ஜிந்தகி நா மிலேகி தோபாரா படத்தில் தனது கதாபாத்திரம் பற்றி கேட்ட பிறகே கத்ரீனா ஓகே சொன்னார். கதை கேட்காமல் ஓகே சொல்ல அவர் என்ன முட்டாளா? என்று அப்படத்தின் இயக்குனர் ஜோயா அக்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜோயா அக்தரின் படம் ஜிந்தகி நா மிலேகி தோபாரா. இதில் ஹ்ரித்திக் ரோஷன், அபய் தியோல் மற்றும் பர்ஹான் அக்தர் நடித்துள்ளனர். கல்கி கொச்லின் மற்றும் கத்ரீனா கைப் ஆகியோர் கதாநாயகிகள்.
இந்த படத்தில் நடித்துள்ள கத்ரீனாவுக்கும், கல்கிக்கும் லடாய் என்று தகவல்கள் வந்தன. ஆனால் அதை கல்கி திட்டவட்டமாக மறுத்துள்ளார். இந்நிலையில் படத்தில் கத்ரீனாவுக்கு முக்கியத்துவம் இல்லாத சிறிய கதாபாத்திரம் என்று பேசப்படுகின்றது.
இது குறித்து இயக்குனர் ஜோயா அக்தரிடம் கேட்டதற்கு, அவர் கூறியதாவது,
கத்ரீனா கைப் என்ன முட்டாள் என்று நினைக்கிறீர்களா? அவர் ஸ்கிரிப்டை படித்துவிட்டு தான் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரமாக இருந்திருந்தால் அவர் ஏன் ஒப்புக் கொண்டிருக்க வேண்டும். அவர் இந்த படத்தில் நடித்து, தற்போது படத்தை விளம்பரமும் செய்கிறார் என்றால், அவர் சந்தோஷமாக இருக்கிறார் என்று தான் நான் நினைக்கின்றேன்.
கத்ரீனா கைப் அவர் வாழ்க்கையை தான் விரும்பியபடி வாழ்பவர். இந்தியே தெரியாமல் பாலிவுட்டில் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆகியுள்ளார். இதில் இருந்தே அவர் திறமைசாலி என்று தெரியவில்லையா. அவர் திறமையை நான் மதிக்கிறேன் என்றார்.Topics: katrina kaif, zindagi na milegi dobara, கத்ரீனா கைப், ஜோயா அக்தர்
0 comments:
Post a Comment