This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Thursday, July 28, 2011

சென்னையில் நடிப்புப் பயிற்சி நிறுவனம்-ராதிகாவுடன் தொடங்கினார் அனுபம் கெர்

பிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கெர் நடத்தி வரும் ஆக்டர் ப்ரிபேர்ஸ் என்ற நடிப்பு பயிற்சி நிறுவனமும், ராதிகா சரத்குமாரின் ராடன் டி.வியும் இணைந்து சென்னையில் நடிப்பு பயிற்சி கல்லூரியை துவங்கியுள்ளன.

இதற்கான ஒப்பந்தம் சென்னையில் புதன்கிழமை கையெழுத்தானது. அதன் பின் நிருபர்களை சந்தித்தார்கள் அனுபம் கெர், ராதிகா மற்றும் சரத்குமார் ஆகியோர்.

முப்பத்தியேழு வருடங்களுக்கு முன் இதே ஜுலையில்தான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு முயற்சியை ஆரம்பித்தேன். இன்று அதே ஜுலையில் சென்னையில் நடிப்பு பயிற்சி இன்ஸ்ட்டியூட் துவங்குவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்றார் அனுபர்கெர்.

அகமதாபாத், சண்டிகர் என்ற இரு இடங்களில் இந்த பயிற்சி வகுப்பை நடத்தி வரும் இவர், சென்னையிலும் கிளை துவங்க காரணமாக இருந்திருக்கிறது ராடர்ன் டிவி.

மூன்று மாத பயிற்சி வகுப்புக்கு ஒரு லட்சத்து நாற்பதாயிரம் கட்டணம். இதில் பத்து நாட்கள் அனுபம் கெரெ வந்து வகுப்பெடுப்பாராம். ராதிகாவும் வகுப்புகள் நடத்துவார். அது போகட்டும்... முக்கியமான கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார் ராதிகா.

ஏற்கெனவே கூத்துப் பட்டறை என்ற அமைப்பு வேறு இதே வேலையை செய்து கொண்டிருக்கிறதே என்று அனுபம் கெர் - ராதிகாவிடம் கேட்டனர் நிருபர்கள்.

அதற்கு ரொம்ப சிம்பிளாக சொன்னார்கள் பதிலை: இங்கே அனுபம் கெரும் ராதிகாவும் இருக்கிறார்கள். அங்கே இல்லை. அதான் வித்தியாசம் என்றனர்.

டிப்ளமா, சர்ட்டிபிகேட் மற்றும் குறிப்பிட்ட பிரிவுக்கு மட்டும் தனிப் பயிற்சி என மூன்று பிரிவுகளை இப்போதைக்கு வைத்துள்ளார்களாம்.Topics: radhika, anupam kher, raadan media, ராடான், அனுபம் கெர், ராதிகா

வரதட்சணை கொடுமை: சிரஞ்சீவி மருமகன் ஜெயிலில் அடைப்பு

ஹைதராபாத்: வரதட்சணைக் கொடுமை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார் நடிகர் சிரஞ்சீவியின் மருமகன் சிரிஷ் பரத்வாஜ்.

நடிகர் சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜா, சிரிஷ் பரத்வாஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சிறிது காலம் சந்தோஷமாக நீடித்த அவர்களது திருமண வாழ்க்கையில் வரதட்சணையால் பிரச்சினை ஏற்பட்டது.

கணவன் மற்றும் மாமியார் சர்வமங்களா ஆகியோர் தன்னை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக கூறி ஸ்ரீஜா தனது குழந்தையுடன் தந்தையான நடிகர் சிரஞ்சீவி வீட்டுக்கு வந்து விட்டார்.

மேலும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கணவர் மற்றும் மாமியார் மீது போலீசில் ஸ்ரீஜா புகார் கொடுத்து இருந்தார். இந்த புகாரைத் தொடர்ந்து அரசு ஊழியரான அவரது மாமியார் சர்வ மங்களா நீதிமன்றத்தில் சரண் அடைந்தார் ஆனால் சிரிஷ் பரத்வாஜ் மட்டும் தலைமறைவாக இருந்து வந்தார்.

இந்த நிலையில் அவர் ஐதராபாத்தில் உள்ள நாம்பள்ளி நீதிமன்றத்தில் நேற்று சரண் அடைந்தார். அவரை வரும் 8-ந்தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து சஞ்சல்குடா என்ற ஜெயிலில் சிரிஷ் பரத்வாஜ் அடைக்கப்பட்டார்.Topics: வரதட்சணை, chiranjeevi, சிரஞ்சீவி மருமகன், chiranjeevi son in law, andhra pradesh, dowry case

அடுத்த 'ஜேம்ஸ்பாண்ட்' நாயகி ரஷ்யாவின் மார்கரிட்டா லெவிவா?

ரஷ்ய நடிகை மார்கரிட்டா லெவிவா தான் அடுத்த ஜேம்ஸ்பாண்ட் பட கதாநாயகி என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரபல ரஷ்ய நடிகை மார்கரிட்டா லெவிவா(31). அவர் ஸ்பிரட், லிங்கன் லாயர் ஆகிய படங்கள் மூலம் பிரபலமானவர். அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படத்திற்கு கதாநாயகி தேடும் பணியில் ஈடுபட்டுள்ள தயாரிப்பாளர்கள் இப்போது லெவிவாவை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்துள்ளனராம்.

அடுத்து வரவிருக்கும் 23-வது ஜேம்ஸ் பாண்ட் படத்தில் டேனியல் கிரெய்க்குக்கு ஜோடியாக லெவிவா நடிப்பார்.

பாண்ட் நாயகி என்றால் அழகாகவும், நம்பிக்கையுடனும் அதே சமயம் புதிரான தோற்றம் கொண்டவராகவும் இருக்க வேண்டும். மார்கரிட்டாவுக்கு இந்த தகுதிகள் அனைத்தும் உள்ளன என்று தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.

இந்த புதிய பாண்ட் படத்தின் தயாரிப்பு பணிகள் வரும் அக்டோபர் மாதம் துவங்கவிருக்கிறது. எனவே அதற்குள் லெவிவாவை இறுதி செய்துவிடுவார்கள் என தெரிகிறது.Topics: james bond, margarita levieva, ஜேம்ஸ் பாண்ட், மார்கரிட்டா லெவிவா

Wednesday, July 27, 2011

'தேர்தலில் சொன்னதை செயலில் காட்டி விட்டார் ஜெ!' - கலைப்புலி சேகரன் ஐஸ்!

சென்னை: தரமான, யு சான்றிதழ் பெற்ற நேரடி தமிழ் படங்களுக்கு மட்டுமே வரிவிலக்கு கொடுத்ததன் மூலம், முதல்வர் ஜெயலலிதா தேர்தலில் சொன்னதை செயலில் காட்டி விட்டார் என்று திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் 'கலைப்புலி' ஜி.சேகரன் கூறியிருக்கிறார்.

சென்னை-காஞ்சீபுரம்-திருவள்ளூர் மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் `கலைப்புலி' ஜி.சேகரன் விடுத்துள்ள அறிக்கை:

"எந்த ஒரு செயலும், தொழிலும் காட்டாற்று வெள்ளம் போல் கரையற்ற-முறையற்ற வழியில் சென்றால், அதன் விளைவுகள் சிறப்பாகவும் செம்மையாகவும் இருப்பதில்லை. கட்டுப்பாடு என்ற ஒரு கரைக்குள் தெளிந்த ஆறாக ஓடும்பொழுதுதான் தன்னை சார்ந்து உயிர்வாழும் ஜீவராசிகளுக்கும், இயற்கை நிகழ்வுகளுக்கும் நல் ஆதாரமாக, உயர்வாக, வளர்ச்சியாக அமையும்.

சரியான படத்துக்கு வரி விலக்கு

அதைப்போல் திரைப்பட தொழிலில் அனைவரும் குழந்தைகளுடன் பார்க்க வேண்டிய வகையில் தமிழ் தலைப்புகளுடன், தமிழ் கலாசாரம் சார்ந்த 'யு' சான்றிதழ் பெற்ற தமிழ் நேரடி திரைப்படங்களுக்கு வரிவிலக்கும், மற்ற சான்றிதழ் பெற்ற படங்களுக்கு நிலுவையில் உள்ள வரியான மாநகராட்சி மற்றும் 'ஏ' கிரேட் நகராட்சி பகுதிகளுக்கு 15 சதவீதமும், மற்ற நகராட்சி, ஊராட்சி பகுதிகளுக்கு 10 சதவீதமும் அறிவித்த தமிழக முதல்வருக்கு, இதுதொடர்பாக ஏற்கனவே கோரிக்கை விடுத்த சென்னை காஞ்சீபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கம் எல்லையில்லா நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.

சொன்னதைச் செய்தார்

ஒட்டுமொத்தமாக அனைத்து திரைப்படங்களுக்கும் அபரிமிதமான வரி வரப்போகிறது என்ற செவி வழி செய்திகளை பொய்யாக்கி, என்றும் நன்மைக்கும், நல்லவைக்கும் பக்க துணையாக இருந்து திரைப்பட துறைக்கு நல்வழி காட்டுவேன் என்று தேர்தல் பிரசாரத்தின்போது சொன்னதை செயலில் காட்டிய முதல்வர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

சிறிய தயாரிப்பாளர்கள், சிறிய வினியோகஸ்தர்கள், சிறிய திரையரங்க உரிமையாளர்கள் வாழ்வு நலம்பெற 'டிஜிடல் ஹோம்' தியேட்டருக்கு அனுமதி அளித்து, அவர்கள் வாழ்க்கையில் மேலும் ஒளிபெற செய்ய கேட்டுக்கொள்கிறோம்.''

இவ்வாறு அந்த அறிக்கையில் ஜி.சேகரன் கூறியிருக்கிறார்.Topics: tamil cinema, வரிவிலக்கு, jayalalitha, kalaipuli sekaran, கலைப்புலி சேகரன், tax free

விஜய் படப்பிடிப்பில் பெரும் ரகளை... கேரவனை அடித்து நொறுக்கிய ரசிகர்கள்

சென்னை: நடிகர் விஜய்யின் நண்பன் படப்பிடிப்பில் ரசிகர்கள் திடீரென்று புகுந்த ரகளை செய்தனர். கேரவனை அடித்து நொறுக்கினர்.

இந்தியில் ஹிட்டான அமீர்கானின் 3 இடியட்ஸ் படம் தமிழில் நண்பன் என்ற பெயரில் தயராகிறது. விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கின்றனர். எந்திரனுக்குப் பிறகு ஷங்கர் இயக்கும் படம் இது.

சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு சில தினங்களாக படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இன்றைய படப்பிடிப்பின்போது 200 பேர் திடீரென அந்தக் கல்லூரிக்குள் நுழைந்துவிட்டனர். அவர்கள் விஜய் உள்ளிட்ட நடிகர்களை பார்க்க முண்டியடித்தனர்.

நிலைமையை உணர்ந்து விஜய், ஜீவா போன்றோர் ரசிகர்களைச் சந்தித்து கையசைத்து விட்டுச் சென்றார்கள்.

ஆனால் கூட்டத்தினர் திரும்பிச் செல்லவில்லை. அவர்கள் படப்பிடிப்பு அரங்குக்குள் நுழைந்து நடிகர்களின் கைகளை பிடித்து இழுக்க துவங்கினர். இதனால் படப்பிடிப்பை ஷங்கரால் நடத்த இயலவில்லை.

ரசிகர்களிடம் கலைந்து செல்லும்படி வேண்டினார். அவர்கள் போகவில்லை. அரங்குகளை சேதப்படுத்தி ரகளை செய்தனர். கேரவன் கண்ணாடிகளையும் உடைக்க ஆரம்பித்தனர். அவர்களின் இந்த நடவடிக்கையால் படப்பிடிப்பு குழுவினர் அதிர்ச்சியானார்கள்.

உடனடியாக போலீசார் வரவழைக்கப்பட்டனர். பின்னர் லேசான தடியடி நடத்தி ரசிகர்களை வெளியேற்றினர். இந்த சம்பவத்துக்கு பிறகு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்.Topics: நண்பன், விஜய், படப்பிடிப்பு, ரசிகர்கள் வன்முறை, vijay fans, nanban shooting, vijay

Tuesday, July 26, 2011

விபச்சாரக் கும்பலாக மாறிய இலங்கை டிவி நடிகைகள்- 20 பேருக்கு வலைவீச்சு

சிங்கள டிவி நடிகைகள் பெருமளவில் விபச்சாரத்தில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். மிகப் பெரிய அளவில் விபச்சாரத்தில் ஈடுபட்டு வரும் 20 நடிகைளைத் தேடி வருவதாக இலங்கை போலீஸார் தெரிவித்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரு குழுவாக இயங்கி வருவதாகவும் போலீஸார் கூறுகின்றனர்.

கடந்த சில வாரங்களில் நான்கு நடிகைகள் பிடிப்டுள்ளனர். இவர்கள் கொழும்பு நகரின் பல்வேறு பகுதிகளில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக போலீஸார் தெரிவித்தனர். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் பகுதிகளில்தான் இவர்கள் சுற்றிச் சுற்றி வருகிறார்களாம்.

டிவி தொடர்கள், நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான பல நடிகைகள் இதுபோல விபச்சாரத்தில் ஈடுபட்டு வருவது இலங்கை அரசையும், காவல்துறையையும் அதிர வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது 20 முக்கிய நடிகைகளைப் பிடிக்க போலீஸார் நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளனர். இவர்கள் குறித்த தகவல் தெரிந்தால் தெரிவிக்குமாறு பொதுமக்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இதை விட கேவலமான பல செயல்களும் இலங்கையில் தற்போது அதிகரித்து வருகிறதாம். அங்குள்ள கிளப்களில் பல வெளிநாட்டு பெண்களைக் கொண்டு விபச்சாரத்தை ஓஹோவென நடத்தி வருகிறார்களாம்.

பெண்கள், குழந்தைகள் என பாரபட்சமே இல்லாமல் பெருமளவில் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தகவல் ஒன்று தெரிவிக்கிறது. அனுராதபுரத்தில்தான் இது தலைவிரித்தாடி வருவதாகவும் அது கூறுகிறது.

இத்தனை காலமாக வருமானமே இல்லாமல் செத்துப் போய்க் கிடந்த இலங்கை சுற்றுலாத்துறைக்கு வருமானம் சேர்ப்பதற்காக அரசே மறைமுகமாக விபச்சாரத்தை ஆதரிப்பதாகவும் ஒரு குற்றச்சாட்டு இருப்பது நினைவு கூறத்தக்கது.Topics: prostitution, விபச்சாரம், டிவி நடிகைகள், srilanka, இலங்கை

Monday, July 25, 2011

ஜான் ஆபிரகாமிற்கு தோள் கொடுத்த தீபிகா

பிபாஷாவை பிரிந்த சோகத்தில் இருக்கும் ஜான் ஆபிரகாமிற்கு தனது சோகத்தை பகிர்ந்து கொள்ளும் தோழியாக கிடைத்துள்ளார் தீபிகா படுகோன்.

நீண்ட காலமாக ஒன்றாக இருந்த நடிகர் ஜான் ஆபிரகாமும், நடிகை பிபாஷா பாசுவும் அன்மையில் பிரிந்துவிட்டனர். தனது சோகத்தைப் பகிர்ந்துகொள்ள யாராவது கிடைக்க மாட்டார்களா என்று நினைத்த ஜான் ஆபிரகாமுக்கு நான் இருக்கிறேன் என்று நட்புக்கரம் நீட்டியுள்ளார் தீபிகா.

தீபிகாவும், ஜானும் தேசிபாய்ஸ் என்ற படத்தில் முதன்முதலாக ஒன்றாக சேர்ந்து நடித்துள்ளனர். இந்த படத்தின் ஷூட்டிங் லண்டனில் நடந்தது. அப்போது தான் இருவரும் நண்பர்களாகியுள்ளனர். தானும் பிபாஷாவும் பிரிந்தது பற்றி தீபிகாவிடம் கூறும் அளவுக்கு நெருக்கமாகிவிட்டார்கள்.

ஷூட்டிங் இல்லாத நேரத்தில் ஒன்றாக காபி குடிக்கப் போவது, வெளி இடங்களுக்குப் போவது என்று இருவரும் ஒன்றாக நேரத்தை கழித்துள்ளனர். ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரே சிரிப்பும், பேச்சுமாய் இருந்த இவர்களைப் பார்த்து அங்கிருந்தவர்கள் எல்லாம் ஆச்சரியப்பட்டனராம்.

நெருக்கமாக இருந்த ஒருவரைப் பிரியும்போது ஏற்படும் வேதனை என்னவென்று தீபிகாவுக்கும் தெரியும். அந்த உணர்வு தான் இவர்களை நண்பர்களாக்கியுள்ளது.

தீபிகாவும், ரன்பீர் கபூரும் காதலித்தனர். பின்பு ஆளுக்கொரு வழியைப் பார்த்து சென்றவிட்டனர். அந்த சோகத்தை தாண்டி வந்த தீபிகா ஜானுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

தீபிகாவுக்கு முன்பு ஜான் ஆபிரகாமுக்கு 'ஆறுதல் கூறியவர்' சிரிப்பழகி ஜெனிலியா என்பது குறிப்பிடத்தக்கது.


Topics: deepika padukone, john abraham, ஜான் ஆபிரகாம், தீபிகா படுகோன்

ரஜினி எனக்கு அப்பா மாதிரி: நடிகை மானு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எனக்கு அப்பா மாதிரி என்று அவரை சிங்கப்பூரில் கவனித்துக் கொண்ட நடிகை மானு தெரிவித்துள்ளார்.

இது குறித்து நடிகை மானு கூறியதாவது, சிங்கப்பூர் சினிமா தயாரிப்பாளர் ஜெயகுமார் நடிகர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர். அவர் என்னை அழைத்து ரஜினி சிகிச்சைக்காக சிங்கப்பூர் வருவதாகவும், அவர் திரும்பிச் செல்லும் வரையில் உடனிருந்து நல்லபடியாக கவனித்துக் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.

நானும், சிங்கப்பூர் நடிகர் புரவலன், தமிழ்செல்வன் மற்றும் பிருத்விராஜ் ஆகியோரும் ரஜினியைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை ஏற்றுக்கொண்டோம். அவர் சிகிச்சை பெற்ற மருத்துவமனை அருகேயே அவருக்கு வீடு பார்த்துக்கொடுத்தேன். அங்கு ரஜினி அவரது மனைவி லதா, மகள் மற்றும் மருமகன் தங்கியிருந்தனர்.

அவர் மருத்துவரீதியாக 3 வாரங்களிலேயே குணமடைந்துவிட்டார். முன்புபோல் சகநிலைக்குத் திரும்ப அவர் சில பயிற்சிகளை மேற்கொண்டார்.

அவர் தினமும் கொஞ்ச தூரம் வாக்கிங் போவார். அப்போது அவருக்கு பாதுகாப்பாக இருக்க ஆட்களை நியமித்தேன். ஆனால் தனக்கு பாதுகாப்பாளர்கள் வேண்டாம் என்று கூறிவிட்டார். இருப்பினும் அவருக்குத் தெரியாமலேயே ஆட்களை அனுப்பினேன். அதைக் கண்டிபிடித்து நிறுத்தச் சொல்லிவிட்டார்.

ஒரு நாள் இட்லி, வடை கேட்பார், மறு நாள் மசாலா தோசை கேட்பார். சில படங்களின் டிவிடிகளைப் போட்டு பார்த்து ரசித்தார். தனது ஆன்மீக அனுபவங்கள் மற்றும் யோகாவின் மகத்துவம் பற்றி அடிக்கடி பேசுவார்.

ஆகஸ்ட் 2-ம் தேதி வரையாவது இருங்களேன் என்று கேட்டோம். ஆனால் அவர் நான் சீக்கிரம் கிளம்ப வேண்டும், எனது நாட்டையும், ரசிகர்களையும் மிஸ் செய்கிறேன் என்று கூறினார்.

அவர் சென்னை புறப்படும் முன்பு எங்களை அழைத்து நன்றி தெரிவித்தார். எங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

ஒரு பெரிய நடிகரை கவனித்துக் கொள்கிறோம் என்றே இல்லை. அவர் எனக்கு அப்பா மாதிரி. அவர் குடும்பத்தினரும் என்னை அவர்கள் வீட்டுப் பெண் போல் தான் நடத்தினர்.

ரஜினி மீது ஏன் பல லட்சம் பேர் பாசமாக இருக்கின்றனர் என்பது எனக்கு அன்று தான் புரிந்தது. அவர் குடும்பத்தை நேசிக்கும் சிறந்த மனிதர் என்றார்.Topics: rajini, maanu, மானு, ரஜினி

தென் கொரியாவில் 50 திரையரங்குகளில் வெளியாகிறது ரஜினி - ஐஸ்வர்யா ராய் நடித்த எந்திரன்.

ஷங்கர் இயக்கிய எந்திரன் படம் கடந்த ஆண்டு இந்தியா மற்றும் உலகின் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியானது. வசூலில் இந்தப் படம் புதிய சாதனை படைத்தது. இந்தியாவிலேயே அதிக வசூலைக் குவித்த படம் எந்திரன்தான்.

இப்போது இந்தப் படத்தை, இதுவரை வெளியாகாத நாடுகளில் மறுவெளியீடு செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது ஈராஸ் நிறுவனம். வெளிநாடுகளில் விநியோகிக்கும் உரிமையை ஈராஸ்தான் பெற்றுள்ளது.

முதல்கட்டமாக தென் கொரியாவில் மட்டும் 50 திரையரங்குகளில் எந்திரனை வெளியிடப் போவதாக ஈராஸ் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் குமார் அகுஜா கூறுகையில், "இதுவரை நாங்கள் கால் பதிக்காத புதிய பகுதிகளில் இந்தியப் படங்களை வெளியிடும் வாய்ப்பைப் பெற்றுள்ளோம். இந்தியப் படங்களே வெளியாகாத தைவானில் முதல் முறையாக ஷாரூக்கான் நடித்த 'ரா ஒன்' படத்தை வெளியிடுகிறோம்.

அடுத்து தென் கொரியாவில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் படத்தை 50 திரையரங்குகளில் வெளியிடுகிறோம். எந்திரனின் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு பதிப்புகள் இந்த அரங்குகளில் வெளியாகும்," என்றார்.

தென் கொரிய மக்களுக்கு ரஜினி படம் புதிதல்ல. அங்கு ஏற்கெனவே ரஜினி நடித்த சந்திரமுகி மற்றும் சிவாஜி தி பாஸ் படங்கள் வெளியாகி நல்ல வசூலைப் பெற்றன.Topics: enthiran, ரஜினி, எந்திரன், தென் கொரியா, ஈராஸ், south korea, eros

ஈசிஆர் ரோட்டில் லாரி-கார் மோதல்: இயக்குனர் மகள் உள்பட 3 பேர் பலி

திருப்போரூர்: கிழக்குக் கடற்கரை சாலை சூளேரிக்காடு என்ற இடத்தில் காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் பிரபல மலையாள இயக்குனர் ஜோசியின் மகள் உள்பட 3 பேர் பலியாகினர்.

கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா (24). பிரபல மலையாள இயக்குனர் ஜோசியின் மகள். அதே ஊரைச் சேர்ந்தவர் ராதிகா (24). திருச்சூரைச் சேர்ந்தவர் அர்ஜுன் (24). இவர்கள் 3 பேருமே சாப்ட்வேர் என்ஜினீயர்கள்.

சென்னை ஊரப்பாக்கத்தில் தங்கி மறைமலைநகர் அருகே இருக்கும் மகேந்திரா சிட்டியில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தனர்.

நேற்று விடுமுறை என்பதால் மகாபலிபுரத்திற்கு சுற்றுலா செல்ல முடிவு எடுத்தனர். இதையடுத்து அர்ஜுனின் காரில் ஐஸ்வர்யா, ராதிகா, அவர்கள் உடன் வேலைப்பார்க்கும் ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த யேசுதாஸ்(24), அஸ்வின்(27) ஆகிய 5 பேர் மகாபலிபுரத்திற்கு சென்றனர்.

நாளைக் கொண்டாட்டமாகக் கழித்துவிட்டு இரவு ஊரப்பாக்கம் திரும்பினர். காரை அர்ஜுன் ஓட்டினார். அவர்கள் கார் இரவு 11 மணியளவில் கிழக்குகடற்கரை சாலை சூளேரிக்காடு என்ற இடத்தில் செல்கையில் மணல் எடுக்க மகாபலிபுரத்திற்கு சென்று கொண்டிருந்த லாரி அவர்கள் கார் மீது நேருக்கு நேர் மோதியது.

இதில் அர்ஜுன், ஐஸ்வர்யா, ராதிகா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பலத்த காயமடைந்த யேசுதாஸ், அஸ்வினை சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர்.

அந்த லாரி டிரைவர் தப்பியோடிவிட்டார். இந்த விபத்து குறித்து குறித்து மகாபலிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Topics: accident, mahabalipuram, ecr, பலி, விபத்து