Wednesday, October 12, 2011

ஜெனிலியாவின் கடைசி படம் வேலாயுதம்?

விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போவதால் ஜெனிலியாவின் கடைசி படம் வேலாயுதம்தான் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

ஜெனிலியாவுக்கும் இந்தி நடிகரும் மத்திய அமைச்சர் மகனுமான ரிதேஷ் தேஷ்முக்கிற்கும் சில தினங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் நடந்தது. இது காதல் திருமணமாகும்.

திருமணத்துக்குப் பிறகு நடிப்பதில்லை என ஜெனிலியா முடிவு செய்துள்ளார். இப்போது தமிழில் அவர் நடிக்கும் படம் வேலாயுதம். இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகிறது. விஜய்க்கு ஜோடியாக அவர் நடித்துள்ளார்.

இதுவே அவரது கடைசி தமிழ்ப் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் அவரை இன்னும் ஒரு படத்தில் நடிக்குமாறு இயக்குநர் சிம்புதேவன் கேட்டுக் கொண்டுள்ளார். அது தனுஷ் நடிக்கும் மாரீசன். ஆனால் இன்னும் தன்முடிவை ஜெனிலியா சொல்லவில்லையாம்.

இந்தியில் கைவசம் உள்ள 3 படங்களையும் முடித்துவிட்டு, வரும் பிப்ரவரியில் திருமணம் செய்யத் திட்டமிட்டுள்ளார்களாம் ஜெனிலியாவும் ரிதேஷும்.Written by: ShankarNewsletter Its Free!உங்கள் இன்பாக்சி்ல் லேட்டஸ்ட் செய்திகள் .ads_by_goolge_txt_top{font-family: arial;font-size:12px;color:#959595 !important;text-decoration:none;}.google_text_ad_single_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_multi_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_desc_top{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_top{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}.ads_by_goolge_txt_bottom{font-size:12px;font-family: arial;color:#959595 !important;}.google_text_ad_single_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_multi_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_desc{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_desc_bottom{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_bottom{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}

0 comments:

Post a Comment