திருப்போரூர்: கிழக்குக் கடற்கரை சாலை சூளேரிக்காடு என்ற இடத்தில் காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் பிரபல மலையாள இயக்குனர் ஜோசியின் மகள் உள்பட 3 பேர் பலியாகினர்.
கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா (24). பிரபல மலையாள இயக்குனர் ஜோசியின் மகள். அதே ஊரைச் சேர்ந்தவர் ராதிகா (24). திருச்சூரைச் சேர்ந்தவர் அர்ஜுன் (24). இவர்கள் 3 பேருமே சாப்ட்வேர் என்ஜினீயர்கள்.
சென்னை ஊரப்பாக்கத்தில் தங்கி மறைமலைநகர் அருகே இருக்கும் மகேந்திரா சிட்டியில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தனர்.
நேற்று விடுமுறை என்பதால் மகாபலிபுரத்திற்கு சுற்றுலா செல்ல முடிவு எடுத்தனர். இதையடுத்து அர்ஜுனின் காரில் ஐஸ்வர்யா, ராதிகா, அவர்கள் உடன் வேலைப்பார்க்கும் ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த யேசுதாஸ்(24), அஸ்வின்(27) ஆகிய 5 பேர் மகாபலிபுரத்திற்கு சென்றனர்.
நாளைக் கொண்டாட்டமாகக் கழித்துவிட்டு இரவு ஊரப்பாக்கம் திரும்பினர். காரை அர்ஜுன் ஓட்டினார். அவர்கள் கார் இரவு 11 மணியளவில் கிழக்குகடற்கரை சாலை சூளேரிக்காடு என்ற இடத்தில் செல்கையில் மணல் எடுக்க மகாபலிபுரத்திற்கு சென்று கொண்டிருந்த லாரி அவர்கள் கார் மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் அர்ஜுன், ஐஸ்வர்யா, ராதிகா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பலத்த காயமடைந்த யேசுதாஸ், அஸ்வினை சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர்.
அந்த லாரி டிரைவர் தப்பியோடிவிட்டார். இந்த விபத்து குறித்து குறித்து மகாபலிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Topics: accident, mahabalipuram, ecr, பலி, விபத்து
0 comments:
Post a Comment