Wednesday, October 5, 2011

மாமனார், மாமியார் புடை சூழ வெளியே வந்த 8 மாத கர்ப்பிணி ஐஸ்வர்யா

8 மாத கர்ப்பிணியாக உள்ள ஐஸ்வர்யா ராய், தனது மாமனார் அமிதாப் பச்சன், மாமியார் ஜெயா பச்சன் சகிதம் இரண்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இரண்டு நிகழ்ச்சிகளிலும் அனைவரின் கவனமும் ஐஸ்வர்யா மீதே இருந்தது.

ஐஸ்வர்யா ராய் கர்ப்பமாக உள்ளார். நீண்ட காலம் கழித்து அவர் கர்ப்பிணியாகியுள்ளதால் அவரது குடும்பத்தினர் கண்ணும் கருத்துமாக அவரைப் பார்த்துக் கொள்கின்றனர். அவருக்கு இரட்டைக் குழந்தை பிறக்கலாம் என்று கூறப்படுகிறது.

கர்ப்பம் தரித்த நாள் முதல் வெளி நிகழ்ச்சிகளுக்கு வராமல் வீட்டோடு இருந்து வந்தார் ஐஸ்வர்யா. இந்த நிலையில் தனது மாமனார், மாமியார் சகிதம் அவர் இரண்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

முதலில் சஞ்சய் தத் நடத்திய நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். பின்னர் துர்கா பூஜையில் அவர் பங்கேற்றார்.

துர்கா பூஜையில் அவர் இளம் பிங்க் நிற சேலையில் அழகுற வந்திருந்தார். மேடிட்ட வயிற்றில் அவர் தாய்மை பொங்க மேலும் அழகுடன் காட்சி அளித்தார். இந்த சேலை கடந்த ஜனவரி மாதம் நடந்த ஸ்கிரீன் திரைப்பட விருது விழாவில் ஐஸ்வர்யாவின் மாமியார் ஜெயா பச்சன் அணிந்திருந்த சேலையாகும்.

நவம்பர் மாதத்தில் ஐஸ்வர்யாவுக்குக் குழந்தை பிறக்கும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனராம். இதனால் பச்சன் குடும்பமே பரவசத்துடன் புதிய ஜூனியர்களைக் காண ஆவலோடு காத்திருக்கிறது.Written by: ShameenaNewsletter Its Free!உங்கள் இன்பாக்சி்ல் லேட்டஸ்ட் செய்திகள் .ads_by_goolge_txt_top{font-family: arial;font-size:12px;color:#959595 !important;text-decoration:none;}.google_text_ad_single_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_multi_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_desc_top{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_top{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}.ads_by_goolge_txt_bottom{font-size:12px;font-family: arial;color:#959595 !important;}.google_text_ad_single_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_multi_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_desc{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_desc_bottom{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_bottom{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}

0 comments:

Post a Comment