This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Showing posts with label சீமான். Show all posts
Showing posts with label சீமான். Show all posts

Sunday, July 17, 2011

சீமான் என்னுடன் குடும்பம் நடத்தியதற்கு 700 ஆதாரங்கள் உள்ளன-விஜயலட்சுமி

இயக்குநர் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைவரான சீமான் மீது புகார் கூறியுள்ள நடிகை விஜயலட்சுமி, தன்னுடன் சீமான் குடும்பம் நடத்தியது தொடர்பாக 700 ஆதாரங்களை வைத்துள்ளதாக கூறியுள்ளார்.

சில புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில் சீமானுக்கு கேக் ஊட்டுவது போல காட்சிகள் உள்ளன.

3 வருடமாக தன்னைக் காதலித்து விட்டு இப்போது திருமணம் செய்ய சீமான் மறுப்பதாக விஜயலட்சுமி புகார் கூறியுள்ளார். இது காலப்போக்கில் அப்படியே மறைந்து போய் விட்டது. இந்தநிலையில் திடீரென சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் விஜயலட்சுமி.

இதுகுறித்து அவர் கூறுகையில், நான் கொடுத்த புகார் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது.

அவர் என்னுடன் குடும்பம் நடத்தியதற்கு 700 ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. மதுரையில் அவருடன் நான் 15 நாட்கள் குடும்பம் நடத்தியுள்ளேன். 3 ஆண்டுகள் என்னுடன் வாழ்ந்து விட்டு என்னைத் தூக்கிப் போட்டு விட்டார் சீமான் என்று கூறியுள்ளார் விஜயலட்சுமி.

சீமானுடன் இருப்பது தொடர்பாக விஜயலட்சுமி வெளியிட்டுள்ள படங்களால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.Topics: விஜயலட்சுமி, சீமான், நாம் தமிழர் கட்சி, naam tamilar party, seeman, vijayalakshmi

Friday, July 15, 2011

ஐ.நாவின் மனித உரிமை பிரகடனத்தை மீறியது இந்தோனேஷியா : சீமான்

இந்தோனேஷிய அரசால் நடுக்கடலில் சிறைப்படுத்தப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகளை விடுவிக்க முயற்சி எடுக்குமாறு மத்திய அரசை தமிழக முதல்வர் வற்புறுத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் :-

தங்களுடைய வாழ்வுரிமையை பாதுகாத்துக் கொள்ளவும், தங்கள் பிள்ளைகளுக்கு பாதுகாப்பான எதிர்காலம் அமைய வேண்டும் என்பதற்காக நியூசிலாந்து சென்ற அவர்களை இந்தோனேஷிய அரசு சிறைப்பிடித்து வைத்திருப்பது மனித உரிமைக்கு எதிரானது.

இலங்கையில் யுத்தம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆன பின்னரும் தமிழர்கள் மீது இலங்கை இனவாத அரசு தொடர்ந்து நடத்திவரும் இன அழித்தலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளவும், தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் பாதுகாப்பையும் உறுதிசெய்துக்கொள்ளவும், நியூசிலாந்து நாட்டை நோக்கி கப்பலில் பயணம் செய்த 87 ஈழத் தமிழ் அகதிகளை இந்தோனேஷிய அரசு நடுக்கடலில் சிறைபிடித்துள்ளது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.

ஈழத் தமிழ் அகதிகள் பயணம் செய்த கப்பல் சர்வதேசக் கடற்பரப்பில் பழுதாகி நின்றபோது இந்தோனிஷிய கடற்படையால் சுற்றி வளைக்கப்பட்டு, சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களை கப்பலில் இருந்து இறக்கி இந்தோனேசியா நாட்டிற்குக் கொண்டு செல்ல அந்நாட்டுப் படையினர் முயற்சித்தபோது, கப்பலில் இருந்து இறங்க அகதிகள் மறுத்துள்ளனர். தாங்கள் நியூசிலாந்து நோக்கி பயணிக்க அனுமதிக்க வேண்டும், இல்லையென்றால் கப்பலில் இருந்தே சாவோம் என்று கூறிவிட்டனர். இந்தத் தகவல்களையெல்லாம் அந்தக் கப்பலில் உள்ளவர்கள் என்னைத் தொடர்புகொண்டு என்னிடம் வேதனையுடன் தெரிவித்தனர்.

அந்த 87 அகதிகளில் 5 பேர் குழந்தைகள், 6 பேர் பெண்கள். அவர்களில் ஒருவர் 8 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். கப்பலை விட்டு இறங்க மறுத்த அகதிகளுக்கு கடந்த 13ஆம் திகதி முதல் உணவு அளிப்பதை நிறுத்தி துன்புறுத்தி வருகிறது இந்தோனேஷிய அரசு. ஆஸ்திரேலியாவிற்கும், நியூசிலாந்து நாட்டிற்கும் தப்பிச் செல்ல முயலும் ஈழத் தமிழ் அகதிகளை இதற்கு முன்னும் இப்படி தடுத்து நிறுத்தி சிறைப்படுத்தியுள்ளது இந்தோனிஷிய அரசு.

ஐ.நா.வின் சர்வதேச மனித உரிமைப் பிரகடனம் விதி 14ன் படி, தங்கள் நாட்டில் கொடூரமான ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்படும் எந்த ஒரு நபரும் வேறொரு நாட்டிற்கு அகதியாகச் சென்று தன்னை காத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

இந்தோனேசிய அரசின் இப்படிப்பட்ட நடவடிக்கைகள் ஐ.நா.வின் பன்னாட்டு மனித உரிமை பிரகடனத்திற்கும், ஐ.நா.வின் அகதிகள் பிரகடனத்திற்கும் முற்றிலும் முரணானதாகும். ஆனால் சர்வதேச பிரகடனங்களின் இந்த நெறிமுறைகளை மதிக்காமல், தனது நட்பு நாடான இலங்கை அரசுக்கு உதவும் வகையில் இந்தோனிஷிய அரசு செயல்பட்டு வருகிறது.

ஈழத் தமிழ் அகதிகள் வந்தால் நாங்கள் ஏற்க மாட்டோம் என்று நியூசிலாந்து நாடு கூறுவதும் ஐ.நா.அகதிகள் பிரகடனத்திற்கு முரணானதே.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும், அங்கு தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறை இன்னமும் நீடிப்பதால்தான் சொந்த மண்ணில் இருந்து அவர்கள் அகதிகளாக மற்ற நாடுகளுக்குச் செல்கின்றனர்.

அங்கு அமைதி ஏற்பட்டுள்ளதாக கூறும் அந்நாட்டு அரசின் குரலாக பேசிவரும் சிவ்சங்கர் மேனன் இதற்கு மேலாவது அமைதி என்ற வார்த்தைக்கு மயான அமைதி என்பது பொருளல்ல என்பதை உணர்ந்திட வேண்டும்.

எனவே, நடுக்கடலில் சிறைப்படுத்தப்பட்ட ஈழத் தமிழ் அகதிகளுக்கு உணவளித்து, அவர்கள் விரும்பும் நாட்டிற்கு செல்ல அனுமதிக்க தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு வலியுறுத்த வேண்டும், என குறிப்பிட்டுள்ளார்.