போலி கடவுச்சீட்டு மூலம் இத்தாலி செல்ல முயன்ற ஈரான் நாட்டு பிரஜை ஒருவரை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய குற்றப்புலனாய்வுத் துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஈரானிய நாட்டு பிரஜை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து குறித்த நபரை ஜூலை 26ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
0 comments:
Post a Comment