Monday, October 17, 2011

என் படத்தைப் பார்க்க எனக்கே வெட்கமா இருக்கு-ஹன்சிகா

என் படங்களைப் பார்க்க எனக்கு வெட்கமாக இருக்கிறது என்று ஹன்சிகா மோத்வானி பேசியுள்ளார்.

மும்பையிலிருந்து வந்த புது வரவுகளில் ஹன்சிகாவும் ஒருவர். இதுவரை இவரால் ஒரு படம் ஓடியது என்று கூற முடியாத அளவுக்கு இவரது 'ராசி சிறப்பாக' உள்ளது. இருந்தும் இவரைத் தேடி நிறையப் படங்கள் வந்தவண்ணம் உள்ளதுதான் அனைவருக்கும் பெரிய ஆச்சரியம். இப்போது வேலாயுதம் படத்தை வெகுவாக எதிர்பார்த்துள்ளார்.

இந்த நிலையில் ஒரு நாளிதழுக்கு மனம் விட்டு கருத்துகளை தெரிவித்துள்ளார் ஹன்சிகா. அதில் அவர் கூறியிருப்பதாவது...

எனது குடும்பத்தில் எப்போதுமே என்னை நடிகையாக்க வேண்டும் என்று நினைத்ததில்லை. எனது தாயார் ஒரு சருமவியல் மருத்துவர். நான் பள்ளியில் படித்தபோது பள்ளிக்கூடம் முடிந்ததும், அவரது கிளினிக்குக்குப் போய் விடுவேன். அங்கு சினிமாத் துறையைச் சேர்ந்த பலரும் சரும நோய்கள் தொடர்பாக எனது தாயாரைப் பார்க்க வருவர். அப்போது என்னைப் பார்க்கும் பலரும், இவள் அழகாக இருக்கிறாள், விளம்பரங்களில் நடிக்க வையுங்கள், சினிமாவில் சேர்ந்தால் பெரிய ஆளாக வருவாள் என்றனர். ஆனால் எனது தாயாரோ அதை உடனே மறுத்து விடுவார்.

இருப்பினும் பின்னர் நானும் குழந்தை நட்சத்திரமாகி விட்டேன்.அதற்கு காரணம் அருணா இரானிதான். பிறகு அப்படியே இந்திப் படங்களிலும், தெலுங்குப் படங்களிலும் நடிக்க ஆரம்பித்தேன். அப்படியே தமிழுக்கும் வந்தேன்.

தமிழில் எனக்கு தனுஷுடன்தான் முதல் படம். அப்போது அவர்தான் எனக்கு நிறைய தமிழ் வார்த்தைகளை கற்றுக் கொடுத்தார். பினனர் ஜெயம் ரவியுடன் நடித்தபோது அவர் என்னை தமிழில் கலாய்ப்பார். அதற்கு நான் எனக்குத் தெரிந்த தமிழில் பதிலளித்து மேலும் காமெடியாக்குவேன்.

நிறையப் படங்களில் நடித்து விட்டேன். ஆனால் எனது படங்களை நான் பார்க்கும்போது எனக்கே வெட்கமாக, அவமானமாக உள்ளது. இதை விட சிறப்பாக நடித்திருக்கலாமோ என்று தோன்றும். இதனால் ஒவ்வொரு படத்திலும் மேலும் மேலும் சிறப்பாக நடிக்க முயற்சிக்கிறேன் என்றார் ஹன்சிகா.

ஹன்சிகா தனது தாயார் மீது மிகவும் மரியாதை வைத்திருக்கிறார். எனக்காக தனது தொழில், தூக்கம், கனவுகள் என எல்லாவற்றையும் விட்டு விட்டார் அவர். அவர் தான் எனது முழு பலமும் என்கிறார் ஹன்சிகா.Newsletter Its Free!உங்கள் இன்பாக்சி்ல் லேட்டஸ்ட் செய்திகள் .ads_by_goolge_txt_top{font-family: arial;font-size:12px;color:#959595 !important;text-decoration:none;}.google_text_ad_single_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_multi_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_desc_top{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_top{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}.ads_by_goolge_txt_bottom{font-size:12px;font-family: arial;color:#959595 !important;}.google_text_ad_single_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_multi_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_desc{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_desc_bottom{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_bottom{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}

0 comments:

Post a Comment