Tuesday, July 12, 2011

தரம்குறைந்த பெற்றோல் விவகாரத்தை ஆராய பாராளுமன்ற தேர்வுக் குழு தேவை

நாட்டில் தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் தரம்குறைந்த பெற்றோல் விநியோக விடயத்தை அடுத்து கனியவளத்துறை அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவர ஐக்கிய தேசிய கட்சி ஏற்கனவே தீர்மானித்திருந்தது.

எனினும் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ள அக்கட்சி இது குறித்து ஆராய பாராளுமன்ற தேர்வுக் குழுவொன்றை அமைக்குமாறு இன்று ஆலோசனை வழங்கியுள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய திஸ்ஸ அத்தநாயக்க,

பெற்றோல் இறக்குமதி செய்வதற்காக அதிகாரம் வழங்கிய அனைத்து அதிகாரிகளும் இதற்குப் பொறுப்புச் சொல்ல வேண்டும். ஏற்பட்ட இழப்புக்களுக்கு நட்டஈடு வழங்க வேண்டும். இது குறித்து பாராளுமன்ற தேர்வுக் குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.

மேலும், நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்தால் அரசாங்கம் அதனை தோற்கடித்து இச்செயலை மூடி மறைத்துவிடும், தேர்வுக் குழுவொன்றை ஏற்படுத்தினால் அரசாங்கத்திற்கும் அதனை எதிர்க்க முடியாது. இந்தக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் ஆராய வேண்டும். இதற்கு ஆலோசனை வழங்கியவர்களை ஆராய வேண்டும். பொறுப்பு யாருக்கு வழங்கப்பட்டது என தேர்வுக் குழு ஊடாக விசாரணை செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

0 comments:

Post a Comment