Monday, July 18, 2011

திட்டமிட்டபடி ‘மங்காத்தா’ படப்பாடல் ரிலீஸாகுமா..?

Monday, Jul 18, 2011அஜித்குமார் நடிக்கும் மங்காத்தா படத்தின் பாடல் வெளியீடு ஜூலை 18 அன்று நடைபெறும் என்று அப்படத்தின் தயாரிப்பாளரான, தயாநிதி அழகிரி முன்பே தெரிவித்திருந்தார்.

இதை நாமும் அப்போதே செய்தியாக்கியிருந்தோம். இப்படத்தின் இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜாவும் இதற்காக உழைத்துக் கொண்டிருக்கிறார் என்று செய்தியும் கொடுத்திருந்தோம்.

ஆனால் இன்று வரை இப்படத்தின் பாடல் ரிலீஸ் குறித்து தகவலேதும் கிடைக்கவில்லை. இதனால் திட்டமிட்டபடி நாளை இப்படத்தின் பாடல் வெளியீடு நடைபெறுமா என்பது சந்தேகம்தான். இதுகுறித்து தயாரிப்பாளரான தயாநிதி அழகிரியை தொடர்பு கொண்டு கேட்டதற்கு;

‘’நாங்கள் எல்லோரும் இப்படத்தின் பாடல் வெளியீட்டிற்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறோம். இரவு பகல் பாராமல் இதற்கான வேலைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இப்படி தாமதம் செய்வதால் எங்களுக்கு எந்த ஒரு லாபமும் கிடைக்கப் போவதில்லை. புரிந்து கொள்ளுங்கள். விரைவில் பாடல்கள் வெளியிடப்படும்” என்றார்.

0 comments:

Post a Comment