ஒற்றையர் போட்டியில் முதல்சுற்றோடு முடிந்தது சானியாவின் கதை. இதையடுத்து இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளில் அவர் தீவிரமாக ஆட ஆரம்பித்தார். இரட்டையர் பிரிவில் அவர் அரை இறுதி வரை முன்னேறி அனைவரையும் அசத்தினார். ஆனால் சானியா -வெஸ்னினா ஜோடி அரை இறுதிப் போட்டியில் துரதிர்ஷ்டவசமாக தோல்வியைத் தழுவி வெளியேறியது.
இந்த நிலையில், கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா – ரோஹன் போபண்ணா ஜோடி காலிறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஆனால் காலிறுதிப் போட்டியில், சானியா ஜோடி தோல்வியைத் தழுவி கனவைத் தகர்த்தது. இதனால் விம்பிள்டனில் சானியாவின் வேட்டை நின்று விட்டது. அதேசமயம், இந்தியாவின் மகேஷ் பூபதி – வெஸ்னினா ஜோடி கலப்பு இரட்டையர் பிரிவில் அரை இறுதிப் போட்டிக்குள் நுழைந்து ஆறுதல் தேடித் தந்துள்ளது.
அதேசமயம், லியாண்டர், காரா பிளாக் ஜோடி, 3-6, 2-6 என்ற செட் கணக்கில் டேணியல் நெஸ்டர்-யூங் ஜான் சான் ஜோடியிடம் கலப்பு இரட்டையர் காலிறுதிப் போட்டியில் வீழ்ந்தது.








