Thursday, July 14, 2011

மனைவியை கொலை செய்த கணவன் : குருநாகலையில் சம்பவம்

குருநாகலையில் தித்தவல்ல தருமபால வீதியில் உள்ள வீட்டொன்றில் மனைவியை கொலை செய்து பொலித்தீன் உரைமூடையில் கட்டி கட்டிலின் கீழ் மறைத்து வைத்துவிட்டு கணவன் தலைமறைவாகியுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து சடலம் மீட்கப்பட்டுள்ளது. பொலிஸார் மேற்கொண்ட முதந்கட்ட விசாரணையின் மூலம் கணவனுக்கும் மனைவிக்கும் பிணக்கு அதிகம் காணப்பட்டமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கணவன் தலைமறைவாகி உள்ளதை அடுத்து அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment