This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Friday, July 1, 2011

வந்தாச்சு கேன்சர் பிரச்சனை இல்லாத சிகரெட்

July 2, 2011 | no commentsபுகை பிடிப்ப வர்கள், புகையை சுவாசிப்பவர்களை நோயில் இருந்து காப்பாற்றும் வகை யில் இ&சிகரெட் விற்பனைக்கு வந்துள் ளது. குர்கானை சேர்ந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ‘ஜாய் 510’ என்ற அதன் விலை 1,650 ரூபாய். கடந்த ஆண்டில் ரிலீசான ஹாலி வுட் படம் ‘தி டூரிஸ்ட்’. ஜான் டெப் அதில் ஹீரோ. ஏஞ்சலினா ஜூலி ஹீரோயின். ரயிலில் எதிரெதிரே அமர்ந்து பயணம் செய்யும் காட்சி. அதில் சிகரெட்டை இழுத்து புகை விட்டுக் கொண்டே இருப்பார் டெப். முகத்தில் புகை படர்ந்தாலும் அமைதி காப்பார் ஏஞ்சலினா.

‘‘நான் புகை பிடிப்பது உன்னை பாதிக்கவில்லையா… என்று கேட்கும் டெப், இது எலக்டிரானிக் சிகரெட், பாதிக்காது’’ என்பார். ஏஞ்சலினா ஆச்சரியமாக பார்க்க, ‘‘நம்பவில்லையா..’’ என்றபடி அதன் தீ நாக்கை கையில் தேய்த்தபடி… இது எல்இடி லைட் என்று கூறுவார்.

ஆம். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஆண்டே விற்பனை தொடங்கி விட்ட இ&சிகரெட், இந்தி யாவில் இப்போதுதான் அறிமுகமாகி உள்ளது. குர்கானை சேர்ந்த இணைய தள நிறுவனமான விண்ட்பைட் டாட் இன் இதை சீனாவில் இருந்து இறக்குமதி செய்து ‘ஜாய் 510’ என்ற பெயரில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.
பவுண்டன் பேனா வடிவில் இருக்கும் அதில், அழுத்தி இங்க் நிரப்ப இருக்கும் பகுதியும் உண்டு. பேனாவில் இங்க், இ&சிகரெட்டில் நிகோடின் திரவம். ஆம். இந்த நிகோடின்தான் சிகரெட் பிடிப்பவர்களை திருப்திபடுத்துகிறது. திரவத்தை சூடாக்க பேட்டரி, முனையில் எல்இடி விளக்கு.

‘ஜாய் 510’ சிகரெட்டின் ஒரு விசையை அழுத்தினால் பேட்டரி இயங்கி திரவம் சூடாகி புகை வரும். சிகரெட் முனையில் தீ நாக்கு போலவே விளக்கு எரியும். பிறகு வாயில் வைத்து இழுத்து வட்ட வட்டமாக புகை விடலாம். அந்த புகையால் யாருக்கும் பகையில்லை. இந்த இ&சிகரெட் சிலமுறை பயன்படுத்தி தூக்கி எறிவது ஸி300, நீண்ட காலம் ரீசார்ஜ் செய்து பயன்படுத்துவது ஸி1,650 என 2 விலையில் கிடைக்கிறது. சிகரெட் பழக்கத்தை விட முடியாதவர்கள் இதற்கு மாறலாம், கேன்சரின் ஆபத்து இல்லாமல்!

கோவில் புதையல் 50 ஆயிரம் கோடி

July 2, 2011 | no commentsபத்மநாபசாமி கோவில் ரகசிய அறைகளில் உள்ள நகைகளின் மதிப்பு ரூ.50 ஆயிரம் கோடிக்கு மேல் என மதிப்பிடப்பட்டுள்ளன. இவற்றில் 10 கிலோ எடையுடன் 18 அடி நீள தங்க மாலை ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்றது பத்மநாபசாமி கோவில். இது ஒரு வைணவத் திருத்தலம்.

திருவாங்கூர் மன்னர் பரம்பரைக்குச் சொந்தமான அறக்கட்டளையின் கட்டுப்பாட்டில் இந்த கோவில் இருந்து வருகிறது. இந்த கோவில் கருவறைக்கு அருகே 6 ரகசிய பாதாள அறைகள் நீண்ட காலமாக பூட்டப்பட்டு இருந்தன.

அந்த பாதாள அறைகளை திறந்து, உள்ளே இருக்கும் நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொக்கிஷங்கள் விவரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, உச்சநீதி மன்றம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது.

இதற்காக ஓய்வு பெற்ற கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருவர் உள்பட 7 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர், 6 ரகசிய அறைகளுக்கும் ஏ,பி,சி,டி,இ,எப் என பெயரிட்டு ஒவ்வொன்றாக திறந்து நகைகளின் விவரங்கள் குறித்து கணக்கெடுத்து வருகிறார்கள்.

ஏ மற்றும் பி அறைகளில் நகைகள் மதிப்பீடு செய்யும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த அறைகளில் மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்த, தங்க மணிகள், தங்கத்திலான சாமி சிலைகள், தங்க கயிறு, தங்க கிரீடங்கள், தங்க மாலைகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டன.

கேரள பட்ஜெட்டை விட அதிகம்

அவற்றில் விலைமதிக்க முடியாத அபூர்வமான வைரம், வைடூரியம் உள்பட நவரத்தின கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. அனைத்து அறைகளில் உள்ள தங்கம், வைரம், வைடூரியம், ரத்தினம் ஆகியவற்றின் மதிப்பு ரூ.50 ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது.

கேரள மாநில ஆண்டு பட்ஜெட்டின் வருவாய் அளவே ரூ.35 ஆயிரம் கோடிதான். இந்த நிலையில் பத்மநாபசாமி கோவிலில் உள்ள நகைகளின் மதிப்பு ரூ.50 ஆயிரம் கோடியை தாண்டி இருப்பது அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது.

அதிலும் குறிப்பாக ஏ அறையில் இருந்த சுமார் 10 கிலோ எடைகொண்ட 18 அடி நீளமுள்ள தங்கச் சங்கிலி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அது பத்மநாபசுவாமிக்கு அணிவிக்க மன்னரால் வழங்கப்பட்டது என தெரிகிறது.

ஒரு பாதாள அறையின் உள்பகுதியில் 150 ஆண்டுகளுக்கு மேல் திறக்கப்படாத மற்றொரு சிறிய ரகசிய அறை திறக்கப்பட்டது. அந்த அறையில் விஷ வாயு மற்றும் விஷப் பூச்சிகள் இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டதால், முதலில் ஆக்சிஜன் வாயு செலுத்தப்பட்டது.

1200 தங்கச் சங்கிலிகள்

அதன்பின்னர் மதிப்பீட்டு குழுவினர், தீயணைப்பு படை வீரர்கள் உதவியுடன் முகக்கவசம் அணிந்து உள்ளே சென்றனர். அங்கும் குவியல் குவியலாக நகைகள்தான் இருந்தன. 1200-க்கு மேற்பட்ட ‘சரப்பொலி’ என்று அழைக்கப்படும் தங்கச் சங்கிலிகள் ஒரு அறையில் இருந்தன. அவற்றில் ‘அவல்’ என்று அழைக்கப்படும் ரத்தினக் கற்கள் பதிக்கப்பட்டு இருந்தன.

அவை திருவாங்கூர் மன்னர்கள், ராணிகள் அணிந்த நகைகளாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. 3 மணி மகுடங்கள், தங்கத் தாம்பாளங்களில் தங்க நாணயங்களும் இருந்தன. ‘சொர்ண தண்டு’ என்று அழைக்கப்படும் தங்க செங்கோல், நெக்லஸ் மற்றும் ஏராளமான பதக்கங்களும் குவிந்து இருந்தன.

ஜொலிக்கும் வைரங்கள்

பத்மநாபசுவாமி கோவிலில் உள்ள ரகசிய அறைகளில் அதிக அளவிலான தங்கக் குடங்கள் உள்ளன. அவற்றிற்குள் தங்க க்காசுகள் குவிந்திருந்தன. அவை அனைத்தும் புதிதாக செய்யப்பட்டது போல பொலிவுடன் காணப்பட்டன.

அதேபோல பெரிய ரத்தின கற்கள் பதித்த அரியாசனம், மன்னர்கள் அணியும் கிரீடங்கள், நவரத்தின கற்கள் பதித்த தங்க கிரீடங்கள், பத்மநாபசாமி சிலை என ஒவ்வொன்றும் ஒவ்வொரு கலை வண்ணத்தில் பளிச்சிட்டன.

நெப்போலியன் கால நாணயங்கள்

இவற்றில் பிரஞ்சுப் பேரரசன் நெப்போலியன் காலத்து நாணயங்கள் ஏராளமாக இருந்தன. அதே போல வெனிஸ் நாணயங்கள் மட்டும் 70 கிலோவுக்கும் அதிகமாக இருந்தன.

எண்ணி முடிக்க ஒரு வாரம் ஆகலாம்

சந்தன மண்டபம் என்று அழைக்கப்படும் பகுதியில் உள்ள ‘ஏ’ அறையில் அனைத்தும் கணக்கிடப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டுவிட்டன. அனைத்து அறைகளிலும் உள்ள நகைகளை கணக்கிட்டு மதிப்பீடு செய்ய இன்னும் ஒரு வாரம் ஆகலாம் என்று கருதப்படுகிறது. இவற்றின் மதிப்பையும் சேர்த்தால் இன்னும் பல ஆயிரம் கோடியைத் தாண்டும் என்று தெரிகிறது.

கண்டுபிடிக்கப்பட்ட தங்க நகைக் குவியல்கள் மன்னர் காலத்து நகைகள் என்பதால், அதன் தொழில்நுட்பம், வடிவமைப்பு டிசைன்கள் ஆகியவற்றை பார்ப்பதற்கு பொது மக்களும், தங்க நகை வியாபாரிகளும், நகை வடிவமைப்பாளர்களும் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.

விலை மதிப்பற்ற நகைகள் இருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதால், பத்பநாபசாமி கோவிலுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

ஹிந்தி சிங்கத்தை சீண்டிப்பார்க்கும் தமிழ் சிங்கம் தயாரிப்பாளர்

July 2, 2011 | no comments

இந்தியில் தயாராகியுள்ள சிங்கம் படத்தின் ரீமேக்கை வெளியிடத் தடை கோரி தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். சூர்யா, அனுஷ்கா ஜோடியாக நடித்த படம் சிங்கம். இதனை சூர்யாவின் உறவினர் ஞானவேல்ராஜா தயாரித்தார். இப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. அஜய்தேவ்கன், காஜல் அகர்வால் நடித்துள்ளனர்.

வருகிற 22-ந்தேதி இப்படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்இந்தப் படத்துக்கு தடை கோரி தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், “சிங்கம் படத்தை இந்தியில் தயாரிக்கும் உரிமை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. அப்போது படத்தை விற்கும்போது 25 சதவீதம் பங்கு வழங்க வேண்டும் என்று ஒப்பந்தம் போட்டோம். தற்போது இப்படம் ரூ. 80 கோடிக்கு விற்கப்பட்டு உள்ளது. அதில் 25 சதவீதம் பங்காக ரூ. 12.5 கோடி தர வேண்டும்.

ஆனால் அப்பணத்தை தராமல் படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடக்கிறது. எனவே படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்,” என்று கூறியுள்ளார். ஞானவேல்ராஜா சார்பில் வக்கீல்கள் மனோகர், சகாதேவன் ஆகியோர் ஆஜரானார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி ராமசுப்பிரமணியன் இவ்வழக்கில் பதில் அளிக்கும்படி ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

இலங்கை கிரிக்கெட் வாரியம் அவுட்

July 2, 2011 | no commentsஇலங்கை கிரிக்கெட் வாரியத்தை திடீரென கூண்டோடு கலைத்து விட்டனர். உருப்படியில்லாத ஒரு கிரிக்கெட் வாரியம் இலங்கை கிரிக்கெட் வாரியம். நிர்வாகத் திறமையின்மை, ஊழல், அரசியல் குறுக்கீடுகள் என குண்டக்க மண்டக்க செயல்பட்டு வரும் அமைப்புதான் இலங்கை கிரிக்கெட் வாரியம். இலங்கை அரசியல்வாதிகளின், குறிப்பாக ராஜபக்சே குடும்பத்தினரின் ஆதிக்கம் இங்கு அதிகம்.

சமீபத்தில் ஹாங்காங்கில் நடந்த ஐசிசி வருடாந்திர மாநாட்டில் தேசிய கிரிக்கெட் வாரியங்களில் அரசியல்வாதிகளுக்கு இடமில்லை என்ற அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது இலங்கை கிரிக்கெட் வாரியத்தை அந்த நாட்டு அரசு கலைத்து விட்டது. விரைவில் புதிய கமிட்டி அமைக்கப்படும் என்று இலங்கை விளையாட்டுத்துறை செய்தித் தொடர்பாளர் ஹர்ஷா அபயக்கூன் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசின் கட்டுப்பாட்டுக்கு தற்போது கிரிக்கெட் வாரியம் போய்விட்டதால் ஐசிசியால், இலங்கை கிரிக்கெட் வாரியம் சஸ்பெண்ட் செய்யப்படும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கடந்த 7 ஆண்டுகளாக அரசியல்வாதிகளுக்கு ஆதரவானவர்களை உடைய இடைக்கால கமிட்டிதான் நிர்வகித்து வருகிறது.

2012-க்குள் சுதந்திரமான தேர்தல்களை கட்டாயம் நடத்த வேண்டும் என்பதற்காக விதிமுறைகளை திருத்துவதற்கு இந்த வாரம் நடைபெற்ற ஐசிசியின் ஆண்டுக்கூட்டத்தில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.

ஊழல் குற்றச்சாட்டு காரணமாக தேசிய டெஸ்ட் கிரிக்கெட்டின் முன்னாள் பந்துவீச்சாளர் சோமச்சந்திர டி சில்வா தலைமையிலான நிர்வாகம் தற்போது பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் வாரியம் தற்போது ஒரு பெரும் கடனாளி அமைப்பாகும். கிட்டத்தட்ட 15 மில்லியன் டாலருக்கு மேல் அது கடன் வைத்துள்ளது. இந்தக் கடனை அடைக்க அது இந்திய கிரிக்கெட் வாரியத்தைத்தான் நம்பியுள்ளது. எல்லாம் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிகளை நடத்தியதால் வந்த வினை. உலக அளவில் தனது நாடு பாதுகாப்பாகவும் பந்தாவாகவும், இருப்பதாக காட்டிக் கொள்ள பெரும் பணத்தை வாரியிறைக்க வைத்து புதிய ஸ்டேடியங்கள் கட்டவும், பழைய ஸ்டேடியங்களை பிரமாண்டமாக புதுப்பிக்கவும் கட்டாயப்படுத்தினார் ராஜபக்சே. விளைவு, இப்போது தலைக்கு மேல் போய் விட்டது கிரிக்கெட் வாரியத்தின் கடன்.

ஹம்பந்தோட்டா அருகே புதிய கிரிக்கெட் ஸ்டேடியத்தைக் கட்டி அதற்கு ராஜபக்சே பெயரைத்தான் வைத்துள்ளனர். இதுதான் பெரும் கடன் சுமையை ஏற்றி விட்டதாம். இந்தக் கடனை சமாளிக்க மானியம் தருமாறு அரசிடம் கேட்டபோது அரசு அதைக் கண்டு கொள்ளவே இல்லை. காரியம் முடிந்ததும் கையைக் கழுவி விட்டது இலங்கை அரசு. இப்போது வாரியத்தையும் கலைத்து விட்டது.

Shreya Saran mobbed at Rowthiram sets

Shreya Saran, who has been hitting headlines for all wrong reasons of late, is in the news, which might disappoint her fans. The Sivaji actress, who is busy filming her upcoming Tamil movie Rowthiram, was mobbed by crowd during the shooting of the film in Pondicherry.

The 29-year-old actress was recently in Pondicherry for Rowthiram shoots. Sources say that Shreya Saran's presence at the coastal city spread like wildfire and within an hour, people gathered at the shooting location to get a glimpse of the actress.

But the situation turned out of control, when a group of people surrounded Shreya Saran and Jeeva for autographs. During the course, several miscreants reportedly tried to misbehave with her. As a result, the film unit seek police protection to complete the shooting.Topics: shreya saran, jeeva, rowthiram

ரம்லத்துக்கு இன்னும் சொத்துக்களை மாற்றவில்லை? -விவாகரத்தில் சிக்கல்

மனைவி ரம்லத்துக்கு தருவதாகக் கூறிய சொத்துக்களை இன்னும் பிரபுதேவா மாற்றிக் கொடுக்காததாலேயே வழக்கு தாமதமாவதாக தெரியவந்துள்ளது.

சென்னை குடும்ப நல கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்த பிரபுதேவா-ரம்லத் விவாகரத்து வழக்கில் இருவருமே நேற்று ஆஜராகவில்லை. இதற்குப் பின்னணியில் பரபரப்பான காரணங்கள் சொல்லப்படுகின்றன.

பிரபுதேவாவும், நயன்தாராவும் கடந்த வருடம் இறுதியில் திருமணத்துக்கு தயாரானதும் ரம்லத்துதான் கோர்ட்டுக்கு போனார். நயன்தாரா கணவரை பிரிக்க முயற்சிப்பதாகவும் பிரபுதேவாவை மீட்டு தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

பின்னர் பிரபுதேவா- ரம்லத் இடையே சமரசம் ஏற்பட்டது. இருவரும் மனம் ஒத்து பிரிவதாக மனுதாக்கல் செய்தனர்.

அப்போது கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீடு, அண்ணா நகரில் உள்ள வீடு மற்றும் ஐதராபாத்தில் உள்ள பிளாட்கள் போன்றவற்றை மனைவி மற்றும் மகன்களுக்கு வழங்குவதாக பிரபுதேவா உறுதி அளித்தார். ஜூன் 30-ந்தேதிக்குள் பத்திரப்பதிவு செய்யப்படும் என்று கூறப்பட்டது.

ஆனால் இன்னும் சொத்து பத்திரங்கள் ரம்லத் வசம் வரவில்லை என்று கூறப்படுகிறது.

வருகிற 10-ந்தேதி வழக்கு விசாரணையின்போது ரம்லத் மற்றும் குழந்தைகள் பெயரில் ஏற்கனவே குறிப்பிட்டப்படி சொத்துக்கள் பத்திரப்பதிவு செய்யப்பட்டு விட்டதா? என்ற தகவல் பிரபுதேவா தரப்பில் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகே இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும்.Topics: ரம்லத், பிரபுதேவா, விவாகரத்து, ramlath, prabhu deva, divorce

மலையாளப் படத்தில் நடிக்கும் 'சுப்பிரமணியபுரம்' சசிகுமார்- 5 நாயகிகள்

சுப்ரமணியபுரம் புகழ் இயக்குனர், நடிகர் சசிகுமார் மாஸ்டர்ஸ் என்ற படத்தின் மூலம் மாலிவுட் எனப்படும் மலையாளத் திரையுலகில் அறிமுகமாகிறார்.

மலையாள இயக்குனர் ஜான் அந்தோணியின் அடுத்த படம் மாஸ்டர்ஸ். இரண்டு உயிர் நண்பர்கள் பற்றிய கதை. இதில் நடிகர் பிரித்விராஜ் மற்றும் இயக்குனர் சசிகுமார் ஆகியோர் நண்பர்களாக நடிக்கின்றனர். தமிழில் சுப்ரமணியபுரம், பசங்க மற்றும் நாடோடிகள் படங்கள் கொடுத்த சசிகுமார் மாஸ்டர்ஸ் மூலம் மலையாளத்தில் காலடி எடுத்து வைக்கிறார்.

கல்லூரியில் ஒன்றாக ஒரே வகுப்பில் படிக்கும் 2 நண்பர்கள் படிப்பிற்கு பிறகு எவ்வாறு வெவ்வேறு துறைகளில் பணிக்கு செல்கின்றனர் என்பது தான் கதை. கதை பிடித்திருந்ததால் தான் இந்த படத்தில் நடிக்க உடனே சம்மதித்ததாக சசிகுமார் கூறியுள்ளார்.

இந்த படத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் இதில் 5 கதாநாயகிகள் நடிக்கின்றனர். அதில் பியா பாஜ்பாய் மற்றும் அனன்யா அடக்கம். மற்ற 3 நாயகிகள் தேர்வு விரைவில் முடியும். மாஸ்டர்ஸ் படபிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் கோட்டயத்தில் துவங்குகிறது.Topics: சசிகுமார், மாஸ்டர்ஸ், sasikumar, mollywood, prithviraj, masters, பிரித்விராஜ்

இந்தி 'சிங்க'த்தை தடை செய்யக் கோரி வழக்கு

மனைவி ரம்லத்துக்கு தருவதாகக் கூறிய சொத்துக்களை இன்னும் பிரபுதேவா மாற்றிக் கொடுக்காததாலேயே வழக்கு தாமதமாவதாக தெரியவந்துள்ளது.

சென்னை குடும்ப நல கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்த பிரபுதேவா-ரம்லத் விவாகரத்து வழக்கில் இருவருமே நேற்று ஆஜராகவில்லை. இதற்குப் பின்னணியில் பரபரப்பான காரணங்கள் சொல்லப்படுகின்றன.

பிரபுதேவாவும், நயன்தாராவும் கடந்த வருடம் இறுதியில் திருமணத்துக்கு தயாரானதும் ரம்லத்துதான் கோர்ட்டுக்கு போனார். நயன்தாரா கணவரை பிரிக்க முயற்சிப்பதாகவும் பிரபுதேவாவை மீட்டு தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

பின்னர் பிரபுதேவா- ரம்லத் இடையே சமரசம் ஏற்பட்டது. இருவரும் மனம் ஒத்து பிரிவதாக மனுதாக்கல் செய்தனர்.

அப்போது கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீடு, அண்ணா நகரில் உள்ள வீடு மற்றும் ஐதராபாத்தில் உள்ள பிளாட்கள் போன்றவற்றை மனைவி மற்றும் மகன்களுக்கு வழங்குவதாக பிரபுதேவா உறுதி அளித்தார். ஜூன் 30-ந்தேதிக்குள் பத்திரப்பதிவு செய்யப்படும் என்று கூறப்பட்டது.

ஆனால் இன்னும் சொத்து பத்திரங்கள் ரம்லத் வசம் வரவில்லை என்று கூறப்படுகிறது.

வருகிற 10-ந்தேதி வழக்கு விசாரணையின்போது ரம்லத் மற்றும் குழந்தைகள் பெயரில் ஏற்கனவே குறிப்பிட்டப்படி சொத்துக்கள் பத்திரப்பதிவு செய்யப்பட்டு விட்டதா? என்ற தகவல் பிரபுதேவா தரப்பில் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகே இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும்.Topics: ரம்லத், பிரபுதேவா, விவாகரத்து, ramlath, prabhu deva, divorce

இந்தி டிவி தயாரிப்பாளர் கொலை- கன்னட நடிகைக்கு 3 ஆண்டு சிறை- காதலருக்கு 10 வருடம்

மும்பை: டிவி தயாரிப்பாளர் நீரஜ் குரோவர் கொலை வழக்கில் கன்னட நடிகை மரியா சூசைராஜுக்கு 3 ஆண்டும், அவரது காதலர் எமிலி ஜெரோமுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும் இன்று விதிக்கப்பட்டது. மரியா ஏற்கனவே சிறைக் காலத்தை அனுபவித்து விட்டதால் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

மும்பையைச் சேர்ந்த டிவி தயாரிப்பாளர் குரோவர். அப்போது வளர்ந்து வரும் இளம் நடிகையாக திகழ்ந்தவர் மரியா சூசைராஜ். இந்தித் திரையுலகில் முக்கிய இடத்தைப் பிடிக்க மும்முரமாக இருந்தவர். இவருக்கும் குரோவருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டு நட்பானது. இதை மரியாவின் காதலர் எமிலி ஜெரோம் விரும்பவில்லை.

இந்த நிலையில், 2008ம் ஆண்டு மே 27ம் தேதி இரவு மும்பை புறநகர்ப் பகுதியான மலட் பகுதியில் உள்ள மரியாவின் வீட்டுக்கு சென்றார் ஜெரோம். அங்கு தங்கியிருந்த குரோமுக்கும் அவருக்கும் இடையே மோதல் மூண்டது. பின்னர் ஜெரோம், குரோவை கத்தியால் குத்தி படுகொலை செய்தார்.

இதையடுத்து மரியா அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவரும், ஜெரோமும் சேர்ந்து குரோவரின் உடலை துண்டு துண்டாக வெட்டினர். கிட்டத்தட்ட 300 துண்டுகளாக உடலை குதறி எடுத்த இருவரும், அதை தானே அருகே ஒரு காட்டில் போட்டு விட்டனர்.

இந்த வழக்கில் இருவரும் பின்னர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பான விசாரணை மும்பை கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்த விசாரணையில் ஜெரோம் கொலையாளி என்றும், அவருக்கு உடந்தையாக இருந்து ஆதாரங்களை அழித்ததாக மரியா குற்றவாளி என்றும் மும்பை கோர்ட் தீர்ப்பளித்திருந்தது. இன்று தண்டனை விவரம் வெளியிடப்பட்டது.

அதன்படி ஜெரோமுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மரியாவுக்கு 3 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டது. மரியா 3 ஆண்டுகளை ஏற்கனவே சிறையில் கழித்து விட்டதால் அவரை விடுதலை செய்ய கோர்ட் உத்தரவிட்டது.

தண்டனை விவரத்தைக் கேட்டதும் குரோவரின் பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அதேபோல அரசு வக்கீல் ஆர்.வி.கினியும் கடும் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கினி கூறுகையில், இந்தத் தீர்ப்பு பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. இதுகுறித்து மேல் முறையீடு செய்யப்படும் என்றார்.

குரோவரின் தந்தை அமர்நாத் குரோவர் கூறுகையில் இதுதான் தீர்ப்பா?. மிக அதிர்ச்சியாக உள்ளது. கண்ணுக்கு கண், பல்லுக்குப் பல் என இந்தக் கொலையாளிகளுக்கு தீர்ப்பளிக்க வேண்டும். எனது மகனைக் கொன்ற மரியாவும், ஜெரோமும் சாக வேண்டும். அவர்களுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும். இந்த தீர்ப்பு பெரும் ஏமாற்றமளிக்கிறது என்றார் கோபத்துடன்.

குரோவர் கொலை வழக்கில் ஜெரோமுக்கும், மரியாவுக்கும் மிகச் சாதாரணமான தண்டனை வழங்கப்பட்டுள்ளது அனைவரையும் வியப்பிலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. அதிலும், மரியாவை விடுதலை செய்திருப்பது அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.Topics: maria susairaj, murder case, மரியா சூசைராஜ், எமிலி ஜெரோம், emile jerome

Prabhu Deva's divorce verdict postponed

Prabhu Deva and Ramalatha's verdict has been postponed to July 10th, 2011. The family court postponed the case, as the estranged couple failed to turn up for the hearing yesterday.

The lawyers of both the parties submitted letters to the court for their absence. While Prabhu Deva's lawyer claimed that the choreographer-turned-director was not in town, Ramalatha's lawyer said that her son's illness forced her to gave a miss to the hearing.

However, the court adjourned the case till July,10. It may be recalled that Prabhu Deva-Ramalatha approached the court to dissolve their marriage in December 2010. In their petition, they have claimed that due to their irreconcilable differences, they have decided to part ways.Topics: prabhu deva, nayantara, ramalatha

Gautham Menon opens up on Vinnaithaandi Varuvaayaa 2

Ace director Gautham Menon has opened up on Vinnaithaandi Varuvaayaa 2 (VTV) to clarify the rumours pertaining to its sequel. The director has said that nothing has been confirmed yet.

Recently, a few websites claimed that Gautham Menon has planned a sequel for his 2010 blockbuster VTV and has approached Silambarasan to star in the second instalment of the film as well. Reacting to those reports, the filmmaker stated that he is planning for it but nothing has been finalized yet.

He further added that the reports on VTV 2 commencing in June 2012 and Madrasapattinam actress Amy Jackson being roped in are false. However, Gautham Menon admitted that he is in talks with Silambarasan for a project, which is expected to take-off in 2012. The director also agreed that they discussed about the sequel but they are yet to decided on it.

He finally concluded that he loves to work with Simbu again.Topics: gautham menon, vinnaithaandi varuvaayaa, silambarasan, amy jackson

Surya turning young for Maatraan

We have reported yesterday that perfectionist Surya will start his next project Maatraan after his brother's marriage. Now the latest news is that the shoot might be delayed, as director KV Anand has told him to work on his fitness for the initial shoot, as the character demands it in the film.

Sources say that the project was expected to launch in the second week of July but now it looks like the movie launch will be delayed, as the director is very particular about Surya's looks. The Ko director, who met the Ghajini star during the shooting of 7 Aum Arivu, felt that the actor should tone his body to fit the role. The makers of the film had planned to start the filming in Alaska with a song sequence.

However, Surya is yet to start his fitness regime, as he is busy in Karthi's marriage preparations. Meanwhile, KV Anand has completed the pre-production work and has returned from Nigeria with Harris Jayaraj after churning out some tunes for the film. Maatran also features Kajal Aggarwal, Prakash Raj, Vivek and others in the cast. It is produced by Kalpathi S. Aghoram.Topics: surya, kv anand, maatraan, kajal aggarwal, karthi