நியூசிலாந்து நாட்டில் அடைக்கலம் தேடி சென்ற 87 இலங்கை தமிழர்களை இந்தோனேஷியா அரசு பிடித்து வைத்திருக்கும் விவகாரத்தில் இந்திய பிரதமர் தலையிட வேண்டும் என மதிமுக., பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 12ம் திகதி இலங்கையிலிருந்து ஒரு படகில் 87 இலங்கை தமிழர்கள் அடைக்கலம் தேடி நியூசிலாந்து நாட்டிற்கு சென்றனர்.
அவர்கள் இந்தோனேஷிய கடல் எல்லையில் நுழைந்த போது அத்துமீறி நுழைந்ததாக கூறி அந்நாட்டு அரசு அவர்கள் பிடித்து மீண்டும் இலங்கை திரும்ப வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் இதுகுறித்து இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வைகோ எழுதிய கடிதத்தில், இலங்கை தமிழர்கள் 87 பேரும் சட்டவிரோதமாக அங்கு செல்ல முயற்சிக்க வில்லை. சர்வதேச விதிகளின்படி அடைக்கலம் கோருவது அவர்களின் உரிமை.
இவ்விவகாரத்தில் பிரதமர் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி இந்தோனேஷியாவிலிருந்து அவர்களை விடுவிக்க உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
0 comments:
Post a Comment