This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Tuesday, July 12, 2011

கத்ரீனா என்ன முட்டாளா?

ஜிந்தகி நா மிலேகி தோபாரா படத்தில் தனது கதாபாத்திரம் பற்றி கேட்ட பிறகே கத்ரீனா ஓகே சொன்னார். கதை கேட்காமல் ஓகே சொல்ல அவர் என்ன முட்டாளா? என்று அப்படத்தின் இயக்குனர் ஜோயா அக்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜோயா அக்தரின் படம் ஜிந்தகி நா மிலேகி தோபாரா. இதில் ஹ்ரித்திக் ரோஷன், அபய் தியோல் மற்றும் பர்ஹான் அக்தர் நடித்துள்ளனர். கல்கி கொச்லின் மற்றும் கத்ரீனா கைப் ஆகியோர் கதாநாயகிகள்.

இந்த படத்தில் நடித்துள்ள கத்ரீனாவுக்கும், கல்கிக்கும் லடாய் என்று தகவல்கள் வந்தன. ஆனால் அதை கல்கி திட்டவட்டமாக மறுத்துள்ளார். இந்நிலையில் படத்தில் கத்ரீனாவுக்கு முக்கியத்துவம் இல்லாத சிறிய கதாபாத்திரம் என்று பேசப்படுகின்றது.

இது குறித்து இயக்குனர் ஜோயா அக்தரிடம் கேட்டதற்கு, அவர் கூறியதாவது,

கத்ரீனா கைப் என்ன முட்டாள் என்று நினைக்கிறீர்களா? அவர் ஸ்கிரிப்டை படித்துவிட்டு தான் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரமாக இருந்திருந்தால் அவர் ஏன் ஒப்புக் கொண்டிருக்க வேண்டும். அவர் இந்த படத்தில் நடித்து, தற்போது படத்தை விளம்பரமும் செய்கிறார் என்றால், அவர் சந்தோஷமாக இருக்கிறார் என்று தான் நான் நினைக்கின்றேன்.

கத்ரீனா கைப் அவர் வாழ்க்கையை தான் விரும்பியபடி வாழ்பவர். இந்தியே தெரியாமல் பாலிவுட்டில் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆகியுள்ளார். இதில் இருந்தே அவர் திறமைசாலி என்று தெரியவில்லையா. அவர் திறமையை நான் மதிக்கிறேன் என்றார்.Topics: katrina kaif, zindagi na milegi dobara, கத்ரீனா கைப், ஜோயா அக்தர்

சன் தொலைக் காட்சி மீது நடிகை ரஞ்சிதா புகார்

சன் தொலைக் காட்சி மீது நடிகை ரஞ்சிதா புகார்

  
 
நடிகை ரஞ்சிதா 
சுவாமி நித்யானந்தாவுடன் தான் நெருக்கமாக இருந்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தக் கூடிய சித்தரிக்கப்பட்ட வீடியோ காட்சிகளை வெளியிட்ட சன் குழுமம், நக்கீரன் மற்றும் தினகரன் ஆகிய மூன்று நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகை ரஞ்சிதா காவல்துறையிடம் புகார் கொடுத்துள்ளார்.
இந்த மாற்றம் செய்யப்பட்ட வீடியோ ஒளிபரப்பப்பட்டது தனது அந்தரங்கத்தையும், மத சுதந்திரத்தையும் மீறும் செயல் என்று தனது மனுவில் ரஞ்சிதா தெரிவித்துள்ளார்.

ஆனால் சர்ச்சைக்குரிய அந்த வீடியோ பல இணைய தளங்களில் வெளியிடப்பட்டது. இது குறித்த செய்திகள் பல்வேறு பத்திரிக்கைகளில் வந்துள்ளது. இருந்தும் முதல் முதலாக அந்த வீடியோவை கடந்த ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி வெளியிட்டது சன் குழுமம் என்பதால் அதன் மீது புகார் அளித்துள்ளதாக ரஞ்சிதா தெரிவித்தார்.

கடந்த ஆண்டே தான் இந்த ஊடகங்கள் மீது புகார் அளிக்க முயன்றதாகவும், ஆனால் இது குறித்த வழக்கை ஏற்று நடத்த வழக்கறிஞர்கள் முன்வரவில்லை என்றும் அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக சன் தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களில் கருத்துக்கள் கிடைக்கப் பெறவில்லை

இலங்கையின் வட பகுதி ராஜதந்திரிகள் தடையின்றி செல்ல அனுமதி

இலங்கையின் வட பகுதி ராஜதந்திரிகள் தடையின்றி செல்ல அனுமதி

இலங்கையின் வட பகுதி ராஜதந்திரிகள் தடையின்றி செல்ல அனுமதி : அரசு அறிவிப்பு

இலங்கையின் வடக்கு பிரதேசத்துக்கு இன்று முதல் வெளிநாட்டு ராஜதந்திரிகள் தடையின்றி செல்லமுடியும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.உள்நாட்டு அரச சார்ப்பற்ற அமைப்புகள் மற்றும் சர்வதேச அரச சார்ப்பற்ற அமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

வடக்குக்கு செல்ல வெளிநாட்டு கடவுசீட்டை கொண்டிருப்பவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை கடந்த வாரத்தில் நீக்கப்பட்டது.

இதனையடுத்து ஊடகவியலாளர்கள் வட பகுதிக்கு செல்ல முயற்சித்த போது, வவுனியா ஓமந்தை சோதனை சாவடியில் அப்பால் அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை.

இந்தநிலையில் சர்வதேச மட்டத்தில் தம்மீது சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பிக்கும் வகையிலேயே இலங்கை அரசாங்கம் இன்று புதிய அறிவித்தலை விடுத்துள்ளது.

சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலைக்கு சைக்கிள் தரிப்பிடம்

சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலைக்கு நோயாளர்களை பார்வையிட வரும் பொதுமக்களுக்கான சைக்கிள் தரிப்பிடம் ஒன்றினை நிர்மாணித்துக் கொடுப்பதற்கும் மற்றும் வைத்தியசாலையில் காணப்படும் குறைபாடுகளை அபிவிருத்தி செய்வதற்கும் நேர்ச்ச பியூட்டி கிரியேசன்ஸ் தனியார் கம்பனி முன்வந்துள்ளது.

சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை அபிவிருத்தி சபையின் வேண்டுகோளினை ஏற்று இவ்வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பது சம்பந்தமான கலந்துரையாடல் இன்று சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் அல்ஹாஜ் எம்.ரீ. இப்றாகீம் தலைமையில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் நேர்ச்ச பியூட்டி கிரியேசன்ஸ் தனியார் கம்பனியின் உதவி தரப்படுத்தல் முகாமையாளர் திருமதி நதீகா தர்மசிறி, கல்முனை பிராந்திய விற்பனை பிரதிநிதி ஏ.எல். பாஹிம் மற்றும் மாவட்ட வைத்தியசாலை அபிவிருத்தி சபை செயலாளர் றியாத் ஏ. மஜீத் மற்றும் அபிவிருத்தி சபை அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.

விஷேட தேவையுடையோருக்கான வாழ்வாதாரக் கொடுப்பனவுகள்

சமூக சேவைத் திணைக்களத்தினால் கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள விஷேட தேவையுடையோருக்கான வாழ்வாதாரக் கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வு நேற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.பியசேன, பிரதேச செயலாளர் கே.லவநாதன், சமூக சேவை உத்தியோகத்தர் உட்பட மேலும் பலர் கலந்து கொண்டு விஷேட தேவையுடையோருக்கான வாழ்வாதாரக் கொடுப்பனவுகளை வழங்கி வைத்தனர்.

அபிவிருத்தித் திட்டங்களால் மீன்பிடிக்கு பாதிப்பு இல்லை - பசில்

நாட்டின் அபிவிருத்தித் திட்டங்கள் ஒருபோதும் மீன்பிடித் தொழிலை பாதிக்காது என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.

பாசிக்குடா பகுதியில் சுற்றுலாத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதால் மீன்பிடித் துறைக்குப் பாதிப்பு ஏற்படும் என சிலர் தவறான பரப்புரைகளை செய்து வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படும் எனக் கூறிய அமைச்சர், பாசிக்குடா திட்டத்தின் ஊடாக அனேகமானவர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்க முடியும் என குறிப்பிட்டார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வடக்கு செல்ல இராஜதந்திரிகளுக்கு இனி தடை இல்லை

வட பகுதிக்கு விஜயம் செய்ய வெளிநாட்டு இராஜதந்திரிகள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தன்னார்வ தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள் இனிமேல் அனுமதி கோர வேண்டிய அவசியமில்லை என பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுவரை காலமும் வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வடக்கு செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சிடம் அனுமதி கோர வேண்டிய நிலை இருந்தது.

எனினும், இன்றுமுதல் இந்த நடைமுறையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயண அனுமதி ஆவணமின்றி வெளிநாட்டு ராஜதந்திரிகள் வடக்கிற்கு செல்ல முடியும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட நபர்கள் இராணுவ நிலைகள், இராணுவ உத்தியோகத்தர்களை சந்திக்க விரும்பினால் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமென பாதுகாப்பு அமைச்சின் இணையத்தள செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் தபால் மூல வாக்களிப்பு

இம்மாதம் 23 ஆம் திகதி நடைபெறவுள்ள காரைதீவு பிரதேச சபைக்கான தேர்தலுக்குரிய தபால் மூல வாக்களிப்பு இன்று கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் இடம்பெற்றது. காரைதீவு பிரதேச சபை தேர்தலில் பிரதேச சபைக்கு 5 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 11,700 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இலங்கை தமிழரசுக்கடசி, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக்கட்சி, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய 5 அரசியல் கட்சிகளும் இரண்டு சுயேட்சை குழுக்களும் தங்கள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.

கடந்த 2006 ஆம் ஆண்டு முதன்முதலாக நடைபெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தலில் காரைதீவு பிரதேச சபைக்கு இலங்கை தமிழரசு கட்சி 6059 வாக்குகளைப்பெற்று 4 ஆசனங்களையும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசிய கட்சி 2239 வாக்குகளைப்பெற்று 1 ஆசனத்தையும் கைப்பற்றி இருந்தன.

இம்மாதம் 23 ஆம் திகதி காரைதீவு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் வாக்காளர்கள் வாக்களிபபதற்கென 12 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தேர்தலகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

16 வயது சிறுவனின் சடலம் புச்சாக்கேனியில் மீட்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புச்சாக்கேனி காட்டுப்பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுவன் ஒருவரின் சடலத்தை பொலிஸார் நேற்று மாலை மீட்டுள்ளனர். கதிரவெளி புச்சாக்கேணியைச் சேர்ந்த பவானந்தன் சதிஸ்காந்தன் என்ற 16 வயது சிறுவனின் சடலமே இவ்வாறு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

காட்டுக்குள் விறகு எடுக்கச்சென்றவர்கள் வழங்கிய தகவலிகன் அடிப்படையிலேயே மேற்படி சடலம் மீட்க்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை வாகரைப்பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தரம்குறைந்த பெற்றோல் விவகாரத்தை ஆராய பாராளுமன்ற தேர்வுக் குழு தேவை

நாட்டில் தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் தரம்குறைந்த பெற்றோல் விநியோக விடயத்தை அடுத்து கனியவளத்துறை அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவர ஐக்கிய தேசிய கட்சி ஏற்கனவே தீர்மானித்திருந்தது.

எனினும் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ள அக்கட்சி இது குறித்து ஆராய பாராளுமன்ற தேர்வுக் குழுவொன்றை அமைக்குமாறு இன்று ஆலோசனை வழங்கியுள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய திஸ்ஸ அத்தநாயக்க,

பெற்றோல் இறக்குமதி செய்வதற்காக அதிகாரம் வழங்கிய அனைத்து அதிகாரிகளும் இதற்குப் பொறுப்புச் சொல்ல வேண்டும். ஏற்பட்ட இழப்புக்களுக்கு நட்டஈடு வழங்க வேண்டும். இது குறித்து பாராளுமன்ற தேர்வுக் குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.

மேலும், நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்தால் அரசாங்கம் அதனை தோற்கடித்து இச்செயலை மூடி மறைத்துவிடும், தேர்வுக் குழுவொன்றை ஏற்படுத்தினால் அரசாங்கத்திற்கும் அதனை எதிர்க்க முடியாது. இந்தக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் ஆராய வேண்டும். இதற்கு ஆலோசனை வழங்கியவர்களை ஆராய வேண்டும். பொறுப்பு யாருக்கு வழங்கப்பட்டது என தேர்வுக் குழு ஊடாக விசாரணை செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.