Friday, October 14, 2011

சோனா 'எபக்ட்': பார்ட்டினாலே தலைதெறிக்க ஓடும் வெங்கட் பிரபு

நடிகை சோனா-எஸ்.பி.பி. சரண் விவகாரம் பூதாகரமாக வெடித்ததையடு்தது இயக்குனர் வெங்கட் பிரபு இப்போதெல்லாம் நைட் பார்ட்டி என்றாலே தலைதெரிக்க ஓடுகிறாராம்.

மங்காத்தா படம் ஹிட்டானதற்காக அதில் நடித்த நடிகர் வைபவ் மது விருந்து வைத்தார். அதில் கலந்து கொண்ட கவர்ச்சி நடிகை சோனா பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ். பி. பி. சரண் தன்னை கற்பழிக்க முயன்றதாக போலீசில் புகார் கொடுத்தார். வீடியோ ஆதாரங்களையும் கொடுத்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சரணை சும்மாவிட மாட்டேன் என்று வீர வசனம் பேசிய சோனா கடைசியில் சமாதானம் ஆகிவிட்டார். மன உளைச்சல் காரணமாக 1 ஆண்டுக்கு சினிமாவில் நடிக்கப் போவதில்லை என்றும் அறிவித்தார்.

சம்பந்தப்பட்ட பார்ட்டியில் வெங்கட் பிரபுவும் இருந்தார். அவரது பெயரும் கூட லேசுபாசாக அடிபடத் தொடங்கியது. தற்போது இரவுப் பார்ட்டி, மது பார்ட்டி என்றாலே பிரபுவுக்கு அலர்ஜியாகி விட்டதாம். பார்ட்டிக்குப் போலாமா என்று கேட்டாலே ஓடி விடுகிறாராம்.

தன் மகள் ஷிவானியின் பிறந்தநாளை கடந்த ஆண்டு சென்னையில் கோலாகலமாகக் கொண்டிய அவர் இந்த ஆண்டு மலேசியாவுக்கு ஷிப்ட் பண்ணி விட்டாராம்.

வெங்கட் பிரபு மலேசியாவில் கொடுத்த பார்ட்டியில் சர்ச்சைக்குரிய சென்னை பார்ட்டியில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் ஆஜராகியிருந்திருக்கின்றனர். ஆனால் சோனாவை மட்டும் அழைக்கவேயில்லையாம்.

இவர்தான் இப்படி, இவரது தம்பி பிரேம்ஜி அமரனுக்கு இந்தப் பயமெல்லாம் இல்லையாம். தொடர்ந்து வழக்கம் போல கை விரல்களை நீட்டி மடக்கி வித்தை செய்தபடி பார்ட்டிகளுக்குப் போய் வருகிறாராம்.Newsletter Its Free!உங்கள் இன்பாக்சி்ல் லேட்டஸ்ட் செய்திகள் .ads_by_goolge_txt_top{font-family: arial;font-size:12px;color:#959595 !important;text-decoration:none;}.google_text_ad_single_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_multi_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_desc_top{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_top{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}.ads_by_goolge_txt_bottom{font-size:12px;font-family: arial;color:#959595 !important;}.google_text_ad_single_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_multi_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_desc{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_desc_bottom{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_bottom{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}

0 comments:

Post a Comment