சுப்ரமணியபுரம் புகழ் இயக்குனர், நடிகர் சசிகுமார் மாஸ்டர்ஸ் என்ற படத்தின் மூலம் மாலிவுட் எனப்படும் மலையாளத் திரையுலகில் அறிமுகமாகிறார்.
மலையாள இயக்குனர் ஜான் அந்தோணியின் அடுத்த படம் மாஸ்டர்ஸ். இரண்டு உயிர் நண்பர்கள் பற்றிய கதை. இதில் நடிகர் பிரித்விராஜ் மற்றும் இயக்குனர் சசிகுமார் ஆகியோர் நண்பர்களாக நடிக்கின்றனர். தமிழில் சுப்ரமணியபுரம், பசங்க மற்றும் நாடோடிகள் படங்கள் கொடுத்த சசிகுமார் மாஸ்டர்ஸ் மூலம் மலையாளத்தில் காலடி எடுத்து வைக்கிறார்.
கல்லூரியில் ஒன்றாக ஒரே வகுப்பில் படிக்கும் 2 நண்பர்கள் படிப்பிற்கு பிறகு எவ்வாறு வெவ்வேறு துறைகளில் பணிக்கு செல்கின்றனர் என்பது தான் கதை. கதை பிடித்திருந்ததால் தான் இந்த படத்தில் நடிக்க உடனே சம்மதித்ததாக சசிகுமார் கூறியுள்ளார்.
இந்த படத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் இதில் 5 கதாநாயகிகள் நடிக்கின்றனர். அதில் பியா பாஜ்பாய் மற்றும் அனன்யா அடக்கம். மற்ற 3 நாயகிகள் தேர்வு விரைவில் முடியும். மாஸ்டர்ஸ் படபிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் கோட்டயத்தில் துவங்குகிறது.Topics: சசிகுமார், மாஸ்டர்ஸ், sasikumar, mollywood, prithviraj, masters, பிரித்விராஜ்
0 comments:
Post a Comment