This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Thursday, December 15, 2011

காதலித்துப்பார்

« உங்கள் பாஸ்வேர்ட் பலம்வாய்ந்ததா? ஆன்லைனில் பரிசோதனை செய்யலாம் காதலித்துப்பார்Published December 16, 2011 உன்னை சுற்றிஒளிவட்டம் தோன்றும்உலகம் அர்த்தப்படும்ராத்திரியின் நீளம்விளங்கும்
உனக்கும்கவிதை வரும்
கையெழுத்துஅழகாகும்
தபால்காரன்தெய்வமாவான்
உன் பிம்பம் விழுந்தேகண்ணாடி உடையும்கண் இரண்டும்ஒளி கொள்ளும்காதலித்துப்பார் எழுதியவர் – வைரமுத்து Share Tweet news and informationbusiness,health,entertainment,technology automotive,business,crime,health,life,politics,science,technology,travel Posted in கவிதை Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *

Name *

Email *

Website

Comment

You may use these HTML tags and attributes:

தொழில்நுட்பம் samsung-amoled-display-2 முறுக்கலாம்.. வளைக்கலாம் ஸ்லிம் செல்போன்! » மேலும்

images தரவிறக்கத்தில் புதிய சாதனை நிகழ்த்திய ஆன்ட்ராய்ட். » மேலும்

strong-pass உங்கள் பாஸ்வேர்ட் பலம்வாய்ந்ததா? ஆன்லைனில் பரிசோதனை செய்யலாம் » மேலும்

increase-audio-volume வீடியோவை ஓடியோவாக மாற்றம் செய்வதற்கு » மேலும்

getac-z710 உறுதியான பேனலுடன் வரும் புதிய ஜீடேக் டேப்லெட்! » மேலும்

Windows-7-USB-Stick USB டிரைவ்களை போர்மட் செய்வதற்கு… » மேலும்

சம்சுங் பெரும் எதிர்பார்ப்புடன் விண்டோஸ் 8 டெப்லட்: மைக்ரோசொப்ட்டுடன் இணையும் சம்சுங்? » மேலும்

sad_computer_girl1 மின்னஞ்சலில் தினம் ஒரு புத்தகம் படிப்பதற்கு » மேலும்

friends-album பேஸ்புக் ஆல்பங்களை ஷிப் கோப்புகளாக சேமிப்பதற்கு… » மேலும்

toshiba-excite-tablet-honeycomb Toshiba excite… உலகின் மிக மெல்லிய Laptop! » மேலும்

கவிதை love-7771 காதல் சண்டை… » மேலும்

images காதலித்துப்பார் » மேலும்

i_love_you_heart_animation11 அன்புள்ள காதலியே, என் இதயம் எழுதுவது.. » மேலும்

LOVE-love-8964783-1024-768 நம் காதல் » மேலும்

images055 அதிசயக் காதல்! » மேலும்

true-love-wallpaper எப்படிச் சொல்வது? » மேலும்

பொழுதுபோக்கு logoo கூகுள் பிளஸ் பயனாளரை தேடிக் கொடுக்கும் பயனுள்ள இணையம் » மேலும்

resize_20100818151655 ஆசிய பெண்களில் கவர்ச்சியானவர் கரீனா கபூர் » மேலும்

rat-snakes பற்றைக்குள் அசிங்க‌ம் ப‌ண்ணும் காத‌லர்க‌ள் » மேலும்

Facebook Like Box Christmas Countdown Christmas Countdown Calendar சினிமா Hansika-Motwani-latest-hot-sexy-wallpapers-pics-photos-06 வேட்டை மன்னனில் சிம்புவுடன் ஜோடி போடும் ஹன்சிகா! » மேலும்

images சிகிச்சை முடிந்து வீடு திரும்புகிறார் மனோரமா » மேலும்

salmaan_dfg அழகான பெண்கள் அண்ணா என்றால் யாருக்குத்தான் பிடிக்கும் ? » மேலும்

Mayakkam-Enna-Movie-Stills-2 14-ந்தேதிக்குள் மயக்கம் என்ன படத்தை முடக்க ஐகோர்ட்டு உத்தரவு » மேலும்

vadivelu1 பிரசாந்துடன் இணைந்துள்ள வைகைப் புயல் வடிவேலு » மேலும்

trisha1 விலங்குகளை நேசிப்பவரைத் தான் திருமணம் செய்து கொள்வேன்: நடிகை திரிஷா » மேலும்

விநோதம் marilyn_monroe_dress_001 மர்லின் மன்றோ உடை 2.5 கோடி ரூபாய்க்கு ஏலம் » மேலும்

banana06 வாழைப்பழம் சாப்பிடுவதற்கு மட்டும் அல்ல! சிற்பங்களும் உருவாக்கலாம்! – ஜப்பானிய இளைஞர் » மேலும்

index ஒரு நிமிடத்தில் ஒரு மில்லியன் பவுண்டுகளை இழந்த பெண் : வீடியோ இணைப்பு » மேலும்

article-0-0F1D790B00000578-150_634x4351 மெர்சிடிஸ் பென்ஸ் காரை தங்கம் பதித்து மாற்றியமைத்த சுவிஸ் தொழிலதிபர்! » மேலும்

no-sex-anymore மனைவிக்கு திருப்தி அளிக்காத கணவருக்கு 6.65 லட்சம் அபராதம் ? » மேலும்

Bolivia-plane-fashion பறக்கும் விமானத்தில் ”பேஷன்ஷோ” » மேலும்

சமையல் 478 வெந்தய குழம்பு: » மேலும்

sl680 பரோட்டா சிக்கன் குருமா » மேலும்

tblfpnnews_23847162724 பூந்தி லட்டு செய்வோமா…. » மேலும்

Nethili_110605 நெத்திலிக் கருவாடுகுழம்பு » மேலும்

ghg முருங்கைகாய் பொரிச்சக்குழம்பு » மேலும்

Copyright © 2011. All Rights Reserved.


Site Meter

Monday, November 28, 2011

டிசம்பர் 05 குங்குமம் இதழ்


Click and Download


முக்கிய அறிவிப்பு

இந்த வலைப்பக்கத்தில் கிடைக்கும் அனைத்து புத்தகங்களும் என்னால் பதிவேற்றம் செய்யப்பட்டவை அல்ல. ஏற்கனவே இணையத்தில் பதிவேற்றப்பட்ட புத்தகங்களின் லின்க் மட்டுமே நான் தேடி கண்டுபிடித்து உங்களுக்காக கொடுக்கிறேன்.

Disclaimer: This site does not store any files on its server. We only index and link to content provided by other sites. Please contact the content providers to delete copyright

Monday, October 17, 2011

என் படத்தைப் பார்க்க எனக்கே வெட்கமா இருக்கு-ஹன்சிகா

என் படங்களைப் பார்க்க எனக்கு வெட்கமாக இருக்கிறது என்று ஹன்சிகா மோத்வானி பேசியுள்ளார்.

மும்பையிலிருந்து வந்த புது வரவுகளில் ஹன்சிகாவும் ஒருவர். இதுவரை இவரால் ஒரு படம் ஓடியது என்று கூற முடியாத அளவுக்கு இவரது 'ராசி சிறப்பாக' உள்ளது. இருந்தும் இவரைத் தேடி நிறையப் படங்கள் வந்தவண்ணம் உள்ளதுதான் அனைவருக்கும் பெரிய ஆச்சரியம். இப்போது வேலாயுதம் படத்தை வெகுவாக எதிர்பார்த்துள்ளார்.

இந்த நிலையில் ஒரு நாளிதழுக்கு மனம் விட்டு கருத்துகளை தெரிவித்துள்ளார் ஹன்சிகா. அதில் அவர் கூறியிருப்பதாவது...

எனது குடும்பத்தில் எப்போதுமே என்னை நடிகையாக்க வேண்டும் என்று நினைத்ததில்லை. எனது தாயார் ஒரு சருமவியல் மருத்துவர். நான் பள்ளியில் படித்தபோது பள்ளிக்கூடம் முடிந்ததும், அவரது கிளினிக்குக்குப் போய் விடுவேன். அங்கு சினிமாத் துறையைச் சேர்ந்த பலரும் சரும நோய்கள் தொடர்பாக எனது தாயாரைப் பார்க்க வருவர். அப்போது என்னைப் பார்க்கும் பலரும், இவள் அழகாக இருக்கிறாள், விளம்பரங்களில் நடிக்க வையுங்கள், சினிமாவில் சேர்ந்தால் பெரிய ஆளாக வருவாள் என்றனர். ஆனால் எனது தாயாரோ அதை உடனே மறுத்து விடுவார்.

இருப்பினும் பின்னர் நானும் குழந்தை நட்சத்திரமாகி விட்டேன்.அதற்கு காரணம் அருணா இரானிதான். பிறகு அப்படியே இந்திப் படங்களிலும், தெலுங்குப் படங்களிலும் நடிக்க ஆரம்பித்தேன். அப்படியே தமிழுக்கும் வந்தேன்.

தமிழில் எனக்கு தனுஷுடன்தான் முதல் படம். அப்போது அவர்தான் எனக்கு நிறைய தமிழ் வார்த்தைகளை கற்றுக் கொடுத்தார். பினனர் ஜெயம் ரவியுடன் நடித்தபோது அவர் என்னை தமிழில் கலாய்ப்பார். அதற்கு நான் எனக்குத் தெரிந்த தமிழில் பதிலளித்து மேலும் காமெடியாக்குவேன்.

நிறையப் படங்களில் நடித்து விட்டேன். ஆனால் எனது படங்களை நான் பார்க்கும்போது எனக்கே வெட்கமாக, அவமானமாக உள்ளது. இதை விட சிறப்பாக நடித்திருக்கலாமோ என்று தோன்றும். இதனால் ஒவ்வொரு படத்திலும் மேலும் மேலும் சிறப்பாக நடிக்க முயற்சிக்கிறேன் என்றார் ஹன்சிகா.

ஹன்சிகா தனது தாயார் மீது மிகவும் மரியாதை வைத்திருக்கிறார். எனக்காக தனது தொழில், தூக்கம், கனவுகள் என எல்லாவற்றையும் விட்டு விட்டார் அவர். அவர் தான் எனது முழு பலமும் என்கிறார் ஹன்சிகா.Newsletter Its Free!உங்கள் இன்பாக்சி்ல் லேட்டஸ்ட் செய்திகள் .ads_by_goolge_txt_top{font-family: arial;font-size:12px;color:#959595 !important;text-decoration:none;}.google_text_ad_single_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_multi_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_desc_top{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_top{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}.ads_by_goolge_txt_bottom{font-size:12px;font-family: arial;color:#959595 !important;}.google_text_ad_single_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_multi_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_desc{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_desc_bottom{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_bottom{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}

Saturday, October 15, 2011

மேலும் ஒரு கன்னட நடிகர் மீது மனைவி வரதட்சணை புகார்

மேலும் ஒரு நடிகர் மீது வரதட்சணைப் புகார் எழுந்துள்ளது. கன்னட நடிகர் பிரசாந்த் தன்னை வரதட்சணை கேட்டு தினமும் கொடுமைப்படுத்துவதாக அவர் மனைவி புகார் தெரிவித்துள்ளார்.

கன்னட நடிகர் தர்ஷன் வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்தியதாக ஏற்கனவே கைது செய்யப்பட்டார். தற்போது ஜாமீனில் வந்துள்ளார்.

இது போல் இன்னொரு கன்னட நடிகரான பிரசாந்தும் வரதட்சணை புகாரில் சிக்கியுள்ளார். ஓரட்டா ஐலவ்யூ, வெங்கி, அஞ்சதிரு உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார். ஆனால் அவரால் பெரிய இடத்தைப் பிடிக்க முடியவில்லை. படத் தயாரிப்பிலும் இறங்கினாராம். இதனால் பணக் கஷ்டம் ஏற்பட்டது. மனைவியிடம் ரூ.10 லட்சம் கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து அவரது மனைவி சசிரேகா மாநில மகளிர் நல ஆணையத்தில் பிரசாந்த் மீது புகார் மனு அளித்துள்ளார்.

அதில் எனது கணவர் வரதட்சணை கேட்டு என்னை தினமும் சித்ரவதை செய்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். பிரசாந்தும் சசிரேகாவும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.Newsletter Its Free!உங்கள் இன்பாக்சி்ல் லேட்டஸ்ட் செய்திகள் .ads_by_goolge_txt_top{font-family: arial;font-size:12px;color:#959595 !important;text-decoration:none;}.google_text_ad_single_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_multi_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_desc_top{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_top{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}.ads_by_goolge_txt_bottom{font-size:12px;font-family: arial;color:#959595 !important;}.google_text_ad_single_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_multi_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_desc{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_desc_bottom{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_bottom{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}

Friday, October 14, 2011

பாலிவுட் பார்ட்டியில் அனுஷ்காவுக்கு 'இச்' கொடுத்து சிக்கிய ஷாஹித்

பார்ட்டி ஒன்றில் இந்தி நடிகர் ஷாஹித் கபூர், நடிகை அனுஷ்கா ஷர்மாவை ஓரங்கட்டி 'உம்மா' கொடுக்கும்போது கையும், களவுமாகப் பிடிபட்டுள்ளார்.

பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூரும், பிரியங்கா சோப்ராவும் அவ்வப்போது சேர்வதும், பிரிவதுமாக உள்ளனர். தற்போது அவர்கள் நிரந்தரமாக பிரிந்துள்ளனர். அதற்கு காரணம் ஷாருக் கான் என்று கூறப்படுகிறது. பிரியங்காவும் ஷாஹித்தை பிரிந்த பிறகு ஷாருக்குடன் ஜாலியாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறார். இதனால் ஷாருக் மனைவி கௌரி கடுப்பாகியுள்ளார் என்று பாலிவுட்டில் பேசப்படுகிறது.

இந்த நிலையில், ஷாஹித் கபூரும் இந்தி நடிகை அனுஷ்கா ஷர்மாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் அதை உறுதிபடுத்த முடியவில்லை. இந்நிலையில் இம்ரான் கான் நடிதத் மேரி பிரதர் கி துலஹன் பட வெற்றியைக் கொண்டாட பார்ட்டி கொடுக்கப்பட்டது.

பார்ட்டிக்கு வந்த ஷாஹித் அங்கு அத்தனை பேர் இருப்பதை மறந்துவிட்டு அனுஷ்காவை ஓரங்கட்டி அவருக்கு இச், இச் என்று முத்தம் கொடுத்துள்ளார். இதைப் பார்த்த பாலிவுட் நட்சத்திரம் ஒருவர் யப்பா, மீடியாக்காரங்க இருக்காங்க, அப்புறம் முத்தம் கொடுக்கலாம்னு சொல்லி இருவரது 'உதடு'களையும் கஷ்டப்பட்டு பிரித்து வைத்துள்ளார்.

இருந்தாலும் பிரியாமல், ஒட்டி உறவாடியபடி, பார்ட்டி முழுவதும் ஷாஹித்தும், அனுஷ்காவும் ஒட்டிக் கொண்டே திரிந்துள்ளனர். கரீனா கபூரை காதலிக்கும்போது ஷாஹித் அவருக்கு லிப் டூ லிப் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனுஷ்காவும், ஷாஹிதும் சேர்ந்து பத்மாஷ் கம்பெனி என்ற படத்தில் நடித்துள்ளனர் என்பது நினைவிருக்கலாம். இப்போது இருவரும் வேறு 'கம்பெனி'க்கு மாறிவிட்டது உறுதியாகி விட்டது இந்த 'இச் இச்' மூலம்.Newsletter Its Free!உங்கள் இன்பாக்சி்ல் லேட்டஸ்ட் செய்திகள் .ads_by_goolge_txt_top{font-family: arial;font-size:12px;color:#959595 !important;text-decoration:none;}.google_text_ad_single_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_multi_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_desc_top{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_top{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}.ads_by_goolge_txt_bottom{font-size:12px;font-family: arial;color:#959595 !important;}.google_text_ad_single_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_multi_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_desc{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_desc_bottom{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_bottom{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}

வேலூர் மாவட்டம் - விமர்சனம்

பொதுவாக சென்னை அல்லது தென் மாவட்டங்களை மையப்படுத்திதான் திரைப்படங்கள் வருகின்றன. தமிழ் சினிமா கண்டுகொள்ளாத வேலூர் மாவட்டத்தை மையப்படுத்தி ஒரு படம் வருவது அநேகமாக இதுவே முதல் முறையாக இருக்கும். அதுவும் போலீஸ் கதை.

ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற லட்சியத்துடன் படிக்கும் நந்தாவுக்கு, ஐபிஎஸ்தான் வாய்க்கிறது. இருந்தாலும் பரவாயில்லை என்று அதை ஏற்றுக் கொண்டு வேலூர் மாவட்ட ஏஎஸ்பியாக பணியில் சேர்கிறார்.

வழக்கம்போல, ஏஎஸ்பி நந்தாவின் நேர்மைக்கும் உள்ளூர் அரசியல் பின்புலத்தோடு வளைய வரும் தாதா அழகம்பெருமாளுக்கும் மோதல். அவரைக் கைது பண்ண இவர் திட்டமிட, இவரை காலி பண்ண அவர் திட்டமிட... இந்த போலீஸ் - திருடன் கண்ணாமூச்சில் போலீஸ் உயர் அதிகாரிகளும் தாதா பக்கமே நிற்கிறார்கள். வெறுத்துப் போய் வேலையை ராஜினாமா செய்கிறார்.

ராஜினாமா செய்துவிட்டு வீடு திரும்பும் வழியில் தாதா கும்பல் அவரை அடித்து குற்றுயிராய் விட்டுவிட்டுப் போக, சிகிச்சைக்குப் பின் வீடு திரும்புகிறார். ஆனால் அவரது ராஜினாமாவை ஏற்காத போலீஸ் தலைமையகம், அவரை மீண்டும் வேலூரில் பணியாற்றவும் அனைத்து உதவிகளைச் செய்யவும் உறுதியளிக்கிறது. மீண்டும் புத்துணர்ச்சியோடு பணியில் சேரும் நந்தா, தான் நினைத்ததைச் சாதித்தாரா என்பது க்ளைமாக்ஸ்.

ஏற்கெனவே நமக்குப் பரிச்சயமான அதே போலீஸ் கதைதான் என்றாலும், கதை நிகழுமிடம் புதிது என்பதால், பார்க்க ப்ரெஷ்ஷாகத்தான் இருக்கிறது!

தனி ஹீரோவாக, தன் திறமையை முழுமையாகக் கிடைத்த வாய்ப்பை நந்தா நன்றாகப் பயன்படுத்தியுள்ளார். தன்னை நேர்மையாக செயல்படவிடாமல் சக அதிகாரிகளே தடுக்கும்போதும், அரசியல் தாதா விபச்சாரியுடன் உல்லாசம் இருக்க, அவருக்கு காவலுக்கு நிற்க நேர்ந்த அவமானத்தையும் தத்ரூபமாக வெளிப்படுத்துகிறார். இந்தப் படத்துக்குப் பிறகாவது இந்த நல்ல நடிகரை பயன்படுத்துங்கப்பா!

பூர்ணாவுக்கு பெரிதாக வேலை ஒன்றுமில்லை. கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார். இடைவேளைக்குப் பின் சில காட்சிகளில் மட்டுமே தலை காட்டுகிறார், களைத்துப் போய்!

மெயின் வில்லனாக வரும் அழகம் பெருமாள் அசல் அரசியல் தாதாவை கண்முன் நிறுத்துகிறார். வேலூர் மாவட்டத்தில் உண்மையிலேயே இவரைப் போல பலரைப் பார்த்த நினைவு!

அமைச்சராக வருபவர் ஒரிஜினல் அரசியல்வாதி ஒருவரை நினைவுபடுத்துகிறார். நல்ல தேர்வு.

டிரைவராக வரும் சந்தானத்துக்கு சில சீரியஸ் காட்சிகளை வைத்திருக்கிறார்கள். இதுபோக தனக்கு கொடுத்த நகைச்சுவை வாய்ப்பில் கொஞ்சம் கிச்சுகிச்சு மூட்டவும் அவர் தவறவில்லை.

சுந்தர் சி பாபுவின் இசையில் இரண்டு பாடல்கள் கேட்க முடிகிறது. பின்னணி இசை பரவாயில்லை. கோட்டை, மார்க்கெட், குவாரி என வேலூரை முழுமையாக சுற்றிக் காட்டியிருக்கிறது வெற்றியின் கேமரா. போலீஸ் கதைக்கான வேகத்தை சரியாக மெயின்டெய்ன் பண்ணுகிறது சுரேஷின் எடிட்டிங்.

ஒரு போலீஸ் கதைக்கே உரிய வழக்கமான விஷயங்கள்தான் என்றாலும் ஆர்என்ஆர் மனோகரின் விறுவிறுப்பான இயக்கம் படத்தை பார்க்க வைக்கிறது!Newsletter Its Free!உங்கள் இன்பாக்சி்ல் லேட்டஸ்ட் செய்திகள் .ads_by_goolge_txt_top{font-family: arial;font-size:12px;color:#959595 !important;text-decoration:none;}.google_text_ad_single_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_multi_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_desc_top{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_top{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}.ads_by_goolge_txt_bottom{font-size:12px;font-family: arial;color:#959595 !important;}.google_text_ad_single_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_multi_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_desc{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_desc_bottom{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_bottom{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}

சோனா 'எபக்ட்': பார்ட்டினாலே தலைதெறிக்க ஓடும் வெங்கட் பிரபு

நடிகை சோனா-எஸ்.பி.பி. சரண் விவகாரம் பூதாகரமாக வெடித்ததையடு்தது இயக்குனர் வெங்கட் பிரபு இப்போதெல்லாம் நைட் பார்ட்டி என்றாலே தலைதெரிக்க ஓடுகிறாராம்.

மங்காத்தா படம் ஹிட்டானதற்காக அதில் நடித்த நடிகர் வைபவ் மது விருந்து வைத்தார். அதில் கலந்து கொண்ட கவர்ச்சி நடிகை சோனா பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ். பி. பி. சரண் தன்னை கற்பழிக்க முயன்றதாக போலீசில் புகார் கொடுத்தார். வீடியோ ஆதாரங்களையும் கொடுத்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சரணை சும்மாவிட மாட்டேன் என்று வீர வசனம் பேசிய சோனா கடைசியில் சமாதானம் ஆகிவிட்டார். மன உளைச்சல் காரணமாக 1 ஆண்டுக்கு சினிமாவில் நடிக்கப் போவதில்லை என்றும் அறிவித்தார்.

சம்பந்தப்பட்ட பார்ட்டியில் வெங்கட் பிரபுவும் இருந்தார். அவரது பெயரும் கூட லேசுபாசாக அடிபடத் தொடங்கியது. தற்போது இரவுப் பார்ட்டி, மது பார்ட்டி என்றாலே பிரபுவுக்கு அலர்ஜியாகி விட்டதாம். பார்ட்டிக்குப் போலாமா என்று கேட்டாலே ஓடி விடுகிறாராம்.

தன் மகள் ஷிவானியின் பிறந்தநாளை கடந்த ஆண்டு சென்னையில் கோலாகலமாகக் கொண்டிய அவர் இந்த ஆண்டு மலேசியாவுக்கு ஷிப்ட் பண்ணி விட்டாராம்.

வெங்கட் பிரபு மலேசியாவில் கொடுத்த பார்ட்டியில் சர்ச்சைக்குரிய சென்னை பார்ட்டியில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் ஆஜராகியிருந்திருக்கின்றனர். ஆனால் சோனாவை மட்டும் அழைக்கவேயில்லையாம்.

இவர்தான் இப்படி, இவரது தம்பி பிரேம்ஜி அமரனுக்கு இந்தப் பயமெல்லாம் இல்லையாம். தொடர்ந்து வழக்கம் போல கை விரல்களை நீட்டி மடக்கி வித்தை செய்தபடி பார்ட்டிகளுக்குப் போய் வருகிறாராம்.Newsletter Its Free!உங்கள் இன்பாக்சி்ல் லேட்டஸ்ட் செய்திகள் .ads_by_goolge_txt_top{font-family: arial;font-size:12px;color:#959595 !important;text-decoration:none;}.google_text_ad_single_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_multi_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_desc_top{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_top{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}.ads_by_goolge_txt_bottom{font-size:12px;font-family: arial;color:#959595 !important;}.google_text_ad_single_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_multi_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_desc{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_desc_bottom{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_bottom{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}

Thursday, October 13, 2011

'ஃபர்ஸ்ட் ஹீரோ' விஜய் மீது எப்பவும் தனி விருப்பம் உண்டு: பிரியங்கா சோப்ரா

நடிகர் விஜய் மீது எனக்கு எப்பொழுதுமே தனி விருப்பம் உண்டு. மீண்டும் அவருடன் சேர்ந்து நடிக்க ஆசையாக உள்ளது என்று நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.

உலக அழகியாக தேர்வான பிரியங்கா சோப்ராவுக்கு நடிகை என்ற அந்தஸ்தை கொடுத்தது தமிழ் சினிமா தான். அவர் முதன்முதலாக இளைய தளபதி விஜய்யுடன் சேர்ந்து தமிழன் படத்தில் நடித்தார். அது தான் அவர் நடித்த முதல் படம். அதன் பிறகு தான் பாலிவுட் கண்கள் பிரியங்கா மீது பட்டது. தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையாக உள்ளார்.

அவருடன் ஜோடி சேர பல ஹீரோக்கள் காத்திருக்கையில் பிரியங்கா விஜயுடன் ஜோடி சேர விரும்புகிறார்.

அண்மையில் சென்னையில் நடந்த சாம்பியன்ஸ் லீக் கிரிக்கட் இறுதிபோட்டியை காண வந்த பிரியங்கா நிருபர்களிடம் கூறியதாவது,

என்னை கோலிவுட் தான் அறிமுகப்படுத்தியது. எனது முதல் படத்தின் ஹீரோ விஜய். அவர் மீது எனக்கு எப்பொழுதுமே தனி விருப்பம் உண்டு. மீண்டும் அவருடன் சேர்ந்து நடிக்க ஆசையாக உள்ளது. தமிழ் ஹீரோக்கள் பலரை எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழ் சினிமாவில் பலமடங்கு மாற்றம் ஏற்பட்டுள்ளது. அண்மையில் வெளியான தமிழ் படங்களைப் பார்த்து அசந்துவிட்டேன்.

எனக்கு தமிழ் படங்களில் நடிக்க மிகவும் ஆசையாக உள்ளது. அதிலும் குறிப்பாக விஜய்க்கு ஜோடியாக நடிக்கத் தான் ஆசை. அது நிறைவேறினால் நான் பெருமகிழ்ச்சி அடைவேன் என்றார்.Written by: ShameenaNewsletter Its Free!உங்கள் இன்பாக்சி்ல் லேட்டஸ்ட் செய்திகள் .ads_by_goolge_txt_top{font-family: arial;font-size:12px;color:#959595 !important;text-decoration:none;}.google_text_ad_single_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_multi_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_desc_top{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_top{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}.ads_by_goolge_txt_bottom{font-size:12px;font-family: arial;color:#959595 !important;}.google_text_ad_single_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_multi_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_desc{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_desc_bottom{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_bottom{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}

இரண்டாவது கணவரிடம் விவாகரத்து கோரி வனிதா மனு!

தனது இரண்டாவது கணவர் ராஜனிடமிருந்து விவாகரத்து கோரி நடிகை வனிதா விஜயகுமார் நேற்று குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவருடன் ராஜனும் பரஸ்பர விவாகரத்துக்கு ஒப்புதல் தெரிவித்து மனுதாக்கல் செய்தார்.

நடிகை வனிதா, சின்னத்திரை நடிகர் ஆகாஷை ஏற்கனவே திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்றார். அவர்களுக்கு ஹரி என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். பின்னர் ராஜன் ஆனந்த் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார்.

ஆகாஷூடன் வசிக்கும் மகன் ஹரியை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வனிதா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் ஹரி தாயுடன் செல்ல மறுத்து விட்டான். எனவே மகனுக்காக தனது இரண்டாவது கணவரைப் பிரிவது என்ற முடிவுக்கு அவர் வந்துள்ளார். மகனுக்காக மீண்டும் முதல் கணவர் ஆகாஷுடன் சேர்ந்து வாழ விரும்புவதாக சமீபத்தில் வனிதா பேட்டி அளித்து இருந்தார்.

இந்த நிலையில் வனிதாவும், 2-வது கணவர் ராஜன்ஆனந்தும் நேற்று காலை சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள குடும்பநல கோர்ட்டுக்கு வந்தனர். இருவரும் பரஸ்பர முறையில் விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்தனர்.

2007ல் திருமணம் நடந்து. கடந்த ஆகஸ்டு முதல் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கிறோம். பரஸ்பர முறையில் இருவரும் பிரிந்து செல்ல முடிவெடுத்திருப்பதால் எங்களுக்கு விவாகரத்து வழங்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

நீதிபதி ராஜா சொக்கலிங்கம் முன்னிலையில் இந்த மனுவை தாக்கல் செய்தனர்.Written by: ShankarNewsletter Its Free!உங்கள் இன்பாக்சி்ல் லேட்டஸ்ட் செய்திகள் .ads_by_goolge_txt_top{font-family: arial;font-size:12px;color:#959595 !important;text-decoration:none;}.google_text_ad_single_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_multi_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_desc_top{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_top{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}.ads_by_goolge_txt_bottom{font-size:12px;font-family: arial;color:#959595 !important;}.google_text_ad_single_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_multi_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_desc{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_desc_bottom{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_bottom{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}

Wednesday, October 12, 2011

ஜெனிலியாவின் கடைசி படம் வேலாயுதம்?

விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போவதால் ஜெனிலியாவின் கடைசி படம் வேலாயுதம்தான் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

ஜெனிலியாவுக்கும் இந்தி நடிகரும் மத்திய அமைச்சர் மகனுமான ரிதேஷ் தேஷ்முக்கிற்கும் சில தினங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் நடந்தது. இது காதல் திருமணமாகும்.

திருமணத்துக்குப் பிறகு நடிப்பதில்லை என ஜெனிலியா முடிவு செய்துள்ளார். இப்போது தமிழில் அவர் நடிக்கும் படம் வேலாயுதம். இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகிறது. விஜய்க்கு ஜோடியாக அவர் நடித்துள்ளார்.

இதுவே அவரது கடைசி தமிழ்ப் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் அவரை இன்னும் ஒரு படத்தில் நடிக்குமாறு இயக்குநர் சிம்புதேவன் கேட்டுக் கொண்டுள்ளார். அது தனுஷ் நடிக்கும் மாரீசன். ஆனால் இன்னும் தன்முடிவை ஜெனிலியா சொல்லவில்லையாம்.

இந்தியில் கைவசம் உள்ள 3 படங்களையும் முடித்துவிட்டு, வரும் பிப்ரவரியில் திருமணம் செய்யத் திட்டமிட்டுள்ளார்களாம் ஜெனிலியாவும் ரிதேஷும்.Written by: ShankarNewsletter Its Free!உங்கள் இன்பாக்சி்ல் லேட்டஸ்ட் செய்திகள் .ads_by_goolge_txt_top{font-family: arial;font-size:12px;color:#959595 !important;text-decoration:none;}.google_text_ad_single_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_multi_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_desc_top{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_top{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}.ads_by_goolge_txt_bottom{font-size:12px;font-family: arial;color:#959595 !important;}.google_text_ad_single_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_multi_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_desc{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_desc_bottom{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_bottom{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}