This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Friday, September 30, 2011

அடிக்கடி இமயமலை போகும் ரகசியம்... - விஷால் பேட்டி

இயமலையைத் தெரியாதவர்கள் இல்லை என்றாலும், அங்கே போய் ஆன்மீக அமைதி பெற்று வருவதை பிரபலமாக்கிய பெருமை சூப்பர் ஸ்டார் ரஜினிக்குதான் உண்டு. அதன் விளைவு, இமயமலை என்றதுமே உடன் நினைவுக்கு வருபவர் ரஜினிதான்.

இதனால், வேறு எந்த நடிகர் இமயமலையைப் பற்றிப் பேசினாலும், ரஜினியின் பாதிப்பு அல்லது ரஜினியைப் போல இமயமலைக்குப் போவதாக எழுத ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்த இமயமலை நடிகர்கள் பட்டியலில் லேட்டஸ்டாக இணைந்திருப்பவர் விஷால்.சமீபகாலமாக அடிக்கடி இமயமலைக்கு சென்று வருகிறாராம். ரஜினிகாந்தைப் போல் இவரும் ஆன்மிக பயணம் செல்வதாகவும், இமயமலையில் உள்ள குகைகளில் தங்கியிருந்து தியானம் செய்வதாகவும் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

உண்மையில் இவர் எதற்காக இமயமலை போகிறார்... உண்மையிலேயே விஷயமிருக்கிறதா அல்லது பப்ளிசிட்டி ஸ்டன்ட்டா என கேள்வி எழுந்தது. அந்தக் கேள்வியை விஷாலிடமே கேட்டுவிட்டனர் நிருபர்கள்.

அவர் கூறுகையில், "இமயமலை, எனக்கு மிகவும் பிடித்த இடம். என் தந்தை ஜி.கே.ரெட்டி, 'ஐ லவ் இந்தியா' என்ற படத்தை தயாரித்தபோது, எனக்கு 16 வயது.

அந்த படத்தின் படப்பிடிப்பு இமயமலையில் உள்ள பல்வேறு பகுதிகளில் நடந்தது. அப்போதுதான் நான் முதன்முதலாக இமயமலைக்கு சென்றேன். 45 நாட்கள் அங்கு தங்கியிருந்தேன்.

அதன்பிறகு 10 முறை நான் இமயமலைக்கு போய் வந்து விட்டேன். 'அவன் இவன்' படம் முடிந்ததும், எனக்கு முழுமையான ஓய்வு தேவைப்பட்டது. அந்த படத்தில் நான் ஒன்றரை கண் உள்ளவனாக நடித்து இருந்தேன். அதனால் என் கண்களுக்கும், மனசுக்கும் ஓய்வு தேவைப்பட்டது. உடனே இமயமலைக்கு புறப்பட்டேன். அங்கு 10 நாட்கள் தங்கியிருந்தேன்.

இமயமலை செல்லும்போதெல்லாம் அங்குள்ள ஆனந்தா ஸ்பா என்ற இடத்தில்தான் தங்குவேன். அங்கிருந்து ரிஷிகேஷ், பத்ரிநாத், குலுமனாலி ஆகிய இடங்களுக்கு 'பைக்'கில் செல்வேன். பஸ் கூரை மீது கூட பயணித்திருக்கிறேன்.

ஆன்மீக பயணம் அல்ல...

ஆன்மிக பயணத்துக்காக நான் இமயமலை செல்வதில்லை. ஓய்வு எடுப்பதற்காகவே போகிறேன். என்னை அங்கு யாருக்கும் தெரியாது என்பதால், சுதந்திரமாக நடமாட முடிகிறது. அங்கு, கங்கா நதிக்கு தினமும் பூஜை நடைபெறுகிறது. ஒரே ஒரு நாள் அந்த பூஜையில் கலந்துகொண்டேன்.

லடாக்கில் மயங்கிய சமீரா

வடநாட்டில் எனக்கு பிடித்த இன்னொரு இடம், லடாக். ஆனால், அங்கு ஆக்சிஜன் குறைவு. 'வெடி' படத்துக்காக, 2 பாடல் காட்சிகளை அங்கு படமாக்கினோம். டாக்டர்கள் குழுவையும், ஆக்சிஜன் சிலிண்டரையும் கூடவே வைத்துக்கொண்டு படப்பிடிப்பை நடத்தினோம். அப்படியிருந்தும் சமீராரெட்டி மயங்கி விழுந்து விட்டார். ஒரு நாள் படப்பிடிப்பை ரத்து செய்ய வேண்டியதாகி விட்டது,'' என்றார்.Written by: ShankarNewsletter Its Free!உங்கள் இன்பாக்சி்ல் லேட்டஸ்ட் செய்திகள் .ads_by_goolge_txt_top{font-family: arial;font-size:12px;color:#959595 !important;text-decoration:none;}.google_text_ad_single_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_multi_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_desc_top{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_top{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}.ads_by_goolge_txt_bottom{font-size:12px;font-family: arial;color:#959595 !important;}.google_text_ad_single_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_multi_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_desc{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_desc_bottom{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_bottom{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}

பிபாஷா பாசு, ராணா டக்குபதி விரைவில் திருமணம்?

பாலிவுட் நடிகை பிபாஷா பாசுவும், தெலுங்கில் இருந்து இந்திக்கு சென்றிருக்கும் நடிகர் ராணா டக்குபதிக்கும் இடையே பத்திக்கிச்சாம். விரைவில் திருமணம் நடக்கப்போவதாக பேசப்படுகிறது.

நடிகை பிபாஷா பாசுவும், நடிகர் ஜான் ஆபிரகாமும் கடந்த 9 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். என்னாச்சோ, ஏதாச்சோ என்று தெரியவில்லை ஆளுக்கொரு பக்கமா பிய்த்துக் கொண்டு போய் விட்டனர். பிபாஷா தன்னை மணந்துகொள்ளுமாறு கேட்டதாகவும், அதற்கு ஜான் மறுப்பு தெரிவத்தனால் தான் இருவரும் பிரிந்ததாக ஒரு பேச்சு.

ஜானைப் பிரிந்த பிறகு பிபாஷா தெலுங்கில் இருந்து இந்திக்கு சென்ற நடிகர் ராணா டக்குபதியுடன் நேரத்தை செலவிட ஆரம்பித்தார். ராணா தெலுங்கு முன்னணி நடிகர்கள் வெங்கடேஷ், நாகர்ஜூனாவின் நெருங்கிய உறவினர். ராணாவும், பிபாஷாவும் சேர்ந்து தம் மாரோ தம் என்ற படத்தில் நடித்தனர். அதில் இருந்து பிபாஷா, ராணாவுடன் சுற்றுவதாகத் தகவல்கள் வந்தன.

இந்நிலையில் இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போவதாக கூறப்படுகிறது.

முன்னதாக ராணா தமிழ் நடிகை ஷ்ரேயா சரணை டேட் செய்தார். அதன் பிறகு தான் பிபாஷா பக்கம் தாவி்விட்டார். ராணா, ஷ்ரேயா பிரிய பிபாஷா தான் காரணம் என்றும் கூறப்படுகிறது.

என்னவோ போங்கப்பா!Written by: ShameenaNewsletter Its Free!உங்கள் இன்பாக்சி்ல் லேட்டஸ்ட் செய்திகள் .ads_by_goolge_txt_top{font-family: arial;font-size:12px;color:#959595 !important;text-decoration:none;}.google_text_ad_single_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_multi_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_desc_top{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_top{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}.ads_by_goolge_txt_bottom{font-size:12px;font-family: arial;color:#959595 !important;}.google_text_ad_single_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_multi_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_desc{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_desc_bottom{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_bottom{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}

Wednesday, September 28, 2011

எதிர்ப்பை மீறி வெளியாகும் 'சத்யானந்தா'

போலிச்சாமியார்கள் பற்றிய திரைப்படம் ஒன்று சத்யானந்தா என்ற பெயரில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியில் வெளியாகிறது.

இந்தப் படத்தை வெளியிடக்கூடாது என நித்யானந்தா வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், அந்த எதிர்ப்பையும் மீறி இந்தப் படத்தை திரையிடுகிறார்கள்.

படத்தின் டப்பிங், ரீ ரிக்கார்டிங் போன்ற பணிகள் முடிந்துள்ளது. தற்போது தணிக்கை குழுவுக்கு இப்படம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

ஆனால் சத்யானந்தா படத்தை ரிலீஸ் செய்வதற்கு நித்யானந்தா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். படத்துக்கு தடை விதிக்க கோரி நீதிமன்றத்தில் ஒரு வழக்கும், அத்துடன் ரூ. 3 கோடி கேட்டு தனியாக மானநஷ்ட வழக்கும் தொடர்ந்துள்ளார். இதற்கு படக்குழு சார்பில் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தயாரிப்பாளர் மதன்படேல் கூறுகையில், "சத்யானந்தா படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. தணிக்கை குழுவுக்கும் அனுப்பி விட்டோம். தமிழகத்தில் ரிலீஸ் செய்ய தயாராகி வருகிறோம். நித்யானந்தா இந்த படத்தை தடை செய்ய முயற்சிப்பது வியப்பாக உள்ளது. படத்தை பார்க்காமலே அவர் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என்று புரியவில்லை. உலகம் முழுவதும் போலி சாமியார்கள் உள்ளனர். அவர்களை மக்களுக்கு அடையாளம் காட்டுவதே இப்படத்தின் நோக்கம்.

இந்த படம் ஒரு கற்பனை கதை. ஆன்மீகவாதிகள் போர்வையில் உள்ள போலிகளிடம் மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்ற சமூக அக்கறை யோடு இப்படத்தை எடுத்துள்ளோம். நித்யானந்தா ரூ.3 கோடி நஷ்டஈடு கேட்டுள்ளார். பணத்தை கொடுத்தால் ரிலீசுக்கு சம்மதிப்பாரா?," என்றார்.

இப்படத்தில் சத்யானந்தாவாக ரவி சேட்டன் நடித்துள்ளார். இத்தாலி நடிகை அனுகி, நேகா மிஸ்ரா ஆகியோரும் நடித்துள்ளனர்.Written by: ShankarNewsletter Its Free!உங்கள் இன்பாக்சி்ல் லேட்டஸ்ட் செய்திகள் .ads_by_goolge_txt_top{font-family: arial;font-size:12px;color:#959595 !important;text-decoration:none;}.google_text_ad_single_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_multi_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_desc_top{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_top{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}.ads_by_goolge_txt_bottom{font-size:12px;font-family: arial;color:#959595 !important;}.google_text_ad_single_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_multi_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_desc{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_desc_bottom{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_bottom{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}

டெலிகாம் விளம்பரத்திற்கு விஜய்க்கு ரூ. 5 கோடி?

நடிகர் விஜய் ஒரு பிரபல தொலைத்தொடர்பு நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிக்கவிருக்கிறார். இதற்காக அவருக்கு ரூ. 5 கோடி சம்பளம் பேசியுள்ளார்களாம்.

கோலிவுட் நட்சத்திரங்கள் தற்போது அதிக அளவில் விளம்பரப் படங்களில் நடித்து வருகின்றனர். ஏர்செல் நிறுவனத்திற்கு சூர்யாவும், ஏர்டெல் நிறுவனத்திற்கு அவரது தம்பி கார்த்தியும் பிராண்டு அமாபசிடர்களாக உள்ளனர்.

இந்த வரிசையில் தற்போது விஜய் சேரவிருக்கிறார். அவர் ஒரு பிரபல தொலைத்தொடர்பு நிறுவனத்தின் விளம்பரப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதற்காக அவருக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரூ. 5 கோடி.

தற்போது வேலாயுதம் பட வேலை முடிந்துவிட்டது. நண்பன் முடியும் தருவாயில் உள்ளது. இதையடுத்து விஜய் 3 நாட்கள் நடக்கும் இந்த புதிய விளம்பரப் படத்தில் நடிக்கவிருக்கிறார்.Written by: ShameenaNewsletter Its Free!உங்கள் இன்பாக்சி்ல் லேட்டஸ்ட் செய்திகள் .ads_by_goolge_txt_top{font-family: arial;font-size:12px;color:#959595 !important;text-decoration:none;}.google_text_ad_single_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_multi_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_desc_top{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_top{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}.ads_by_goolge_txt_bottom{font-size:12px;font-family: arial;color:#959595 !important;}.google_text_ad_single_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_multi_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_desc{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_desc_bottom{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_bottom{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}

இயக்குநர் விஜய்யுடன் அமலா பால் காதலா?

நடிகை அமலா பாலும், இயக்குனர் ஏ. எல். விஜய்யும் காதலிப்பதாகக் கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால் இதை அமலா பால் மறுத்துள்ளார்.

தெய்வத் திருமகள் படம் தொடங்கியதிலிருந்தே நடிகை அமலா பாலுக்கும் விஜய்க்கும் இடையே காதல் என்று பேசப்படுகிறது. எங்கே சென்றாலும் இருவரும் இணைந்தே சென்றுவந்தனர். விழாக்களில் ஜோடியாக ஒரே காரில் வந்தனர்.

ஷூட்டிங்கிலிருந்து ஒன்றாக வருகிறோம் என்று அப்போது விளக்கம் கூறினர். ஆனால் படம் வெளியாகிய பின்னும் இந்த நெருக்கம் தொடர்வதாகக் கூறப்படுகிறது. ஹோட்டல்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு இப்போதும் ஜோடியாகத்தான் செல்கிறார்களாம்.

இது வெறும் நட்பாக மட்டும் இருக்க வாய்ப்பு குறைவு என்று கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

இதில் இருவீட்டு பெரியவர்களுக்கும் கூட சம்மதம் என்கிறார்கள். அதற்கு வலு சேர்க்கும் விதத்தில், சில தினங்களுக்கு முன் விஜய்யின் குடும்ப விழாவில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்தார் அமலா பால்.

கடந்த சனிக்கிழமை விஜய்யின் தந்தையும் தயாரிப்பாளருமான ஏ எல் அழகப்பன் மணிவிழா நடந்தது. அதில் அமலா பால் கலந்து கொண்டு இயக்குநர் விஜய்யின் பெற்றோரிடம் ஆசி பெற்றார். உடன் விஜய்யும் நின்று கொண்டிருந்தார், முகம் முழுக்க மகிழ்ச்சியுடன்!

இந்த விழாவுக்கு அமலா பாலின் பெற்றோரும் வந்திருந்தார்கள். விழாவின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை அனைவரும் உடனிருந்ததற்கு புதிய அர்த்தம் கற்பிக்கிறார்கள் திரையுலகில்.

இது நட்புதான் - அமலா

இதுகுறித்து அமலா பாலிடம் கேட்டபோது, "நானும் விஜய்யும் நல்ல நண்பர்கள். எங்களுக்குள் நட்பை தவிர வேறு எதுவும் இல்லை. காதல் திருமணம் பற்றியெல்லாம் சிந்திக்க உகந்த நேரம் இது வல்ல. நடிப்புக்குத்தான் முன்னுரிமை கொடுக்கிறேன். திருமணத்துக்கு முன் 100 படங்களிலாவது நடிக்க வேண்டும் என்று திட்டம் வைத்துள்ளேன்," என்றார்.

நம்பிட்டோம்!Written by: ShankarNewsletter Its Free!உங்கள் இன்பாக்சி்ல் லேட்டஸ்ட் செய்திகள் .ads_by_goolge_txt_top{font-family: arial;font-size:12px;color:#959595 !important;text-decoration:none;}.google_text_ad_single_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_multi_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_desc_top{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_top{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}.ads_by_goolge_txt_bottom{font-size:12px;font-family: arial;color:#959595 !important;}.google_text_ad_single_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_multi_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_desc{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_desc_bottom{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_bottom{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}

Tuesday, September 27, 2011

மும்பையில் யாசகம் கேட்ட பெண்ணுக்கு ரூ. 5,000 கொடுத்த பாரிஸ் ஹில்டன்

மும்பை: வியாபார விஷயமாக இந்தியா வந்துள்ள சோஷியலைட் பாரிஸ் ஹில்டன் கைக்குழந்தையுடன் வந்து யாசகம் கேட்ட பெண்ணுக்கு ரூ. 4,943 கொடுத்தார்.

நடிகை, சோஷியலைட், கோடீஸ்வரி, தொழிலதிபர், மாடல் அழகி என பல அவதாரங்களைக் கொண்டவர் பாரிஸ் ஹில்டன். தனது கைப்பைகள் உள்ளிட்ட அலங்காரப் பொருட்களை அறிமுகப்படுத்த 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். கைப்பைகள் உள்ளிட்ட அலங்காரப் பொருட்களை அறிமுகப்படுத்திய அவருக்கு பாலிவுட்டில் நடிக்கும் ஆசையும் வந்துள்ளது.

இந்தியாவும், இந்தியப் பெண்களும் அழகு என்று புகழ்ந்து தள்ளியுள்ளார்.

நேற்று மும்பையின் அந்தேரி பகுதியில் சிக்னலில் பாரிஸ் ஹில்டன் கார் நின்று கொண்டிருந்தது. அப்போது கைக்குழந்தையுடன் வந்த பெண் கார் கண்ணாடியைத் தட்டி பிச்சை கேட்டுள்ளார். உடனே பாரிஸ் 100 டாலர் (ரூ. 4,943) நோட்டை எடுத்து அந்த பெண்ணிடம் கொடுத்துள்ளார்.

தனக்கு எவ்வளவு ரூபாய் கிடைத்துள்ளது என்பதை அறியாத அந்த பெண் அங்கு நின்று கொண்டிருந்த புகைப்படக்காரரிடம் போய் நோட்டை நீட்டி சில்லறை கேட்டுள்ளார்.

இந்தியாவில் உள்ள வறுமைக் கொடுமையைப் பற்றி பாரிஸ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்தியா மிகவும் அழகான நாடு. ஆனால் சில பகுதிகள் வறுமைக் கொடுமை உள்ளது. தெருவில் படுத்துத் தூங்கும் குழந்தைகளைப் பார்த்து என் இதயம் உடைந்துவிட்டது என்று அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.Written by: ShameenaNewsletter Its Free!உங்கள் இன்பாக்சி்ல் லேட்டஸ்ட் செய்திகள் .ads_by_goolge_txt_top{font-family: arial;font-size:12px;color:#959595 !important;text-decoration:none;}.google_text_ad_single_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_multi_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_desc_top{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_top{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}.ads_by_goolge_txt_bottom{font-size:12px;font-family: arial;color:#959595 !important;}.google_text_ad_single_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_multi_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_desc{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_desc_bottom{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_bottom{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}

Monday, September 26, 2011

டைம்ஸ் இதழின் புகழ் பெற்ற 25 சிறந்த விளையாட்டுப் பட வரிசையில் லகான்

டைம்ஸ் இதழ் வெளியிட்டுள்ள உலகப் புகழ் பெற்ற 25 சிறந்த விளையாட்டுப் படங்களின் வரிசையில் இந்தியாவின் லகானும் இடம் பெற்றுள்ளது. ஆமிர்கானின் நடிப்பில் உருவான இப்படம், கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது. ஆஸ்கர் விருதுப் போட்டியில் கலந்து கொண்டு சிறந்த வெளிநாட்டுப் பட வரிசையில் இறுதிச் சுற்றுக்குத் தகுதி படைத்து சாதனை படைத்ததாகும்.

உலகப் புகழ் பெற்ற விளயாட்டை மையமாகக் கொண்ட 25 படங்களை டைம்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. இதில் லகானுக்கு 14வது இடம் கிடைத்துள்ளது. 2001ல் வெளியான படம் லகான். ஆமிர்கான் தயாரிப்பில் உருவான இப்படத்தை ஆசுதோஷ் கோவரிகர் இயக்கியிருந்தார். இங்கிலாந்து ஆட்சியின் கீழ் இருந்த இந்தியாவில் கதை நடப்பது போல படமாக்கியிருந்தனர்.

வெள்ளைக்காரர்களுக்கும், ஒரு சாதாரண கிராமத்து இளைஞர்களுக்கும் இடையிலான போட்டியே இப்படத்தின் கதைக்களமாகும்.

இந்தப் படம் குறித்து வெகுவாக புகழாரம் சூட்டியுள்ளது டைம்ஸ். படத்தின் கதையைப் பாராட்டியுள்ள டைம்ஸ், படத்தின் இசையமைப்பாளரா ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் விசேஷமான பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளது.

இந்தப் படப் பட்டியலில் 1998ல் வெளியான தி பிக் லெபோவ்ஸ்கி முதலிடத்தைப் பிடித்துள்ளது. பாடி அன்ட் சோல், பிரேக்கிங் அவே, புல் டுர்ஹாம், கேடிஷேக் ஆகிய படங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.Written by: ArivalaganNewsletter Its Free!உங்கள் இன்பாக்சி்ல் லேட்டஸ்ட் செய்திகள் .ads_by_goolge_txt_top{font-family: arial;font-size:12px;color:#959595 !important;text-decoration:none;}.google_text_ad_single_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_multi_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_desc_top{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_top{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}.ads_by_goolge_txt_bottom{font-size:12px;font-family: arial;color:#959595 !important;}.google_text_ad_single_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_multi_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_desc{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_desc_bottom{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_bottom{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}

அபிஷேக் பச்சனுக்கு மீண்டும் காயம்: விரல் எலும்பு முறிவு

போல் பச்சன் படத்தில் நடிக்கும் அபிஷேக் பச்சனுக்கு மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளது. இம்முறை இடது கை மோதிர விரலில் உள்ள எழும்பில் லேசான விரிசல் ஏற்பட்டுள்ளது.

நடிகர் அமிதாப்பச்சனின் மகனும், பாலிவுட்டின் முன்னணி நடிகருமான அபிஷேக்பச்சன் நடித்து வரும் 'போல் பச்சன்' . கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் வலது கண்ணுக்கு அருகில் 6 தையல் போடப்பட்டது. தற்போது அவருக்கு மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த முறை இடது கை மோதிர விரலில் உள்ள எழும்பில் லேசான விரிசல் ஏற்பட்டுள்ளது.

படப்பிடிப்பு முடிந்த பிறகு படக்குழுவினர் கிரிக்கெட் ஆடினர். அப்போது பந்து அபிஷேக்கின் முகத்திற்கு நேராக வந்தது. முகத்தில் அடிபடாமல் இருக்க கையை வைத்து முகத்தை மறைத்தார். வேகமாக வந்த பந்து அபிஷேக்கின் விரலை பதம்பார்த்துவிட்டது.

இது குறித்து அபிஷேக் டுவிட்டரில் கூறியுள்ளதாவது,

ஆமாம். நீங்கள் கேட்ட செய்தி உண்மை தான். என் விரலில் காயம் ஏற்பட்டுள்ளது. என் அப்பாவுக்கு விலா எழும்பில் விரிசல் ஏற்பட்டுள்ளதல்லவா. அது தான் அவருக்கு கம்பெனி கொடுக்க எனது விரல் எழும்பில் விரிசல் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

தன் அடிபட்ட விரலின் படத்தையும் வெளியிட்டுள்ளார்.Written by: ShameenaNewsletter Its Free!உங்கள் இன்பாக்சி்ல் லேட்டஸ்ட் செய்திகள் .ads_by_goolge_txt_top{font-family: arial;font-size:12px;color:#959595 !important;text-decoration:none;}.google_text_ad_single_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_multi_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_desc_top{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_top{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}.ads_by_goolge_txt_bottom{font-size:12px;font-family: arial;color:#959595 !important;}.google_text_ad_single_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_multi_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_desc{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_desc_bottom{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_bottom{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}

Sunday, September 25, 2011

பாலிவுட் படங்களில் நடிக்க ஆசை: பாரிஸ் ஹில்டன்

மும்பை: பாரிஸ் ஹில்டனுக்கு பாலிவுட் படங்களில் நடிக்கை ஆசையாக இருக்கிறதாம். நல்ல கதைக்காக காத்திருக்கிறாராம்.

நடிகை, சோஷியலைட், கோடீஸ்வரி, தொழிலதிபர், மாடல் அழகி என பல அவதாரங்களைக் கொண்டவர் பாரிஸ் ஹில்டன். தனது கைப்பைகள் உள்ளிட்ட அலங்காரப் பொருட்களை அறிமுகப்படுத்த 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.

மும்பையில் தங்கியுள்ள அவர் நிருபர்களிடம் கூறியதாவது,

பாலிவுட்டில் நடிக்கும் வாய்ப்புகள் வரத் தான் செய்கிறது. எனக்கும் பாலிவுட்டில் நடிக்க ஆசையாக உள்ளது. ஆனால் நல்ல கதை இன்னும் கிடைக்கவில்லை. அதற்காகத் தான் காத்திருக்கிறேன் என்றார்.

நீங்கள் நடத்தும் பெஸ்ட் பிரண்ட்ஸ் பார்எவர் ரியாலிட்டி ஷோவை இந்தியாவில் நடத்தலாமே என்று கேட்டதற்கு, எனக்கும் ஆசை தான். ஆனால் நான் தற்போது பிசியாக உள்ளேன் என்றார்.

பெஸ்ட் பிரண்ட்ஸ் பார்எவர் ரியாலிட்டி ஷோ கடந்த 2008-ம் ஆண்டு அமெரிக்காவில் துவங்கப்பட்டது. பின்னர் அது ஹிட்டானவுடன் இங்கிலாந்து மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திலும் துவங்கப்பட்டது.

காபி வித் கரண் நிகழ்ச்சியில் பாரிஸ் கலந்துகொள்ளப்போகிறார் என்றும், பாலிவுட் நட்சத்திரங்கள் அவருக்கு பார்ட்டி கொடுக்கப்போகிறார்ள் என்றும் பேசப்படுவது பற்றி கேட்டதற்கு,

இது எல்லாம் வதந்திகள். நான் இங்கு வியாபார விஷயமாகவும், எனது ரசிகர்களை சந்திக்கவும் தான் வந்துள்ளேன்.

பின்னர் பாரிஸ் தனது தயாரிப்பான கைப்பைகள், அழங்காரப் பொருட்களை அறிமுகப்படுத்தினார்.Written by: ShameenaNewsletter Its Free!உங்கள் இன்பாக்சி்ல் லேட்டஸ்ட் செய்திகள் .ads_by_goolge_txt_top{font-family: arial;font-size:12px;color:#959595 !important;text-decoration:none;}.google_text_ad_single_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_multi_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_desc_top{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_top{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}.ads_by_goolge_txt_bottom{font-size:12px;font-family: arial;color:#959595 !important;}.google_text_ad_single_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_multi_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_desc{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_desc_bottom{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_bottom{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}

Saturday, September 24, 2011

கல்யாணமாகலைன்னு எத்தனை முறைதான் சொல்வது- ஜெனிலியா எரிச்சல்

எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று இன்னும் எத்தனை முறை தான் சொல்வதோ என்று நடிகை ஜெனிலியா கடுப்பாகியுள்ளார்.

நடிகை ஜெனிலியாவுக்கும், இந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கிற்கும் திருமணம் நடந்துவிட்டது என்று அவ்வப்போது செய்திகள் வருவதும் அதை ஜெனிலியா மறுப்பதும் தொடர் கதையாகிவிட்டது.

இது குறித்து ஜெனிலியா கூறியதாவது,

எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அனைவரிடமும் சொல்லிவிட்டுத் தான் திருமணம் செய்வேன். கடந்த 5 வருடங்களாக எனது திருமணத்தைப் பற்றியே பேசுகிறார்கள். என் தனிப்பட்ட வாழக்கையில் அப்படி என்ன தான் அக்கறையோ. நானும் எனக்கு திருமணம் ஆகவில்லை என்று பலமுறை சொல்லிவிட்டேன். இதற்கு மேல் என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

தயவு செய்து இனிமேல் எனக்கு ரகசியமாக திருமணமாகிவிட்டது என்று பேசாதீர்கள். இதனால் என் குடும்பத்திலும், ரித்தேஷ் குடும்பத்திலும் சலசலப்பு ஏற்படுகின்றது. நானும் ரித்தேஷும் நல்ல நண்பர்கள் அவ்வளவு தான். நட்பைத் தாண்டி எங்களுக்குள் வேறொன்றுமில்லை என்றார்.

இரு வீட்டாரும் பச்சைக்கொடி காட்டிவிட்டார்கள், 2012-ல் திருமணம் என்றார்களே. அப்போ அது அவ்வளவு தானா?Written by: ShameenaNewsletter Its Free!உங்கள் இன்பாக்சி்ல் லேட்டஸ்ட் செய்திகள் .ads_by_goolge_txt_top{font-family: arial;font-size:12px;color:#959595 !important;text-decoration:none;}.google_text_ad_single_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_multi_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_desc_top{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_top{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}.ads_by_goolge_txt_bottom{font-size:12px;font-family: arial;color:#959595 !important;}.google_text_ad_single_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_multi_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_desc{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_desc_bottom{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_bottom{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}