This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Monday, July 25, 2011

ஜான் ஆபிரகாமிற்கு தோள் கொடுத்த தீபிகா

பிபாஷாவை பிரிந்த சோகத்தில் இருக்கும் ஜான் ஆபிரகாமிற்கு தனது சோகத்தை பகிர்ந்து கொள்ளும் தோழியாக கிடைத்துள்ளார் தீபிகா படுகோன்.

நீண்ட காலமாக ஒன்றாக இருந்த நடிகர் ஜான் ஆபிரகாமும், நடிகை பிபாஷா பாசுவும் அன்மையில் பிரிந்துவிட்டனர். தனது சோகத்தைப் பகிர்ந்துகொள்ள யாராவது கிடைக்க மாட்டார்களா என்று நினைத்த ஜான் ஆபிரகாமுக்கு நான் இருக்கிறேன் என்று நட்புக்கரம் நீட்டியுள்ளார் தீபிகா.

தீபிகாவும், ஜானும் தேசிபாய்ஸ் என்ற படத்தில் முதன்முதலாக ஒன்றாக சேர்ந்து நடித்துள்ளனர். இந்த படத்தின் ஷூட்டிங் லண்டனில் நடந்தது. அப்போது தான் இருவரும் நண்பர்களாகியுள்ளனர். தானும் பிபாஷாவும் பிரிந்தது பற்றி தீபிகாவிடம் கூறும் அளவுக்கு நெருக்கமாகிவிட்டார்கள்.

ஷூட்டிங் இல்லாத நேரத்தில் ஒன்றாக காபி குடிக்கப் போவது, வெளி இடங்களுக்குப் போவது என்று இருவரும் ஒன்றாக நேரத்தை கழித்துள்ளனர். ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரே சிரிப்பும், பேச்சுமாய் இருந்த இவர்களைப் பார்த்து அங்கிருந்தவர்கள் எல்லாம் ஆச்சரியப்பட்டனராம்.

நெருக்கமாக இருந்த ஒருவரைப் பிரியும்போது ஏற்படும் வேதனை என்னவென்று தீபிகாவுக்கும் தெரியும். அந்த உணர்வு தான் இவர்களை நண்பர்களாக்கியுள்ளது.

தீபிகாவும், ரன்பீர் கபூரும் காதலித்தனர். பின்பு ஆளுக்கொரு வழியைப் பார்த்து சென்றவிட்டனர். அந்த சோகத்தை தாண்டி வந்த தீபிகா ஜானுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

தீபிகாவுக்கு முன்பு ஜான் ஆபிரகாமுக்கு 'ஆறுதல் கூறியவர்' சிரிப்பழகி ஜெனிலியா என்பது குறிப்பிடத்தக்கது.


Topics: deepika padukone, john abraham, ஜான் ஆபிரகாம், தீபிகா படுகோன்

ரஜினி எனக்கு அப்பா மாதிரி: நடிகை மானு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எனக்கு அப்பா மாதிரி என்று அவரை சிங்கப்பூரில் கவனித்துக் கொண்ட நடிகை மானு தெரிவித்துள்ளார்.

இது குறித்து நடிகை மானு கூறியதாவது, சிங்கப்பூர் சினிமா தயாரிப்பாளர் ஜெயகுமார் நடிகர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர். அவர் என்னை அழைத்து ரஜினி சிகிச்சைக்காக சிங்கப்பூர் வருவதாகவும், அவர் திரும்பிச் செல்லும் வரையில் உடனிருந்து நல்லபடியாக கவனித்துக் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.

நானும், சிங்கப்பூர் நடிகர் புரவலன், தமிழ்செல்வன் மற்றும் பிருத்விராஜ் ஆகியோரும் ரஜினியைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை ஏற்றுக்கொண்டோம். அவர் சிகிச்சை பெற்ற மருத்துவமனை அருகேயே அவருக்கு வீடு பார்த்துக்கொடுத்தேன். அங்கு ரஜினி அவரது மனைவி லதா, மகள் மற்றும் மருமகன் தங்கியிருந்தனர்.

அவர் மருத்துவரீதியாக 3 வாரங்களிலேயே குணமடைந்துவிட்டார். முன்புபோல் சகநிலைக்குத் திரும்ப அவர் சில பயிற்சிகளை மேற்கொண்டார்.

அவர் தினமும் கொஞ்ச தூரம் வாக்கிங் போவார். அப்போது அவருக்கு பாதுகாப்பாக இருக்க ஆட்களை நியமித்தேன். ஆனால் தனக்கு பாதுகாப்பாளர்கள் வேண்டாம் என்று கூறிவிட்டார். இருப்பினும் அவருக்குத் தெரியாமலேயே ஆட்களை அனுப்பினேன். அதைக் கண்டிபிடித்து நிறுத்தச் சொல்லிவிட்டார்.

ஒரு நாள் இட்லி, வடை கேட்பார், மறு நாள் மசாலா தோசை கேட்பார். சில படங்களின் டிவிடிகளைப் போட்டு பார்த்து ரசித்தார். தனது ஆன்மீக அனுபவங்கள் மற்றும் யோகாவின் மகத்துவம் பற்றி அடிக்கடி பேசுவார்.

ஆகஸ்ட் 2-ம் தேதி வரையாவது இருங்களேன் என்று கேட்டோம். ஆனால் அவர் நான் சீக்கிரம் கிளம்ப வேண்டும், எனது நாட்டையும், ரசிகர்களையும் மிஸ் செய்கிறேன் என்று கூறினார்.

அவர் சென்னை புறப்படும் முன்பு எங்களை அழைத்து நன்றி தெரிவித்தார். எங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

ஒரு பெரிய நடிகரை கவனித்துக் கொள்கிறோம் என்றே இல்லை. அவர் எனக்கு அப்பா மாதிரி. அவர் குடும்பத்தினரும் என்னை அவர்கள் வீட்டுப் பெண் போல் தான் நடத்தினர்.

ரஜினி மீது ஏன் பல லட்சம் பேர் பாசமாக இருக்கின்றனர் என்பது எனக்கு அன்று தான் புரிந்தது. அவர் குடும்பத்தை நேசிக்கும் சிறந்த மனிதர் என்றார்.Topics: rajini, maanu, மானு, ரஜினி

தென் கொரியாவில் 50 திரையரங்குகளில் வெளியாகிறது ரஜினி - ஐஸ்வர்யா ராய் நடித்த எந்திரன்.

ஷங்கர் இயக்கிய எந்திரன் படம் கடந்த ஆண்டு இந்தியா மற்றும் உலகின் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியானது. வசூலில் இந்தப் படம் புதிய சாதனை படைத்தது. இந்தியாவிலேயே அதிக வசூலைக் குவித்த படம் எந்திரன்தான்.

இப்போது இந்தப் படத்தை, இதுவரை வெளியாகாத நாடுகளில் மறுவெளியீடு செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது ஈராஸ் நிறுவனம். வெளிநாடுகளில் விநியோகிக்கும் உரிமையை ஈராஸ்தான் பெற்றுள்ளது.

முதல்கட்டமாக தென் கொரியாவில் மட்டும் 50 திரையரங்குகளில் எந்திரனை வெளியிடப் போவதாக ஈராஸ் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் குமார் அகுஜா கூறுகையில், "இதுவரை நாங்கள் கால் பதிக்காத புதிய பகுதிகளில் இந்தியப் படங்களை வெளியிடும் வாய்ப்பைப் பெற்றுள்ளோம். இந்தியப் படங்களே வெளியாகாத தைவானில் முதல் முறையாக ஷாரூக்கான் நடித்த 'ரா ஒன்' படத்தை வெளியிடுகிறோம்.

அடுத்து தென் கொரியாவில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் படத்தை 50 திரையரங்குகளில் வெளியிடுகிறோம். எந்திரனின் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு பதிப்புகள் இந்த அரங்குகளில் வெளியாகும்," என்றார்.

தென் கொரிய மக்களுக்கு ரஜினி படம் புதிதல்ல. அங்கு ஏற்கெனவே ரஜினி நடித்த சந்திரமுகி மற்றும் சிவாஜி தி பாஸ் படங்கள் வெளியாகி நல்ல வசூலைப் பெற்றன.Topics: enthiran, ரஜினி, எந்திரன், தென் கொரியா, ஈராஸ், south korea, eros

ஈசிஆர் ரோட்டில் லாரி-கார் மோதல்: இயக்குனர் மகள் உள்பட 3 பேர் பலி

திருப்போரூர்: கிழக்குக் கடற்கரை சாலை சூளேரிக்காடு என்ற இடத்தில் காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் பிரபல மலையாள இயக்குனர் ஜோசியின் மகள் உள்பட 3 பேர் பலியாகினர்.

கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா (24). பிரபல மலையாள இயக்குனர் ஜோசியின் மகள். அதே ஊரைச் சேர்ந்தவர் ராதிகா (24). திருச்சூரைச் சேர்ந்தவர் அர்ஜுன் (24). இவர்கள் 3 பேருமே சாப்ட்வேர் என்ஜினீயர்கள்.

சென்னை ஊரப்பாக்கத்தில் தங்கி மறைமலைநகர் அருகே இருக்கும் மகேந்திரா சிட்டியில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தனர்.

நேற்று விடுமுறை என்பதால் மகாபலிபுரத்திற்கு சுற்றுலா செல்ல முடிவு எடுத்தனர். இதையடுத்து அர்ஜுனின் காரில் ஐஸ்வர்யா, ராதிகா, அவர்கள் உடன் வேலைப்பார்க்கும் ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த யேசுதாஸ்(24), அஸ்வின்(27) ஆகிய 5 பேர் மகாபலிபுரத்திற்கு சென்றனர்.

நாளைக் கொண்டாட்டமாகக் கழித்துவிட்டு இரவு ஊரப்பாக்கம் திரும்பினர். காரை அர்ஜுன் ஓட்டினார். அவர்கள் கார் இரவு 11 மணியளவில் கிழக்குகடற்கரை சாலை சூளேரிக்காடு என்ற இடத்தில் செல்கையில் மணல் எடுக்க மகாபலிபுரத்திற்கு சென்று கொண்டிருந்த லாரி அவர்கள் கார் மீது நேருக்கு நேர் மோதியது.

இதில் அர்ஜுன், ஐஸ்வர்யா, ராதிகா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பலத்த காயமடைந்த யேசுதாஸ், அஸ்வினை சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர்.

அந்த லாரி டிரைவர் தப்பியோடிவிட்டார். இந்த விபத்து குறித்து குறித்து மகாபலிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Topics: accident, mahabalipuram, ecr, பலி, விபத்து