This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Monday, July 18, 2011

கோப்பாய் தமிழை வித்தியாலயம் திறப்பு

கோப்பாய் தமிழை வித்தியாலயத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் சற்றுமுன்பு திறந்து வைத்துள்ளார்.

இப்பாடசாலையை அமைப்பதற்காக 8.3 மில்லியன் ரூபா செலவாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த செலவினை ஊவா மாகாண சபை ஏற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இப்பாடசாலை கட்டடத்தொகுதிகளின் வடிவமைப்புக்கு இலங்கை இராணுவ பொறியியல் பிரிவுனரும் உதவி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வித்தியாலயத்தினை திறந்து வைப்பதற்கு முன்னர் ஜனாதிபதி வித்தியாலய பிள்ளையார் கோவில் வழிபாடுகளில் கலந்துகொண்டுள்ளார்.

மணல் கொள்ளையடித்து பணம் சம்பாதிக்கும் டக்கிலஸ் வெளிவந்த அம்பலம் ..!

மணல் கொள்ளையடித்து பணம் சம்பாதிக்கும் டக்கிலஸ் வெளிவந்த அம்பலம் ..! மணல் ஏற்றி 12லட்சம் ரூபாவை மாதம் கொள்ளையடிக்கும் டக்கிலஸ் வெளிவந்த அம்பலம் ..! மகிந்தாவின் மடிக்குள் இருந்து தமிழனத்தை அடக்கி ஆண்டு வரும்தமிழின துரோகி டக்கிலஸ் தேவானந்தா அவர்தம் ஆயுத குழுதிருட்டு தனமாக மணல் ஏற்றி மாதம் பன்னிரெண்டு லட்சம் ரூபாவைகொள்ளையடித்து வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சீறும் சிறுத்தையும் புரட்சியாளருமான  மாண்பிமிகு பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்கள் தெரிவித்துள்ளார் . டக்கிலஸ் தேவானந்தாவின் ஆயுத அடக்குமுறை குழுவினால்பல பேருந்துகள் வாங்கப்பட்டு போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்த பட்டுள்ளது . இவ்வளவு பணமும் டக்க்ளிசுக்கு எங்கிருந்து வந்தது ..? அபிவிருத்தி என்ற பெயரில் மக்களின் பணத்தை கொள்ளையடித்து சுகம் கண்டு வரும்தேவானந்தாவின் மக்கள் நலன் இதுதான் . மக்களே இவர்களை தமிழின  வரலாறு மன்னிக்காது .இவர்களைற்கான தண்டனையை  இந்த தேர்தலில் இவர்களை மீண்டும் ஓட ஓட விரட்டுவதன் ஊடாகத்தான்எங்கள் தமிழினத்தின் ஒற்றுமையினை ஒருங்கிணைந்த பலத்தினை மீனும் சிங்கள பேரின வாதத்திற்கும்  உலகிற்கும் நாம் நிருபிக்க முடியும் ..! விரைந்து வாரீர் வீட்டுக்கு வாக்களிப்பீர்  ..!

ஆயுத முனையில் இரண்டு மில்லியன் நகைகளை வங்கியில் துணிகர கொள்ளை ..!

ஆயுத முனையில் இரண்டு மில்லியன் நகைகளை வங்கியில் துணிகர கொள்ளை ..! இன்று காலை கொஸ்கொட வங்கியில் இரண்டு மில்லியன் ரூபாய்க்கு அடகுவைத்த நகைகளை மீட்டு  கொண்டுவெளியே வந்த போது  அங்கு வந்த ஆயுத முனை முகமூடி கொள்ளையர்கள்அந்த நகைகளை அபகரித்து கொண்டு தப்பி சென்றுவிட்டனர் . இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்ட வேளை திருடர்களை மடக்கி பிடிக்க முனைந்த  வங்கி காவலர்தாக்க பட்டு மருத்துவ மனையில்  அனுமதிக்க பட்டுள்ளார் . திருடர்களை கண்டு பிடிக்கும் பணியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர் ..!

25மில்லியன் மக்கள் பணத்தை தேர்தலுக்கு செலவிட்ட மகிந்தா -அதிர்ச்சி தகவல் ..!

25மில்லியன் மக்கள் பணத்தை தேர்தலுக்கு செலவிட்ட மகிந்தா -அதிர்ச்சி தகவல் ..! ஆளும் ஐக்கிய சுதந்திர முன்னணியினர் நடைபெறும்  உள்ளுராட்சி தேர்தலுக்குவடக்கு மாகாண சபைக்கு  சொந்தமான 25 மில்லியன்  ரூபாவினை செலவிட்டுள்ளதாகசுரேஷ் பிரேமசந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார் . மக்களிற்கு ஒதுக்க பட்ட மக்கள் பணத்தினை  தவறான முறையிலும் தேர்தல் விதி முறைகளிற்குஎதிராக மகிந்தா அரசு பயன் படுத்தியுள்ளது . தமக்கு வடக்கு மக்கள் வாக்குகளை வழங்க வேண்டும் என்பதற்காக போரினால் பாதிக்க பட்ட மக்களுக்கு இலவசம் என்ற போர்வையில்  கைத்தறி, தையல் இயந்திரங்கள், ஜெனரேட்டர்கள், sarongs முதலியன இலஞ்சம் போல், கொடுக்கப்பட்டுள்ளன என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரமே சந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார் . குறித்த முறைகேட்டு தேர்தல் விதி முறை மீறலை தேர்தல் கண் காணிப்பாளர்களிடம்தெரிவித்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது ..!

கைவிடப்பட்ட இந்தியா வீட்டு திட்டம் மீண்டு தூசு தட்டல் -

கைவிடப்பட்ட இந்தியா வீட்டு திட்டம் மீண்டு தூசு தட்டல் - இந்தியாவின் நிதி உதவியுடன் கட்டி தரப்பட இருந்த வட கிழக்கு மக்களிற்கான  ஐம்பதாயிரம் வீடுகள்புனரமைப்பு  பணிகள் கடந்த எழு மாதங்களாக தடை பட்டிருந்தது . தற்போது அவை மீள யாழ் பகுதியில் ஆரம்பிக்க பட்டுள்ளதாகயாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார் .

புகையிரதம் மோதி பிரித்தானியாவில் ஒருவர் பலி -

புகையிரதம் மோதி பிரித்தானியாவில் ஒருவர் பலி - இன்று மாலை .5.30மணியளவில் பிரித்தானியாவின் விம்பிள்டன் புகையிரத நிலையத்தில்நின்ற பயணி ஒருவர்  புகையிரதத்தில் மோதுண்டு பலியாகியுள்ளார் . இந்த சம்பவம் எவ்வாறு நிகழ்ந்தது என குற்ற தடுப்பு பிரிவினர்விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் . குறித்த விபத்து கொலை சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் யாராவது இருந்தால்கீழ் வரும் தொலை பேசிக்கு அழைத்து தெரிவிக்குமாறு காவல்துறையினர் மக்களிடம் வேண்டுகோள்விடுத்துள்ளனர் ..!

காரைதீவு கண்ணகி இந்து வித்தியாலய மாணவி சாதனை

அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற தமிழ் மொழித் தினப் போட்டியில் காரைதீவு கண்ணகி இந்து வித்தியாலய மாணவி ஆர்.சனூஜா பேச்சுப் போட்டியில் பிரிவு 01 இல் தங்கப் பதக்கத்தினை வென்றார்.

இச்சாதனையானது பாடசாலைக்கு வரலாற்றிலே ஒரு மைல் கல்லென அதிபர், ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

இம்மாணவியைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று பாடசாலை அதிபர் எஸ்.யோகராஜா தலைமையில் நடைபெற்றது. இதன் போது காரைதீவு கோட்டக் கல்வி அதிகாரி எஸ்.வேதாசலம், கல்முனை வலயக் கல்வி அலுவலக தமிழ் மொழிப்பாட சிரேஷ்ட ஆசிரிய ஆலோசகர் கலாநிதி. ஆர்.வரதராஜன் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டு மாணவியைப் பாராட்டி கௌரவித்தனர்.

சிறைக்கைதிகளின் உண்ணாவிரதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஆயர்

வவுனியா சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போரட்டத்தில் ஈடுபட்ட தமிழ் அரசியல் கைதிகள் தங்களது தொடர்ச்சியான உண்ணாவிரப் போராட்டத்தை நேற்று மாலை முடிவுக்கு கொண்டுவந்துள்ளனர்.

மன்னார் மறை மாவட்ட வணகத்துக்குரிய ஆயர் இராயப்பு ஜோசப் வழங்கிய உறுதிமொழியையடுத்தே இந்த உண்ணாவிரதம் முடிவுக்கு வந்துள்ளது.

சிறைச்சாலைகள் ஆணையாளர் மேஜர் ஜெனரல் வீ.ஆர்.டி.சில்வா மற்றும் மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் அடிகளார் ஆகியோர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட கைதிகளை நேற்று மாலை நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

இதன்போது, நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிளுடன் வவுனியா சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் பிரச்சினை தொடர்பில் பேச்சு நடத்தி விரைவில் தீர்வுபெற்று தருவதாக மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் வழங்கிய உறுதிமொழியையடுத்து உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது.

இதேவேளை, வவுனியா வைத்தியாசாலையிலுள்ள அரசியல் கைதியையும் ஆயர் இராயப்பு ஜோசப் அடிகளார் பார்வையிட்டார்.

ஊடகவியலாளர் ஷோன் ஹோரே மரணம்

நீயூஸ் ஒப் த வேல்ட் பத்திரிகை நிறுவனம் தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக்கேக்கிறது என கூறியவர்களுள் ஒருவரான நீயூஸ் ஒப் த வேல்ட் ஷோன் ஹோரே உயிரிழந்துள்ளார்.

கிட்லர் மகிந்தா தமிழ் மக்களை ஏமாற்ற யாழ் பயணம் ..!

கிட்லர் மகிந்தா தமிழ் மக்களை ஏமாற்ற யாழ் பயணம் ..!கிட்லர் மகிந்தா தமிழ் மக்களை ஏமாற்ற யாழ் பயணம் ..!இலங்கை கிட்லர் மகிந்தா இன்று யாழ் கையிட்ஸ்  நோக்கி பயனமாகியுள்ளார் .அங்கு பூநகரியை அண்மித்த பகுதியில் உள்ள வைத்திய சாலையை திறந்து வைப்பதுடன்கிளிநொச்சி யாழ் சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடு படுவார்  என ஜனாதி பதி பேச்சாளர்தெரிவித்துள்ளார் ..!

Nilwala கங்கையில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு ..!

Nilwala கங்கையில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு ..!இன்று Nilwala கங்கையில் இருந்து நாப்பது வயதுடைய நபர் ஒருவரின் சடலத்தினைபோலீசார் மீட்டுள்ளனர் .இதுவரை குறித்த நபர் யார் என அடையாளம் காணப்படவில்லை .காவல்துறை விசாரணைகள் தொடர்கின்றன ..!

குளத்தில் நீராடிய பெண்ணை காணவில்லை ..!

குளத்தில் நீராடிய பெண்ணை காணவில்லை ..!மின்னேறிய குளத்தில் நீராடிய பெண் ஒருவர் காணமல் போய் உள்ளார் .பதுளையை சேர்ந்த குறித்த பெண்ணே காணமல் போய் உள்ளார் .இவரை நீரில் மூழ்கி பலியாகி இருக்கலாம் என அஞ்ச படுகின்றது ..!

தமிழினியை தொடர்ந்து தடுத்துவைக்க நீதிபதி ரஸ்மி சிங்கபுலி உத்தரவு ..!

கிட்லர் மகிந்தா தமிழ் மக்களை ஏமாற்ற யாழ் பயணம் ..!கிட்லர் மகிந்தா தமிழ் மக்களை ஏமாற்ற யாழ் பயணம் ..!இலங்கை கிட்லர் மகிந்தா இன்று யாழ் கையிட்ஸ்  நோக்கி பயனமாகியுள்ளார் .அங்கு பூநகரியை அண்மித்த பகுதியில் உள்ள வைத்திய சாலையை திறந்து வைப்பதுடன்கிளிநொச்சி யாழ் சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடு படுவார்  என ஜனாதி பதி பேச்சாளர்தெரிவித்துள்ளார் ..!

யாழில் இருந்து கையிட்சுக்கு டகிலஸ்.பசில் பேருந்து ஓட்டம் .

யாழில் இருந்து கையிட்சுக்கு டகிலஸ்.பசில் பேருந்து ஓட்டம் .யாழ் நகர் பகுதியில் இருந்து கையிட்சுக்கு புதிய பேருந்து சேவைகள்ஆரம்பிக்க பட்டுள்ளன .குறித்த பேருந்து சேவையினை டக்கிலஸ் மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோர்நாடா வெட்டி தொடக்கி வைத்தனர் .எதிர் வரும் தேர்தலை முன்னிட்டு மக்கள் மனதை கவரும் விதத்தில் இவர்களதுவேலை திட்டங்கள் முன்னெடுக்க பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ..!

கிழக்கு ஆயுத குழுக்களுக்கு இராணுவம் எச்சரிக்கை. இன்று கடைசி ஆயுத ஒப்படைப்பு ..!

கிழக்கு ஆயுத குழுக்களுக்கு இராணுவம் எச்சரிக்கை. இன்று கடைசி ஆயுத ஒப்படைப்பு ..!கிழக்கில் சட்ட விரோதமாக பாவனையில் உள்ள ஆயுதங்களை இன்றைக்குள்பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கும் படி கிழக்கு மாகாண இராணுவ தளபதி கிழக்கில்உள்ள ஆயுத  குழுவினருக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார் .அவ்வாறு தவறும் பட்சத்தில் நாட்டிற்கு எதிரான செயல் பாட்டில் ஈடு பட்டர்கள் என்றகுற்ற சாட்டின் அடிப்படையில் இருபது ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் எனஎச்சரிக்க பட்டுள்ளது .இவ்வாறு பல தடவை இராணுவம் அறிவித்தும் சட்ட  விரோத பாவனயில் உள்ள ஆயுதங்கள்முற்று முழுதாக இராணுவத்தினரால் கைப்பெற்ற  பட வில்லை  என்பதும் அவ்வாறான ஆயுதங்களைபுலிகளிற்கு எதிராக பயன் படுத்த இலங்கை இராணுவம் வழங்கியது என்பது குறிப்பிடதக்கது ..!

யானைகளை சுட்டு கொல்லும் இராணுவம் ..-20யானைகள் கொலை ..!

யானைகளை சுட்டு கொல்லும் இராணுவம் ..-20யானைகள் கொலை ..!கடந்த சில நாட்களில் இலங்கை இராணுவம் மூன்று யானைகளை சுட்டு படுகொலை செய்துள்ளது .இதுவரை இருபது யானைகள்   இலங்கை இராணுவத்தினால்  சுட்டு படுகொலை செய்ய பட்டுள்ளது .Hennanigala குளம் Maduru ஓயா  பகுதியில் வைத்தே இருபது யானைகளும்  சுட்டு படுகொலை செய்ய பட்டுள்ளன .Kantale, Manampitiya MATRUM  Kavudulla தேசிய பூங்கா அருகில் மூன்று யாணைகள்  சுட்டு படுகொலை செய்ய பட்ட நிலயில் கண்டு பிடிக்க பட்டுள்ளதாக  விலங்குகள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது ..!.

காதலியை கத்தியால் வெட்டி கொலை செய்த காதலன் -!

யாழில் இருந்து கையிட்சுக்கு டகிலஸ்.பசில் பேருந்து ஓட்டம் .யாழ் நகர் பகுதியில் இருந்து கையிட்சுக்கு புதிய பேருந்து சேவைகள்ஆரம்பிக்க பட்டுள்ளன .குறித்த பேருந்து சேவையினை டக்கிலஸ் மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோர்நாடா வெட்டி தொடக்கி வைத்தனர் .எதிர் வரும் தேர்தலை முன்னிட்டு மக்கள் மனதை கவரும் விதத்தில் இவர்களதுவேலை திட்டங்கள் முன்னெடுக்க பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ..!

ஜனாதிபதி ஊர்காவத்துறைக்கு விஜயம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் இன்னும் சற்றுவேளையில் ஊர்காவத்துறைக்கு செல்லவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவின் பணிப்பாளர் நாயகம் பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஊர்காவத்துறை பகுதிக்கு நாட்டின் ஜனாதிபதி ஒருவர் மேற்கொள்ளும் முதல் விஜயம் இதுவாகும்.

சுசில் பிரேமஜயந்த கல்முனை விஜயம்

கல்முனைக்கு விஜயம் செய்த பெற்றோலிய வளத்துறை அமைச்சரும், பொதுஜன ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளருமான சுசில் பிரேமஜயந்த கல்முனையில் அமைக்கப்பட்டுள்ள ஏ.எம்.அன்வர் எரிபொருள் நிரப்பு நிலையத்தினை இன்று திறந்து வைத்தார்.

இந்நிகழ்விற்கு அமைச்சருடன் சிரேஷ்ட அமைச்சர் பீ.தயாரட்ன, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹனைஸ் பாறுக், ஸ்ரீ லங்கா மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட், கல்முனை மாநகர முதல்வர் செனட்டர் மசூர் மௌலானா, ஸ்ரீ லங்கா மக்கள் காங்கிரஸின் கொள்கை பரப்புச் செயலாளர் மௌலவி முபாரக் அப்துல் மஜீத், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எம்.எம். சலீம் உட்பட மேலும் பல அரசியல் பிரமுகர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

வேலணை தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஜனாதிபதி (ஒலிப்பதிவு)

வேலணை பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்திலே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் கலந்து கொண்டார். அங்கு ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்களை தருகிறார் எமது அலுவலக செய்தியாளர் பழனி விஜயகுமார்.

நேர்மையான தேர்தல் நடைபெற்றால் ஆளும் கட்சியால் வெல்ல முடியாது (காணொளி)

நேர்மையான தேர்தல் நடைபெற்றால் ஆளும் கட்சியால் எந்த ஒரு சபையையும் கைப்பற்ற முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். எமது இணைய தளத்திற்கு வழங்கிய விசேட செவ்வியின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வேலணையில் ஜனாதிபதி தமிழில் உரை (காணொளி)

நான் சொன்னதை செய்வேன், செய்வதை சொல்வேன் என்றும் நான் உங்கள் நண்பன் என்றும் வேலணை பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்திலே ஜனாதிபதி தமிழில் குறிப்பிட்டார். ஜனாதிபதி தமிழில் உரையாற்றியதை இங்கே காணலாம்.

திட்டமிட்டபடி ‘மங்காத்தா’ படப்பாடல் ரிலீஸாகுமா..?

Monday, Jul 18, 2011அஜித்குமார் நடிக்கும் மங்காத்தா படத்தின் பாடல் வெளியீடு ஜூலை 18 அன்று நடைபெறும் என்று அப்படத்தின் தயாரிப்பாளரான, தயாநிதி அழகிரி முன்பே தெரிவித்திருந்தார்.

இதை நாமும் அப்போதே செய்தியாக்கியிருந்தோம். இப்படத்தின் இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜாவும் இதற்காக உழைத்துக் கொண்டிருக்கிறார் என்று செய்தியும் கொடுத்திருந்தோம்.

ஆனால் இன்று வரை இப்படத்தின் பாடல் ரிலீஸ் குறித்து தகவலேதும் கிடைக்கவில்லை. இதனால் திட்டமிட்டபடி நாளை இப்படத்தின் பாடல் வெளியீடு நடைபெறுமா என்பது சந்தேகம்தான். இதுகுறித்து தயாரிப்பாளரான தயாநிதி அழகிரியை தொடர்பு கொண்டு கேட்டதற்கு;

‘’நாங்கள் எல்லோரும் இப்படத்தின் பாடல் வெளியீட்டிற்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறோம். இரவு பகல் பாராமல் இதற்கான வேலைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இப்படி தாமதம் செய்வதால் எங்களுக்கு எந்த ஒரு லாபமும் கிடைக்கப் போவதில்லை. புரிந்து கொள்ளுங்கள். விரைவில் பாடல்கள் வெளியிடப்படும்” என்றார்.

‘ராணா’வை அடுத்து சூப்பர் ஸ்டார் நடிக்கும் புதிய‌ படம்.?

Monday, Jul 18, 2011சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாலும் ‘ராணா’ படவேலைகளில் பங்கெடுத்துக் கொண்டுதான் இருக்கிறார். அக்டோபரில் இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் ஆரம்பமாகிவிடும். இப்படம் 2012-ல் வெளிவர இருக்கிறது.

இப்படத்தை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரபல தெலுங்குப் பட இயக்குனரான பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் நடிப்பார் எனத் தெரிகிறது. பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் அண்மையில் நடித்து வெளியாகியுள்ள படம் ‘புட்டா ஹோகா தேரா பாப்’. இப்படத்தினை தெலுங்கு இயக்குனரான பூரி ஜெகந்நாத் முதன் முதலாக ஹிந்தியில் இயக்கினார்.

இப்படம் அங்கே பரபரப்பாக ஓடியதால், இப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய இருக்கிறாராம். அப்படி தமிழில் ரீமேக் செய்யும் போது, அமிதாப் பச்சன் நடித்த வேடத்தில் ரஜினிகாந்தை நடிக்க வைக்க முயற்சிக்கிறாராம் பூரி ஜெகந்நாத். இதற்காக இவர் விரைவில் ரஜினிகாந்தை சந்திக்க இருக்கிறாராம். இது அத்தனையும் சரியாக அமைந்தால் ரஜினிகாந்தின் அடுத்த படம் பூரி ஜெகந்நாத்துடையதாகத்தான் இருக்கும் என்று கோலிவுட் கிசுகிசுக்கிறது.

குத்துப்பாட்டை நான்தான் ஆரம்பித்து வைத்தேன்: டி. ராஜேந்தர்

Monday, Jul 18, 2011சினிமாத் துறையில் அஷ்டவதானியான டி.ராஜேந்தர் 'வீராசாமி' படத்திற்குப் பிறகு ‘ஒரு தலைக் காதல்’ என்ற படத்தை எடுத்து வருகிறார். இவருடைய இயக்கத்தில் வெளிவந்த ‘ஒரு தலை ராகம்’ போல, இப்படமும் அபார வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்து வருகிறார் டி.ஆர்.

இப்படம் குறித்து அவர் கூறியதாவது:

‘ஒரு தலை ராகம்’ வந்து முப்பது வருஷம் ஆகிடுச்சு. இப்போ மறுபடியும் "ஒரு தலை காதல்’. காதல் சினிமாக்களில் என்னைப் பார்த்த ரசிகன், அப்படியே மீண்டும் என்னை அண்ணாந்து பார்ப்பான். நான்தான் ஹீரோ. இதே தாடிதான். வட இந்திய பொண்ணு ஹீரோயின்.

பெரிய நடிகர், நடிகைகள் பட்டாளமே நடிக்குது. இப்போ இருக்குற எல்லா திறமையான இயக்குனர்களுக்கும் இந்த டி.ஆர். சவால் விடுறான். நீங்கள் இதுவரை பார்க்காத, யோசிக்காத படம் இது.

ஒரு தலைக் காதலில் முரட்டுத்தனமா இசையை காதலிச்சு வாழ்ற கேரக்டர். இதுவரைக்கும் 108 பாட்டுக்கு டியூன் போட்டு, எட்டு பாட்டு மட்டுமே படத்தில் வெச்சிருக்கேன். குத்துப்பாட்டை நான்தான் தூக்கிக் கொண்டு வந்தேன். இப்ப குத்து பாட்டு பச்ச தண்ணி குடிப்பது மாதிரி ஆகிவிட்டது. இதுலயும் ஒரு பாட்டை அப்படி வச்சிருக்கேன். எல்லாம் அதிரப் போகுது பாருங்க’’ என்றார்

இலங்கைத் தமிழ் விதவைப் பெண் - யாழினி குறும்படம்

இலங்கை யுத்தத்தில் விதவையான பெண்களை மையமாக வைத்து யாழினி என்ற குறும்படத்தை அவுஸ்திரேலிய தமிழர்கள் சார்லஸ் ராஜ் தயாரிக்க, ஆனந்த் இயக்கியுள்ளார் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் இலங்கை அகதிகள் முகாமில் உள்ள யாழினி என்ற பெண் எப்படி விதவையானாள், அதற்கு பின்னால் நடந்தது என்ன என்பதை விளக்கும் வகையில் 30 நிமிட குறும்படம் எடுத்திருக்கிறோம். அடுத்து விடிவெள்ளி என்ற படத்தை கண்ணிவெடிகளை பற்றி எடுத்து வருகிறோம்.

இலங்கை தமிழர்கள் படும் இன்னல்களை உலகம் முழுவதும் உள்ளவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற படங்களை எடுத்து வருகிறோம். 25 வருடமாக நடந்து வரும் இலங்கை யுத்தம் குறித்து மிகவும் குறைந்த அளவே சினிமா படங்களாக வெளிவந்திருக்கின்றன.

இவை போதாது, இன்னும் உள்ள பல பிரச்சினைகள் குறித்து பலரும் சினிமாக்களாக எடுத்து உலகம் அறியச் செய்ய வேண்டும். நாங்கள் எடுக்கும் குறும்படங்களை உலகளவில் நடைபெறும் திரைப்பட விழாக்களுக்கு அனுப்ப இருக்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

ஹிலாரி இலங்கை குறித்து ஜெயாவுடன் கலந்துரையாடுவார் - ரொபேட் ஓ பிளேக்

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் மற்றும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொள்ளவுள்ள சந்திப்பின் போது இலங்கை குறித்து கலந்துரயாடப்படும் என ஹிலாரி கிளிண்டனுடன் விஜயம் மேற்கொள்ளவுள்ள பராக் ஓபாமாவின் நிர்வாகக் குழுவைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் என சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இதேவேளை முதல்தடவையாக சென்னை விஜயம் மேற்கொள்ளவுள்ள ஹிலாரி கிளிண்டன், அரச சார்பற்ற நோக்கத்துக்காகவே இந்திய விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என்பதனால் இலங்கை குறித்து கலந்துரையாட மாட்டார் என இந்திய வட்டாரங்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச ஊடக நிறவனம் ஒன்றுக்கு ஐக்கிய அமெரிக்காவுக்கான பிரதி ராஜாங்கச் செயலாளர் ரொபேட் ஓ பிளேக் வழங்கிய செவ்வியின் போது தமிழக மக்கள் 60 மில்லியன் பேர் இலங்கை தொடர்பில் கவனத்தில் கொண்டுள்ளதனால் இலங்கை குறித்து கலந்துரையாடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வடக்கிற்கு விஜயம்

வடக்கில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகளைப் பார்வையிடுவதற்கும், தேர்தல் பிரசாரங்களில் கலந்துகொள்வதற்காகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் அவர்கள் மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு சற்றுமுன்பு யாழ்ப்பாணம் சென்றடைந்துள்ளார்.

இவ்விஜயத்தின் போது யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகள் பலவற்றை அவர் அஙகுரார்ப்பணம் செய்து வைக்கவுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் மானிப்பாய், கோப்பாய், நெல்லியடி பிரதேசங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்கள் பேரணிக் கூட்டங்களில் கலந்துகொண்டு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களையும் ஜனாதிபதி ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

20 ஆம் திகதி பரந்தன் வைத்தியசாலையை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கவுள்ள ஜனாதிபதி, அன்றைய தினம் கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையம் மற்றும் கிளிநொச்சி சந்தை கட்டடத் தொகுதி ஆகியவற்றுக்கான அடிக்கல்லையும் நாட்டவுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, கிளிநொச்சியில் நடைபெறவிருக்கும் மக்கள் பேரணிக் கூட்டத்திலும் அவர் கலந்துகொள்ளவுள்ளார்.

‘மங்காத்தா’வில் மோசமான கேரக்டரில் நடித்திருக்கிறேன்: அஜித் குமார்

Monday, Jul 18, 2011அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார், ‘மங்காத்தா’ படத்தின் கேரக்டர் குறித்து முதன் முதலாக வாய் திறந்திருக்கிறார். இப்படத்தில் மிகவும் மோசமான கேரக்டரில் நடித்திருப்பதாக அஜித் குமார் தெரிவித்துள்ளார். இப்படம் குறித்தும், இப்படத்தில் இவருடைய கேரக்டர் குறித்தும் பேசியதாவது;

“மங்காத்தா படத்தில் 5 விதமான கேரக்டர்கள் வருகின்றன. இந்த 5 கேரக்டர்களுமே மோசமானவார்கள். இதிலே மிகவும் மோசமானவனாக, ரொம்ப கெட்டவனாக நடித்திருக்கிறேன்.

நான் பார்த்த இயக்குனர்களில் வெங்கட் பிரபு சிறந்த உழைப்பாளி. அவர் திரையில் என்ன கொண்டு வர வேண்டும் என்று விரும்பினாரோ அதை சரியாக கொண்டு வந்திருக்கிறார். அவரது அர்பணிப்பும், உழைப்பும் படத்தை தரமானதாக கொண்டுவந்திருக்கிறது

இப்படத்தில் நடித்த அனைவருமே தங்களது பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள். தீனா, பில்லா போன்ற படங்களுக்கு அற்புதமாக இசையமைத்து வெற்றி தேடித் தந்த யுவன் சங்கர் ராஜா, இப்படத்திலும் தனது திறைமையை நிரூபித்திருக்கிறார். படத்திற்காக உங்களோடு சேர்ந்து நானும் காத்திருக்கிறேன்” என்றார்.

இப்படத்தில் அஜித் குமாருடன், ஆக்ஷன் கிங் அர்ஜுன், திரிஷா, ஆண்ட்ரியா, லட்சுமி ராய், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலரும் நடிதுதள்ளனர். அடுத்த மாதம் 12-லிருந்து 19-ம் தேதிக்குள் இப்படம் ரிலீஸாக இருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.