This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Thursday, July 14, 2011

இலங்கையணியின் பயிற்றுவிப்பாளராக ருமேஷ் ரத்நாயக்க

அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை கிரிக்கெட் அணிக்கு பயிற்றுவிப்பாளராக ருமேஷ் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமஹே தெரிவித்துள்ளார்.

தமிழ் சிறுமி மீது துப்பாக்கி பிரோயோகம் மேற்கொண்ட நபரின் சகோதரன் சுடப்பட்டார் ..!

தமிழ் சிறுமி மீது துப்பாக்கி பிரோயோகம் மேற்கொண்ட நபரின் சகோதரன் சுடப்பட்டார் ..!

பிரித்தானியாவில் வாழ்கின்ற 5 வயதுக்குழந்தையான துஷா மீது துப்பாக்கிச்சூடு மேற்கொண்டதாக கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் சகோதரரை சுட்டது தொடர்பில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சூட்டுக்காயத்திற்கு உள்ளான ஜாடன் கடந்த இரவு பொலிஸாரின் பாதுகாப்புக்கு மத்தியிலேயே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். உடல்நிலை தீவிரமாக இருக்கும் அதேவேளை சீராக காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை தெற்கு லண்டனில், கென்னிங்டனில் உள்ள உணவகத்திற்கு வெளியில் ஜாடன் மெக்கல் 3 தடவை துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார். துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான ஜாடன் உடனடியாக தனது நண்பனுக்கு தொலைபேசி மூலம் தொடர்பை ஏற்படுத்தி தான் துப்பாக்கிச்சூட்டுக்குள்ளாகியதாக தெரிவித்துள்ளார்.

மறைந்திருந்து துப்பாக்கிச்சூடு மேற்கொண்ட இரு இளைஞர்களும் மோட்டார் சைக்கிளில் தப்பியோடிவிட்டனர். சிறுமியான துஷா கமலேஸ்வரன் கடந்த மார்ச் மாதம் ஸ்டொக்வெல் நகருக்கு அருகில் உள்ள சுப்பர் மார்க்கட்டில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கானார்.

தற்போது சுடப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற ஜாடன் மெக்கலின் சகோதரனான 19 வயதுடைய அந்தனி மெக்கல் துஷா மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டமையால் கொலைக்குற்றச்சாட்டின் பேரில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச்சூட்டில் சிறுமி துஷா கமலேஸ்வரனுக்க நெஞ்சுப்பகுதியிலும், 35 வயது ரோஷன் செல்வக்குமாருக்கு தலையிலும் காயங்கள் ஏற்பட்டது. தற்போது துஷாவுக்கு இடுப்புக்கு கீழே செயலிழந்து காணப்படுகிறது.

ஜாடன் மெக்கல் மீது துப்பாக்கிப் பிரயோம் மேற்கொண்ட சந்தேகநபர்களை கைது செய்வதற்க 30 பேர் கொண்ட காவல் துறையினர் அவர்கள் தங்கியிருந்த இடத்தை சுற்றிவளைத்துள்ளனர். அங்கிருந்து 7 பேரையும் பொலிஸார் கைது செய்தனர்.

லண்டனில் தேசிய நினைவெழுச்சி நாள் 2011 இற்கான செயற்குழு அறிவிப்பு

லண்டனில் தேசிய நினைவெழுச்சி நாள் 2011 இற்கான செயற்குழு அறிவிப்பு

தேசிய நினைவெழுச்சி நாள் சிறப்புற நடைபெறுவதற்கும், அதனூடாக எமது தாயக அரசியற் செயற்திட்டங்களை முன்னகர்த்துவதற்குமான செயற்குழு பிரித்தானியாவில் அறிவிக்கப்பட்டுள்ளது. வழமைபோல் இவ்வருடமும் EXCEL  (எக்செல்) மண்டபத்தில் தேசிய நினைவெழுச்சி நாள் உணர்வுபூர்வமாக நடைபெறவுள்ளது.

இச்செயற்குழுவானது கடந்த கால செயற்பாடுகளில் பெறப்பட்ட பட்டறிவுகளின் அடிப்படையில் தவறுகள் ஏற்படா வண்ணம் வெளிப்படையாக செயற்படும்.

 
2011 இற்கான தேசிய நினைவெழுச்சி நாளுக்கான செயற்குழு உறுப்பினர்களின் விபரம் வருமாறு:
 
01.  Mrs. சண்முகசுந்தரம் (மாவீரர் குடும்பம்)
02.  Mrs. சதானந்தன் (மாவீரர் குடும்பம்)
03.  Mr. நகுலேசன் (சட்டத்தரணி)
04.  Dr. வசந்தன் (கலாநிதி)
05.  Mr. சுதாகரன் (தேசியச் செயற்பாட்டாளர்)
06.  Mr. ஜெயந்தன் (இளையோர்)
07.  Mr. கபில் கந்தசாமி (இளையோர்)
08.  Ms. அனோஜா (சட்ட ஆலோசகர்)
09.  Mrs. ஜெயா (தேசியச் செயற்பாட்டாளர்)
10.  Mr. கந்ததேவா (தேசியச் செயற்பாட்டாளர்)
11.  Mr. சுகந்தகுமார் (தேசியச் செயற்பாட்டாளர்)
12.  Mr. செந்தில்நாதன் கந்தையா (தேசியச் செயற்பாட்டாளர்) 

மேற்குறிப்பிடப் பட்டவர்கள் கடந்த கால தேசிய செயற்பாட்டினூடாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். இதில் பொருத்தமான மூவர் நிதிச்செயற்பாட்டுக்கென தெரிவு செய்யப்பட்டு நிதிச்செயற்பாடுகள் யாவும் வெளிப்படையாக நடைபெறும். மேலும் நிதிச்செயற்பாடுகள் யாவும் தகமையுள்ள கணக்காளர்களினால் அறிக்கையாக்கப்பட்டு குறிப்பிட்ட நாட்களுக்குள் பொதுமக்களின் பார்வைக்கு வழங்கப்படும்.

இதே போல் இச்செயற்குழுவிலிருந்து ஊடக சந்திப்புக்கென ஊடக ஒருங்கிணைப்புக் குழு உருவாக்கப்பட்டு, செயற்பாடுகள் யாவும் அவ்வப்போது பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்படும். இதே போல் ஒவ்வொரு செயற்பாடுகளும் குழு ரீதியாக மக்களின் கருத்துக்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வெளிப்படையாக நடைபெறும்.

எனவே தேவையற்ற விசமத்தனமான கருத்துக்களை புறம்தள்ளி, இச்செயற்குழு ஊடாக நடைபெறும் தேசிய நினைவெழுச்சி நாள் மூலம் மாவீரச்செல்வங்களை  வணங்குவதன் ஊடாகவும், அதன் மூலம் பெறப்படும் நிதியில் மீதமுள்ள பணத்தை எமது தாயக மக்களின் நல்வாழ்வுக்காகவும், தாயக விடுதலைக்கான அரசியற் செயற்பாடுகளுக்கும், வெளிப்படையாக பயன்படுத்தப்படும்.

கிளிநொச்சி மாவட்டத்தில் 65 ஆயிரம் வாக்காளர்கள்

கிளிநொச்சி மாவட்டத்தில் தேர்தலில் 65 ஆயிரம் வாக்காளர்கள் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றிருப்பதாகக் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மேலும், இம்முறை தேர்தல் நடவடிக்கைகள் யாவும் கிளிநொச்சி அரச செயலகத்தினால் கையாளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு சகல ஆவணங்களையும் இழந்துள்ள இந்த மாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பான்மையான மக்கள், தேர்தலில் வாக்களிப்பதற்குத் தங்களை அடையாளம் காட்டுவதற்குரிய தேசிய அடையாள அட்டைகளின்றி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இவ்வாறானவர்களுக்குத் தேர்தலின்போது பயன்படுத்துவதற்கு வசதியாகத் தற்காலிக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, யாழ்ப்பாணத்தைப் போன்று கிளிநொச்சியிலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த வேட்பாளர்கள் நெருக்கடிகளுக்கு ஆளாகி வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

பல இடங்களில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் தடைகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தெரிவிக்கின்றனர் என பீபீசி செய்தி வெளியிட்டுள்ளது.

அரசாங்கம் தனிநபர் வருமானத்தையும் வேலைவாயப்பு சுட்டியினையும் மறைத்தது

வட மாகாணம், 2010 ஆம் ஆண்டில் 22.9 சதவீத உள்நாட்டு மொத்த உற்பத்தி வளர்ச்சியை கண்டிருப்பதாக மத்திய வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பீபீசி செய்தி வெளியிட்டுள்ளது.

2009ம் ஆண்டில் இது 12.1 சதவீத வளர்ச்சியாக இருந்தது. மத்திய வங்கியின் கணிப்பீட்டின்படி இது ஒரு துரித வளர்ச்சியாகும்.

யுத்தம் முடிந்த குறுகிய காலகட்டத்தில் இது போன்ற ஒரு பொருளாதார வளர்ச்சியை வட மாகாணம் பெற்றிருக்கிறது என்று இலங்கையின் மத்திய வங்கி கூறியிருப்பதில் எந்த விதமான ஆச்சரியமும் கிடையாது என இலங்கைப் பொருளாதரப் பகுப்பாய்வாளர் முத்துக்கிருஷ்ணன் சார்வானந்தா கருத்து தெரிவித்துள்ளார்.

ஏனெனில், 2009 ஆம் ஆண்டு என்பது யுத்தத்தின் உச்சக்கட்ட ஆண்டு என்றும் அப்போது வடமாகாணத்தில் யாழ்ப்பாணத்தைத் தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களும் யுத்தத்தினால் சூழப்பட்டு மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், கூறும் சர்வானந்தா, அதனை அடுத்த ஆண்டுகளின் அப்போது இருந்த நிலையை விட இரு மடங்கு மொத்த உற்பத்தி ஏற்படுவது என்பது வழமையானதுதான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஒரு பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சியைப் பார்க்கும்போது, அந்தப் பிராந்தியத்தின் மொத்த உற்பத்தி அதிகரிப்பை வைத்து மாத்திரம் பொருளாதாரம் வளர்ந்துவிட்டது என்று கூறிவிட முடியாது. தனி நபர் வருமான, வேலைவாயப்பு வசதிகளுக்கான சுட்டிகள் ஆகியவற்றையும் நாம் கவனத்தில் கொண்டாக வேண்டும். ஆனால் இவற்றை அரசாங்கம் தெரிந்தோ, தெரியாமலோ மறைத்து வருகின்றது என்றும் சர்வானந்தா கூறினார்.

பிலிப்பைன்ஸில் இலங்கை மதகுரு கைது

பிலிப்பைன்ஸ் நாட்டில் பசே நகரத்தில் இலங்கையைச் சேர்ந்த மதகுரு ஒருவர் 9 வயது சிறுமி ஒருவரை தவறான நோக்குடன் தொட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பசே நகரத்தில் லிபிடப் பிரதேசத்தில் உள்ள உணவு விடுதியொன்றில் தாயாருடன் இருந்த சிறுமியொருவரின் பிறப்புறுப்புக்களை குறித்த மதகுரு தொட்டார் என பாதிப்புக்குள்ளாகிய பெண் தெரிவித்துள்ளார்.

.சம்பவத்தை நேரில் கண்ட தாய் வீதி சுத்திகரிப்பில் ஈடுபட்டிருந்த ஒருவரின் உதவியை நாடி குறித்த இலங்கை மதகுருவை கைது செய்வதற்கான நடவடிக்கை எடுத்துள்ளார்.

43 வயதான குறித்த சந்தேக நபர் மனிலாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் கடமையாற்றி வந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவர் மீது பாலியல் மற்றும் சிறுவர் துஷ்பிரயோக சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சந்தேக நபர் அவரது சட்டத்தரணியுடன் மாத்திரம் கலந்துரையா வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ரஜினி ராணாவை மீண்டும் தொடங்குவது எப்போது?

Friday, Jul 15, 2011நடிகர் ரஜினிகாந்த் உடல்நலம் பெற்று சென்னை திரும்பியுள்ள நிலையில் ராணா படத்தின் படப்பிடிப்பு மீண்டும் அக்டோபரில் தொடங்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த செப்டம்பர் வரை ஓய்வெடுக்க உள்ள ரஜினிகாந்த், ராணா படப்பிடிப்பு தொடர்பாக இயக்குநருடன் ஆலோசனை நடத்த உள்ளார். அக்டோபர் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கலாம் என்று திரைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

படம் தொடர்பான கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் இந்த விஷயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. படப்பிடிப்பு தொடங்கும் வரை உள்ள இடைப்பட்ட காலத்தில் கதை மற்றும் திரைக்கதையை இன்னும் மெருகேற்றும் பணி நடக்கும் எனத் தெரிகிறது.

போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் வாஸ்துபடி மராமத்துப் பணிகள் நடப்பதால் ரஜினி இப்போது கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் தங்கி ஓய்வெடுப்பார்.

முன்னதாக சிங்கப்பூரில் 6 வார சிகிச்சைக்குப் பின்னர் ரஜினிகாந்த் நேற்று சென்னை திரும்பினார். விமானநிலையத்தில் ரசிகர்கள் அவரை தலைவா என கோஷம் எழுப்பி உற்சாகத்துடன் வரவேற்றனர்.

தனக்கே உரிய ஸ்டைல் மற்றும் சிரிப்புடன் கண்ணாடி அணிந்து வந்த ரஜினி, ரசிகர்களை நோக்கி கைகளை அசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ரசிகர்களுக்கு தன் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார். விரைவில் தன் ரசிகர்களைச் சந்திப்பார் அவர் என்றும் கூறப்படுகிறது.

இந்தியில் தயாராகும் ‘கோ’

Friday, Jul 15, 2011கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவா, கார்த்திகா, பியா, அஜ்மல் நடிப்பில் வெளியான படம் "கோ".
 
இதில் ஜீவா பத்திரிகை நிருபராக நடிக்க, மற்றொரு துடிப்பான இளைஞன் கதாபாத்திரத்தில் அஜ்மல் நடித்திருக்கிறார். முன்னாள் நடிகையான ராதாவின் மகள் கார்த்திகா இப்படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக அறிமுகமாகினார்.
 
பத்திரிகை உலகில் பத்திரிகையாளர்கள் சந்திக்கும் சவால்களும், அரசியல் தலைகளை பத்திரிகையாளர்கள் சந்திக்கும் விதங்களையும் இப்படத்தில் தத்ரூபமாக காண்பித்திருந்தார் கே.வி.ஆனந்த்.
 
இத்துணை பெருமை பெற்ற கோ படத்தை இந்தியில் எடுப்பது குறித்து கே. வி. ஆனந்த் ஆலோசித்து வருவதாக அந்த படத்தில் நடித்த அஜ்மல் தெரிவித்தார்.
 
இந்தியில் ஜீவா கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூர் அல்லது ஷாகித் கபூரை நடிக்க திட்டமிட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ். - கொழும்பு பஸ் விபத்து 16 பயணிகளுக்கு படுகாயம்

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்று ஈரற்பெரியகுளம் பிரதேசத்தில் இன்று நண்பகல் வீதியை விட்டுவிலகி விபத்துக்குள்ளானதில் 16 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் அனைவரும் வவுனியா மாவட்ட அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.காயமடைந்தவர்கள் அனைவரும் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விபத்துச் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புலம்பெயர் மக்கள் வடக்கில் முதலீடு செய்ய வேண்டுமாம் - அமைச்சர் பசில்

வடக்கு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவென புலம்பெயர் தமிழர்களை வட பகுதியில் முதலீடுகளை செய்யுமாறு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

1983ம் ஆண்டுக்குப் பின்னர் நாட்டில் அசாதாரண சூழல் நிலவியதாகவும் அது கடந்த 2009ம் ஆண்டு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில் வடக்கு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவென அரசாங்கம் தற்போது அங்கு அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்துள்ள நிலையில் புலம்பெயர் மக்களும் வடக்கில் முதலீடுகளை செய்ய வேண்டுமென அமைச்சர் பசில் ராஜபக்ஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.

ரணில், சமல், சுமந்திரன் ஆகியோர் அடுத்த வாரம் லண்டன் பயணம்

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அடுத்த வாரமளவில் பிரித்தானியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக அவரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பொதுநலவாய நாடுகளின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் பங்கேற்கவே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரித்தானியா செல்லவுள்ளதாக அவரது ஊடகப்பிரிவு குறிப்பிட்டது.

ரணில் விக்ரமசிங்கவுடன் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ்வும், பிரித்தானியா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, லண்டனில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

87 இலங்கை அகதிகள் - மன்மோகனை தலையிடுமாறு வைகோ கோரிக்கை

நியூசிலாந்து நாட்டில் அடைக்கலம் தேடி சென்ற 87 இலங்கை தமிழர்களை இந்தோனேஷியா அரசு பிடித்து வைத்திருக்கும் விவகாரத்தில் இந்திய பிரதமர் தலையிட வேண்டும் என மதிமுக., பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 12ம் திகதி இலங்கையிலிருந்து ஒரு படகில் 87 இலங்கை தமிழர்கள் அடைக்கலம் தேடி நியூசிலாந்து நாட்டிற்கு சென்றனர்.

அவர்கள் இந்தோனேஷிய கடல் எல்லையில் நுழைந்த போது அத்துமீறி நுழைந்ததாக கூறி அந்நாட்டு அரசு அவர்கள் பிடித்து மீண்டும் இலங்கை திரும்ப வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வைகோ எழுதிய கடிதத்தில், இலங்கை தமிழர்கள் 87 பேரும் சட்டவிரோதமாக அங்கு செல்ல முயற்சிக்க வில்லை. சர்வதேச விதிகளின்படி அடைக்கலம் கோருவது அவர்களின் உரிமை.

இவ்விவகாரத்தில் பிரதமர் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி இந்தோனேஷியாவிலிருந்து அவர்களை விடுவிக்க உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

நயன்தாராவை நான் கூப்பிடவில்லை: சிம்பு மறுப்பு

Thursday, Jul 14, 2011சில தினங்களுக்கு முன்பு சிம்பு நடிக்கும் ‘ஒஸ்தி’ படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு குத்தாட்டப் பாடலுக்கு, நடிகை நயன்தாராவை சிம்பு ஆட அழைத்ததாக செய்தி வெளியானது. இதுகுறித்து சிம்புவிடம் தொடர்பு கொண்டு கேட்டதற்கு ‘நான் யாரையும் கூப்பிடவில்லை’ என்று மறுத்திருக்கிறார்.

ஹிந்தியில் அபார வெற்றி பெற்ற ‘தபாங்’ படத்தினை தமிழில் ‘ஒஸ்தி’ என்ற பெயரில் ரீமேக் செய்து வருகிறார்கள். சல்மான்கான் நடித்த வேடத்தில் நடித்த, சிம்பு நடிக்கிறார். ஹிந்தி படத்தில் ஒரு குத்தாட்டப் பாடல் இடம்பெற்றிருக்கிறது.

அதே பாடல் தமிழ் ரீமேக்கிலும் இடம் பெறுகிறது. அந்த பாடலுக்கு குத்தாட்டம் போட வரும்படி நயன்தாராவை சிம்பு அழைத்ததாக செய்தி வெளியாகின. இதுகுறித்து சிம்புவிடம் கேட்டதற்கு;

“அந்த பாடலை இன்னும் கம்போஸ் பண்ணவே இல்லை. அதற்குள் இப்படியொரு செய்தியை யார் பரப்பியது?. இப்படலே இன்னும் தயாராகவில்லை. அதற்குள் எப்படி ஆட்டம் ஆட கூப்பிடுவேன். இப்பாடல் தயாரான பிறகுதான், இப்பாடலுக்கு எந்த நடிகை பொறுத்தமாக இருப்பார் என்று பார்த்து அழைப்போம்” என்றார்.

தரணியின் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

இந்தியில் ரீமேக்காகும் கோ: கே.வி. ஆனந்த் தீவிர ஆலோசனை

சென்னை: தமிழில் வெற்றிகரமாக ஓடிய "கோ" படத்தை இந்தியில் எடுக்க முடிவு செய்துள்ளனர்.

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் ஜீவா-கார்த்திகா, பியா நடிப்பில் வெளியான படம் "கோ" . திரையரங்குளுக்கு வரும் தமிழ் படங்கள் எல்லாம் ஒரு வாரத்தில் வெளியேறிய நேரத்தில் கோ வெற்றிப்படமாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் ஜீவாவுக்கு நட்சத்திர அந்தஸ்து கிடைத்தது.

கார்த்திகாவுக்கும் இதுதான் பெயர் வாங்கிக் கொடுத்த படம். இதில் நடித்த பியா பாஜ்பாயின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.

இத்தனை சிறப்புகள் வாயந்த கோ படத்தை இந்தியில் எடுப்பது குறித்து கே. வி. ஆனந்த் ஆலோசித்து வருவதாக அந்த படத்தில் வில்லனாக நடித்த அஜ்மல் தெரிவித்தார்.

இந்தியில் ஜீவா கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூர் அல்லது ஷாகித் கபூரை நடிக்க வைக்க திட்டமிட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

முதலில் ஜீவா கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் நடிப்பார் என்று கூறப்பட்டது. தற்போது ரன்பீர் அல்லது ஷாகித் நடிக்கக்கூடும் என்று தெரிகிறது.Topics: ko, remake, hindi, kv anand, கோ, ரீமேக், இந்தி, கே வி ஆனந்த்

அரச வளங்களை தனியார் சுரண்டக் கூடாது

மேற்கு மாகாண சபை தலைவர் மாலபே தனியார் மருத்துவ பிரிவு மாணவர்களுக்கு ஹோமாகம அரச வைத்தியசாலையில் பயிற்சி பெற அனுமதித்ததுக்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அரச வளங்களை தனியார் சுரண்டுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்க செயலாளர் வைத்தியர். சந்திகா எப்பிடகடுவ தெரிவித்துள்ளார்.

குறித்த தீர்மானம் குறித்து சுகாதார அமைச்சருக்கு தெரிவித்து அதன் விளைவுகளையும் கூறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

5லட்சம் பணிதிற்காக கடத்த பட்ட தாய் மகள் ..!

5லட்சம் பணிதிற்காக கடத்த பட்ட தாய் மகள் ..!

கடந்த புதன் கிழமை Matugama பகுதியில் வைத்து மற்றும் அவரது 11வயது தாய் மகள்
மர்ம நபர்களினால் ஐந்து லட்சம் கேட்டு கடத்த பட்டுள்ளனர் .

பகுதிநேர வகுப்பு எடுத்த பின்னர் பெண் பிள்ளை காணமல் போயுள்ளனர் .

மனைவியின் தொலைபேசியில் இருந்து மூன்று தடவை கணவருக்கு தொலை பேசி அழைப்பு கிடைத்துள்ளது .

நாம் பத்திரமாக இருக்கின்றோம் எனவும் கடத்தல் காரர்கள் ஐந்து லட்சம் ரூபாய் கேட்பதாக தெரிவிக்க பட்டுள்ளது .

கணவர் விரைந்து காவல்துறையினரிடம் இவை பற்றி தெரிவித்துள்ளார் .

Meegahatenna முக்கிய பொலிஸ் பொறுப்பதிகாரி குறித்த விடயத்தினை இரண்டு காவல்துறை
அணியினர் ஊடாக தாய் மகளை பத்திரமாக மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் .

சக பொலிசாரின் வங்கிகணக்கில் 1லட்சம் கொள்ளையடித்த பொலிசார் கைது .!

சக பொலிசாரின் வங்கிகணக்கில் 1லட்சம் கொள்ளையடித்த பொலிசார் கைது .!

Karuwalagaswewa பகுதியில் உள்ள ஒரு அரசு வங்கியில் இருந்து ஒரு சக போலீஸ் வங்கி கணக்கில் இருந்து
ஒருலட்சம் ரூபா பணத்தினை மோசடி செய்துள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது .

குறித்த வங்கிக்கு சென்ற போலிஸ்காரர் சக காவல்துறை நண்பரின் வங்கி புத்தகத்தை
எடுத்து வந்து வங்கியில் அதே பொலிசாரின் அடையாள அட்டையினையும் காட்டி ஒருலட்சம் பணம்
முறைகேடாக எடுத்துள்ளார் .

குறித்த விபரங்களை அங்கு நின்ற கிழக்கிடம் தெரிவித்து பணத்தினை எடுத்து சென்றுள்ளார் .
உடன் சுதாகரித கிளாக் மனேஜருக்கு தெரிவித்ததை அடுத்து குறித்த பொலிசாரை வங்கி மேலாளர் அழைத்த போது அவர் பணத்துடன்
திருட்டில் ஈடுபட்டவர் தப்பி விட்டார் .

அங்கு பொறுத்த பட்டிருந்த காமரா வாயிலாக திருட்டில் ஈடு பட்ட பொலிஸ் காரர் அடையாளம் காணப்பட்ட நிலையில்
பிற காவல்துறையினரால் கைது செய்ய பட்டு சிறை வைக்க பட்டுள்ளார் .

குறித்த கொள்ளையில் ஈடுபட்டதினால் அவரது பணியும் பறிக்க பட உள்ளதாக தெரிவிக்க படுகின்றது ..!

ஆக இதுதாண்டா இலங்கை காவல்துறை ..வாழ்க ..!

இலங்கை வான்தளத்தில் இருந்து போலி பாஸ்போட்டில் இத்தாலி செல்ல முயன்ற இரானியர் கைது .

இலங்கை வான்தளத்தில் இருந்து போலி பாஸ்போட்டில் இத்தாலி செல்ல முயன்ற இரானியர் கைது .

இலங்கை கட்டுநாயக்க வான்தளத்தில் இருந்து போலி கடுவுசீட்டு மூலம்
இத்தாலிக்கு செல்ல இருந்த இரானியர் ஒருவர் குடிவரவு குடியகல்வு
அமைச்சினால் கைது செய்ய பட்டுள்ளார் .

குறித்த நபரை எதிர்வரும் இருபத்தி எழாம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு
நீர்கொழும்பு நீதவான் தெரிவித்துள்ளார் ..!

வாக்கு போட காசு கொடுக்கும் டக்கிளசு மாமா -இமெல்டா உதவியாம் ..!

வாக்கு போட காசு கொடுக்கும் டக்கிளசு மாமா -இமெல்டா உதவியாம் ..!

உள்ளுராட்சி தேர்தலில் மற்றுமொரு ஏமாற்று மோசடி ஒன்றை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா செய்து வருகிறார் என கடந்த காலங்களில் அனுபவப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஒவ்வொரு கிராமமாக அமைச்சர்கள் சகிதம் செல்லும் டக்ளஸ் தேவானந்தா ஒவ்வொரு சனசமூக நிலையம், விளையாட்டு கழகம், கோவில்கள் என காசோலைகளை அள்ளி வீசி வருகிறார்.
இந்த காசோலைகள் அனைத்தும் 26ஆம் 27ஆம் திகதிகள் இடப்பட்டே வழங்கப்படுகிறது என அதிர்வு இணையம் அறிகிறது.

இதேபோன்றுதான் கடந்த பொதுத்தேர்தல் நடைபெற்ற காலங்களிலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா செல்லாத ஊரில் இல்லை. கொடுக்காத காசோலை இல்லை. ஒவ்வொரு ஊருக்கும் காசோலைகளை வழங்கினார். கடந்த பொதுத்தேர்தல் 2010.ஏப்ரல் 8ஆம் திகதி நடைபெற்றது. டக்ளஸ் வழங்கிய சகல காசோலைகளும் 12ஆம் திகதியிடப்பட்டே வழங்கப்பட்டது.
காசோலைகளை பெற்றுக்கொண்ட அமைப்புக்கள், கோயில் நிர்வாகிகள் 12ஆம் திகதி வங்கியில் அக்காசோலைகளை வைப்பில் இட்ட போது அத்தனை காசோலைகளும் பணம் இல்லை என திரும்பி வந்தன. சில காசோலைகளுக்கு பணம் வழங்குவது நிறுத்தப்பட்டிருப்பதாக பதில் வந்தது (Stop Payment)

சீன நிறுவனம் ஒப்பந்தத்தை மீறியது - ஹர்ஷத சில்வா

சட்டவிரோத உடன்படிக்கை ஒன்றின் மூலம் அரசு எவ்வாறு காலி முகத்திடல் பகுதியில் 10 ஏக்கர் நிலப்பரப்பினை சீனா அமைப்புக்கு விற்பனை செய்தது என ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷத சில்வா கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும், அரசு இவ்வாறு 20 ஏக்கர் நிலப்பரப்பினை காலி முகத்திடல் பகுதியில் விற்பனை செய்வதற்கு தீர்மானித்து அவற்றில் 10 ஏக்கர் நிலப்பரப்பினை ஷங்கரி லா நிறுவனத்துக்கு விற்றமை தொடர்பில் எதுவித பிரச்சினைகளும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஷங்கரி லா நிறுவனத்தினதும் கத்திக் நிறுவனத்துனடைய கொடுப்பனவுகள் ஒரே நேரத்தில் இடம்பெற்றதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஷபக்ஷ் தெரிவித்ததில் எதுவித உண்மைகளும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு நிதி அமைச்சுக்கும் கத்திக் நிறுவனத்துக்கும் இடையில் பெப்ரவரி 15 திகதி கையொப்பம் இடம்பெற்ற உடன்படிக்கையில் காலி முகத்திடல் நிலப்பரப்பில் 10 ஏக்கர் நில விற்பனை கொடுப்பனவுக்கான முற்பணம் 50 மில்லியன் டொலர் பெப்ரவரி 28ம் திகதிக்கு முதல் வழங்ப்பட வேண்டும் எனவும் மிகுதி 86 மில்லியன் டொலர்கள் ஏப்ரல் 21ம் திகதிக்கு முன்னர் வங்கியில் வைப்பிலிட்டு உறுதி வழங்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், அவ்வாறு குறித்த திகதியில் கொடுப்பனவுகளை கொடுக்கத் தவறினால் உரிமையயை மீளப்பெற்று ஒப்பந்தம் இரத்து செய்யப்படும் என குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இது தொடர்பாக ஜூன் 22ம் திகதி பிரதி அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன பாராளுமன்றத்தில் சமர்பித்த ஆவணத்தில் 54.4 மில்லியன் டொலர்களே கொடுப்பனவு செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டதாக அவர் கூறினார்.

எப்படியிருப்பினும் ஒப்பந்தத்தை மீறிச் செயற்படும் குறித்த சீன நிறுவனத்துக்கு எவ்வாறு 10 ஏக்கர் நிலத்தினை விற்க முடியும் என ஹர்ஷத சில்வா கேள்வியெழுப்பியுள்ளார்.

15வயது சிறுமியை கடத்தும் முயற்சி முறியடிப்பு ..!

15வயது சிறுமியை கடத்தும் முயற்சி முறியடிப்பு ..! 

மல்லாவி சந்தைப் பகுதியில் 15 வயதுச் சிறுமியொருவரைக் கடத்திச் செல்ல எடுக்கப்பட்ட முயற்சி முறியடி க்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 நேற்று முன்தினம் முற்பகல் 10 மணியளவில் அனிஞ்சியன் குளத்தைச் சேர்ந்த இந்தச் சிறுமி பொருள்களை வாங்குவதற்காக மல்லாவிச் சந்தைக்கு வந்துள்ளார். சந்தைப் பகுதிச் சூழலை அண்டிய இடத்தில் இவர் வந்து கொண்டிருக்கும் போது மோட்டார்சைக்கிளில் வந்த நபரொருவர் இந்தச் சிறுமியின் கையைப் பிடித்து இழுத்ததுடன் தம்மோடு வருமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் சிறுமி அந்த நபருடன் தர்க் கத்தில் ஈடுபட்டார். இதனை அருகேயுள்ள இராணுவ முகாமிலிருந்து நீர் எடுக்க வந்த இராணுவத்தினர் கண்டுள்ளனர். இதை அவதானித்த மோட்டார் சைக்கிளில் வந்த நபர் வேகமாக ஓடித் தப்பியுள்ளார். உடனடியாக இராணுவத்தினர் மல்லாவி இராணுவப் பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸாருக்கு அறிவித்ததன் பேரில் இராணுவப் பொறுப்பதிகாரி உட்படப் படையினரும், பொலிஸாரும் தேடு தலை மேற்கொண்டனர். குற்றவாளி இதுவரை பிடிபடவில்லை. சிறுமியின் வாக்குமூலத்தை மல்லாவிப் பொலிஸார் பதிவுசெய்துள்ளனர். இந்தச் சம்பவம் இந்தப் பகுதியிலுள்ள மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளமையை அவதானிக்க முடிந்தது.

துயர் துடைப்பு மாத நிகழ்வுகள்

துயர் துடைப்பு மாத நிகழ்வுகள்

 

இத்துடன் தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் வருடாந்த துயர் துடைப்பு மாத,  நிகழ்வுகளைப் பற்றிய ஊடகங்களிற்கான சமூக அறிவித்தலையும், நேயர்களுக்கான கடிதம் மற்றும் நிதி அன்பளிப்புப் படிவங்களையும் இணைத்து அனுப்பியுள்ளோம்.  இம்மின்னஞ்சலைப் பெறும் ஊடக நண்பர்களே, தயவு செய்து உங்கள் ஊடகங்களின் ஊடாக, துயர் துடைப்பு மாத நிகழ்வுகள் நடைபெற்று முடியும் வரை தயவுகூர்ந்து அவுஸ்திரேலிய வாழ் தமிழ் மக்களுக்கு முழுமையான உங்கள் ஆதரவை தெரியப்படுத்துமாறு அன்போடு கேட்டுக் கொள்கின்றோம்.

 

நீங்களும், தனிப்பட்ட முறையிலும் இந்நிகழ்வுகளைப் பற்றி தெரிந்த உங்கள் உறவுகளிற்கு தெரியப்படுத்தி கறுப்பு ஜுலை  நினைவாக நடைபெறும் 15வது இரத்த தானம்(6th August) நிகழ்விலும் பங்கெடுத்து கொள்ளுவதோடு, தாயகத்து தமிழ் மக்களின் தற்போதைய துயர் நிலை அறிந்து, தமிழர் புனர்வாழ்வுக் கழகம் முன்னெடுத்திருக்கும் மனிதாபிமான சேவைகளுக்குத் தொடர்ந்தும் ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்கி தாராளமனதுடன் நிதிப்பங்களிப்பால் துயர் துடைக்க முன்வருமாறு பணிவன்புடன் அவுஸ்ரேலிய தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் வேண்டிக்கொள்கின்றனர்.

 

கடந்த 22 வருடங்களாக இடம்பெற்ற மனிதாபிமான சேவைகளுக்குத் தொடர்ந்தும் ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்கிய அனைத்து அன்பளிப்பாளர்களுக்கும், ஊடகத்தினருக்கும் புனர்வாழ்வுக் கழகத் தொண்டர்கள் தமது நெஞ்சார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.  நன்றி.

 

 

அன்புடன்,

ரமேஷ்

(த.பு.கழகம் சார்பில்)

தாய் மகனுக்கு அசிட் வீச்சு .சந்தேக நபர் தப்பி ஓட்டம் ..!

தாய் மகனுக்கு அசிட் வீச்சு .சந்தேக நபர் தப்பி ஓட்டம் ..! Mandawala in கம்பஹா பகுதியில் பாடசாலை விட்டு மகனும் வீடு வந்து கொண்டிருந்தஇளம் தாயும் அவரது பத்து வயது மகன் மீதும் ஊந்துருளியில் வந்த மர்ம நபர் ஆசிட்டைவீசிவிட்டு தப்பை ஓடியுள்ளார் .  பல எரி காயங்களிற்கு உள்ளான நிலையில் இருவரும் கம்பகா மருத்துவமனையில்அனுமதிக்க பட்டுள்ளனர் . புகொட  காவல்துறையினர் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர் .>!

சனல் 4வுக்கு 71 CDகள் கொடுத்த லண்டன் தமிழர் கைது -!

சனல் 4வுக்கு 71 CDகள் கொடுத்த லண்டன் தமிழர் கைது -! பிரித்தானியாவில் இருந்து இயங்கும் சனல் தொலை காட்சிக்குஎழுபத்தி ஒரு இலங்கை அரசின் கொலைகள காட்சி காணொளிகளைவழங்கிய Kandavanam Vediswaran  என்ற நபர் கண்டியில் கைது செய்ய பட்டார் . இவர் தற்போது நீதி மன்றில் நிறுத்த  பட்டு சிறை தண்டனை வழங்க பட்டுள்ளது ..! ஆனால் குறித்த நபருக்கும் சனல் 4தொலை காட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென நம்மபிகியான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .இது திட்டமிடப்பட்டு சிங்கள அரசினால் சனல் போவினை முடக்க மேற்கொள்ள படும் திட்டமிடப்பட்ட கைதுநடவடிக்கை என தெரிவிக்க பட்டுள்ளது ..!

ஜாதிக ஹெல உறுமய பிக்கு மீது துப்பாக்கி சூடு -மயிரிழையில் உயிர்தப்பினார் ..!

ஜாதிக ஹெல உறுமய பிக்கு மீது துப்பாக்கி சூடு -மயிரிழையில் உயிர்தப்பினார் ..!எம்பிலிப்பிட்டிய பிட்டிய பகுதியில்  ஜாதிக ஹெல உறுமய  உறுப்பினரானபுத்த பிக்கு மீது ஊந்துருளியில் வந்த இரு துப்பாக்கி தாரிகள்அவர் தங்கியிருந்த அறை மீது தாக்குதலை நடத்தியுள்ளனர் .ஆயினும் அந்த குண்டுகளில் இருந்து விலத்திய அவர் தப்பித்து கொண்டார் .குண்டுகள் யன்னல் மற்றும் கதவினை தாக்கி சேதமாக்கியுள்ளன .இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையில் முறைப்பாடு செய்ய பட்டுள்ளது .இதற்கிடையில், Embilipitiya நகரில் யூ.என்.பி. மூன்று தேர்தல் அலுவலகங்கள் முந்தைய இரவு தாக்குதலுக்குஉள்ளாகியுள்ளன  .






புலமைபரிசிலில் சித்திபெற்ற 6 மாணவர் ஜப்பான் விஜயம்

ஆசிய பசுபிக் சிறுவர்கள் இணைப்புத் திட்டத்தின் கீழ் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் கடந்தாண்டு அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் ஆறுபேர் ஜப்பானுக்கான பயணத்தை இன்று கொள்ளவுள்ளனர்.

கடந்த மூன்று மாதங்களாக இவர்கள் ஜப்பான் மொழியை கொழும்பில் கற்றதுடன் ஜப்பான் நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில் அந்த நாட்டின் பழக்கவழக்கங்களை அறியவும் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் இருந்து ஒரு மாணவியும் ஏனைய இடங்களைச் சேர்ந்த ஐந்து மாணவ, மாணவிகளுமாக மொத்தம் ஆறு மாணவர்கள் இந்தச் சுற்றுலாவில் இடம் பெற்றுள்ளார்கள்.

இவர்களுடன் முகாமையாளராக ஸ்ரீயாணி ஹேவாஹடம் உதவியாளர்களாக ரி.எம். ரிலக்கமல் முதுஹம டில்சான் ஜெயதிலகவும் செல்லவுள்ளார்கள்.

இந்த அணியில் யாழ்ப்பாணம், உடுவில் மகளிர் கல்லூரியில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்தவரும் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியில் கல்வி கற்பவருமான தாரணி இந்திரன், களுத்துறை முஸ்லிம் பெண்கள் மகாவித்தியாலய பசிதா பாறுக், கொழும்பு றோயல் கல்லூரியைச் சேர்ந்த நவீன் ஆர்.பிறேமரத்தினா, கொழும்பு ஆனந்தாக் கல்லூரியைச் சேர்ந்த சானுஜா எதிரிசிங்கா, காலி மகிந்தா வித்தியாலயத்தைச் சேர்ந்த லகித் நவவோதயா, கொழும்பு விசாக வித்தியாலயத்தைச் சேர்ந்த ஜே. ஜீ.பி.களனி பயிசரா ஆகியோர் இந்த சுற்றுலாவுக்குச் செல்கின்றனர்.

இவர்கள் ஒரு மாத காலம் ஜப்பானில் தங்கி நின்று பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொத்துவில்லில் விபத்து : இருவர் படுகாயம்

பொத்துவில் கோமாரி பிரதேசத்தில் கதிர்காமத்தில் இருந்து பயணிகளுடன் அக்கரைப்பற்றுக்கு சென்ற இலங்கை போக்குவரத்து சபை பஸ் வண்டி இன்று அதிகாலை வீதியை விட்டு விலகி இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் படுகாயமடைந்தள்ளனர் என பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.

பொத்துவில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டி கதிர்காமத்திலிருந்து புதன் கிழமை இரவு 11.30 பயணிகளுடன் அக்கரைப்பற்றுக்கு சென்றபோது இன்று அதிகாலை 3.30 மணியளவில் கோமாரி முருகன் ஆலயத்திற்கு முன்னால் வீதியை விட்டு விலகி மின்சார தூண்களுடன் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் சாரதியும் சிறுமி ஒருவொரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

மனைவியை கொலை செய்த கணவன் : குருநாகலையில் சம்பவம்

குருநாகலையில் தித்தவல்ல தருமபால வீதியில் உள்ள வீட்டொன்றில் மனைவியை கொலை செய்து பொலித்தீன் உரைமூடையில் கட்டி கட்டிலின் கீழ் மறைத்து வைத்துவிட்டு கணவன் தலைமறைவாகியுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து சடலம் மீட்கப்பட்டுள்ளது. பொலிஸார் மேற்கொண்ட முதந்கட்ட விசாரணையின் மூலம் கணவனுக்கும் மனைவிக்கும் பிணக்கு அதிகம் காணப்பட்டமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கணவன் தலைமறைவாகி உள்ளதை அடுத்து அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுண்டக்காய் நாட்டில் மக்கள் எப்போதும் ஆதிவாசிகளாக இருக்க மாட்டர் - சங்கரி

நம் நாடு ஒரு சுண்டக்காய் நாடு. அதில் ஒரு சிறு பகுதியே வட மாகாணமாகும். வடமாகாணத்தின் ஒரு சிறு பகுதியிலேயே உள்ளூராட்சி சபைத் தேர்த்தல் நடைபெற உள்ளது. மக்களை இஷ்டம் போல் செயற்படவிடாது, நாம் எல்லோரும் ஆதிவாசிகள் என்ற நினைப்பிலேயே அரசும், அரசின் கையாட்களும் செயற்படுவது வேடிக்கையானதும் வேதனையை தரும் விடயமாகும் என தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் வீ.ஆனந்தசங்கரி அறிக்கை விடுத்துள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

வடக்கே வசந்தம் வீசவில்லை. மாறாக அமைதிப்புயல் வீசுகின்றது என்று ஐனாதிபதிக்கே நான் பலதடவை கூறியுள்ளேன். உண்மையும் அதுவே. நடந்து முடிந்தது போர் அல்ல. போர் என்பது இரு நாடுகளுக்கு இடையில் நடப்பது. இது உள்ளூர் கிளர்ச்சியை அடக்க அரசு அதனை போராகப் பயன்படுத்தியது. நோக்கம் நிறைவேறிவிட்டது. அரசு கண்ணியமான முறையில் தனது படைகளை வெளியேற்றியிருக்க வேண்டும்.

அதைவிடுத்து தொடர்ந்து இராணுவத்தை வடக்கு கிழக்குப் பகுதிகளிலேயே நிலைகொள்ள வைத்து மக்களின் அடிப்படை சுகந்திரத்தை அனுபவிக்க இடமளிக்காது மூலை முடுக்கெல்லாம் தற்காலிகமாக நிலைகொண்டிருந்த இரானுவத்தை நிரந்தரமாக நிலை கொள்ள வைத்து மக்களுக்கு நிரந்தர பயத்தையும், பீதியையும் ஏற்பபடுத்த எண்ணுவது அப்பாவி மக்களுக்கு அரசும், அரசுடன் இணைந்து செயற்படும் எம்மவரில் சிலரும் செய்யும் பெருந்துரோகமாகும்.

யுத்தம் முடிந்து இரண்டு ஆண்டுகள் கடந்தும் இன்னும் மக்கள் தமது வீடுகளில் நிம்மதியாக வாழ முடியவில்லை. அடிப்படை வசதிகள் கூட ஏற்படுத்தப்படவில்லை. இன்னும் மூன்று நேர உணவும் உண்ண வழியில்லாமல் பலர் பசியுடன் வாழ்கின்றார்கள். தமது உடைமைகளை முற்றும் இழந்த நிலையிலே, அரசு கொடுத்துவந்த நிவாரணங்களும் நிறுத்தப்பட்டு அனேகர் பிச்சை எடுக்கும் நிலையில் உள்ளார்கள்.

தினமும் நாலு திறப்பவிழா, நாலு அமைச்சர்களின் பவனி என்று மக்களை இங்கும் அங்கும் அலைத்து பஸ் வண்டிகளில் ஏற்றிச் சென்று புரியாணி சாப்பிட வைத்து அனுப்பப்படும் அப்பாவிகள், இராணுவத்தின் கட்டளைகளுக்குப் பயந்து தமது உழைக்கும் வாய்ப்பை இழந்து அலைக்களிக்கப்படுகின்றார்கள்.

சில பிரமுகர்கள் தம்மை மட்டும் நேசி என்று கேட்காது தாம் வளர்க்கும் செல்லப்பிராணிகளையும் நேசி என்கின்றார்கள். நம் மக்கள் இதுவரை காலமும் அனுபவித்ததிலும் பார்க்க இன்று படும் துன்பம் மிகப் பெரிதாகும்.

நடக்க இருக்கும் தேர்தல் வெறும் உள்ளூராட்சி சபைத் தேர்தல். இதற்கு ஐனாதிபதியோ, அமைச்சர்களோ படையெடுக்க வேண்டிய அவசியம் இல்லை. வயல் விதைப்பது, விதை நெல்லு இதுதான் என காட்டுவது, இப்படித்தான் உழுவது என்பதெல்லாம் நம் மக்களுக்கு கற்றுதர வேண்டியளவிற்கு நாம் ஆதிவாசிகள் அல்ல.

உண்மையாக ஐனாதிபதி அவர்கள் நம் மக்களுக்கு நன்மை செய்ய விரும்பினால் தனது அமைச்சர் பட்டாளத்தை உடனடியாக திரும்ப அழைத்து, திறப்பு விழாக்கள், அடிக்கல் நாட்டுதல் போன்ற வைபவங்களை நிறுத்தச் சொல்லி அதற்குச் செலவாகும் பெரும் தொகையை வறுமையாலும் பசியாலும் வாடும் நாடு முழுவதிலும் பரவியுள்ள சிங்கள, தமிழ், இஸ்லாமிய மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்குச் செலவிடுவதே நியாயமானதும், பொருத்தமானதுமாகும்.

இது அரச தலைவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட வேண்டிய விடயமகும். சுண்டைக்காய் அளவான எமது நாட்டுக்கு எவரும் சதி செய்யவுமில்லை. அதன் முன்னேற்றத்தை தடுக்கவுமில்லை. அதற்கு மாறாக அத்தனை நாடுகளும் வாரி வாரி வழங்குகின்றன. நாம் சரியாக நடந்தால் எவரின் சதிபற்றியும் நாம் கவலைப்படத் தேவையில்லை.

தேர்தலிற்கான பணிகளை பொலிஸாரிடம் ஒப்படைத்து விட்டு தேர்தல் முடியும் வரை இராணுவம் தேர்தல் சம்பந்தமான தலையீடுகளை மேற்கொள்ள வேண்டியதில்லையென படையினருக்கு கடுமையக எச்சரிக்க வேண்டும். விடுதலைப் புலிகளின் முக்கிய பொறுப்பில் இருந்தவர்கள் பலர் இன்று அமைச்சர்களின் இணைப்பாளர்களாகவும், ஆளும் கட்சியின் வேட்பாளர்களாகவும் உள்ளனர்.

இவர்களில் சிலர் கடந்த கால குற்றச் செயல்களிற்காக சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டும் அவர்கள் சேர்த்து வைத்துள்ள சொத்துகள் சம்பந்தமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். எனவே மக்கள் தான் அரசு தரப்பை பார்த்து பயப்பட வேண்டுமே தவிர, அரசாங்கம் பயப்படத் தேவையில்லை. அரசிடம் படையினரும், முன்னாள் புலி உறுப்பினர்களுமே உள்ளனர்.

தேர்தல் சம்பந்தமான சகல விடயங்களும், வாக்காளர் மற்றும் அதிகாரிகள் ஆகியோரின் பாதுகாப்பு உட்பட அனைத்து நடவடிக்கைகளும் அவசியமேற்படின் பிற மாநிலங்களிலிருந்து மேலதிக பொலிஸாரை வரவழைத்து பொலிஸ் அதிகாரிகளின் பொறுப்பில், கையளித்து இராணுவம் முற்று முழுதாக முடக்கிவைக்கப்பட வேண்டும்.

குருநாகலையில் விபத்து: ஒருவர் பலி மூவர் காயம்

குருநாகலை பொட்டுஹெர பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் மூவர் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று கோண்டதிலேயெ விபத்து சம்பவித்துள்ளது. சம்பத்தில் காயமடைந்த நால்வரையும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயெ ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் 36 வயதுடைய காமினி பதிராஜா என்பவரே உயிரிழந்தவர் ஆவார். சம்பவம் தொடர்பில் குருநாகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரானியப் பிரஜை இலங்கையில் கைது

போலி கடவுச்சீட்டு மூலம் இத்தாலி செல்ல முயன்ற ஈரான் நாட்டு பிரஜை ஒருவரை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய குற்றப்புலனாய்வுத் துறையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஈரானிய நாட்டு பிரஜை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து குறித்த நபரை ஜூலை 26ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மும்பை குண்டுவெடிப்பு: விருது நிகழ்ச்சியை நிறுத்திய ஐஸ்வர்யா

டெல்லி: மும்பை தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம் என்று ஐஸ்வர்யா ராய் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை மும்பையின் முக்கியப் பகுதிகளில் நடந்த வெடிகுண்டு தாக்குதல்களால் பாலிவுட் அதிர்ச்சி அடைந்துள்ளது. தாயாகப்போகும் ஐஸ்வர்யா ராயும் பேரதிர்ச்சி அடைந்துள்ளார். ஐஸ்வர்யா கணவர் அபிஷேக்குடன் நேற்று டெல்லிக்கு சென்றிருந்தார்.

அங்கு ஐஸ்வர்யாவுக்கு பிரெஞ்சு அரசு நேற்று விருது வழங்குவதாக இருந்தது. இந்த தாக்குதல் சம்பவம் பற்றி கேட்டவுடன் இந்த நிகழ்ச்சியை தள்ளிவைக்குமாறு ஐஸ்வர்யா கேட்டுக் கொண்டார்.

இது குறித்து ஐஸ்வர்யா ராய் கூறியதாவது,

மும்பையில் நடந்த வெடிகுண்டு தாக்குதல்கள் குறித்து கேள்விப்பட்டவுடன் அதிர்ச்சி அடைந்தோம். இந்த தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும், அவர்கள் குடும்பத்தினருக்காவும் நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம். இந்த நேரத்தில் இந்தியர்களாகிய நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து நம்மை யாரும் அசைத்துவிட முடியாது என்று தீவிரவாதத்தை ஊக்குவிப்பவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் நியாயம் கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

நான் விருது வாங்குவதற்காக டெல்லிக்கு வந்தேன். ஆனால் அதற்கு இது சரியான நேரம் அல்ல. இந்த விழாவை ஒத்திவைக்க வேண்டும் என்று பிரெஞ்சு தூதரை கேட்டுக் கொள்வது தான் சரி என்று நானும், என் குடும்பத்தாரும் நினைத்தோம் என்றார்.

இந்த விழாவில் கலந்து கொள்ள அமிதாப்பும் டெல்லிக்குச் சென்றிருந்தார். ஆனால் மும்பை சம்பவம் பற்றி கேட்டதும் அவர் விழாவிற்கு செல்லவில்லை.

அமிதாப்பின் டுவீட்:

மும்பையில் வெடிகுண்டு தாக்குதல்கள்...!!கடவுளே! மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று நம்புகிறேன்! என்று டுவிட்டரில் எழுதியிருந்தார்.

மற்ற நடிகர்-நடிகைகள் மற்றும் திரைத்துறையினரும் தங்கள் அனுதாபத்தை டுவிட்டரில் தெரிவித்திருந்தனர்.

தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நான் வருந்துகிறேன். கோழைத்தனமான தாக்குதல்கள் கண்டனத்திற்குரியது என்று இயக்குனர் மாதுர் பந்தர்கர் டுவிட்டரில் கூறியுள்ளார்.

நடிகர் ஷஹீத் கபூரின் டுவீட்:

மும்பையில் 3 வெடிகுண்டு தாக்குதல்கள்... தயவு செய்து வீடுகளுக்கச் செல்லுங்கள்!!!

பிரியங்கா சோப்ரா டுவீட்:

தயவு செய்து யாரும் வதந்திகள் மற்றும் உறுதிபடுத்தாத செய்திகளைப் பரப்பி மக்களை பீதியடையச் செய்ய வேண்டாம்.

ரித்தேஷ் தேஷ்முக் டூவீட்:

தாக்குதல்கள் பற்றி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இதி்ல பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள். பத்திரமாக வீட்டில் இருங்கள்.

சோனம் கபூர் டுவீட்:

மும்பையில் உள்ளவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று நம்புகிறோம். வீட்டில் இருங்கள், பத்திரமாக இருங்கள்.

அனுபம் கேர் கூறியதாவது,

மும்பை தாக்குதல்கள்: கோபம், ஏமாற்றம் மற்றும் உதவியின்மை பதில் அல்ல. அனைவருக்காகவும் பிரார்த்திக்கிறேன்.Topics: mumbai blast 2011, aishwarya rai, mumbai, ஐஸ்வர்யா ராய், பிரார்த்தனை, குண்டுவெடிப்பு

ரூ.45 லட்சம் கேட்டு மிரட்டல்: இணையதள ஆசிரியர் மீது நடிகர் வடிவலு போலீசில் புகார்

சென்னை: ரூ 45 லட்சம் கேட்டு தன்னை இணையதள ஆசிரியர் ஒருவர் தன்னை மிரட்டுவதாக சென்னை மாநகர போலீசில் புகார் செய்துள்ளார் நடிகர் வடிவேலு.

நடிகர் வடிவேலுவின் மேனேஜர் சங்கர் நேற்று போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அதில், "ரூ.45 லட்சம் பணம் கேட்டு, வடிவேலுவை இணையதள ஆசிரியர் ஒருவர் போனில் பேசி மிரட்டுகிறார். மலேசியாவில் கலைநிகழ்ச்சி நடத்த ஒப்புக்கொண்டுவிட்டு வரவில்லை என்றும் இதற்காக பணம் தரவேண்டும். இல்லாவிட்டால் இணைய தளத்தில் தவறான தகவல்களை வெளியிட்டு அசிங்கப்படுத்திவிடுவேன் என்றும் மிரட்டல் நபர் அடிக்கடி பேசுகிறார். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புகார் மனு மீது விசாரணை நடத்த விருகம்பாக்கம் போலீசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.Topics: vadivelu, website editor, இணையதள ஆசிரியர், வடிவேலு, மிரட்டல்

ரீமாசென் வங்க மொழியில் தாசியாக நடித்த படத்துக்கு ஏ சர்டிபிகேட்

தமிழ் சினிமாக்களில் முன்பு பிசியாக நடித்து வந்த ரீமா சென், தனது தாய் மொழியான வங்கத்தில் தாசி வேடத்தில், படுக்கை அறைக்காட்சிகள் உள்ளிட்ட கவர்ச்சிக் காட்சிகளில் நடித்த படம் ஒன்று தமிழுக்கு இளவரசி என்ற பெயருடன் மொழிமாற்றமாகி வருகிறது.

இந்தப் படம் 2004ம் ஆண்டு வங்கத்தில் வெளியான படம். படத்தின் பெயர் இதி ஸ்ரீகாந்தா. அப்படியென்றால், தங்கள் உண்மையுள்ள, ஸ்ரீகாந்தா என்று பொருள். இப்படத்தைத்தான் தற்போது இளவரசி என்ற பெயரில் மொழிமாற்றம் செய்துள்ளனர். படத்தைப் பார்த்து பயந்து போன சென்சார் போர்டு ஏ சர்டிபிகேட் கொடுத்துள்ளதாம். காரணம் படத்தில் ரீமா சென் நடித்த ஒரு படுக்கை அறைக் காட்சி.

கவர்ச்சிகரமான வேடங்களில் நடித்து பரபரப்பை ஏற்படுத்துவது இக்கால ஹீரோயின்களின் புதிய பழக்கமாகி வருகிறது. குறிப்பாக பாலுணர்வைத் தூண்டும் வகையிலான வேடங்களில் முன்னணி நடிகைகள் சிலர் நடித்து பரபப்பை ஏற்படுத்தி விடுகிறார்கள்.

காமசூத்ரா படத்தில் ரேகா படு கவர்ச்சிகரமாக நடித்து பயமுறுத்திறார். ஃபயர் படத்தில் நந்திதா தாஸ் ஓரினச்சேர்ககையில் ஈடுபடும் பெண்ணாக வந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஐஸ்வர்யா ராயே கூட ஒரு படத்தில் படு கவர்ச்சிகரமாக நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் நாயகிகள் யாரும் இப்படி நடித்ததில்லை என்றாலும் அவர்கள் தகுதிக்கேற்ற வகையில் கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார்கள்.

அந்த வகையில் ரீமா சென் நடித்த படம்தான் இந்த இதி ஸ்ரீகாந்தா. இதில் தாசி வேடத்தில் நடித்துள்ளார் ரீமா சென். தாசி வாழ்க்கையில் பல சித்திரவதைகளை சந்திக்கும் அவர் கடைசியில் அதை விட்டு விலகி சாதாரண குடும்ப வாழ்க்கைக்குத் திரும்புகிறார்.

படத்தில் ஒரு படுக்கை அறைக் காட்சியில் மிகவும் கவர்ச்சியாக நடித்துள்ளார் ரீ்மா சென். இதைப் பார்த்த சென்சார் போர்டு உறுப்பினர்கள் படத்துக்கு ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனராம்.Topics: ரீமா சென், இதி ஸ்ரீகாந்தா, இளவரசி, reema sen, bengali movie, iti srikantha, ilavarasi

திருமணம் முடிவாகட்டும், அறிவிக்கிறோம்: கரீனா

தானும், சைப் அலிகானும் பிரியவில்லை என்றும், திருமணம் முடிவானதும் அறிவிப்பதாக நடிகை கரீனா கபூர் தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டின் முன்னணி கதாநாயகி கரீனா கபூரும், நடிகர் சைப் அலி கானும் நீண்டடடடட காலமாக காதலிப்பது அனைவரும் அறிந்ததே. அன்மையில் இருவருக்கும் லடாய், அதனால் பிரிந்துவிட்டனர் என்று செய்திகள் வந்தன.

இந்த செய்தி காற்றோடு கலந்து கரீனா காதுக்கும் சென்றுள்ளது.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த கரீனாவை நிருபர்கள் மொய்த்துவிட்டனர். அப்போது கரீனாவிடம் சைப் அலி கானை பிரிந்துவிட்டீர்களாமே என்று கேட்க அதற்கு அவர் நாங்கள் இருவரும் ஒன்றாகத் தான் இருக்கிறோம். பிரிந்துவிட்டோம் என்று வரும் செய்திகள் எல்லாம் வெறும் வதந்தி. எங்களுக்கு திருமணம் நிச்சயமானதும், அனைவருக்கும் அறிவிப்போம் என்றார்.

கடந்த ஆண்டே கரீனாவும், சைப் அலி கானும் திருமணம் செய்துகொள்ளப்போவதாக செய்திகள் வந்தன. ஆனால் அடுத்த ஆண்டும் பிறந்துவிட்டது, இன்னும் திருமணம் முடிந்தபாடில்லை.

எப்பம்மா அறிவிப்பீங்க?Topics: kareena kapoor, saif ali khan, marriage, கரீனா கபூர், சைப் அலி கான், திருமணம்