Tuesday, July 12, 2011

வடக்கு செல்ல இராஜதந்திரிகளுக்கு இனி தடை இல்லை

வட பகுதிக்கு விஜயம் செய்ய வெளிநாட்டு இராஜதந்திரிகள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தன்னார்வ தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள் இனிமேல் அனுமதி கோர வேண்டிய அவசியமில்லை என பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுவரை காலமும் வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வடக்கு செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சிடம் அனுமதி கோர வேண்டிய நிலை இருந்தது.

எனினும், இன்றுமுதல் இந்த நடைமுறையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயண அனுமதி ஆவணமின்றி வெளிநாட்டு ராஜதந்திரிகள் வடக்கிற்கு செல்ல முடியும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட நபர்கள் இராணுவ நிலைகள், இராணுவ உத்தியோகத்தர்களை சந்திக்க விரும்பினால் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமென பாதுகாப்பு அமைச்சின் இணையத்தள செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment