Sunday, October 2, 2011

கார்த்திக் மகனுடன் என் மகள் இணைந்து நடிக்கவில்லை-ராதா

மணிரத்தினம் இயக்கத்தில், கார்த்தி்க்கின் மகன் கெளதமுடன் எனது இளைய மகள் துளசி இணைந்து நடிக்கப் போவதாக வந்த செய்தியில் உண்மை இல்லை என்று ராதா கூறியுள்ளார்.

அந்தக் கால நாயகி ராதா இப்போது பொறுப்பான அம்மாவாக தனது திரையுலக வாழ்க்கையைத் தொடர்கிறார். அவரது முதல் மகள் கார்த்திகா இப்போது ஹாட் நடிகையாகி விட்டார். அவர் நடித்த முதல் படமான கோ பெரும் ஹிட் படமானதால் ராசியானா நடிகையாகி விட்டார். ஆனால் அடுத்தடுத்து படங்களைத்தான் ஒப்புக் கொள்ளாமல் இருக்கிறார்.

ஏன் இப்படி என்று ராதாவிடம் கேட்டால், முதல் படமான கோ மிகவும் அழுத்தமான, பிரமாண்ட ஹிட் படமாகி விட்டதால், அடுத்தடுத்தடுத்த படங்களை ஒப்புக் கொள்வதில் கவனமாக இருக்கிறோம். நல்ல கதையாக வந்தால் கார்த்திகா ஒப்புக் கொள்வார் என்றார்.

சரி உங்களது இளைய மகள் துளசியும், கார்த்திக் மகன் கெளதமும் இணைந்து மணிரத்தினம் படத்தில் அறிமுகமாகப் போகிறார்களாமே என்ற கேள்விக்கு அப்படியெல்லாம் இல்லை. அப்படி இருந்தால் அதை நாங்கள் மறைக்க மாட்டோம்.

மேலும் மணிரத்தினம் படத்தில் நடிக்க யாருக்குக் கசக்கும். எனக்கும் கூட மணிரத்தினம் படத்தில் எனது மகள் நடிக்க ஆசையாகத்தான் உள்ளது. ஆனால் அப்படி எதுவும் இதுவரை வரவில்லை. வந்தால் சொல்கிறேன் என்றார் ராதா.Written by: ArivalaganNewsletter Its Free!உங்கள் இன்பாக்சி்ல் லேட்டஸ்ட் செய்திகள் .ads_by_goolge_txt_top{font-family: arial;font-size:12px;color:#959595 !important;text-decoration:none;}.google_text_ad_single_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_multi_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_desc_top{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_top{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}.ads_by_goolge_txt_bottom{font-size:12px;font-family: arial;color:#959595 !important;}.google_text_ad_single_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_multi_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_desc{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_desc_bottom{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_bottom{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}

0 comments:

Post a Comment