சென்னை: நடிகர் டிங்கு தனக்குத் தெரியாமல் மோசடியாக இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் என்று அவரது மனைவி சுப்ரியா போலீசில் புகார் செய்துள்ளார்.
டி.வி. தொடர்களில் நடித்து பிரபலமானவர் டிங்கு. இவருக்கு சுப்ரியா என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். நடிகர் டிங்குவின் மனைவி சுப்ரியா திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார்.
அதில், "ஒரு பட்டதாரி பெண்ணான நான் 1999-ல் சின்னத்திரை நடிகரான டிங்கு என்கிற அருண்காந்தை காதலித்து திருமணம் செய்தேன். எங்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. ஆரம்பத்தில் எனது குடும்பத்துக்கு எங்கள் திருமணம் பற்றி தெரியாது. தெரிந்த பிறகு எனது பெற்றோர் எங்களுடைய திருமணத்தை ஆடம்பரமாக நடத்தி வைத்தார்கள்.
ரூ 30 லட்சம் நகைகள்
திருமணத்தின்போது ரூ.30 லட்சம் மதிப்புள்ள தங்க, வைர நகைகள் எனக்கு அணிவிக்கப்பட்டது. 15 கிலோ வெள்ளி பாத்திரங்கள் சீதனமாக தந்தார்கள். என் கணவருக்கு ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள திருமண உடைகள் வாங்கி கொடுத்தனர். கணவர் வீட்டுக்கு சென்ற பிறகு அவரது தாயார் அஞ்சனாதேவி, எனது நகைகளையும், சீதன பொருட்களையும் வாங்கிக் கொண்டார்.
பின்னர் 'எனது தாய் வீட்டில் இருந்து வரதட்சணையாக கார் வாங்கி வரவேண்டும்' என்றார். எனது மாமியாரும், கணவரின் சகோதரி நடிகை சோனியா போஸும் கார் வாங்கி வரும்படி தொடர்ந்து வற்புறுத்தினார்கள். என்னை கேவலமாகவும் ஏசினார்கள். எனது கணவரும், `கார் வாங்கி வராவிட்டால் உன்னுடன் சேர்ந்து வாழமாட்டேன்' என்று மிரட்டினார்.
மாமியார் மிரட்டல்
கார் வராவிட்டால் வேறு பெண்ணை என் மகனுக்கு கட்டி வைத்து விடுவேன் என்று மாமியார் அஞ்சனாதேவி சொல்லி வந்தார். ஆரம்பத்தில் என்னிடம் அன்பாக இருந்த என் கணவர் டிங்கு, குழந்தை பிறந்த பிறகு வீட்டுக்கு தாமதமாக வந்தார்.
சில நாட்கள் வீட்டுக்கே வருவது இல்லை. இதற்கிடையே என் கணவர் கவிதா என்ற நடன நடிகையை 2-வது திருமணம் செய்தது எனக்கு தெரியவந்தது. எனக்கு தெரியாமல் சட்டவிரோதமாக அந்த பெண்ணை அவர் மணந்துள்ளார். இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. எனவே எனது கணவர் டிங்கு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று கூறப்பட்டிருந்தது.
முன்ஜாமீன் மனு
இதையடுத்து டி.வி. நடிகர் டிங்கு இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்க கோரி சென்னை முதன்மை செசன்சு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதில் 'எனது மனைவி சுப்ரியா என் மீது பொய்யான புகார் கொடுத்துள்ளார். அவருடன்தான் நான் வாழ்ந்தேன். குழந்தை பிறந்த பிறகு நிலமை மாறியது. தேவை இல்லாமல் தகராறு செய்தார். என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார். எனவே நான் தனியாக வாழ்கிறேன். எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.
'வரதட்சணையை திருப்பிக் கொடு'
இந்த மனுவுக்கு சுப்ரியா சார்பில் கோர்ட்டில் ஆஜர் ஆன வக்கீல்கள் நடராஜன், சங்கர் ஆகியோர் நடிகர் டிங்குவுக்கு முன்ஜாமீன் வழங்க கூடாது என்று வாதிட்டனர். ரூ.25 லட்சம் மதிப்புள்ள சுப்ரியாவின் நகை, பொருட்கள் டிங்குவிடம் இருப்பதாகவும், பெங்களூரில் உள்ள கோவிலில் அவர் 2-வது திருமணம் செய்ததற்கான ஆதாரம் இருப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
டிங்கு தரப்பில் முன் ஜாமீன் கேட்டு வாதம் செய்யப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு நீதிபதி தேவதாஸ் முன்ஜாமீன் மீதான தீர்ப்பை 20-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.
இது குடும்ப பிரச்சினை தொடர்பான வழக்கு. எனவே கணவன்-மனைவி தங்கள் பிரச்சினைகளை பேசி தீர்ப்பதற்கு வசதியாக 2 பேரையும் சமரச மையத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
காங்கிரஸ் பிரமுகர்
நடிகர் டிங்கு காங்கிரஸ் கட்சியில் உள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட மனு கொடுத்திருந்தார்.
நடிகை சோனியா இவரது சகோதரியாவார். நடிகர் போஸ் வெங்கட்டின் மனைவி. இவர் மீதும் வரதட்சணைக் கொடுமை புகாரைக் கொடுத்துள்ளார் டிங்கு மனைவி சுப்ரியா என்பது குறிப்பிடத்தக்கது.Written by: ShankarNewsletter Its Free!உங்கள் இன்பாக்சி்ல் லேட்டஸ்ட் செய்திகள் .ads_by_goolge_txt_top{font-family: arial;font-size:12px;color:#959595 !important;text-decoration:none;}.google_text_ad_single_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_multi_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_desc_top{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_top{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}.ads_by_goolge_txt_bottom{font-size:12px;font-family: arial;color:#959595 !important;}.google_text_ad_single_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_multi_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_desc{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_desc_bottom{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_bottom{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}