July 2, 2011 | no comments
விம்பிள்டனில் சானியா மிர்ஸாவின் கனவு தகர்ந்து விட்டது. ஒற்றையரில் கோட்டை விட்டாலும், கலப்பு இரட்டையர் மற்றும் இரட்டையர் போட்டிகளில் வேகமாக முன்னேறி வந்த அவர் இரண்டு போட்டிகளிலும் தற்போது தோல்வியைத் தழுவியுள்ளார்.ஒற்றையர் போட்டியில் முதல்சுற்றோடு முடிந்தது சானியாவின் கதை. இதையடுத்து இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளில் அவர் தீவிரமாக ஆட ஆரம்பித்தார். இரட்டையர் பிரிவில் அவர் அரை இறுதி வரை முன்னேறி அனைவரையும் அசத்தினார். ஆனால் சானியா -வெஸ்னினா ஜோடி அரை இறுதிப் போட்டியில் துரதிர்ஷ்டவசமாக தோல்வியைத் தழுவி வெளியேறியது.
இந்த நிலையில், கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா – ரோஹன் போபண்ணா ஜோடி காலிறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஆனால் காலிறுதிப் போட்டியில், சானியா ஜோடி தோல்வியைத் தழுவி கனவைத் தகர்த்தது. இதனால் விம்பிள்டனில் சானியாவின் வேட்டை நின்று விட்டது. அதேசமயம், இந்தியாவின் மகேஷ் பூபதி – வெஸ்னினா ஜோடி கலப்பு இரட்டையர் பிரிவில் அரை இறுதிப் போட்டிக்குள் நுழைந்து ஆறுதல் தேடித் தந்துள்ளது.
அதேசமயம், லியாண்டர், காரா பிளாக் ஜோடி, 3-6, 2-6 என்ற செட் கணக்கில் டேணியல் நெஸ்டர்-யூங் ஜான் சான் ஜோடியிடம் கலப்பு இரட்டையர் காலிறுதிப் போட்டியில் வீழ்ந்தது.
0 comments:
Post a Comment