This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Wednesday, June 29, 2011

4000 கோடியில் வரும் புதிய கார் தொழிற்சாலை

June 30, 2011 | no commentsசென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூரில் ரூ.4 ஆயிரம் கோடி முதலீட்டில் ஒருங்கிணைந்த கார் தயாரிப்பு தொழிற்சாலை அமைகிறது.  இதற்கான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு அளிக்கும் என்று பிரான்ஸ் நாட்டு உயர்மட்ட அதிகாரக் குழுவிடம் முதல்வர் ஜெயலலிதா உறுதி அளித்தார்.

இதுகுறித்து அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

முதல்வர் ஜெயலலிதாவை நேற்று தலைமை செயலகத்தில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பி.எஸ்.ஏ. பியூஜியாட் சிட்ரியான் நிறுவனத்தின் ஆசிய சிறப்பு செயல்பாடுகள் தலைமை செயல் அதிகாரி கிரிகோரி ஆலிவர், இந்திய திட்டங்களின் மேலாண்மை இயக்குனர் பிரெடரிக் பேபர், பிளாக் ஸ்டோன் நிறுவனத்தின் முதுநிலை மேலாண்மை இயக்குனர் ஜிதேஷ் காதியா, மனிதவள மேம்பாடு துணைத் தலைவர் சஞ்சு சாகா, அந்த நிறுவனத்தைச் சேர்ந்த சசிகாந்த் வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய உயர்மட்ட அதிகாரக் குழு சந்தித்து, காஞ்சீபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே ரூ.4 ஆயிரம் கோடி முதலீட்டில் ஒருங்கிணைந்த கார் தயாரிப்பு தொழிற்சாலை அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.

மாநில அரசின் ஆதரவு

அப்போது முதல்வர் ஜெயலலிதா அந்தக் குழுவினரிடம் கூறுகையில், கார் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்க தமிழ்நாடு மாநிலத்தை தேர்வு செய்ததற்காக பி.எஸ்.ஏ. நிறுவன அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தார். இந்த தொழிற்சாலை விரைந்து தொடங்குவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாகவும் உறுதி அளித்தார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தொழில்துறை அமைச்சர், தலைமை செயலாளர், தொழில் துறையின் முதன்மைச் செயலாளர், சிப்காட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவன செயல் தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆண்டுக்கு 3 லட்சம் கார்கள்

பாரிஸை தலைமையிடமாகக் கொண்ட பி.எஸ்.ஏ. ஆட்டோமொபைல் நிறுவனம் ‘பியூஜியாட்’, ‘சிட்ரியான்’ ஆகிய பெயர்களில் கார்கள், மோட்டார்கள் சைக்கிள்கள் விற்பனை செய்து வருகிறது. கார் உற்பத்தியில் ஐரோப்பாவில் இரண்டாவது பெரிய நிறுவனமாகவும், உலகத்தில் 6-வது பெரிய நிறுவனமாகவும் பி.எஸ்.ஏ. நிறுவனம் இருக்கிறது. கடந்த ஆண்டு இந்த நிறுவனத்தின் வர்த்தகம் (விற்றுமுதல்) ரூ.3 கோடியே 9 லட்சத்து 556 கோடிகள் ஆகும்.

பி.எஸ்.ஏ. நிறுவனம், ஆண்டுக்கு 3 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட தொழிற்சாலையை உருவாக்க ஆர்வமாக உள்ளது. அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் கார்களை இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் விற்க திட்டமிட்டு இருக்கிறது. இதற்காக இந்த நிறுவனத்தின் அதிகாரிகள், இந்தியாவின் பல மாநிலங்களுக்கு சென்று ஆலோசனை நடத்தினார்கள்.

இறுதியாக, சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூர் அருகே கார் தொழிற்சாலைக்கான இடத்தை தேர்வு செய்துள்ளனர். சென்னையில் சிறந்த சுற்றுச்சூழல், கார் தயாரிப்புக்கு தேவையான உதிரி பாகங்கள் சப்ளை, தேவையான அளவு மனிதஆற்றல், துறைமுக வசதி ஆகியவை இருப்பதாக கருதும், பி.எஸ்.ஏ. நிறுவனம், எல்லாவற்றிற்கும் மேலாக, மாநில அரசின் ஆதரவு அவசியம் என்று கருதுவதால் அந்த நிறுவனத்தின் உயர்மட்ட குழுவினர், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து மாநில அரசு முழு ஆதரவு மற்றும் உதவி அளிப்பதுடன், கார் தயாரிப்பு தொழிற்சாலைக்கு தேவைப்படும் நிலத்தையும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு

ஸ்ரீபெரும்புதூர் அருகே இந்த கார் தயாரிப்பு தொழிற்சாலை நிறுவப்பட்டால் 5 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், 15 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும். அத்துடன் பிரான்ஸ் நாட்டின் ஏராளமான கார் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்களையும் இந்த நிறுவனம் ஈர்க்கும். அதன்மூலம் தமிழ்நாட்டின் பொருளாதாரம் மேம்படும்.

-இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆண்களுக்குப் பிடித்த பெண், பெண்களுக்குப் பிடித்த ஆண் யார்?? சர்வே..

June 30, 2011 | no commentsதாங்கள் எப்படி எல்லாம் இருந்தால் பெண்களுக்கு பிடிக்கும் என்று ஆண்களும் , தாங்கள் எப்படி எல்லாம் அழகாக காட்சி அளித்தால் வாலிப பட்டாளத்தை பின்னால் அலைய விடலாம் என்று பெண்களும் போட்டி போட்டுக்கொண்டு ஒருவருக்கொருவர் தங்களை அழகுபடுத்திக்கொள்வதில் ஈடுபடுவதாக தெரிவிக்கிறது ஒரு ஆராய்ச்சி. பல சுவாரஸ்யமான தகவல்களை கொண்ட அந்த ஆராய்ச்சி முடிவு பற்றி நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.


மனதை மயக்கும் சிவப்பு
பொதுவாகவே காதலர்களிடம் சென்று நீங்கள் காதலிப்பதற்கு என்ன காரணம் என்றால், நல்லகுணம், என்று பொய், மேல் பொய் சொல்வார்கள். ஆனால் அப்படி ஒன்றும் இல்லை காதல் வருவதற்கு அழகும், உடல் கூறும் தான் காரணம் என்று கூறும் ஆராய்ச்சிகள் ஒரு கட்டத்தில் சிவப்பு நிறத்தாலும் தான் பெரும்பாலும் செக்ஸ் உணர்ச்சி ஏற்பட்டு அதன் மூலம் காதல் வலையில் விழுகிறார்கள் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், பொதுவாக சிவப்பு கலரில் உடை அணியும் பெண்கள் கவர்ச்சியாக தெரிவார்கள் என்கின்றனர்.

காமம் இல்லாத காதல் இல்லை என்பார்கள். அதுவும் இந்த ஆராய்ச்சியின் முடிவும் சரியாகத்தான் இருக்கிறது. உச்சம் தலை முதல் உள்ளங்கால் வரை ஒரு பெண்ணை பார்த்த அடுத்த நிமிடத்திலேயே படம் எடுக்கிறது வாலிபர்களின் காமிரா கண்கள்…! கண்ணை பறிக்கிற சிவப்பு கலர் உடை அணிபவர்களுக்கு பாலுணர்வு தானாகவே வந்து விடுகிறது. சிவப்பு என்பது பெண்களை பகலிலும், இரவிலும் வசீகரிக்கும்ஒரு கலர் என்று தெரிவிக்கிறது அமெரிக்காவின் ரோசெஸ்டர் பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள்.

ஆண்களை கவரும் பெண்கள்
பெண்களின் அழகுக்கு முதல் அழகு சேர்ப்பது கண்கள் தான். இதில் கண்களுக்கு மேக்கப் போடாத பெண்களை குறைந்த ஆண்களுக்கு மட்டுமே பிடிக்குமாம். அதுவும் கிராமபுறத்து வாலிபர்களுக்கு தான் இது போன்ற கண்கள் பிடிக்கும். ஆனால் நகரத்தில் வசிக்கும் வாலிபர்களுக்கு ஒவ்வொரு அழகு பிடிக்கிறது. ஐ லைனர் போடும் பெண்கள் பெரும்பாலான இளைஞர்களை வசீகரிக்கின்றனர். அவர்களின் கண் அழகும், முகம், சிரிப்பு என ஒட்டுமொத்தமாக வாலிபர்களை கட்டிவைக்கிறது இது போன்ற அழகுடன் கண் மேக்கப் செய்தவுடன் மேலும் அழகு சேர்ந்து கொள்வதால் பெண்களின் அழகுக்கு எப்போதுமே நாங்கள் அடிமை தான் என்று கூறும் அளவுக்கு இளைஞர்கள் மாறிவிடுகின்றனர்.

இயற்கை அழகை ரசிக்கும் வாலிபர்கள்
ஆனால் இதே அளவுக்கு மேக்கப்போடும் பெண்களை வெறுக்கும் வாலிபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் என்ன தான் இருந்தாலும் பெண்களுக்கு இயற்கையான அழகே, தனிதான் என்று ரசிக்கின்றனர். இப்படி வேறுப்பட்டு இருந்தாலும் அனைவரையும் கவர்ந்திழுப்பது பெண்களின் கண்கள் தான் என்பது மற்றொரு விசேஷம்…! கண்ணுக்கு மை அழகு… கவிதைக்கு பொய் அழகு என்பது போல பெண்ணின் கண்ணுக்கு மேக்கப் அழகு தான் என்கிறார்கள் காதலில் விழாதவர்களும்.

முத்தம் சிந்தும் உதடுகள்
அடுத்து பெண்களின் அழகை நிர்ணயிப்பதில் முக்கிய பங்காக இருப்பது உதடுகள். ஆண்களை விட பெண்களின் உதடுக்கு எப்பவுமே தனி மவுசுதான். அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக இன்றைய காலகட்டத்தில் உதட்டிற்கு லிப்ஸ்டிக் போடாத பெண்களே இல்லை என்று கூறும் அளவுக்கு நாகரீகம் வளர்ந்து விட்டது. லிப்ஸ்டிக் போட்டுக் கொள்வதால் முகத்திற்கு பளிச்சென்ற தோற்றம் ஏற்படுகிறது.

உதட்டில் ஈரப்பதத்தை தக்க வைக்கவும், வெய்யிலில் பாதுகாக்கவும் லிப்ஸ்டிக்கில் உள்ள மாய்சுரைசர் உதவுகிறது. இதே போல் உதடுகளுக்கு நிறம் கொடுக்கும் மற்றொரு பொருளாக லிப்கிளாஸ் உதவுகிறது. உதட்டினை பளப்பளப்பாகவும், மிருதுவானதாகவும் இது காட்டும். இதை பெரும்பாலான இளைஞர்கள் ரசிக்கின்றனர்.

பெண்களின் அடுத்த அழகாக உருவெடுத்துள்ளது நகங்கள். பொதுவாக இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் நீண்ட நகங்கள் வளர்த்து வருகிறார்கள். பொதுவாகவே நகம் வளர்க்கும் பெண்களை ஆண்களுக்கு பிடிக்காது என்பது தான் பெண்களுக்கு அதிர்ச்சி தரும் விஷயம்.

பந்தா இல்லாத ஆண்கள்
சரி இனி ஆண்களைப்பற்றி சர்வே முடிவு என்ன கூறுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். ஆண்கள் அணியும் உடையின் வர்ணத்தில் சிவப்பு தூக்கலாக இருந்தாலே போதும், தன்னை அறியாமலே பெண்கள் திரும்பிப்பார்ப்பார்கள். சிவப்பு கலரில் பனியன், சட்டை போடும் ஆண்களை கவர்ச்சிகரமானவராக பெண்கள் உணர்கிறார்கள் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும் பெண்களுக்கு பந்தா இல்லாத ஆண்களை தான் மிகவும் பிடிக்கும். எளிமையான, நகைச்சுவை உணர்வு, பேச்சு திறமை கொண்ட ஆண்களை தான் பெண்கள் வளைத்து வளைத்து காதலிக்கிறார்கள் என்கிறது சர்வே…! பெண்களை கவர ஆண்களுக்கான செலவு கம்மிதான். ஆனால் தமக்கு பின்னால் ஆண்களை சுற்ற வைக்க வேண்டும் என்றால் பெண்களுக்குத்தான் செலவு அதிகம் பிடிக்கும் என்கிறது தெரிவித்துள்ளது ஆராய்ச்சி முடிவு.

மங்காத்தா கெஸ்ட் ரோலில் விஜய்

June 30, 2011 | no comments

கோலிவுட்டின் இப்போதைய லேட்டஸ்ட் பரபரப்பு விஜய், அஜீத் பற்றிய செய்தி தான். அஜீத் நடிப்பில் உருவாகி வரும் அவரது 50வது படமான மங்காத்தாவில், கெஸ்ட் ரோலில் நமது இளைய தளபதி விஜய்யும் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொதுவாக எல்லா தொழிலும் போட்டி இருக்கிறது, அதுபோல சினிமாவிலும் போட்டி உண்டு. அதில் அஜீத்துக்கும், விஜய்க்கும் சொல்லவே தேவையில்லை. முன்பெல்லாம் இவர்களது படத்தில் அஜீத்தை தாக்கி விஜய் பஞ்ச் டயலாக் பேசுவது போன்றும், விஜய்யை தாக்கி அஜீத் பஞ்ச் டயலாக் பேசுவதும் தொடர்கதையாக இருந்தது. இது இவர்களது ரசிகர்கள் மத்தியிலும் தொடர்ந்தது. இருவரது ரசிகர்களும் எப்போதும் முறைத்து கொண்டுதான் இருப்பார்.  ஆனால் நிஜத்தில் விஜய்யும், அஜீத்தும் நல்ல நண்பர்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க மாட்டார்களா…? என இவர்களது ரசிகர்களுக்கு எப்போதும் ஒரு ஏக்கம் இருந்து கொண்டே இருந்தது. இப்போது அந்த ஏக்கம் பூர்த்தியாகி இருக்கிறது.

வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் 50வது படமான மங்காத்தா படத்தில், படத்தின் நாயகி த்ரிஷா தவிர அர்ஜூன், லட்சுமிராய், அஞ்சலி, வைபவ், பிரேம்ஜிஅமரன் என்று ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இந்நிலையில் மங்காத்தாவில் ஒரு காட்சியில், கெஸ்ட் ரோலில் நமது இளைய தளபதி விஜய்யும் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே விஜய் மற்ற நடிகர்கள் படங்களில் கெஸ்ட்ரோலில் வந்துபோய் உள்ளார். ஆனால் அதெல்லாம் பெரிய விஷயமல்ல. அஜீத் படத்தில், விஜய் கெஸ்ட்ரோலில் நடித்திருப்பதாக கூறுவது தான் பெரிய விஷயம். இந்தசெய்தி குறித்த உறுதியான தகவல் இல்லை. ஒருவேளை இந்த செய்தி உண்மையாக இருப்பின், நிச்சயமாக இருவரது ரசிகர்களுக்கும் இது கொண்டாட்டமான செய்தி தான்.

தற்போது மங்காத்தா படத்தின் இறுதிகட்ட சூட்டிங் ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு நாளில் படத்தின் சூட்டிங் முடிந்து இறுதிகட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. ஜூலை இரண்டாவது வாரத்தில் மங்காத்தா படம் திரைக்கு வருகிறது.

5 பேர் முன்னிலையில் தான் திறமையை நிரூபித்த பிரதமர்

June 29, 2011 | no commentsஎதிர்கட்சிகள் தன்னை திறமையற்றவன் என்று கூறிவந்ததற்கு இன்று நடைபெற்ற பத்திரிக்கை ஆசிரியர் சந்திப்பில் பதிலளித்துள்ளார் பிரதமர் மன்மோகன்சிங். நாட்டின் முக்கிய விவகாரங்கள் குறித்து பத்திரிகை ஆசிரியர்கள் கூட்டத்தில், பிரதமர் மன்மோகன் சிங் இன்று உரையாற்றினார். இந்த சந்திப்பில் 5 பத்திரிக்கையாசிரியர்கள் மட்டும் பங்கேற்றனர்.

சுமார் ஒருமணி நேரத்திற்கு மேலாக நடந்த இந்த சந்திப்பில் பிரதமர் மன்மோகன்சிங் பேசியதாவது, நான் திறமையற்றவன் என்று எதிர்கட்சியினர் கூறிவருகின்றனர். ஆனால் நான் திறமையற்றவன் அல்ல. காங்கிரஸ் கட்சியை சோனியா நன்றாக வழிநடத்தி வருகின்றார். அமைச்சரவை மாற்றம் குறித்த பணிகள் நடந்து வருகிறது. இந்த மாற்றம் விரைவில் வெளியாகும். ராகுல் காந்தி பிரதமராக எந்த தடையும், சிக்கலும் இல்லை.

லோக்பால் அமைப்பில் பிரதமர் பதவியையும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், அதுதான் எனது விருப்பமும் கூட. அதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. அனைத்தும் வெளிப்படையாக இருக்க வேண்டும் அதே சமயம் நல்ல வலுவான மசோதவாக இருக்க வேண்டும் என்றார்.

மேலும், கறுப்பு பண விவகாரம் மற்றும் ஊழல் தடுப்பு குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், திமுகவுடனான கூட்டணி நன்றாகவே உள்ளது என்றும் பதிலளித்தார் மன்மோகன் சிங். இதே போன்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பத்திரிகை ஆசிரியர்களிடமும், கடந்த பிப்ரவரி மாதம் “டிவி’ சேனல் ஆசிரியர்களிடமும், பிரதமர் மன்மோகன் சிங் உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை செல்போன் கடைகள் ஸ்ட்ரைக்

June 29, 2011 | no commentsபுதிய இணைப்புகளுக்கு தரப்படும் கமிஷன் தொகை குறைக்கப்பட்டதைக் கண்டித்து மொபைல் போன் விற்பனையாளர்கள் நாளை கடையடைப்பு நடத்துகின்றன.

ரீ-சார்ஜ் மற்றும் புதிய இணைப்பு விற்பனைக்கு ஏர்செல், ஏர்டெல், வோடாபோன் போன்ற நிறுவனங்கள் தங்கள் முகவர்களுக்கு இதுவரை கொடுத்து வந்த கமிஷன் தொகையைக் கணிசமாகக் குறைத்துவிட்டன. இதனால் செல்போன் விற்பனையாளர்கள் மற்றும் தனியார் செல்போன் நிறுவன முகவர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி எழுந்துள்ளது.

தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களின் இந்த செயல்பாட்டுக்கு கண்டனம் தெரிவித்து நாளை (வியாழன்) ஒருநாள் கடை அடைப்பு போராட்டம் நடத்த செல்போன் கடைக்காரர்கள் தீர்மானித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செல்போன் உபயோகிப்பாளர்களின் பணத்தை சிறப்பு சேவை என்ற பெயரில் வாடிக்கையாளர்கள் அனுமதி இல்லாமல் எடுத்து கோடி, கோடியாக லாபம் அடைவதை ஏற்க முடியாது. புதிய இணைப்பு விற்பனையாளர்களின் லாபம் குறைக்கப்பட்டதைக் கண்டிக்கிறோம்.

இதை வலியுறுத்தி 30-ந்தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செல்போன் கடைகள் அடைக்கப்படும். ரீசார்ஜ், புதிய இணைப்பு விற்பனை எதுவும் நாளை பகலில் நடைபெறாது”, என்று அறிவித்துள்ளனர். இதனால் தனியார் நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் விற்பனை இழப்பு ஏற்படும்.

ஆடிக்காற்றில் பறந்து போன அரவாண் செட்

June 29, 2011 | no comments

வசந்தபாலன் இயக்கி வரும் அரவாண் படத்தின் ஷூட்டிங்கில் அடிக்கடி அசம்பாவிதங்கள் நடப்பது வழக்கமாகிவிட்டது. இந்த முறை படப்பிடிப்புக்காக போடப்பட்ட குடிசை செட் அப்படியே காற்றில் பறந்துவிட்டதாம்.

மதுரை, தென்காசி என தென் மாவட்டங்களில் இந்தப் படத்தின் ஷூட்டிங்கை நடத்தி வருகிறார் வசந்த பாலன். ஆதி, பசுபதி, தன்ஷிகா, கபீர் பேடி உள்ளிட்டோர் நடித்து வரும் இந்த சரித்திரப் படத்துக்காக தென்காசி அருகே தோரணமலையில் ஒரு பெரிய குடிசைப் பகுதி செட் போடப்பட்டது. கிட்டத்தட்ட 100 குடிசைகள் இதில் இடம்பெற்றிருந்தன.

தென்காசி பகுதியில் பருவக் காற்று மிகப் பலமாக உள்ளது. எனவே இந்த குடிசை செட் காற்றில் பறந்துவிட்டது.மேலும் படப்பிடிப்புக்காக பயன்படுத்தப்பட்ட ஜிம்மி ஜிப் கேமராவும் இதில் பழுதடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து படப்பிடிப்பை ஒகேனக்கல் பகுதிக்கு மாற்றியுள்ளார் வசந்தபாலன்.

ஆடிக்காற்றில் அம்மியே பறக்கும்போது அரவாண் செட் எம்மாத்திரம்…

குத்தாட்டம் போட வரும் பாக் கிரிக்கெட் வீரரின் காதலி

June 29, 2011 | no comments

பாலிவுட்டின் புதிய ஐட்டம் டான்சராக களம் இறங்கியுள்ளார் பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக்.

பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவின் 4-வது சீசன் மூலம் இந்தியாவில் பிரபலமானார். சர்ச்சையில் சிக்கியுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ஆசிபின் காதலி. வீணா மாலிக்கை வைத்து ஏகப்பட்ட சர்ச்சைகள் உலா வந்தவண்ணம் உள்ளன. பிக் பாஸ் நிகழ்ச்சியின்போதே அவர் பெரும் சர்ச்சையில் சிக்கினார். இந்த நிலையில் பாலிவுட்டில் குத்தாட்டம் போட வந்துள்ளார் வீணா.

பாலிவுட்டில் ஏற்கனவே மலாய்கா அரோரா, கத்ரீனா, பிபாஷா, மல்லிகா ஷெராவத் என குத்தாட்டம் போட ஏராளமானோர் இருக்கின்றனர். மேலும், நாயகிகளும் நாங்களும் குத்தாட்டம் போட வருகிறோம் என்று கூறுகின்றனர். நாயகிகளுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்க நாயகர்களும் குத்துப் பாட்டுக்கு ஆடத் துவங்கியுள்ளனர். குத்துப் பாட்டு இல்லாமல் இந்திப் படங்கள் இல்லை என்ற நிலை உள்ளது.

தற்போது இந்த குத்தாட்டக்காரர்கள் பட்டியலில் புதிதாக சேர்ந்திருப்பவர் வீணா மாலிக். பாபி ஷேக் இயக்கும் பிர் முலாகத் ஹோ நா ஹோ என்ற படத்தில் குத்துப் பாட்டுக்கு ஆடவிருக்கிறார் வீணா.

குத்துப் பாட்டுக்கு ஆடவருமாறு வீணா மாலிக்கிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அவர் ஆடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்றார் பாபி ஷேக். இது தான் பாபியின் முதல் படம். அவர் இதற்கு முன் ரன் மற்றும் ரங் தே பசந்தியில் துணை இயக்குனராக பணி புரிந்துள்ளார். ராஜ்பால் யாதவ், காதர் கான் மற்றும் பிரவீன் குமார் நடிக்கும் இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் ரிலீசாகிறது.

பாலிவுட்டில் குத்தாட்டம் போட வரும் பாக். நடிகை வீணா மாலிக்

பாலிவுட்டின் புதிய ஐட்டம் டான்சராக களம் இறங்கியுள்ளார் பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக்.

பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவின் 4-வது சீசன் மூலம் இந்தியாவில் பிரபலமானார். சர்ச்சையில் சிக்கியுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ஆசிபின் காதலி. வீணா மாலிக்கை வைத்து ஏகப்பட்ட சர்ச்சைகள் உலா வந்தவண்ணம் உள்ளன. பிக் பாஸ் நிகழ்ச்சியின்போதே அவர் பெரும் சர்ச்சையில் சிக்கினார். இந்த நிலையில் பாலிவுட்டில் குத்தாட்டம் போட வந்துள்ளார் வீணா.

பாலிவுட்டில் ஏற்கனவே மலாய்கா அரோரா, கத்ரீனா, பிபாஷா, மல்லிகா ஷெராவத் என குத்தாட்டம் போட ஏராளமானோர் இருக்கின்றனர். மேலும், நாயகிகளும் நாங்களும் குத்தாட்டம் போட வருகிறோம் என்று கூறுகின்றனர். நாயகிகளுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்க நாயகர்களும் குத்துப் பாட்டுக்கு ஆடத் துவங்கியுள்ளனர். குத்துப் பாட்டு இல்லாமல் இந்திப் படங்கள் இல்லை என்ற நிலை உள்ளது.

தற்போது இந்த குத்தாட்டக்காரர்கள் பட்டியலில் புதிதாக சேர்ந்திருப்பவர் வீணா மாலிக். பாபி ஷேக் இயக்கும் பிர் முலாகத் ஹோ நா ஹோ என்ற படத்தில் குத்துப் பாட்டுக்கு ஆடவிருக்கிறார் வீணா.

குத்துப் பாட்டுக்கு ஆடவருமாறு வீணா மாலிக்கிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அவர் ஆடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்றார் பாபி ஷேக்.

இது தான் பாபியின் முதல் படம். அவர் இதற்கு முன் ரன் மற்றும் ரங் தே பசந்தியில் துணை இயக்குனராக பணி புரிந்துள்ளார்.

ராஜ்பால் யாதவ், காதர் கான் மற்றும் பிரவீன் குமார் நடிக்கும் இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் ரிலீசாகிறது.Topics: bollywood, item dance, veena malik, big boss, pakistan actress, வீனா மாலிக், பாலிவுட், குத்துப் பாட்டு

Vikram's Deiva Thirumagal gets clean chit

As expected, Vikram's Deiva Thirumagal has got clean chit from the Regional Censor Board. The movie has received 'U' certificate without any cut.

Deiva Thirumagal was screened for the members of the Censor Board yesterday. After watching the film, the officials congratulated the makers of the film for making such a clean movie without violence or vulgar scenes. They reportedly praised director AL Vijay and wished good luck for the team.

Vikram plays the role of a dim-witted adult with the maturity of a five-year-old boy in Deiva Thirumagal. Actresses Anushka Shetty and Amala Paul have paired him in the film. The movie is hitting the screens on July 15.Topics: vikram, al vijay, anushka shetty, amala paul, deiva thirumagal

பாலசந்தர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம்

June 29, 2011 | no commentsதான் இயக்கிய கிருஷ்ணலீலை படத்தை உடனே வெளியிடக் கோரி இயக்குநர் பாலச்சந்தருக்கு சொந்தமான கவிதாலயா பட நிறுவனம் முன்பு சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார் இயக்குநர் ஸெல்வன்.

இயக்குநர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்தவர் ஸெல்வன். சூரி என்ற படம் மூலம் இவர் இயக்குநரானார். இதையடுத்து ஜீவன்-மேக்னா ஜோடியாக நடித்த கிருஷ்ண லீலை படத்தை இயக்கினார். இப்படம் முடிந்து இரு வருடங்களுக்கு மேலாகியும் ரிலீசாகவில்லை.

இந்தப் படம் வெளிவந்தால்தான் தனக்கு புதிய பட வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால், படத்தை வெளியிடாவிட்டால், சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக இயக்குனர் ஸெல்வன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “கிருஷ்ணலீலை படத்தை கே.பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரித்தது. பின்னர் அப்படத்தை ஐங்கரன் இண்டர்நேஷனல் பிலிம் நிறுவனத்துக்கு விற்று விட்டனர். படப்பிடிப்பு டப்பிங் பணிகள் முடிந்துள்ளது.

2 வருடங்கள் 3 மாதங்களுக்கு முன்பே 90 சதவீதம் வேலைகள் முடிந்து படம் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இரு தயாரிப்பு நிறுவனங்களுக்கும் பலமுறை அலைந்து விட்டேன். படத்தை ரிலீஸ் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. இப்படம் வராததால் புதுப்பட வாய்ப்புகள் எனக்கு கிடைக்கவில்லை.

‘கிருஷ்ணலீலை’ ரிலீஸ் ஆன பிறகு பட வாய்ப்பு தருகிறோம் என்று தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர். இதனால் பெற்றோர்களை வைத்துக் கொண்டு என்னால் குடும்பம் நடத்த இயலாத நிலைமை ஏற்பட்டுள்ளது. வருமானமின்றி மிகவும் கஷ்டப்படுகிறேன். எனவே படத்தை ரிலீஸ் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் வருகிற ஜூலை 5-ந்தேதி முதல் கவிதாலயா நிறுவனம் முன்பு சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன்,” என்று கூறியுள்ளார்.

உண்ணாவிரதத்துக்கு அனுமதி கேட்டு போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் மனு கொடுத்தார்.