This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Tuesday, July 12, 2011

கத்ரீனா என்ன முட்டாளா?

ஜிந்தகி நா மிலேகி தோபாரா படத்தில் தனது கதாபாத்திரம் பற்றி கேட்ட பிறகே கத்ரீனா ஓகே சொன்னார். கதை கேட்காமல் ஓகே சொல்ல அவர் என்ன முட்டாளா? என்று அப்படத்தின் இயக்குனர் ஜோயா அக்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜோயா அக்தரின் படம் ஜிந்தகி நா மிலேகி தோபாரா. இதில் ஹ்ரித்திக் ரோஷன், அபய் தியோல் மற்றும் பர்ஹான் அக்தர் நடித்துள்ளனர். கல்கி கொச்லின் மற்றும் கத்ரீனா கைப் ஆகியோர் கதாநாயகிகள்.

இந்த படத்தில் நடித்துள்ள கத்ரீனாவுக்கும், கல்கிக்கும் லடாய் என்று தகவல்கள் வந்தன. ஆனால் அதை கல்கி திட்டவட்டமாக மறுத்துள்ளார். இந்நிலையில் படத்தில் கத்ரீனாவுக்கு முக்கியத்துவம் இல்லாத சிறிய கதாபாத்திரம் என்று பேசப்படுகின்றது.

இது குறித்து இயக்குனர் ஜோயா அக்தரிடம் கேட்டதற்கு, அவர் கூறியதாவது,

கத்ரீனா கைப் என்ன முட்டாள் என்று நினைக்கிறீர்களா? அவர் ஸ்கிரிப்டை படித்துவிட்டு தான் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரமாக இருந்திருந்தால் அவர் ஏன் ஒப்புக் கொண்டிருக்க வேண்டும். அவர் இந்த படத்தில் நடித்து, தற்போது படத்தை விளம்பரமும் செய்கிறார் என்றால், அவர் சந்தோஷமாக இருக்கிறார் என்று தான் நான் நினைக்கின்றேன்.

கத்ரீனா கைப் அவர் வாழ்க்கையை தான் விரும்பியபடி வாழ்பவர். இந்தியே தெரியாமல் பாலிவுட்டில் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆகியுள்ளார். இதில் இருந்தே அவர் திறமைசாலி என்று தெரியவில்லையா. அவர் திறமையை நான் மதிக்கிறேன் என்றார்.Topics: katrina kaif, zindagi na milegi dobara, கத்ரீனா கைப், ஜோயா அக்தர்

சன் தொலைக் காட்சி மீது நடிகை ரஞ்சிதா புகார்

சன் தொலைக் காட்சி மீது நடிகை ரஞ்சிதா புகார்

  
 
நடிகை ரஞ்சிதா 
சுவாமி நித்யானந்தாவுடன் தான் நெருக்கமாக இருந்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தக் கூடிய சித்தரிக்கப்பட்ட வீடியோ காட்சிகளை வெளியிட்ட சன் குழுமம், நக்கீரன் மற்றும் தினகரன் ஆகிய மூன்று நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகை ரஞ்சிதா காவல்துறையிடம் புகார் கொடுத்துள்ளார்.
இந்த மாற்றம் செய்யப்பட்ட வீடியோ ஒளிபரப்பப்பட்டது தனது அந்தரங்கத்தையும், மத சுதந்திரத்தையும் மீறும் செயல் என்று தனது மனுவில் ரஞ்சிதா தெரிவித்துள்ளார்.

ஆனால் சர்ச்சைக்குரிய அந்த வீடியோ பல இணைய தளங்களில் வெளியிடப்பட்டது. இது குறித்த செய்திகள் பல்வேறு பத்திரிக்கைகளில் வந்துள்ளது. இருந்தும் முதல் முதலாக அந்த வீடியோவை கடந்த ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி வெளியிட்டது சன் குழுமம் என்பதால் அதன் மீது புகார் அளித்துள்ளதாக ரஞ்சிதா தெரிவித்தார்.

கடந்த ஆண்டே தான் இந்த ஊடகங்கள் மீது புகார் அளிக்க முயன்றதாகவும், ஆனால் இது குறித்த வழக்கை ஏற்று நடத்த வழக்கறிஞர்கள் முன்வரவில்லை என்றும் அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக சன் தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களில் கருத்துக்கள் கிடைக்கப் பெறவில்லை

இலங்கையின் வட பகுதி ராஜதந்திரிகள் தடையின்றி செல்ல அனுமதி

இலங்கையின் வட பகுதி ராஜதந்திரிகள் தடையின்றி செல்ல அனுமதி

இலங்கையின் வட பகுதி ராஜதந்திரிகள் தடையின்றி செல்ல அனுமதி : அரசு அறிவிப்பு

இலங்கையின் வடக்கு பிரதேசத்துக்கு இன்று முதல் வெளிநாட்டு ராஜதந்திரிகள் தடையின்றி செல்லமுடியும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.உள்நாட்டு அரச சார்ப்பற்ற அமைப்புகள் மற்றும் சர்வதேச அரச சார்ப்பற்ற அமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

வடக்குக்கு செல்ல வெளிநாட்டு கடவுசீட்டை கொண்டிருப்பவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை கடந்த வாரத்தில் நீக்கப்பட்டது.

இதனையடுத்து ஊடகவியலாளர்கள் வட பகுதிக்கு செல்ல முயற்சித்த போது, வவுனியா ஓமந்தை சோதனை சாவடியில் அப்பால் அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை.

இந்தநிலையில் சர்வதேச மட்டத்தில் தம்மீது சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பிக்கும் வகையிலேயே இலங்கை அரசாங்கம் இன்று புதிய அறிவித்தலை விடுத்துள்ளது.

சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலைக்கு சைக்கிள் தரிப்பிடம்

சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலைக்கு நோயாளர்களை பார்வையிட வரும் பொதுமக்களுக்கான சைக்கிள் தரிப்பிடம் ஒன்றினை நிர்மாணித்துக் கொடுப்பதற்கும் மற்றும் வைத்தியசாலையில் காணப்படும் குறைபாடுகளை அபிவிருத்தி செய்வதற்கும் நேர்ச்ச பியூட்டி கிரியேசன்ஸ் தனியார் கம்பனி முன்வந்துள்ளது.

சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை அபிவிருத்தி சபையின் வேண்டுகோளினை ஏற்று இவ்வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பது சம்பந்தமான கலந்துரையாடல் இன்று சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் அல்ஹாஜ் எம்.ரீ. இப்றாகீம் தலைமையில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் நேர்ச்ச பியூட்டி கிரியேசன்ஸ் தனியார் கம்பனியின் உதவி தரப்படுத்தல் முகாமையாளர் திருமதி நதீகா தர்மசிறி, கல்முனை பிராந்திய விற்பனை பிரதிநிதி ஏ.எல். பாஹிம் மற்றும் மாவட்ட வைத்தியசாலை அபிவிருத்தி சபை செயலாளர் றியாத் ஏ. மஜீத் மற்றும் அபிவிருத்தி சபை அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.

விஷேட தேவையுடையோருக்கான வாழ்வாதாரக் கொடுப்பனவுகள்

சமூக சேவைத் திணைக்களத்தினால் கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள விஷேட தேவையுடையோருக்கான வாழ்வாதாரக் கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வு நேற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.பியசேன, பிரதேச செயலாளர் கே.லவநாதன், சமூக சேவை உத்தியோகத்தர் உட்பட மேலும் பலர் கலந்து கொண்டு விஷேட தேவையுடையோருக்கான வாழ்வாதாரக் கொடுப்பனவுகளை வழங்கி வைத்தனர்.

அபிவிருத்தித் திட்டங்களால் மீன்பிடிக்கு பாதிப்பு இல்லை - பசில்

நாட்டின் அபிவிருத்தித் திட்டங்கள் ஒருபோதும் மீன்பிடித் தொழிலை பாதிக்காது என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.

பாசிக்குடா பகுதியில் சுற்றுலாத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதால் மீன்பிடித் துறைக்குப் பாதிப்பு ஏற்படும் என சிலர் தவறான பரப்புரைகளை செய்து வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படும் எனக் கூறிய அமைச்சர், பாசிக்குடா திட்டத்தின் ஊடாக அனேகமானவர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்க முடியும் என குறிப்பிட்டார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வடக்கு செல்ல இராஜதந்திரிகளுக்கு இனி தடை இல்லை

வட பகுதிக்கு விஜயம் செய்ய வெளிநாட்டு இராஜதந்திரிகள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தன்னார்வ தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள் இனிமேல் அனுமதி கோர வேண்டிய அவசியமில்லை என பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுவரை காலமும் வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வடக்கு செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சிடம் அனுமதி கோர வேண்டிய நிலை இருந்தது.

எனினும், இன்றுமுதல் இந்த நடைமுறையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயண அனுமதி ஆவணமின்றி வெளிநாட்டு ராஜதந்திரிகள் வடக்கிற்கு செல்ல முடியும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட நபர்கள் இராணுவ நிலைகள், இராணுவ உத்தியோகத்தர்களை சந்திக்க விரும்பினால் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமென பாதுகாப்பு அமைச்சின் இணையத்தள செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் தபால் மூல வாக்களிப்பு

இம்மாதம் 23 ஆம் திகதி நடைபெறவுள்ள காரைதீவு பிரதேச சபைக்கான தேர்தலுக்குரிய தபால் மூல வாக்களிப்பு இன்று கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் இடம்பெற்றது. காரைதீவு பிரதேச சபை தேர்தலில் பிரதேச சபைக்கு 5 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 11,700 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இலங்கை தமிழரசுக்கடசி, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக்கட்சி, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய 5 அரசியல் கட்சிகளும் இரண்டு சுயேட்சை குழுக்களும் தங்கள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.

கடந்த 2006 ஆம் ஆண்டு முதன்முதலாக நடைபெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தலில் காரைதீவு பிரதேச சபைக்கு இலங்கை தமிழரசு கட்சி 6059 வாக்குகளைப்பெற்று 4 ஆசனங்களையும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசிய கட்சி 2239 வாக்குகளைப்பெற்று 1 ஆசனத்தையும் கைப்பற்றி இருந்தன.

இம்மாதம் 23 ஆம் திகதி காரைதீவு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் வாக்காளர்கள் வாக்களிபபதற்கென 12 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தேர்தலகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

16 வயது சிறுவனின் சடலம் புச்சாக்கேனியில் மீட்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புச்சாக்கேனி காட்டுப்பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுவன் ஒருவரின் சடலத்தை பொலிஸார் நேற்று மாலை மீட்டுள்ளனர். கதிரவெளி புச்சாக்கேணியைச் சேர்ந்த பவானந்தன் சதிஸ்காந்தன் என்ற 16 வயது சிறுவனின் சடலமே இவ்வாறு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

காட்டுக்குள் விறகு எடுக்கச்சென்றவர்கள் வழங்கிய தகவலிகன் அடிப்படையிலேயே மேற்படி சடலம் மீட்க்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை வாகரைப்பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தரம்குறைந்த பெற்றோல் விவகாரத்தை ஆராய பாராளுமன்ற தேர்வுக் குழு தேவை

நாட்டில் தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் தரம்குறைந்த பெற்றோல் விநியோக விடயத்தை அடுத்து கனியவளத்துறை அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவர ஐக்கிய தேசிய கட்சி ஏற்கனவே தீர்மானித்திருந்தது.

எனினும் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ள அக்கட்சி இது குறித்து ஆராய பாராளுமன்ற தேர்வுக் குழுவொன்றை அமைக்குமாறு இன்று ஆலோசனை வழங்கியுள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய திஸ்ஸ அத்தநாயக்க,

பெற்றோல் இறக்குமதி செய்வதற்காக அதிகாரம் வழங்கிய அனைத்து அதிகாரிகளும் இதற்குப் பொறுப்புச் சொல்ல வேண்டும். ஏற்பட்ட இழப்புக்களுக்கு நட்டஈடு வழங்க வேண்டும். இது குறித்து பாராளுமன்ற தேர்வுக் குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.

மேலும், நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்தால் அரசாங்கம் அதனை தோற்கடித்து இச்செயலை மூடி மறைத்துவிடும், தேர்வுக் குழுவொன்றை ஏற்படுத்தினால் அரசாங்கத்திற்கும் அதனை எதிர்க்க முடியாது. இந்தக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் ஆராய வேண்டும். இதற்கு ஆலோசனை வழங்கியவர்களை ஆராய வேண்டும். பொறுப்பு யாருக்கு வழங்கப்பட்டது என தேர்வுக் குழு ஊடாக விசாரணை செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

சிறுசிறு அசம்பாவிதங்களை கொண்ட தபால் வாக்களிப்பு

சிறுசிறு அசம்பாவிதங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் இன்றைய தபால் மூல வாக்களிப்பு மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்றதாக தேர்தல் கண்காணிப்பு நிலையங்கள் தெரிவித்துள்ளன.

அநுராதபுரம், கம்பஹா உள்ளிட்ட சில பகுதிகளில் சிறுசிறு அம்பாவிதங்கள் இடம்பெற்றதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

இந்த நிலையில் தபால் மூல வாக்களிப்பு அமைதியான முறையில் இடம்பெற்றதாக கபே தேர்தல் கண்காணிப்பு இயக்கத்தின் பிரதி நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் யாழ்ப்பாணத்தில் தேர்தல் நடவடிக்கைகளுக்கு இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில் எதிர்வரும் 23ம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு வெளிநாட்டுத் தேர்தல் கண்காணிப்பாளர்கள் வரவழைக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

சுதந்திர தேர்தலை நடத்த வக்கில்லாத அரசு அரசியல் தீர்வை எப்படித் தரும்? - மனோ

வடக்கிலே தமிழ் தேசிய கூட்டமைப்பு குறிவைத்து தாக்கப்படுகின்றது. கூட்டமைப்பின் வேட்பாளர்களும், ஆதரவாளர்களும் அச்சுறுத்தப்படுகிறார்கள். தமிழ் வாக்காளர்கள் கடும் அழுத்தங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். அனைத்து அரச வளங்களும் கூட்டமைப்பிற்கு எதிராகவும், அரசாங்கத்திற்கு ஆதரவாகும் பயன்படுக்கப்படுகின்றன.

இத்தகைய தராதரங்களை கொண்டுள்ள இன்றைய அரசாங்கம் தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வை வழங்குவதற்கு உடன்படுமா? யுத்தம் முடிந்துவிட்டது, இனப்பிரச்சினை தீர்விற்கு தடையாக இருந்த புலிகள் அழிந்துவிட்டார்கள்.

ஆகவே இனப்பிரச்சினைக்கு தீர்வை இந்த அரசாங்கம் வழங்கப்போகின்றது என தமிழ் மக்களுக்கு அறிவுரை வழங்கிவந்த இந்தியாவும், அமெரிக்காவும் தான் இதற்கு பதில் கூறவேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

வடக்கில் எதிர்வரும் 23ம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தல்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

வட மாகாணத்தில் நடைபெறும் உள்ளூராட்சி தேர்தல்களில் எப்பாடுபட்டாவது, வெற்றி பெற வேண்டும் என அரசாங்கம் கங்கணம் கட்டிக்கொண்டு செயற்படுகின்றது. ஜனநாயக வழிமுறைகளையும், தேர்தல் சட்டங்களையும் மீறாத வரைக்கும் அரசாங்கத்தின் இந்த எண்ணம் நியாயமானதாகும். ஆனால் வடக்கிலே இன்றைய தேர்தல் நடைமுறை ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துவிட்டுள்ளது.

இன்றைய அரசாங்கத்தின் ஆட்சியிலே தென்னிலங்கையில் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலுமே தேர்தல் விதி முறைகள் அப்பட்டமாக மீறப்பட்டதையும், வன்முறை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதையும் நாங்கள் அறிவோம். இத்தகைய செயற்பாடுகளில் அரசாங்க கட்சியும், எதிர்க்கட்சிகளும் சட்டங்களை மீறியிருந்தன.

ஆனால் வடக்கிலே இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு மாத்திரம் குறிவைத்து தாக்கப்படுவதை நாம் அவதானிக்க முடிகின்றது. கூட்டமைப்பின் தலைவர்களும், வேட்பாளர்களும், ஆதரவாளர்களும் மிகவும் பயங்கரமான சூழ்நிலைக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

வடக்கிலே வாழ்கின்ற தமிழ் வாக்காளர்கள் பாரிய அழுத்தங்களுக்கு முகங்கொடுக்கின்றனர். இராணுவம் அரசாங்க கட்சியின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்படுகின்றது. இராணுவ ஆட்சியின் கொடுரமான கரங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பை நோக்கி நீண்டுள்ளன.

இந்நிலையில் நடைபெறவிருக்கும் தேர்தல் நீதியானதும், சுதந்திரமானதும் ஆக நடைபெறுமா என்ற கேள்வி பெருத்தளவில் எழுந்துள்ளது. பயங்கரவாதத்தை அழித்து போரை முடிவுக்கு கொண்டுவந்துவிட்டோம் என்று பிரகடனப்படுத்தியுள்ள இன்றைய அரசாங்கத்தின் இலட்சனம் இதுதான் என்பது அம்பலத்திற்கு வந்துள்ளது.

யுத்தம் முடிந்துவிட்டது, இனப்பிரச்சினை தீர்விற்கு தடையாக இருந்த புலிகள் அழிந்துவிட்டார்கள். ஆகவே இனப்பிரச்சினைக்கு தீர்வை இந்த அரசாங்கம் வழங்கப்போகின்றது என தமிழ் மக்களுக்கு அறிவுரை வழங்கிவந்த இந்தியாவும், அமெரிக்காவும் தான் இதற்கு பதில் கூறவேண்டும். என்று மனோ கணேசன் கூறியுள்ளார்.

ஈழப் பிரச்சினையை சுருக்கிவிட்டார்களாம் - திருமாவின் ஆதங்கம்

இனப்படுகொலைக் குற்றவாளி கும்பலை அனைத்துலக நீதிமன்றம் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகளின் மாபெரும் கையொப்ப இயக்கம் தொடங்கும் நிகழ்ச்சி 12.07.2011 இன்று சென்னையில் தொடங்கியது.

இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இதனை தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு திருமாவளவன் பதில் அளித்தார்.

கேள்வி: ஈழத்தை ஆதரிக்கிற பல அமைப்புகள் தமிழகத்தில் இருக்கிறது. தனித் தனியாக போராடுவதைவிட கட்சியை மறந்து மற்ற மாநிலங்களைப் போல ஒற்றுமையோடு அனைவரும் போராடுகிற நிலை தமிழத்தில் ஏற்படுமா?

பதில்: அந்த முயற்சிகள் எல்லாம் எடுத்து நான் தோற்றுப்போன நிலையில்தான் இந்த முயற்சி எடுக்கிறோம். தமிழகத்தில் ஈழத்தை வெளிப்படையாக ஆதரிக்கிற கட்சிகள் மூன்றுதான். மதிமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள். இந்த மூன்று கட்சிகளும் சேர்ந்து ஒரு அணியை உருவாக்குவதற்கு என்று 2009 பாராளுமன்ற தேர்தலில் நான் போராடி பார்த்தேன். நெடுமாறன் அவர்களுடன் நான் இதைப்பற்றி பேசினேன்.

அன்று பாமகவும், மதிமுகவும் அதிமுகவை ஆதரித்து வந்தார்கள். என்னை திமுகவின் ஆதரவாளனாகவே பார்த்தார்கள். நான் அப்படி இருக்கவில்லை. திமுக அணியில் இருந்தபோதும் கூட, அவர்களோடு பயணம் செய்தேன். தமிழ்நாட்டில் திமுக எதிர்ப்பு, கருணாநிதியின் எதிர்ப்பு என்றே தமிழ்நாட்டில் ஈழப் பிரச்சனையை பார்க்கிறார்கள்.

இலங்கையை எதிர்ப்பதைவிட, சோனியா காந்தியை எதிர்ப்பதைவிட, ஈழத்துக்கு எதிரான சர்வதேச நாடுகளை அம்பலப்படுத்துவதைவிட தமிழ்நாட்டில் ஈழத்தை ஆதரிக்கக் கூடியவர்கள் வெறும் கலைஞர் கருணாநிதி எதிர்ப்பு என்கிற வகையில் இப்பிரச்சனையை சுருக்கி விட்டார்கள். இது ஒரு வெட்கக்கேடான, சாபக்கேடான நிலை.

கேள்வி: ஈழம் என்கிற ஒரு விஷயத்திற்காக இனி வரும் காலங்களிலாவது தமிழகத்தில் ஈழ ஆதரவாளர்கள் ஒன்று சேர வாய்ப்பு இருக்கிறதா?

பதில்: வைகோவோடு கைகோர்ப்பதற்கும், நெடுமாறன் அவர்களோடு கைகோப்பதற்கும், பாமகவோடு கைகோப்பதற்கு நான் என்றும் தயாராக இருக்கிறேன். எந்த ஒரு நிபந்தனைகளும் இல்லாமல் ஈழத்தை ஆதரிக்கிறவர்களோடு பயணம் செய்ய நான் தயார் என்றார் திருமாவளவன்.

இ.மி.சபைக்கு இவ்வருடம் 16 மில்லியன் நட்டம் - ஜோதிடம் கூறும் சம்பிக்க

இந்த வருடத்திற்குள் இலங்கை மின்சார சபைக்கு 16 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நட்டத்தை எதிர்பார்க்க முடியுமென மின் வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களாக இடம்பெற்ற மின்வெட்டு காரணமாக இந்த நட்டம் மேலும் அதிகரிக்கக் கூடுமென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர், மின்வெட்டு அமுல்படுத்தப்படாவிட்டாலும் அவசர நேரங்களில் மின் துண்டிக்கப்பட்டதாக தெரிவித்த அவர், நீண்ட நேர மின் துண்டிப்பு இல்லாததால் அது குறித்து மக்களுக்கு அறிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தற்போது மின் தடை ஏற்படுத்தப்படுவதில்லை எனவும் அவ்வாறு மின் தடை ஏற்படுத்தப்படுவதற்கான தேவை ஏற்பட்டால் அது குறித்து அறிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மரம் முறிந்து விழுதல், விலங்குகளின் செயற்பாடு, மின்பிரப்பாக்கிகள் பிரச்சினை உள்ளிட்டவைகளால் ஒரு நாளைக்கு அதிக தடவைகள் மின் துண்டிக்கப்பட வேண்டி ஏற்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாலை 6.30 தொடக்கம் இரவு 9.30 வரையான மூன்று மணித்தியாலங்கள் அதிகம் மின் செலவிடப்படுவதாகவும் அதன்போது மின்சாரத்தை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில், எவர் கேலிச் சித்திரம் வரைந்து தாக்குதல் நடத்தினாலும் எதிர்காலத்தில் மின் தடை ஏற்படுத்தப்பட மாட்டாதென அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

ஹாலிவுட் நடிகையுடன் சிம்ரன்

சுத்தமாக சினிமா வாய்ப்பே இல்லாவிட்டாலும், சினிமா சம்பந்தப்பட்ட பெரிய நிகழ்வுகளில் இருக்குமாறு பார்த்துக் கொள்கிறார் சிம்ரன்.

இப்படித்தான் சமீபத்தில் டொரண்டோவில் நடந்த சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் பங்கேற்றார். இவ்விழாவுக்கு தமிழகத்திலிருந்து போன ஒரே நடிகை சிம்ரன்தான்.

விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் பிரபல ஹாலிவுட் நடிகை ஹிலாரி ஸ்வாங் பங்கேற்றார். அப்போது அவருடன் அறிமுகம் ஏற்பட்டதாம் சிம்ரனுக்கு.

அப்போது ஹிலாரியும் சிம்ரனும் சிறிது நேரம் சந்தித்து உரையாடினார்கள். இருவரும் சேர்ந்து போட்டோவும் எடுத்துக் கொண்டனர்.

இச்சந்திப்பு குறித்து சிம்ரன் கூறும்போது, "ஹிலாரி இந்திய சினிமா, மற்றும் இங்குள்ள வித்தியாசமான கலாசரங்கள் பற்றி தெரிந்து கொள்ளுவதில் ஆர்வமாக இருக்கிறார். அவருக்கு இந்திய சினிமா என்பது பாலிவுட் மட்டுமல்ல, அதையும் தாண்டியது என்பதைப் புரிய வைத்தேன்.

உடனே இங்குள்ள பல்வேறு மொழி திரைப்படங்கள் பற்றியும் அறிந்து கொள்ள விரும்பினார். என்னுடன் தொடர்பில் இருப்பதாக கூறியுள்ளார்," என்றார்.Topics: simran, hilari swank, hollywood, ஹாலிவுட், ஹிலாரி ஸ்வாங்க், சிம்ரம் சந்திப்பு

டீஸல் விலை உயர்வைக் கண்டித்து டி ராஜேந்தர் ஆர்ப்பாட்டம்

சென்னை: பெட்ரோல், டீசல், சமையல்எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து டி ராஜேந்தரின் லட்சிய தி.மு.க. சார்பில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை எதிரில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

தென் சென்னை மாவட்ட லட்சிய தி.மு.க. செயலாளர் எம்.எம்.சீடுர். மதன் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்தார்.

லட்சிய தி.மு.க. தலைவர் டி. ராஜேந்தர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு விலை உயர்வுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினார். லட்சிய தி.மு.க.வை சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் டி. ராஜேந்தர் பேசுகையில், "மத்திய அரசு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை உயர்த்தி வருவதால் ஏழை, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கைக்கு மத்திய அரசுதான் பெட்ரோல் ஏற்றுமதி செய்கிறது. ஆனால் இலங்கையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 50 ரூபாய். ஆனால் இங்கு லிட்டருக்கு 67 ரூபாய் கட்டணம் நிர்ணயித்துள்ளனர்.

பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் 45 ரூபாய், பணக்கார நாடான அமெரிக்காவில் 50 ரூபாய், நமது நாட்டில்தான் அநியாயத்துக்கு விலை ஏற்றி உள்ளனர். பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை ரத்து செய்யவேண்டும்.

இலங்கைக்கு பெட்ரோல் ஏற்றுமதி செய்வதை நிறுத்த வேண்டும். இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்ற தமிழக அரசு தீர்மானத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்," என்றார் அவர்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில நிர்வாகிகள் ஏ. முரளி, எஸ். துரை, மேகநாதன், டி. வாசு, பி. கருணாநிதி, வி.என். கருணா, மகளிர் அணி செயலாளர் வசந்தி பாண்டியன், வட சென்னை மாவட்ட செயலாளர் கே.ஜே. சுரேஷ் உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.Topics: t rajendar, diesel, protest, டி ராஜேந்தர், டீசல், விலை உயர்வு, கண்டனம்

16 இயக்குனர்கள் நடிக்கும் ஞானி: இசை, 5 புதுமுகங்கள்

தமிழ் திரையுலகின் புதிய முயற்சியாக 16 இயக்குனர்கள் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்கின்றனர்.

தமிழ் திரையுலகில் இயக்குனர்கள் நடிப்பது புதிதன்று. ஆனால் தற்போது ஞானி என்ற படத்தில் 16 இயக்குனர்கள் சேர்ந்து நடிக்கின்றனர்.

16 இயக்குனர்கள் சரி, ஹீரோ யார் என்று தானே கேட்கிறீர்கள். அது வேறு யாருமன்று நம்ம மாயாண்டி குடும்பத்தார் படத்தில் நடித்த இயக்குனர் தருண் கோபி தான். ஹீரோயின் நடிகை ஸ்வேதா.

இயக்குனர்கள் எஸ்.எஸ்.ஸ்டன்லி, பிரபுசாலமன், தம்பி ராமய்யா, சரவண சுப்பையா, சிங்கம்புலி, ரவிமரியா, அரவிந்த்ராஜ், சித்ராலட்சுமணன், சசிமோகன், கேயார், செல்வபாரதி, பிரவின்காந்தி, சஞ்சய்ராம், ஆர்த்திகுமார் உள்ளிட்ட 15 பேர் நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கு இன்னொரு சிறப்பு அம்சமும் உண்டு. அது என்னவென்றால் இதற்கு பிரசாந்த், ராகவேந்திரா, ராபர்ட், இப்ராகிம், அய்யர் ஆகிய 5 புதுமுகங்கள் இசையமைக்கின்றனர். இதை ஒளிப்பதிவு செய்கிறார் மதியழகன்.

படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என்று பெரிய பொறுப்பை ஏற்றிருக்கிறார் ஆர்த்தி குமார். சுபாசினி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜே.எஸ்.குமார், எல்.சுரேஷ்குமார் ஆகியோர் படத்தை தயாரிக்கின்றனர்.

ஒரு பெரிய பட்டாளமே இருக்கின்றதே அப்படி என்ன கதை என்று நினைக்கிறீர்களா. வேறு என்ன கிராமம் தான். அண்ணனைக் கொன்றவர்களை தம்பி பழிக்கு பழி வாங்குகிறான்.

அண்ணன் முத்து, தம்பி முருகன். இருவரும் ஒரு மரக்கடைக்காரரிடம் வேலை செய்கின்றனர். ஒரு வழக்கில் எங்கே முத்து தங்களைக் காட்டிக் கொடுத்துவிடுவானோ என்று நினைத்து அவனை கடைக்காரரின் மைத்துனர்களும், தம்பியும் சேர்த்து தீர்த்துக் கட்டுகின்றனர். அவர்களை பழிக்குப் பழி வாங்குகிறான் முருகன். ஆனால் விதி அவனையும் பழிவாங்குகிறது.Topics: tamil cinema, director, kollywood, gnani, கோலிவுட், ஞானி, இயக்குனர்கள்

ஐட்டமா, வேண்டவே வேண்டாம்: பிரியங்கா சோப்ரா

தமிழில் பெரிய வாய்ப்புகள் இல்லாமல் போனாலும், டாப்ஸியின் கால்ஷீட் புத்தகம் நிரம்பி வழிகிறதாம்- எல்லாம் தெலுங்கில் வந்து குவியும் படங்களால்தான்.

டெல்லிக்காரப் பொண்ணான டாப்ஸி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என கலந்து கட்டி கலக்கி வருகிறார். தமிழில் அவர் நடித்த முதல் படமான ஆடுகளம், அவருக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தாலும், படம் பிரமாண்ட வெற்றியைப் பெறத் தவறியதால், ராசியில்லாத நாயகியாக அறியப்பட்டு விட்டார்.

இதனால் தமிழில் டாப்ஸிக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் வரவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் தற்போது டாப்ஸி, தெலுங்கில் படு சுறுசுறுப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார். மலையாளத்திலும் அவருக்கு வாய்ப்புகள் வருகிறதாம்.

தெலுங்கில் சத்தம் போடாமல் நான்கு படங்களை முடித்து விட்ட டாப்ஸிக்கு இப்போது மேலும் 2 புதிய படங்கள் வந்துள்ளன. ஒரு படத்தில் கோபிசந்த்துடன் இணைந்து நடிக்கிறார். இன்னொரு படத்தில் சுனிலுடன் இணைகிறார்.

இதில் சுனிலுடன் இணையும் படம், இந்தியில் வெற்றிகரமாக ஓடிய மாதவன், கங்கணா ரனவத் நடித்த தனு வெட்ஸ் மனு படத்தின் ரீ்மேக்காம்.

இது போக இந்தியிலும் அவருக்கு பட வாய்ப்பு வந்துள்ளதாம். டேவிட் தவன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கப் போகிறாராம் டாப்ஸி. இப்படத்தில் தெலுங்கு சூப்பர் ஹீரோக்களில் ஒருவரான சித்தார்த், 2 நாயகர்களில் ஒருவராக நடிக்கிறாராம்.

அப்புறம் என்ன, கொஞ்ச நாளைக்கு தமிழுக்கு டாப்ஸி டாட்டா காட்டுவார் என்பதில் சந்தேகமில்லை...!Topics: தபசி, ஆடுகளம், தெலுங்கு சினிமா, பாலிவுட், டாப்ஸி, taapsee, telugu cinema, aadukalam, bollywood

காஜல் அகர்வாலுடன் நடிக்க மறுத்த அபிஷேக் பச்சன்

என் படத்தில் காஜல் அகர்வால் வேண்டாம். வேறு யாராவது புது முகத்தை போடலாமே என்று கூறியுள்ளார் அபிஷேக் பச்சன்.

தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்னாத் தெலுங்கு மற்றும் இந்தியில் எடுக்கும் படம் தி பிசினஸ் மேன். தெலுங்கில் மகேஷ் பாபு கதாநாயகனாக நடிக்கிறார். அவருடன் ஜோடி சேர்கிறார் காஜல் அகர்வால்.

இந்தியில் அபிஷேக் பச்சன் தான் கதாநாயகன். தெலுங்கில் நாயகியாக நடிக்கும் காஜர் அகர்வாலையே இதற்கும் நாயகியாக்கிவிடலாம் என்று இயக்குனர் கூறியிருக்கிறார். அதற்கு அபிஷேக் பச்சன் காஜல் வேண்டாம், யாராவது புது முகத்தை போட்டால் நன்றாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.

காஜல் அகர்வால் ஏற்கனவே சிங்கம் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளதால் தான் அபிஷேக் வேண்டாம் என்றிருக்கிறார்.Topics: காஜல் அகர்வால், அபிஷேக் பச்சன், abhishek bachchan, kajal agarwal

சரத் பொன்சேகா மீதான வழக்கு நவம்பர் வரை ஒத்திவைப்பு

சரத் பொன்சேகா மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளர் சேனக டி சில்வாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கினை நவம்பர் 14ம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் போது இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்களை பணிக்கமர்த்திய குற்றச்சாட்டின் பேரிலேயே இவ்வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சரத் ​​பொன்சேகா சார்பாக ஆஜராகும் பிரதான சட்டத்தரணி நலின் லதுவஹெட்டி பிரிதொரு வழக்கிற்கு சென்றிருந்ததால் பிரதிவாதி சார்பில் ஆஜரான மற்றுமொரு சட்டத்தரணி வழக்கை பிரிதொரு தினத்தில் எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜயசுந்தர நவம்பர் 14ம் திகதிவரை விசாரணையை ஒத்திவைத்தார். மேலும் வழக்கு தொடர்பான அனைத்து சாட்சிகள் குறிப்பிட்ட நாளில் நீதிமன்றில் ஆஜராக வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

இ.பெ.கூ மேன்முறையீடு செய்ய அனுமதி

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் சுமார் 162 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் அதற்கான வட்டியுடன் சேர்த்து ஸ்டான்டர்ட் சார்டர்ட் வங்கிக்கு வழங்க வேண்டும் என லண்டன் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு மேன்முறையீடு செய்வதற்கான அனுமதியை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் பெற்றுள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், ஸ்டான்டர்ட் சார்டர்ட் வங்கிக்கு 162 மில்லியன் டொலர்கள் மற்றும் அதற்குரிய வட்டியையும் செலுத்தவேண்டும் என்று லண்டன் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது.

எரிபொருள் கொள்வனவு மற்றும் விலைகளை கட்டுப்படுத்தல் தொடர்பில் இலங்கை அரசாங்கமும் வெளிநாட்டு வங்கிகளும் செய்துகொண்ட ஹெட்ஜிங் உடன்படிக்கையின்படியே இந்த உத்தரவு நேற்றைய தினம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தேர்தல் வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய 44 பேர் கைது

65 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் இம்மாதம் 23ம் திகதி நடைபெறவுள்ள நிலையில் இதுவரையில் 44 தேர்தல் வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல் வன்முறைகளை கண்கானிக்கும் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இவற்றுள் 50% முறைப்பாடுகள் தேர்தல் சட்ட திட்டங்களை மீறியமை தொடர்பாக கிடைக்கப்பெற்றதாக தேர்தல்களுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ண தெரிவிக்கின்றார்.

மேலும், இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய 44 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் வடக்கில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் தேர்தல் வன்முறைச் சம்பவங்களால் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொள்வதற்கு மக்கள் அஞ்சுவதாகவும் வடக்கில் அரசியல் சுதந்திரத்தை நிலைநாட்டி நீதியானதும், நியாயமானதுமான தேர்தலை நடத்துவதற்கு வழிசமைத்துக் கொடுக்க வேண்டியது அரசின் கடமை என்றும் கபே அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்

65 உள்ளூராட்சி சபைகளுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பமானது. இந்தத் தேர்தலில் 20 அரசியல் கட்சிகள் மற்றும் 72 சுயேற்சைக் குழுக்களைச் சேர்ந்த 5,619 பேர் வேட்பாளர்களாக போட்டியிடுவதாக தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது.

திருக்கோவில் பிரதேச சபைக்கான தபால் மூலமான வாக்களிப்பு இன்று காலை திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஈ.பி.சமிந்த ஜெயசூரியா தலைமையில் நடைபெற்றது. இதன் போது தபால் மூல வாக்களிப்பில் பொலிசார் ஈடுபட்டனர்.

இதேவேளை கடந்த மாச் மாதம் நடைபெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தலில் இப்பிரதேச சபைக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரணில் - பான் கீ மூன் சந்திப்பு சம்பிரதாயபூர்வமானது

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான் கீ மூனுக்கும் இடையே அண்மையில் இடம்பெற்ற சந்திப்பானது சம்பிரதாயபூர்வமானது என கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பதவிக்கு பான் கீ மூன் இரண்டாவது தடைவையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு வாழ்த்து தெரிவிக்கும் முகமாகவே இந்த சந்திப்பு இடம்பெற்றதாகவும் திஸ்ஸ அத்தநாயக்க இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது தெரிவித்தார்.

இருப்பினும் இந்த சந்திப்பின் போது தருஸ்மன் அறிக்கை, இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டார். மேலும் மனித உரிமை மீறல், யுத்த குற்ற விசாரனைகள் குறித்தும் பாங் கீ மூன் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எடுத்துரைத்துள்ளதாகவும் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டார்.

`ஒரு மழை நான்கு சாரல்' படத்தின் கதை.?

Tuesday, Jul 12, 2011புதிதாக திரைக்கு வர இருக்கும் படம் `ஒரு மழை நான்கு சாரல்'. தலைப்பே கவிதைத் தனமாக இருக்கிறதே, இப்படத்தின் கதை எப்படி என்று இயக்குனர் ஆனந்திடம் கேட்டோம். அதற்கு அவர் பதில் அளித்ததாவது;

"வாழ்க்கையில் சோகமே அறியாத இரண்டு பேர். வாழ்க்கையை போராட்டமாகவே எதிர்கொண்ட மற்ற இரண்டு பேர். இந்த நான்கு பேரும் நட்பு என்ற நேர்கோட்டில் இணைகிறார்கள். ஒரு நண்பனின் வெற்றிக்காக மற்ற மூவரும் போராடுகிறார்கள்.

இந்த போராட்டத்துக்கு தடையாக அமைகிறது ஒரு நண்பனின் காதல். இந்த தடையைத் தாண்டி நண்பர்கள் வென்றார்களா? காதல் ஜோடி என்னவானது? என்பதே இப்படத்தின் கதை'' என்றார்.

நண்பர்களாக வரும் ரவி, சுதர்சன், கணா, சதீஷ் நால்வருமே புதுமுகங்கள். நாயகிகள் அனகா, ரம்யா இருவரும் ஏற்கனவே `வர்மம்' என்ற படத்தில் நாயகிகளாக அறிமுகமானவர்கள். இயக்குனர் ஆனந்த்தும் படத்தில் முக்கியமான கதாபாத்திரமேற்று நடித்திருக்கிறார்.

நடிகை அனுஷ்காவின் ஒப்பனையாளர் திருநங்கையா.?

Tuesday, Jul 12, 2011சில நடிகைகள் பெயருக்கு சமூக சேவை செய்கிறேன் என பெருமை பீற்றிக் கொள்வார்கள். சிலர் அப்படி சமூக சேவை செய்தாலும், அதை வெளியில் தெரியாதபடி பார்த்துக் கொள்வர். அப்படிப்பட்ட நடிகைகள் வரிசையில் அனுஷ்காவையும் சேர்த்துக் கொள்ளலாம்.

அனுஷ்கா தனக்கு மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டாக நிக்கி என்ற பெண்ணை பணிக்கமர்த்தி இருக்கிறார். இவர் உண்மையில் ஒரு திருநங்கையாம். `வானம்' படத்தில் அனுஷ்காவுக்கு உதவும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திருநங்கையும் இந்த நிக்கிதான்.

திருநங்கைகளைக் கண்டாலே விரட்டி அடிக்கும் சமூகத்தில், அனுஷ்காவின் இந்த செயல்பாடு பாரட்டத் தக்கது மட்டுமின்றி, மற்றவர்களும் திருநங்கைகளுக்கு பணி வாய்ப்பளிக்க முன்வர வேண்டும் என்ற நல்லெண்ணத்தையும் உருவாக்கும்.