This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Saturday, July 16, 2011

கொழும்பின் சில வீதிகளில் இன்று போக்குவரத்து நெரிசல்

கொழும்பு நகரின் சில வீதிகளில் இன்று போக்குவரத்து நெரிசல் ஏற்படுமென பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

பிலியந்தலை விகாரையின் வருடாந்த பெரஹரா இன்றிரவு வீதி உலா வருகிறது.

இதன்படி ஹொரண - கொழும்பு, கொட்டாவை - கல்கிஸ்ஸை மற்றும் மஹரகம கல்கிஸ்ஸை வீதிகளில் இன்றிரவு 7 மணியிலிருந்து நள்ளிரவுவரை போக்குவரத்து நெரிசல் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் குறித்த வீதிகளில் ஏற்படும் போக்குவரத்து தடங்களை தவிர்க்கும் வகையில் சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

நித்தியானந்தா முன்பு ஆனந்த நடனமாடிய நடிகை ரஞ்சிதா !

Saturday, Jul 16, 2011தன்னை சாமியார் என்று கூறிக் கொள்ளும் நித்தியானந்தா, நேற்று பெங்களூரில் உள்ள பிடரி ஆசிரமத்தில் குரு பூர்ணிமா விழாவை கொண்டாடினார். இந்த விழாவின் போது நடிகை ரஞ்சிதா நித்தியானந்தா முன்பு நடனம் ஆடினார்.

பெங்களூர் அருகே உள்ள பிடரியில் நித்யானந்தாவின் ஆசிரமம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் குரு பூர்ணிமா விழாவையொட்டி சிறப்பு யாகங்கள் பூஜைகள், குண்டலினி யோகா போன்றவை நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு நேற்று பிடரி ஆசிரமத்தில் குரு பூர்ணிமா விழா கொண்டாடப்பட்டது. இந்த குருபூர்ணிமா விழாவில் நடிகை ரஞ்சிதாவும் கலந்து கொண்டார். அவர் நித்யானந்தா சாமியாருக்கு பாத பூஜை செய்து அவரது முன் மண்டியிட்டார். அப்போது நித்யானந்தா ரஞ்சிதாவின் தலையை தொட்டு ஆசீர்வாதம் வழங்கினார்.

பின்னர் நித்யானந்தா அங்கு வந்திருந்த அனைவருக்கும் குண்டலினி யோகாசன பயிற்சி அளித்தார். அப்போது நடிகை ரஞ்சிதா திடீரென எழுந்து துள்ளி துள்ளி குதித்தபடி ஆனந்த நடனம் ஆடினார். அவரைப் போல் ஏராளமான பெண்களும் உற்சாக நடனம் ஆடினர். சில பெண்கள் தரையில் படுத்து உருண்டனர்.

கடந்த ஒன்றரை வருடங்களாக வெளி உலகில் தலைகாட்டாத இருவரும், இரு தினங்களுக்கு முன்பு பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அதன் பிறகு வெளி உலகத்தில் தைரியமாக தலைகாட்ட ஆரம்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சாய்பாபா படத்தில் நடிக்கும் சச்சின்.?

Saturday, Jul 16, 2011ஸ்ரீசத்ய சாய்பாபா வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்படும் புதிய படத்தில் சச்சின் டெண்டுல்கரை நடிக்க வைக்க இயக்குநர் முயற்சி மேற்கொண்டுள்ளார்.

சமீபத்தில் மரணமடைந்த ஸ்ரீசத்ய சாய்பாபாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கிறார் பிரபல தெலுங்கு இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா.

தெலுங்கில் உருவாகும் இப்படத்திற்கு 'பாபா சத்யசாயி' என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்தப் படம் குறித்து இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா கூறுகையில், "சாய்பாபா படத்தில் தெண்டுல்கர், காவஸ்கர் ஆகியோரை நடிக்க வைக்க முயற்சி செய்து வருகிறோம். அவர்கள் இப்படத்தில் நடித்தால் இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் இப்படத்தை வெளியிடலாம். பட வசூலும் நன்றாக இருக்கும்.

இருவருமே பாபாவின் பெரிய பக்தர்கள் என்பதால், நடிப்பார்கள் என்று நம்புகிறேன்.

இப்படத்தில் நடிக்க நடிகை ஜமுனா ஒப்புக் கொண்டுள்ளார். வேறு நடிகர்-நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது," என்றார்.

பேரக்குழந்தைகளால் முடிவை மாற்றினார் ரஜினிகந் !

Saturday, Jul 16, 2011ரஜினிகாந்த் சிங்கப்பூரில் இருந்து நேற்று முன்தினம் சென்னை திரும்பினார்.அப்போது பூரண குணமடைந்து  உற்சாகமாக காணப்பட்பார்.  விமான நிலையத்தில் தன்னை வரவேற்க திரண்ட ரசிகர்களை பார்த்து கையசைத்தார். ரஜினிக்கு ஓய்வு தேவைப்படுவதால் கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் தங்குவார் என கூறப்பட்டது. இதற்காக அந்த வீட்டில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டது. போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் மராமத்து பணிகள் நடந்து வருகின்றன. அந்த வீடு வாஸ்துப்படி மாற்றி அமைக்கப்படுகிறது. எனவே கேளம்பாக்கம் பண்ணை வீட்டுக்கு போய் விடுவார் என்றனர். ஆனால் ரஜினி பண்ணை வீட்டுக்கு போகவில்லை.போயஸ்கார்டன் வீட்டிலும் தங்கவில்லை. ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில் மூத்த மகள் ஐஸ்வர்யா வீடு இருக்கிறது. கணவர் தனுஷ் மற்றும் குழந்தைகளுடன் அவர் அந்த வீட்டில் வசிக்கிறார். ரஜினி நேராக ஐஸ்வர்யா வீட்டுக்கு சென்றார். ரஜினி தங்குவதற்காக அவ்வீட்டின் அறைகள் பிரத்யேகமாக புதுப்பிக்கப்பட்டு உள்ளன. ரஜினி கேளம்பாக்கம் பண்ணை வீட்டுக்கு போகத்தான் முதலில் விரும்பினாராம். உறவினர்களும் அதே மனநிலையில் இருந்தனர். ஆனால் பேரக்குழந்தைகள் யாத்ரா, லிங்காவை பார்க்க முடியாது என்பதற்காக பண்ணை வீட்டுக்கு போவதை ரத்து செய்து விட்டார். குழந்தைகளுடன் கொஞ்சி மகிழ்வதற்காகவே ஐஸ்வர்யா வீட்டில் தங்கியுள்ளார். பேரக்குழந்தைகளுடன் விளையாடுவது ரஜினிக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னொரு புறம் “ராணா” படவேலைகளிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

பஸ் பின்கண்ணாடி ஒட்டுப்படம், திரைச்சீலை அகற்றுமாறு கோரிக்கை

கொழும்பு நகருக்குள் நுழையும் அனைத்து பஸ்களின் பின்பக்கக் கண்ணாடியில் காணப்படும் ஒட்டுப்படம் மற்றும் திரைச்சீலை என்பவற்றை எதிர்வரும் ஜூலை 20ம் திகதிக்கு முன்னர் அகற்றுமாறு பொலிஸ் தலைமையகம் கோரிக்கை விடுத்துள்ளது.

கொழும்புக்குள் நுழையும் பஸ்களின் பின்பக்கக் கண்ணாடியில் பஸ்ஸின் வீதி இலக்கம் மாத்திரமே பொருத்தப்பட்டிருக்க வேண்டுமென பொலிஸ் தலைமைகயம் தெரிவித்துள்ளது.

ஜீலை 20ம் திகதிக்கு பின்னர் இந்த சட்டதிட்டத்தை கடைபிடிக்காதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வவுனியா சிறையில் மேலும் 40 தமிழ் கைதிகள் உண்ணாவிரம் - சிலர் கவலைக்கிடம்

வவுனியா சிறைச்சாலையில் தங்களை விடுவிக்ககோரி மேற்கொண்டுவரும் உண்ணாவிரத போராட்டத்துக்கு ஆதரவாக மேலும் 40 சிறைக்கைதிகள் போராட்டத்தில் இன்று சனிக்கிழமை முதல் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஒரு வாரமாக தங்கள் மீதான விசாரணைகளை உடனடியாக மேற்கொண்டு தங்களது விடுதலை தொடர்பில் உரிய நடவடிக்கையெடுக்குமாறு கோரி அரசியல் கைதிகள் தொடராக உண்ணாவிரத போராத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த நிலையில் குறித்த அரசியல் கைதிகளின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ள நிலையில் அவர்களுக்கு ஆதரவாக மேலும் 40பேர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனுக்கும் கைதிகளினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

காலத்துக்கு காலம் தமிழ் அரசியல் கைதிகள் போராட்டம் மேற்கொண்டுவருகின்றபோதிலும் அரசாங்கம் அது தொடர்பில் கவனத்தில் கொள்வதில்லை.

தேர்தல் காலம் நெருங்கியுள்ள இந்த வேளையில் வடக்குக்கு படையெடுக்கும் ஆளும் தரப்பு அரசியல்வாதிகள் இந்த அரசியல் கைதிகள் தொடர்பில் அக்கரைகொள்ளாதது அவர்களது சுயநலத்தை வெளிக்காட்டி நிற்கின்றது.

தமிழ் அரசியல்கைதிகள் தொடர்பில் பல்வேறு தடவைகள் ஜனாதிபதி, சட்டமா அதிபர், நீதியமைச்சர், பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றின் கவனத்துக்கு கொண்டுவந்தபோதிலும் இதுவரையில் எதுவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது கவலைக்குரிய விடயமாகவே உள்ளது.

இந்த நிலை தமிழ் அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே உள்ளது. இன்று சிறைச்சாலையில் பலர் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு விசாரணைகள் இன்றி தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை இலங்கையில் உருவாகக் காரணமாகவிருந்தவர்கள் இன்று சுதந்திரமாக அரசாங்கத்தின் ஆதரவுடன் உல்லாசம் அனுபவித்துவரும் வேளையில் அப்பாவி தமிழ் இளைஞர்கள் சிறையில் வாடுவது வேதனையளிப்பதாகவுள்ளது.

எனவே ஜனாதிபதி, நீதியமைச்சர், சட்டமா அதிபர் இனியாவது இந்த அரசியல் கைதிகளின் நிலையினை கருத்தில் கொண்டு துரித நடவடிக்கையெடுக்க வேண்டும்.

இல்லாது போனால் இன்று வவுனியாவில் ஆரம்பித்துள்ள போராட்டம் நாளை இலங்கை முழுவதும் பரவலாம். இவற்றை தடுக்க காத்திரமான நடவடிக்கையினை ஜனாதிபதி எடுக்கவேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாரியபொலவில் மினி சூறாவளி - 6 வீடுகளுக்கு சேதம்

வாரியபொல கரகஸ்வெவ பிரதேசத்தில் இன்று அதிகாலை வீசிய மினி சூறாவளியின் காரணமாக 6 வீடுகள் சேதமடைந்துள்ளன.

இந்த மினி சூறாவளி இன்று அதிகாலை 4.30 மணியளவில் வீசியதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

இதன்போது கரகஸ்வெவ விகாரைக்கும் சிறிய சேதம் ஏற்பட்டுள்ளது.

வீடுகளுக்கு ஏற்பட்ட சேத விபரங்களை பார்வையிட சிரேஸ்ட அமைச்சர் எஸ்.பீ.நாவின்ன அங்கு சென்றதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

சக்சேனா, அய்யப்பன் மீது வல்லக்கோட்டை தயாரிப்பாளரும் புகார்

சென்னை: சன் பிக்சர்ஸ் சக்சேனா மீது மேலும் ஒரு வழக்கு பாய்ந்துள்ளது.

இந்த வழக்குக்கு காரணமான புகாரைக் கொடுத்திருப்பவர் வல்லக்கோட்டை படத் தயாரிப்பாளர். இந்த வழக்கிலும் சக்சேனா நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்களான செல்வராஜ், சண்முகவேல், ஹித்தேஷ் ஜபக் ஆகியோர் கொடுத்த புகாரின் அடிப்படையில், சன் பிக்சர்ஸ்' தலைமை நிர்வாகி ஹன்ஸ்ராஜ் சக்சேனா, அவரது கூட்டாளி அய்யப்பனை, போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

சில வழக்குளில் சக்சேனாவையும், அவரது கூட்டாளி ஐயப்பனையும், போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

15ம் தேதி வெள்ளிக்கிழமை, சக்சேனா மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரூ 50 லட்சம் மோசடி

சென்னை, சாலிகிராமத்தை சேர்ந்தவர் ராஜா, வல்லக்கோட்டை என்ற படத்தை தயாரித்தார். இப்படத்தின் வினியோகம் தொடர்பான விவகாரத்தில், 50 லட்சம் ரூபாயை சக்சேனா மோசடி செய்து விட்டதாக, ராஜா, விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.

அப்புகாரின் பேரில், சக்சேனா மற்றும் அவரது கூட்டாளி அய்யப்பன் ஆகியோரை கைது செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்ற மனுவை அரசு வக்கீல்கள் கோபிநாத், மேரி ஜெயந்தி ஆகியோர், சைதாப்பேட்டை 23வது கோர்ட்டில் நேற்று தாக்கல் செய்தனர்.

அம்மனுவை ஏற்றுக்கொண்டு, வரும் 29ம் தேதி வரை சிறைக் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் அகிலா ஷாலினி உத்தரவிட்டார்.Topics: hansraj saxena, வல்லக்கோட்டை, ஹன்ஸ்ராஜ் சக்சேனா, vallakkottai, மோசடி

Friday, July 15, 2011

பிரித்தானிய குறைடன் பகுதியில் போலீசார் மீது துப்பாக்கி சூடு ..!

பிரித்தானிய குறைடன் பகுதியில் போலீசார் மீது துப்பாக்கி சூடு ..! பிரித்தானியாவின் குறைடன் Kingsdown Avenueபகுதியில் வைத்துபொலிசார் மீது சந்தேக நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார் . பலத்த காயமடைந்த  அவர்  அதே பகுதியில் உள்ள மருத்துவ  மனையில்  அனுமதிக்க பட்டுள்ளார் .இது அவருக்கு விடப்பட கொலை அச்சுறுத்தல் என தெரிவிக்க பட்டுள்ளது ..!

இறுதிப்போர் சம்பவங்கள் பற்றி ஆராய வேண்டும் - இந்தியா முதல் குரல்

இலங்கை இறுதிப் போரில் நடந்த நிகழ்வுகள் தொடர்பாகத் தெரிவிக்கப்பட்ட கவலைகள் குறித்து இலங்கை அரசு விரிவாக ஆய்வு செய்ய வேண்டும் என்று இந்திய அரசு கருத்துத் தெரிவித்துள்ளது.

இலங்கைப் போரின் இறுதிக்கட்ட சம்பவங்கள் தொடர்பாக சனல் 4 தொலைக்காட்சியில் வெளியான காட்சிகள் தொடர்பாகவும், அந்தப் போர் தொடர்பாக ஐ.நா தலைமைச் செயலரால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாகவும் இந்தியா முதல் முறையாகக் கருத்துத் தெரிவித்துள்ளது.

சனல் 4 வெளியிட்ட இறுதிப் போர் தொடர்பான காட்சிகள் குறித்து, இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் விஷ்ணுபிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைப் போரின் இறுதிக் கட்டத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து தெளிவில்லாத நிலை உள்ளது.

இதுகுறித்து இலங்கை இன்னும் ஆழமாக ஆய்வு செய்ய வேண்டும். அதுதொடர்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ள கவலைகள் குறித்து ஆராயப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவைப் பொருத்தவரை, வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் பேசும் சிறுபான்மையினரின் நலன் மற்றும் நல்வாழ்வில் அக்கறை கொண்டுள்ளது. அவர்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகளை முன்னுரிமை அடிப்படையில் விரைவாக செயல்படுத்த வேண்டும் என இலங்கை அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இறுதிப் போரில் நடந்ததாகக் கூறப்படும் சம்பவமொன்றுஇறுதிப் போரில் நடந்ததாகக் கூறப்படும் சம்பவமொன்றுஇலங்கையில் உள்ள சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். போர் முடிவடைந்த நல்ல சூழ்நிலையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்துகிறது என விஷ்ணுபிரகாஷ் குறிப்பிட்டுள்ளார்.

போரின் இறுதிக்கட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, ஐநா நிபுணர் குழுவின் அறிக்கை குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம், அந்த அறிக்கை தொடர்பாக இன்னும் பல கேள்விகள் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. ஆனால் அது என்ன கேள்விகள் என்பதை அந்த அறிக்கை தெளிவுபடுத்தவில்லை.

ஐநா நிபுணர் குழு அறிக்கையைப் பொருத்தவரை, இலங்கை வெளியுறவு அமைச்சர் இந்தியா வந்திருந்த நேரத்திலும், கடந்த மாதம் கொழும்பில் நடந்த ஒரு மாநாட்டின் போதும் இலங்கை அரசின் கருத்துக்களை இந்தியா கேட்டறிந்திருப்பதாக விஷ்ணுபிரகாஷ் தெரிவித்துள்ளார்.