Monday, July 25, 2011

ரஜினி எனக்கு அப்பா மாதிரி: நடிகை மானு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எனக்கு அப்பா மாதிரி என்று அவரை சிங்கப்பூரில் கவனித்துக் கொண்ட நடிகை மானு தெரிவித்துள்ளார்.

இது குறித்து நடிகை மானு கூறியதாவது, சிங்கப்பூர் சினிமா தயாரிப்பாளர் ஜெயகுமார் நடிகர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர். அவர் என்னை அழைத்து ரஜினி சிகிச்சைக்காக சிங்கப்பூர் வருவதாகவும், அவர் திரும்பிச் செல்லும் வரையில் உடனிருந்து நல்லபடியாக கவனித்துக் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.

நானும், சிங்கப்பூர் நடிகர் புரவலன், தமிழ்செல்வன் மற்றும் பிருத்விராஜ் ஆகியோரும் ரஜினியைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை ஏற்றுக்கொண்டோம். அவர் சிகிச்சை பெற்ற மருத்துவமனை அருகேயே அவருக்கு வீடு பார்த்துக்கொடுத்தேன். அங்கு ரஜினி அவரது மனைவி லதா, மகள் மற்றும் மருமகன் தங்கியிருந்தனர்.

அவர் மருத்துவரீதியாக 3 வாரங்களிலேயே குணமடைந்துவிட்டார். முன்புபோல் சகநிலைக்குத் திரும்ப அவர் சில பயிற்சிகளை மேற்கொண்டார்.

அவர் தினமும் கொஞ்ச தூரம் வாக்கிங் போவார். அப்போது அவருக்கு பாதுகாப்பாக இருக்க ஆட்களை நியமித்தேன். ஆனால் தனக்கு பாதுகாப்பாளர்கள் வேண்டாம் என்று கூறிவிட்டார். இருப்பினும் அவருக்குத் தெரியாமலேயே ஆட்களை அனுப்பினேன். அதைக் கண்டிபிடித்து நிறுத்தச் சொல்லிவிட்டார்.

ஒரு நாள் இட்லி, வடை கேட்பார், மறு நாள் மசாலா தோசை கேட்பார். சில படங்களின் டிவிடிகளைப் போட்டு பார்த்து ரசித்தார். தனது ஆன்மீக அனுபவங்கள் மற்றும் யோகாவின் மகத்துவம் பற்றி அடிக்கடி பேசுவார்.

ஆகஸ்ட் 2-ம் தேதி வரையாவது இருங்களேன் என்று கேட்டோம். ஆனால் அவர் நான் சீக்கிரம் கிளம்ப வேண்டும், எனது நாட்டையும், ரசிகர்களையும் மிஸ் செய்கிறேன் என்று கூறினார்.

அவர் சென்னை புறப்படும் முன்பு எங்களை அழைத்து நன்றி தெரிவித்தார். எங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

ஒரு பெரிய நடிகரை கவனித்துக் கொள்கிறோம் என்றே இல்லை. அவர் எனக்கு அப்பா மாதிரி. அவர் குடும்பத்தினரும் என்னை அவர்கள் வீட்டுப் பெண் போல் தான் நடத்தினர்.

ரஜினி மீது ஏன் பல லட்சம் பேர் பாசமாக இருக்கின்றனர் என்பது எனக்கு அன்று தான் புரிந்தது. அவர் குடும்பத்தை நேசிக்கும் சிறந்த மனிதர் என்றார்.Topics: rajini, maanu, மானு, ரஜினி

0 comments:

Post a Comment