July 2, 2011 | no commentsபாமக-வின் ‘மாதிரி மாநில பட்ஜெட்’டை வெளியிட்ட அக்கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ், உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக கூட்டணியில் இடம்பெறுவது குறித்து கட்சியின் பொதுக் குழுவில் கூடி முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
சென்னையில் இன்று 2011-12 ஆண்டுக்கான பாமகவின் நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிடு நிருபர்களிடம் ராமதாஸ் கூறியது:“ஒவ்வொரு ஆண்டும் நிதிநிலை அறிக்கை வெளியிடுவதற்கு முன்பாக செயல் அறிக்கை, பொருளாதார ஆய்வறிக்கை, முந்தைய நிதிநிலை அறிக்கை பற்றிய விளக்க அறிக்கை ஆகியவற்றை மத்திய அரசு வெளியிடுவது போல மாநில அரசும் வெளியிட வேண்டும்.எங்கள் கட்சியின் மதிப்பீட்டின்படி நடப்பு ஆண்டின் மொத்த வருமானம் ரூ.81,635. செலவு ரூ.81,125 கோடி. ரூ.510 கோடி மீதம் வரும். சென்ற ஆண்டின் பற்றாக்குறைக்கு சம்பள உயர்வுதான் காரணம்.நிர்வாக வசதி கருதி விழுப்புரம், வேலூர், சேலம், கோவை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களை பிரிக்க வேண்டும்.தமிழகத்தில் அனைத்து குழந்தைகளுக்கு 12-ம் வகுப்பு வரை இலவச கல்வி வழங்க வேண்டும். சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் உள்ள குறைகளை நீக்கி விட்டு, இந்த ஆண்டே 1 முதல் 12-ம் வகுப்பு வரை நடைமுறைப்படுத்த வேண்டும்.தனியார் கல்வி நிறுவனங்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்காணிக்க மாவட்டந்தோறும் குழு அமைக்கவேண்டும். தனியார் பள்ளிகளை அரசு ஏற்று நடத்துவதே இதற்கு நிரந்தர தீர்வாக அமையும்.மின்தேவையை சமாளிக்க சூரிய ஒளி மின் உற்பத்தியில் மக்களை ஈடுபட செய்ய வேண்டும். காற்றாலை, சர்க்கரை ஆலை மற்றும் கழிவுப் பொருட்களில் இருந்து மின் உற்பத்தி செய்யும் முறைக்கு ஊக்கம் அளிக்கவேண்டும்.திருக்குறளை தேசிய நூலாக்க வேண்டும். தமிழை மத்திய ஆட்சி மொழியாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இளைஞர்கள் பாதை மாறி செல்வதற்கு குடிப்பழக்கமும் சினிமாவும்தான் காரணம். குறைந்தது 5 ஆண்டுகள் இந்த இரண்டையும் தடை செய்து விட்டால் தான் இளைஞர்களை திருத்த முடியும்.முதல் கட்டமாக மது விற்பனையை பகல் 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டும் நடத்தவேண்டும். சனி, ஞாயிறு மற்றும் திருவிழா நாட்களில் மதுக்கடைகளை மூடவேண்டும்.சென்னை மற்றும் நகர பகுதிகளில் பொது இடங்களிலும், கல்வி நிறுவன பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறவதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.இந்த நிழல் நிதிநிலை அறிக்கையை தமிழக முதல்வரிடம் கொடுப்பதற்கான வாய்ப்பில்லை. அவரது வீட்டு வாசலிலாவது கொடுத்து விடுவோம்.இலங்கை தமிழர் பிரச்னையில் அந்த நாட்டுக்கு பொருளாதார தடை விதிக்க வேண்டுமென சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது எல்லாம் இதெல்லாம் வெறும் கண்துடைப்புதான்.கூட்டணி நீடிக்கிறதா?திமுக கூட்டணியில் பாமக தொடர்கிறதா? என்று கேட்கிறீர்கள். தனிப்பட்ட முறையில் நான் இதற்கு உடனடியாக பதில் சொல்லிவிட முடியாது. கட்சியின் செயற்குழுவும், பொதுக்குழுவும் கூடிதான் முடிவு செய்யும். உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு நிச்சயம் முடிவு செய்து விடுவோம்.ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுவது பற்றி கேட்கிறீர்கள். சட்டம் அதன் கடமையை செய்யும். லோக்பால் சட்ட மசோதாவில் பிரதமர், நீதிபதிகள் உள்ளிட்ட அனைவரையும் உட்படுத்த வேண்டும்,” என்றார் ராமதாஸ்.
0 comments:
Post a Comment