நெல்லை: ஏர்வாடி அருக நடிகை ராதாவுக்குச் சொந்தமான தோட்டத்தின் காவலாளிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஏர்வாடி-திருங்குடிக்கு ரோட்டில் நடிகை ராதாவுக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு திருவனந்தபுரம் பாலராமபுரத்தை சேர்ந்த ரவி என்பவர் காவலாளியாக உள்ளார். நேற்று இங்கு வள்ளியூர் கோட்டையடி தெருவைச சேர்ந்த ராஜேந்திரன், ஏர்வாடி காந்திநகர் வேலு, மற்றும் சரவணன், ஜெயகுமார், மகேஷ், வசந்த், பாபு ஆகியோர் இளநீர் வாங்குவதற்காக வந்தனர்.
பின்னர் அவர்கள் இளநீர் வாங்கி வி்ட்டு பணம் கொடுக்காமல் சென்றனர். இதனை ரவி கண்டித்தார். இதையடுத்து அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ராஜேந்திரன் உள்ளிட்ட 7 பேரும் அவரை அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த ரவி நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து ஏர்வாடி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் முத்துராஜ், தனி்ப்படை சப்-இன்ஸ்பெக்டர் சிவசுப்பு மற்றும் போலீசார் விசாரணை நடத்தி ராஜேந்திரன், வேலு ஆகியோரை கைது செய்தனர். மற்ற 5 பேரை தேடி வருகின்றனர்.Topics: radha, watchma, ராதா, தோட்டம், அரிவாள் வெட்டு
0 comments:
Post a Comment