This is default featured post 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured post 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured post 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured post 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured post 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
Thursday, July 14, 2011
இலங்கையணியின் பயிற்றுவிப்பாளராக ருமேஷ் ரத்நாயக்க
தமிழ் சிறுமி மீது துப்பாக்கி பிரோயோகம் மேற்கொண்ட நபரின் சகோதரன் சுடப்பட்டார் ..!
பிரித்தானியாவில் வாழ்கின்ற 5 வயதுக்குழந்தையான துஷா மீது துப்பாக்கிச்சூடு மேற்கொண்டதாக கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் சகோதரரை சுட்டது தொடர்பில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சூட்டுக்காயத்திற்கு உள்ளான ஜாடன் கடந்த இரவு பொலிஸாரின் பாதுகாப்புக்கு மத்தியிலேயே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். உடல்நிலை தீவிரமாக இருக்கும் அதேவேளை சீராக காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை தெற்கு லண்டனில், கென்னிங்டனில் உள்ள உணவகத்திற்கு வெளியில் ஜாடன் மெக்கல் 3 தடவை துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார். துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான ஜாடன் உடனடியாக தனது நண்பனுக்கு தொலைபேசி மூலம் தொடர்பை ஏற்படுத்தி தான் துப்பாக்கிச்சூட்டுக்குள்ளாகியதாக தெரிவித்துள்ளார்.
மறைந்திருந்து துப்பாக்கிச்சூடு மேற்கொண்ட இரு இளைஞர்களும் மோட்டார் சைக்கிளில் தப்பியோடிவிட்டனர். சிறுமியான துஷா கமலேஸ்வரன் கடந்த மார்ச் மாதம் ஸ்டொக்வெல் நகருக்கு அருகில் உள்ள சுப்பர் மார்க்கட்டில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கானார்.
தற்போது சுடப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற ஜாடன் மெக்கலின் சகோதரனான 19 வயதுடைய அந்தனி மெக்கல் துஷா மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டமையால் கொலைக்குற்றச்சாட்டின் பேரில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச்சூட்டில் சிறுமி துஷா கமலேஸ்வரனுக்க நெஞ்சுப்பகுதியிலும், 35 வயது ரோஷன் செல்வக்குமாருக்கு தலையிலும் காயங்கள் ஏற்பட்டது. தற்போது துஷாவுக்கு இடுப்புக்கு கீழே செயலிழந்து காணப்படுகிறது.
ஜாடன் மெக்கல் மீது துப்பாக்கிப் பிரயோம் மேற்கொண்ட சந்தேகநபர்களை கைது செய்வதற்க 30 பேர் கொண்ட காவல் துறையினர் அவர்கள் தங்கியிருந்த இடத்தை சுற்றிவளைத்துள்ளனர். அங்கிருந்து 7 பேரையும் பொலிஸார் கைது செய்தனர்.
லண்டனில் தேசிய நினைவெழுச்சி நாள் 2011 இற்கான செயற்குழு அறிவிப்பு
தேசிய நினைவெழுச்சி நாள் சிறப்புற நடைபெறுவதற்கும், அதனூடாக எமது தாயக அரசியற் செயற்திட்டங்களை முன்னகர்த்துவதற்குமான செயற்குழு பிரித்தானியாவில் அறிவிக்கப்பட்டுள்ளது. வழமைபோல் இவ்வருடமும் EXCEL (எக்செல்) மண்டபத்தில் தேசிய நினைவெழுச்சி நாள் உணர்வுபூர்வமாக நடைபெறவுள்ளது.
இச்செயற்குழுவானது கடந்த கால செயற்பாடுகளில் பெறப்பட்ட பட்டறிவுகளின் அடிப்படையில் தவறுகள் ஏற்படா வண்ணம் வெளிப்படையாக செயற்படும்.
2011 இற்கான தேசிய நினைவெழுச்சி நாளுக்கான செயற்குழு உறுப்பினர்களின் விபரம் வருமாறு:
01. Mrs. சண்முகசுந்தரம் (மாவீரர் குடும்பம்)
02. Mrs. சதானந்தன் (மாவீரர் குடும்பம்)
03. Mr. நகுலேசன் (சட்டத்தரணி)
04. Dr. வசந்தன் (கலாநிதி)
05. Mr. சுதாகரன் (தேசியச் செயற்பாட்டாளர்)
06. Mr. ஜெயந்தன் (இளையோர்)
07. Mr. கபில் கந்தசாமி (இளையோர்)
08. Ms. அனோஜா (சட்ட ஆலோசகர்)
09. Mrs. ஜெயா (தேசியச் செயற்பாட்டாளர்)
10. Mr. கந்ததேவா (தேசியச் செயற்பாட்டாளர்)
11. Mr. சுகந்தகுமார் (தேசியச் செயற்பாட்டாளர்)
12. Mr. செந்தில்நாதன் கந்தையா (தேசியச் செயற்பாட்டாளர்)
மேற்குறிப்பிடப் பட்டவர்கள் கடந்த கால தேசிய செயற்பாட்டினூடாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். இதில் பொருத்தமான மூவர் நிதிச்செயற்பாட்டுக்கென தெரிவு செய்யப்பட்டு நிதிச்செயற்பாடுகள் யாவும் வெளிப்படையாக நடைபெறும். மேலும் நிதிச்செயற்பாடுகள் யாவும் தகமையுள்ள கணக்காளர்களினால் அறிக்கையாக்கப்பட்டு குறிப்பிட்ட நாட்களுக்குள் பொதுமக்களின் பார்வைக்கு வழங்கப்படும்.
இதே போல் இச்செயற்குழுவிலிருந்து ஊடக சந்திப்புக்கென ஊடக ஒருங்கிணைப்புக் குழு உருவாக்கப்பட்டு, செயற்பாடுகள் யாவும் அவ்வப்போது பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்படும். இதே போல் ஒவ்வொரு செயற்பாடுகளும் குழு ரீதியாக மக்களின் கருத்துக்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வெளிப்படையாக நடைபெறும்.
எனவே தேவையற்ற விசமத்தனமான கருத்துக்களை புறம்தள்ளி, இச்செயற்குழு ஊடாக நடைபெறும் தேசிய நினைவெழுச்சி நாள் மூலம் மாவீரச்செல்வங்களை வணங்குவதன் ஊடாகவும், அதன் மூலம் பெறப்படும் நிதியில் மீதமுள்ள பணத்தை எமது தாயக மக்களின் நல்வாழ்வுக்காகவும், தாயக விடுதலைக்கான அரசியற் செயற்பாடுகளுக்கும், வெளிப்படையாக பயன்படுத்தப்படும்.
கிளிநொச்சி மாவட்டத்தில் 65 ஆயிரம் வாக்காளர்கள்
மேலும், இம்முறை தேர்தல் நடவடிக்கைகள் யாவும் கிளிநொச்சி அரச செயலகத்தினால் கையாளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு சகல ஆவணங்களையும் இழந்துள்ள இந்த மாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பான்மையான மக்கள், தேர்தலில் வாக்களிப்பதற்குத் தங்களை அடையாளம் காட்டுவதற்குரிய தேசிய அடையாள அட்டைகளின்றி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இவ்வாறானவர்களுக்குத் தேர்தலின்போது பயன்படுத்துவதற்கு வசதியாகத் தற்காலிக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, யாழ்ப்பாணத்தைப் போன்று கிளிநொச்சியிலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த வேட்பாளர்கள் நெருக்கடிகளுக்கு ஆளாகி வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
பல இடங்களில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் தடைகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தெரிவிக்கின்றனர் என பீபீசி செய்தி வெளியிட்டுள்ளது.
அரசாங்கம் தனிநபர் வருமானத்தையும் வேலைவாயப்பு சுட்டியினையும் மறைத்தது
2009ம் ஆண்டில் இது 12.1 சதவீத வளர்ச்சியாக இருந்தது. மத்திய வங்கியின் கணிப்பீட்டின்படி இது ஒரு துரித வளர்ச்சியாகும்.
யுத்தம் முடிந்த குறுகிய காலகட்டத்தில் இது போன்ற ஒரு பொருளாதார வளர்ச்சியை வட மாகாணம் பெற்றிருக்கிறது என்று இலங்கையின் மத்திய வங்கி கூறியிருப்பதில் எந்த விதமான ஆச்சரியமும் கிடையாது என இலங்கைப் பொருளாதரப் பகுப்பாய்வாளர் முத்துக்கிருஷ்ணன் சார்வானந்தா கருத்து தெரிவித்துள்ளார்.
ஏனெனில், 2009 ஆம் ஆண்டு என்பது யுத்தத்தின் உச்சக்கட்ட ஆண்டு என்றும் அப்போது வடமாகாணத்தில் யாழ்ப்பாணத்தைத் தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களும் யுத்தத்தினால் சூழப்பட்டு மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், கூறும் சர்வானந்தா, அதனை அடுத்த ஆண்டுகளின் அப்போது இருந்த நிலையை விட இரு மடங்கு மொத்த உற்பத்தி ஏற்படுவது என்பது வழமையானதுதான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஒரு பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சியைப் பார்க்கும்போது, அந்தப் பிராந்தியத்தின் மொத்த உற்பத்தி அதிகரிப்பை வைத்து மாத்திரம் பொருளாதாரம் வளர்ந்துவிட்டது என்று கூறிவிட முடியாது. தனி நபர் வருமான, வேலைவாயப்பு வசதிகளுக்கான சுட்டிகள் ஆகியவற்றையும் நாம் கவனத்தில் கொண்டாக வேண்டும். ஆனால் இவற்றை அரசாங்கம் தெரிந்தோ, தெரியாமலோ மறைத்து வருகின்றது என்றும் சர்வானந்தா கூறினார்.
பிலிப்பைன்ஸில் இலங்கை மதகுரு கைது
பசே நகரத்தில் லிபிடப் பிரதேசத்தில் உள்ள உணவு விடுதியொன்றில் தாயாருடன் இருந்த சிறுமியொருவரின் பிறப்புறுப்புக்களை குறித்த மதகுரு தொட்டார் என பாதிப்புக்குள்ளாகிய பெண் தெரிவித்துள்ளார்.
.சம்பவத்தை நேரில் கண்ட தாய் வீதி சுத்திகரிப்பில் ஈடுபட்டிருந்த ஒருவரின் உதவியை நாடி குறித்த இலங்கை மதகுருவை கைது செய்வதற்கான நடவடிக்கை எடுத்துள்ளார்.
43 வயதான குறித்த சந்தேக நபர் மனிலாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் கடமையாற்றி வந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இவர் மீது பாலியல் மற்றும் சிறுவர் துஷ்பிரயோக சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சந்தேக நபர் அவரது சட்டத்தரணியுடன் மாத்திரம் கலந்துரையா வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
ரஜினி ராணாவை மீண்டும் தொடங்குவது எப்போது?
அடுத்த செப்டம்பர் வரை ஓய்வெடுக்க உள்ள ரஜினிகாந்த், ராணா படப்பிடிப்பு தொடர்பாக இயக்குநருடன் ஆலோசனை நடத்த உள்ளார். அக்டோபர் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கலாம் என்று திரைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
படம் தொடர்பான கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் இந்த விஷயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. படப்பிடிப்பு தொடங்கும் வரை உள்ள இடைப்பட்ட காலத்தில் கதை மற்றும் திரைக்கதையை இன்னும் மெருகேற்றும் பணி நடக்கும் எனத் தெரிகிறது.
போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் வாஸ்துபடி மராமத்துப் பணிகள் நடப்பதால் ரஜினி இப்போது கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் தங்கி ஓய்வெடுப்பார்.
முன்னதாக சிங்கப்பூரில் 6 வார சிகிச்சைக்குப் பின்னர் ரஜினிகாந்த் நேற்று சென்னை திரும்பினார். விமானநிலையத்தில் ரசிகர்கள் அவரை தலைவா என கோஷம் எழுப்பி உற்சாகத்துடன் வரவேற்றனர்.
தனக்கே உரிய ஸ்டைல் மற்றும் சிரிப்புடன் கண்ணாடி அணிந்து வந்த ரஜினி, ரசிகர்களை நோக்கி கைகளை அசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ரசிகர்களுக்கு தன் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார். விரைவில் தன் ரசிகர்களைச் சந்திப்பார் அவர் என்றும் கூறப்படுகிறது.
இந்தியில் தயாராகும் ‘கோ’
இதில் ஜீவா பத்திரிகை நிருபராக நடிக்க, மற்றொரு துடிப்பான இளைஞன் கதாபாத்திரத்தில் அஜ்மல் நடித்திருக்கிறார். முன்னாள் நடிகையான ராதாவின் மகள் கார்த்திகா இப்படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக அறிமுகமாகினார்.
பத்திரிகை உலகில் பத்திரிகையாளர்கள் சந்திக்கும் சவால்களும், அரசியல் தலைகளை பத்திரிகையாளர்கள் சந்திக்கும் விதங்களையும் இப்படத்தில் தத்ரூபமாக காண்பித்திருந்தார் கே.வி.ஆனந்த்.
இத்துணை பெருமை பெற்ற கோ படத்தை இந்தியில் எடுப்பது குறித்து கே. வி. ஆனந்த் ஆலோசித்து வருவதாக அந்த படத்தில் நடித்த அஜ்மல் தெரிவித்தார்.
இந்தியில் ஜீவா கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூர் அல்லது ஷாகித் கபூரை நடிக்க திட்டமிட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
யாழ். - கொழும்பு பஸ் விபத்து 16 பயணிகளுக்கு படுகாயம்
காயமடைந்தவர்கள் அனைவரும் வவுனியா மாவட்ட அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.காயமடைந்தவர்கள் அனைவரும் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விபத்துச் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புலம்பெயர் மக்கள் வடக்கில் முதலீடு செய்ய வேண்டுமாம் - அமைச்சர் பசில்
1983ம் ஆண்டுக்குப் பின்னர் நாட்டில் அசாதாரண சூழல் நிலவியதாகவும் அது கடந்த 2009ம் ஆண்டு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில் வடக்கு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவென அரசாங்கம் தற்போது அங்கு அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்துள்ள நிலையில் புலம்பெயர் மக்களும் வடக்கில் முதலீடுகளை செய்ய வேண்டுமென அமைச்சர் பசில் ராஜபக்ஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.







