்வத்தைக் காட்டுகிறது.
விஜய்யின் இன்னொரு வலது கரமாக நீரவ்ஷா. ஏசி இல்லாத தியேட்டரில் கூட ஊட்டியின் குளிரை வரவழைத்துவிடுகிறார் நீரவ்.
படத்தின் மைனஸ் என்று பார்த்தால்.... காட்சிகள் மெதுவாக நகர்வது, முதல் பாதியில் வரும் நீளமான சில காட்சிகள். ஆனால் முதல் சில நிமிடங்களிலேயே படம் பார்க்கும் ரசிகனை கதைக்குள் ஈர்த்துவிடுகிறார் விஜய். அதன்பிறகு அந்த ரசிகன் எழுந்திருப்பது 'எ பிலிம் பை விஜய்' என்ற எழுத்துக்கள் ஒளிரும்போதுதான்.
அந்தக் காட்சியில் அத்தனை பேரும் பேதமின்றி கைதட்டியது, விஜய்யின் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்.
கமர்ஷியல், க்ளாஸிக் என்ற எல்லைக் கோடுகளைத் தாண்டி பார்த்து அனுபவிக்க வேண்டிய படம்!Topics: deiva thirumagal, review, vikram, தெய்வத் திருமகள், விமர்சனம், விக்ரம்
ஒகஸ்ட் 13, 14ம் திகதிகளில் அனைத்து சரணாலயங்களையும் மூடத் தீர்மானம்
முதல் தடவையாக யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் இன்று குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி வில்பத்து, யால, வஸ்கமுவ, உடவலவ உள்ளிட்ட 22 சரணாலயங்கள் எதிர்வரும் மாதம் 13, 14ம் திகதிகளில் மூடப்படவுள்ளன.
யானைகள் கணக்கெடுப்பின் பின்னர் அது குறித்த தகவல்கள் வெளியிடப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 5 ஆயிரம் தொடக்கம் 6 ஆயிரம் வரையிலான யானைகள் இருப்பதாக தற்போதைய தற்காலிக கணிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
இலங்கை வீரர்கள் மீதான தாக்குதல் - மேலும் மூவருக்குப் பிணை
மாலிக் அப்துல் ரகுமான், ஜவீட் அன்வர், உபைதுல்லா ஆகியோருக்கே இவ்வாறு பிணை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை காலமும் இவர்கள் மீது சுமத்தப்பட்டுவந்த குற்றம் அரச தரப்பினரால் சரிவர நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இலங்கை அணி வீரர்கள் சென்ற பஸ் தாக்குதலுக்கு திட்டமிட்ட பிரதான சூத்திரதாரி என சந்தேகிக்கப்பட்ட பாகிஸ்தானின் லஷ்கர்-இ-ஜஹாங்வி என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவரான மாலிக் ஷா இஷாக்கை 14 ஆண்டுகள் சிறை வாசத்திற்கு பின் அந்நாட்டு உச்சநீதிமன்றம் பிணையில் விடுதலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சிக்குப் படையெடுத்துள்ள கிரிடா சக்தி
இந் நிகழ்வை விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே ஆரம்பித்து வைத்ததோடு ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ், றொஹான் ரத்வத்த ஆகியோர் சிறப்பு அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
15ம் 16ம் ஆகிய இரு தினங்கள் நடைபெறும் இப்பயிற்சியானது ஒவ்வொரு விளையாட்டுகளிலும் நிபுணத்துவம் வாய்ந்த சிறப்பு பயிற்றுவிப்பாளர்களால் பயிற்றுவிக்கப்பட்டு தெரிவுசெய்யப்படும் திறன் மிகு வீரர்கள் தேசிய ரீதியிலான பயிற்சிக்கு அழைத்துச் செல்லப்படுவதோடு அவர்களுக்கு ஊக்குவிப்பு தொகையும் வழங்கப்படவுள்ளது.
இந் நிகழ்வில் விளையாட்டுத்துறை திணைக்களத்தின் பணிப்பாளர் ரஞ்சனி ஜெயக்கொடி, வட மாகாண விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் அண்ணாத்துறை, கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரச அதிபர் சீனிவாசன், விளையாட்டு உத்தியோகத்தர்கள், விளையாட்டு வீரர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
நிறைவேறாமல் போன கார்த்திக்கின் ஆசை!
மணிரத்னத்திடம் வேலையாகமல் போனதால், நல்ல கதைகளை வைத்திருக்கும் வேறு இயக்குனர்களை தேட ஆரம்பித்து இருக்கிறார் கார்த்திக்.
தனக்கு ஒரு பாரதிராஜா கிடைத்த மாதிரி, தனது மகனுக்கும் ஒரு அற்புதமான இயக்குனர் கிடைப்பார் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் கார்த்திக். அதே நம்பிக்கையுடன் அவரது மகனும் காத்திருக்கிறார்.







