This is default featured post 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured post 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured post 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured post 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured post 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
Friday, December 16, 2011
தங்கம் எப்படி உருவானது?
அதிக உடல் பருமன் ஆயுளைக் குறைக்கும்
தொழிலதிபர் மனைவி குத்திக்கொலை 2 வாலிபர்கள் பிடிபட்டனர்
கடந்த 12ம் தேதி வீட்டில் தனியாக இருந்த யாஸ்மின், தொண்டை யில் கத்தியால் குத்தப் பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட் டார். அவர் அணிந்திருந்த கம்மல், வீட்டில் இருந்த 10 சவரன் நகைகள் கொள்ளை போயிருந்தன. இதுதொடர்பாக, திருமுல்லைவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
கமிஷனர் திரிபாதி உத்தரவின் பேரில், இணை கமிஷனர் சங்கர், துணை கமிஷனர் மகேஸ்குமார், கூடுதல் துணை கமிஷனர் ஜெயக்குமார், ஆவடி உதவி கமிஷனர் மனோகரன் ஆகியோர் கொண்ட 3 தனிப்படை அமைக்கப்பட்டது.
இவர்கள் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். கொலை செய்யப்பட்ட யாஷ்மின், செல்போனில் அடிக்கடி தொடர்பு கொண்ட நபர்கள் பட்டியலை எடுத்து விசாரித்தனர். இதில், ஆவடி அருகே பொத்தூர் தாய் நகரை சேர்ந்த கோபிநாத் (25), அவரது நண்பர் பாடி நம்மாழ்வார் நகரை சேர்ந்த சுப்பிரமணியம் (23) ஆகியோர், சம்பவத்தன்று யாஸ்மினுடன் தொடர்பு கொண்டு பேசியது தெரிய வந்தது.
அவர்கள் இருவரும் கொரட்டூர், அம்பத்தூர் எஸ்டேட் ஆகிய இடங்களில் உள்ள தனியார் கம்பெனி ஊழியர்கள். அவர் களை போலீசார் பிடித்து விசாரித்ததில், யாஸ்மினை கொலை செய்து, நகைகளை கொள்ளையடித்தது தெரியவந்தது. அவர்களிடமிருந்து பைக், கத்தி, 12 சவரன் நகைகளை போலீ சார் கைப்பற்றினர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
கொலை செய்யப்பட்ட யாஸ்மின், வேறு மதத்தை சேர்ந்தவர். லியாகத் அலியை காதலித்து முஸ்லிம் மதத்துக்கு மாறி திருமணம் செய்துள்ளார். முதலில், மதுரவாயலில் இருந்த இவர்கள் 4 ஆண்டுகளுக்கு முன்புதான், திருமுல்லைவாயலில் புதிதாக வீடு கட்டி குடிபுகுந்துள்ளனர். யாஸ்மினுக்கும் லியாகத் அலிக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும், யாஸ்மின் ஆடம்பர செலவுக்கு லியாகத் அலி பணம் கொடுப்பதில்லை.
இதனால், தனது ஆடம்பர செலவுக்கு பணம் சம்பாதிப்பதற்காக ஆன்லைன் மூலம் பாலியல் தொழிலில் குதித்துள்ளார் யாஸ்மின். கணவன், மகள்கள் இல்லாத நேரத்தில் இவரது வீட்டுக்கு வாடிக்கையாளர்கள் வந்து சென்றுள்ளனர். மேலும், கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் தங்களது ஜோடியுடன் இவரது வீட்டில் வந்து உல்லாசமாக இருந்து சென்றுள்ளனர். இதற்கு ஒரு ஜோடிக்கு ரூ.1000 வாடகை யாஸ்மின் வசூலித்துள்ளார்.
இந்நிலையில், பாடியை சேர்ந்த அன்வர் என்பவர் மூலமாக கோபிநாத், சுப்பிரமணியமும் யாஸ்மினுக்கு பழக்கமானார்கள். இருவரும் யாஸ்மினுடன் கடந்த 6 மாதமாக கள்ளத்தொடர்பு வைத்துள்ளனர். அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றுள்ளனர். அப்போது, கணவனுடன் தகராறு பற்றியும், செலவுக்கு பணம் தராதது பற்றியும் கூறியிருக்கிறார். மேலும், மதுரவாயலில் உள்ள வீட்டை விற்று பணம் வைத்துள்ளதாகவும், ஸீ 2 லட்சத்துக்கு நகைகள் வாங்கி வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் பணம், நகை களை கொள்ளையடிக்க கோபிநாத்தும் சுப்பிரமணியமும் திட்டமிட்டனர். அதன்படி, சம்பவத்தன்று யாஸ்மினுக்கு போன் செய்து வீட்டுக்கு வருவதாக கூறியிருக்கின்றனர். பின்னர் கத்தி, இரும்பு கம்பியை மறைத்து எடுத்து வந்துள்ளனர். அவர்களை முன்கதவை திறந்து யாஸ் மின் வரவேற்றுள்ளார். பின்னர், முன் கேட்டையும் கதவையும் பூட்டிக் கொண்டனர்.
இருவரும் படுக்கை அறைக்கு வந்து யாஸ்மினுடன் பேசிக் கொண்டிருந்துள்ளனர். நகை, பணத்தை கேட்டுள்ளனர். அதற்கு அவர் மறுக்கவே, யாஸ்மின் வாயை கோபிநாத் பொத்தி, கழுத்தை நெரித்து கீழே தள்ளியுள்ளார். இதில் அவர் மயங்கி சாய்ந்தார். பின்னர் பீரோவை கம்பியால் உடைத்து 10 சவரன் நகையை எடுத்துள்ளனர். சத்தம் வெளியில் கேட்காமல் இருக்க டிவி வால்யூமை அதிகரித்து வைத்துள்ளனர்.
திடீரென யாஸ்மின் விழித்துக் கொண்டு சத்தம் போடவே, சுப்பிரமணியம் அவரது கால்களை கெட்டியாகப் பிடித்துள்ளார். கோபிநாத் அவரது வாயைப் பொத்தி கத்தியால் கழுத்தில் குத்தியுள்ளார். இதில் அவர் துடிதுடித்து இறந்தார். பின்னர், காதுகளில் இருந்த கம்மல்களை அறுத்து எடுத்துக் கொண்டு, இருவரும் வீட்டின் பின்புற கதவை திறந்து பைக்கில் தப்பினர்.
இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட இருவரையும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். குற்றவாளிகளை 48 மணி நேரத்தில் பிடித்த தனிப்படை போலீசாரை கமிஷனர் திரிபாதி பாராட்டினார்.
குற்றவாளிகள் சிக்கியது எப்படி?
யாஸ்மின் கணவர் லியாகத் அலியிடம் போலீசார் விசாரித்தபோது, மனைவி செல்போன் பயன்படுத்துவதில்லை, வீட்டில் தொலைபேசி இணைப்பும் கிடையாது, என்னை தொடர்பு கொள்வது என்றால் பி.சி.ஓ. மூலம்தான் பேசுவார் என்று கூறியிருந்தார். ஒரு தொழிலதிபர் வீட்டில் போன் இல்லாமல் இருக்குமா? என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
விசாரணையில் ஒரு ரீசார்ஜ் கடையில் ஒரு குறிப்பிட்ட நம்பருக்கு அடிக்கடி யாஸ்மின் ரீசார்ஜ் செய்வார் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த செல்போன் நம்பர் மூலம் விசாரணையை முடுக்கினர். அந்த எண் யாஸ்மின் பெயரில் இல்லை, வேறொரு நபர் பெயரில் இருந்துள்ளது. அதை வைத்து விசாரிக்கும்போதுதான், சம்பவத்தன்று கோபிநாத் பேசியிருப்பதும், அடிக்கடி அவர் தொடர்பு கொண்டிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் வீட்டில் சென்று போலீசார் மடக்கினர். அப்போது யாஸ்மின் செல்போனையும், இவர்கள் எடுத்துச் சென்று உடைத்து தூள், தூளாக்கி போட்டதும் தெரிந்தது. அந்த செல்போன் பாகங்களையும் போலீசார் கைப்பற்றினர்.
PDF கோப்புகளை Edit செய்வதற்கு
கொட்டாவி விடுவது ஏன் தெரியுமா?
எலிசபெத் டெய்லரின் நகைகள் ரூ 580 கோடிக்கு ஏலம்