Monday, July 18, 2011

காரைதீவு கண்ணகி இந்து வித்தியாலய மாணவி சாதனை

அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற தமிழ் மொழித் தினப் போட்டியில் காரைதீவு கண்ணகி இந்து வித்தியாலய மாணவி ஆர்.சனூஜா பேச்சுப் போட்டியில் பிரிவு 01 இல் தங்கப் பதக்கத்தினை வென்றார்.

இச்சாதனையானது பாடசாலைக்கு வரலாற்றிலே ஒரு மைல் கல்லென அதிபர், ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

இம்மாணவியைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று பாடசாலை அதிபர் எஸ்.யோகராஜா தலைமையில் நடைபெற்றது. இதன் போது காரைதீவு கோட்டக் கல்வி அதிகாரி எஸ்.வேதாசலம், கல்முனை வலயக் கல்வி அலுவலக தமிழ் மொழிப்பாட சிரேஷ்ட ஆசிரிய ஆலோசகர் கலாநிதி. ஆர்.வரதராஜன் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டு மாணவியைப் பாராட்டி கௌரவித்தனர்.

0 comments:

Post a Comment