This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Wednesday, July 13, 2011

“சயீப்அலிகானை பிரியவில்லை” திருமணம் முடிவானதும் அறிவிப்போம்-கரீனாகபூர்

Thursday, Jul 14, 2011பிரபல இந்தி நட்சத்திரங்கள் சயீப்அலிகான், கரீனாகபூர் இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர். பொது நிகழ்ச்சிகளில் கைகோர்த்தபடி கலந்து கொள்கிறார்கள்.
 
கரீனாகபூர் ஏற்கனவே ஜாகித்கபூரை காதலித்தார். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்.
 
“தஷன்” என்ற படத்தில் சயீப்அலிகானும், கரீனாகபூரும் இணைந்து நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இதற்கிடையே இருவாரங்களுக்கு முன்பு கரீனா-சயீப் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், இருவரும் காதலை முறித்துக்கொண்டு தனித்தனியாக பிரிந்து விட்டதாகவும் கிசுகிசுக்கள் பரவின.
 
மும்பையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த கரீனாகபூரிடம் இதுபற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் அளிக்கையில் நாங்கள் பிரிந்து விட்டதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை. அது வதந்திதான். எங்கள் இருவருக்கும் திருமணம் பற்றி முடிவானதும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என்றார்.

குளவி தாக்கி பெண் மரணம் - மஸ்கெலியாவில் சம்பவம்

மலையகத்தில் மஸ்கெலியா என்னும் இடத்தில் உள்ள குமரித்தோட்டம் என்ற பகுதியில் குளவிகள் நடத்திய தாக்குதலில் ஒரு பெண் கொல்லப்பட்டதுடன், மேலும் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

தேயிலை பறிக்கச் சென்ற பெண் ஒருவரே இதில் பலியானவராவார்.

நேற்று தொழிலாளர்கள் தமது தேயிலை பறிக்கும் பணிக்காகச் சென்றபோது, அங்கு இருந்த குளவிக் கூடு ஒன்று கலைந்து, அதில் இருந்த குளவிகள் தொழிலாளர்களைத் தாக்கியுள்ளதாகவும், அதனால் அவர்கள் காயமடைந்ததாகவும் அங்குள்ள செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதனையடுத்து காயமடைந்த 12 பேர், 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மஸ்கெலிய அரசினர் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

ஆனால், அங்கு சிகிச்சை பயனளிக்காமல் அவர்களில் ஒரு பெண் உயிரிழந்ததாகவும் அந்தச் செய்தியாளர் கூறியுள்ளார் என பீபீசி செய்தி வெளியிட்டுள்ளது.

சனல் 4க்கு காணொளி வழங்கினார் : சந்தேகநபர் ஓகஸ்ட் 2ம் திகதி வரை தடுத்து வைப்பு

சனல் 4 தொலைக்காட்சிக்கு யுத்தகுற்றங்கள் எனக்கூறப்படும் காணொளிகளை வழங்கினார் என்ற சந்தேகத்தின் பேரில் 71 இறுவட்டுக்களுடன் கைது செய்யப்பட்டவரை ஓகஸ்ட் 2 ம் திகதி வரை தடுத்துவைக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது என பீபீசி செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர் கடந்த ஜூன் மாதம் 30ம் திகதி கைது செய்யப்பட்டதாக பொலிஸ் குற்றப் புலனாய்வுத் துறையினர் பொழும்பு நீதவான் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

நந்தவனம் ஜெகதீஸ்வரம் என்ற நபரே சனல் 4 சேவைக்கு அடிப்படை காணொளிகளை வழங்கியிருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.

அவர் கைது செய்யப்பட்ட போது அவரிடம் இருந்த 71 இறுவட்டுகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சந்தேக நபரை ஓகஸ்ட் 2ம் திகதி வரை தடுத்து வைக்க நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதியளித்துள்ளது.

மும்பைத் தாக்குதலுக்கு ஜனாதிபதி கண்டனம்

மும்பையில் மேற்கொள்ளப்பட்டுள்ள கோழைத் தனமான தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு கண்டனத்தையும் பாதிப்புக்கு உள்ளாகிய மக்களுக்கும் அரசுக்கு தனது இரங்கலையும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப்பிரிவின் பணிப்பாளர் நாயகம் பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார்.

நாட்டில் தீவிரவாதத்தினை சகித்து கொண்டிருக்க கூடாது அத்தோடு அதன் கோழைத்தனமான அருவெறுப்பான செயற்பாடுகள் பெறுகுவதற்கு இடமளிக்கக்கூடாது எனவும் இந்த தாக்குதலை தான் கடுமையாக கண்டிப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்கள் இந்திய மக்களுக்கு ஆதரவாக நின்று பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு கூட்டாக இணைந்து அமைதியை நிலைநாட்ட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

தாக்குதலில் உறவுகளை இழந்தவர்களுக்காகவும் பாதிப்புற்றவர்களுக்காகவும் நம் பிரார்த்தனை செய்திடுவோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.

ஜோடி செருவாரா கமல் மகள் ஸ்ருதி

Wednesday, Jul 13, 2011தனுஷை வைத்து அவர் மனைவி ஐஸ்வர்யா தனுஷ் இயக்கவிருக்கும் படத்தை பற்றிய அறிவிப்பு நாம் முதன் முதலில் தெரிவித்திருந்தோம்  இதில் தனுஷின் ஹீரோயின் கமல் மகள் ஸ்ருதி ஹாசன்தான் என்பது பற்றிய செய்திகளும் வெளியாகின ஆனால் ஸ்ருதியுடன் ஜோடி சேர்வது தொடர்பாக  தனுஷ் ம்றுப்பு தெரிவித்து வந்தார்.

ஆனால் ஐஸ்வர்யா தனுஷ்சின் விருப்பம் ஸ்ருதிஹாசனை தன் கணவருக்கு ஹீரோயின் ஆக்குவதுதானாம். ர் இதனல் இழுபரி ஏற்பட்டுவந்த வேளையில் தற்போது சூப்பர்ஸ்டார் சென்னை திரும்புவதால்  ரஜினி சென்னை வந்து ஒருவாரத்தில் இது தொடர்பான  அதிகார பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று சொல்லப்படுகிறது.

ரஜினி படத்துக்கு விளம்பர அவசியமே கிடையாது: அமிதாப்பச்சன்

Thursday, Jul 14, 2011இந்தி திரையுலக சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப்பச்சன், தனது சொந்ததயாரிப்பில் புத்தா ஹோகா தேரா பாப்' என்ற இந்தி திரைப்படத்தைதயாரித்துள்ளார். அந்த படத்தை விளம்பரப்படுத்தும் பணி முடிந்தநிலையில், ஆரக்ஷான்' என்ற அடுத்த படத்தை விளம்பரப்படுத்தும் பணியைதொடங்கி இருக்கிறார். அந்த திரைப்படம் ஆகஸ்டு 12ந் தேதி வெளியாகிறது.

இந்த பணியில் ஈடுபட்டுள்ள நடிகர் அமிதாப்பச்சன், தன்னுடையஇணையதள பக்கத்தில் கட்டுரை எழுதியுள்ளார். அதில், அவர்கூறியுள்ளதாவது:

இன்றைய காலகட்டத்தில் திரைப்படங்களை பிரபலப்படுத்தும் பணி மிகவும்முக்கியமானது. அதிக அளவிலான மக்களின் கவனத்துக்கு அதைக் கொண்டுசேர்க்க வேண்டும். பெரும்பாலான படங்களை பொறுத்தவரை, வெளியானஒரு வாரத்துக்குள் அதிக ரசிகர்களை ஈர்ப்பது அவசியம். வர்த்தக ரீதியானவெற்றியே படத்தின் அளவு கோலாக கருதப்படுகிறது. ஆனால், இந்தவரையறைக்குள் தென் இந்திய சூப்பர் ஸ்டார் ரஜினி ஒருபோதும்வந்ததில்லை.

ரஜினி படத்தை பிரபலப்படுத்த வேண்டிய அவசியமே அவருக்கு கிடையாது.அவருடைய படத்துக்கு அவரே மிகப்பெரிய விளம்பரம். ஒரு முறை நாங்கள்பேசிக்கொண்டிருந்தபோது, எதற்காக படத்தை பிரபலப்படுத்தும் பணிக்குமுக்கியத்துவம் அளிக்கிறீர்கள்' என என்னிடம் கேட்டார். மேலும், அதுஉங்களை நீங்களே விற்பது போன்றது என்றும் கூறினார். நாங்கள்இருவருமே சிரித்தோம். பின்னர் அவரிடம் விளக்கி கூறினேன். அவருக்குஅந்த அவசியம் கிடையாது.

மிகச்சிறந்த விற்பனை சிந்தனை உள்ள நிபுணர்கள்,
24 மணி நேரமும்மேற்பார்வை, கண்காணிப்பு, ஆய்வு என உழைக்கின்றனர். மக்களிடம்திரைப்படங்களை எப்படி கொண்டு சேர்ப்பது என சிந்தனை செய்கின்றனர்.வேகமான இந்த உலகில் அனைத்துமே விரைவாக நடைபெற வேண்டும்.புதிய சிந்தனை இல்லாமல் வளர்ச்சியோ, மாற்றமோ கிடையாது. எனவே,புதிய தலைமுறைகளை நான் வாழ்த்துகிறேன்.

திரைப்படத்தை பொறுத்தவரை முதல் வாரம் மட்டுமே முக்கியமானது.இரண்டாவது வாரத்தில் அடுத்த படத்தின் வெளியீடு குறித்து மக்கள் பேசஆரம்பித்து விடுகிறார்கள். டி.வி., ரேடியோ, இன்டெர்நெட், செல்போன் எனஅனைத்து இடங்களிலும் திரைப்படங்கள் பரவி விட்டன. எனவே,நேரத்துக்கு நாம் அடிபணிந்து செல்ல வேண்டியுள்ளது. இவ்வாறுஅமிதாப்பச்சன் தெரிவித்துள்ளார்.

சென்னை திரும்பினார் ரஜினி... ரசிகர்களின் உற்சாக வரவேற்பு

சென்னை: சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்த் புதன்கிழமை இரவு 10.45 மணிக்கு சென்னை திரும்பினார்.

சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிறுநீரக பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த அவர், ஜூன் 14-ம் தேதி டிஸ்சார்ஜ் ஆனார்.

எனினும் தொடர் மருத்துவ பரிசோதனைகள் தேவைப்பட்டதால், அவர் அங்கேயே தங்கி ஓய்வெடுத்தார்.

அவர், புதன்கிழமை இரவு சென்னை வருவதாக தகவல் வெளியானது. இதனால், புதன்கிழமை மதியம் முதலே விமான நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.

தமிழகம் முழுவதுமிருந்து ரஜினி ரசிகர்கள் விமான நிலையத்துக்கு வந்தவண்ணம் இருந்தனர்.

இரவு 9.30 மணி வரை ரஜினிகாந்த் விமான நிலையத்தில் எந்த வழியாக ரஜினிகாந்த் வருகிறார் என்பது விமான நிலைய போலீஸாரால் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

ரஜினியின் வருகையை எதிர்பார்த்து அவருடைய ரசிகர்கள் அனைவரும் விமான நிலைய பிரதான நுழைவு வாயிலில் மேள தாளம், ஆட்டம் பாட்டம் என அமர்க்களப்படுத்திக் கொண்டிருந்தனர்.

இரவு 9.40 மணியளவில் விமானநிலைய 6-வது வாயில் (விஐபி பிரிவு) வழியாக அவர் வருகிறார் என்று தகவல் வெளியானது.

இதையடுத்து ரசிகர்களும், பத்திரிகையாளர்களும் 6-வது வாயிலில் கூடினார்கள். இரவு 10 மணிக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் ரஜினிகாந்த் வந்திறங்கினார்.

வாயிலின் முகப்பில் நின்றிருந்த தனது காருக்கு வந்த ரஜினிகாந்த், ரசிகர்களைப் பார்த்ததும் தனது பாணியில் கைகளை தலைக்கு மேல் உயர்த்தி 3 முறை வணக்கம் தெரிவித்து கையசைத்தார்.

வெள்ளைத் தாடியுடன் காணப்பட்ட ரஜினிகாந்த் நீல நிற ஜீன்ஸ் பேண்ட், வெள்ளை நிற சட்டை, கருப்புக் கண்ணாடி அணிந்திருந்தார்.

அவருடன் மனைவி லதா ரஜினிகாந்த், மகள் சௌந்தர்யா, குடும்பத்தினர் மற்றும் டாக்டர்களும் வந்திருந்தனர்.Topics: rajini, chennai return, ரசிகர்கள் உற்சாகம், rajini fans, ரஜினி

ஈராக்கில் இலங்கையர் போராட்டத்துக்கு வெற்றி

ஈராக்கில் ஊதியத்துக்காக போராடி வந்த இலங்கையர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் மூவாயிரம் அமெரிக்க டொலர்களும் நாடு திரும்புவதற்காக விமானச் சீட்டும் வழங்குவதாக உறுதியளித்துள்ளது.

அரச பேச்சாளரான அலி அல்-தபாக் குறித்த உறுதி மொழியை அளித்துள்ளார்.

குறித்த ஊதியம் வழங்காத நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

விதன்டாவாதம் பேசி அபிவிருத்தியை அடைய முடியாதாம் - சொல்கிறார் வி.முரளி

எதிர்கட்சியில் இருந்து கொண்டு விதன்டாவாதம் பேசினால் அபிவிருத்தியை அனுபவிக்க முடியாது என மீள்குடியேற்றப் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

அதனைவிடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்றுவதன் மூலம் மாத்திரமே அபிவிருத்தியை அடைய முடியுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அத்தோடு இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் ரிஷாட் பதியூதினும் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டார்.

வடக்கில் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள அங்குள்ள தமிழ் மக்களுக்கு நல்ல சந்தர்ப்பம் கிட்டியுள்ளதாக அவர் இங்கு உரையாற்றினார்.

மேலதிக தகவல்களுக்கு காணொளியை பார்வையிடுக...

மும்பாயில் தொடர் குண்டுவெடிப்பு - இந்தியா முழுதும் பதற்றம்

மும்பையில் இன்று மாலை மூன்று இடங்களில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்துள்ளன. மும்பையின் மேற்கு தாதர் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரில் வெடிகுண்டு வெடித்தது. இதே போல், ஜாவேரி பஜார் பகுதியில் 2வது குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. மூன்றாவது குண்டுவெடிப்பு தெற்கு மும்பையில் உள்ள ஓபரா ஹவுஸ் அருகே நடந்துள்ளது.

இந்த குண்டுவெடிப்புகளில், 4 பேர் பலியானதாகவும், 100 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து மும்பை முழுவதும் பொலிஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த வெடிகுண்டு தாக்குதலால் மும்பையில் பதட்டம் நிலவுகிறது. மும்பை குண்டுவெடிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் உஷார் படுத்தப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.