Saturday, September 24, 2011

ப்ளீஸ், என்னை செல்வராகவனுடன் இணைத்துப் பேசாதீங்க: சோனியா

தயவு செய்து என்னை செல்வராகவனுடன் இணைத்துப் பேசாதீர்கள் என்று நடிகை சோனியா அகர்வால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நடிகை சோனியா அகர்வால் விவாகரத்திற்குப் பிறகு கதாநாயகியாக நடிக்கும் படம் ஒரு நடிகையின் வாக்குமூலம். இது சோனியாவின் வாழ்க்கை வரலாறு என்று கூறப்பட்டது. ஆனால் அதை சோனியா மறுத்துள்ளார். சோனியா அகர்வாலின் சொந்த வாழ்க்கையே இந்த படம் என்றும், கணவர் வேடத்தில் நடிக்க செல்வராகவன் தோற்றத்தில் நடிகர் தேடுவதாகவும் செய்திகள் வெளியாயின.

இது குறித்து அவர் கூறியதாவது,

ஒரு நடிகையின் வாக்குமூலம் எனது வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் படம் அன்று. அது அனைத்து நடிகைகளின் கதையையும் சேர்த்து எடுக்கப்படுகிறது. இதில் செல்வராகவன் போன்று எந்த கதாபாத்திரமும் இல்லை. அதற்காக யாரையும் தேடவும் இல்லை. அதில் இருப்பதே ஒரு ஆண் கதாபாத்திரம். அவரும் தற்போது நடித்து வருகிறார்.

என் வாழ்க்கையில் அவ்வளவு பரபரப்பான சம்பவங்களில் இல்லை. என் வாழ்க்கையை கேலிக்குரியதாக ஆக்கும் அவசியம் இல்லை. இந்த படம் எந்த ஒரு குறிப்பிட்ட நடிகையின் வாழ்க்கையும் அல்ல. தயவு செய்து என்னை செல்வராகவனுடன் இணைத்துப் பேசாதீர்கள். நாங்கள் ஒருவர் மீது ஒருவர் மரியாதை வைத்துள்ளோம் என்றார்.Written by: ShameenaNewsletter Its Free!உங்கள் இன்பாக்சி்ல் லேட்டஸ்ட் செய்திகள் .ads_by_goolge_txt_top{font-family: arial;font-size:12px;color:#959595 !important;text-decoration:none;}.google_text_ad_single_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_multi_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_desc_top{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_top{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}.ads_by_goolge_txt_bottom{font-size:12px;font-family: arial;color:#959595 !important;}.google_text_ad_single_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_multi_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_desc{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_desc_bottom{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_bottom{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}

0 comments:

Post a Comment