தமிழ் சிறுமி மீது துப்பாக்கி பிரோயோகம் மேற்கொண்ட நபரின் சகோதரன் சுடப்பட்டார் ..!
பிரித்தானியாவில் வாழ்கின்ற 5 வயதுக்குழந்தையான துஷா மீது துப்பாக்கிச்சூடு மேற்கொண்டதாக கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் சகோதரரை சுட்டது தொடர்பில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சூட்டுக்காயத்திற்கு உள்ளான ஜாடன் கடந்த இரவு பொலிஸாரின் பாதுகாப்புக்கு மத்தியிலேயே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். உடல்நிலை தீவிரமாக இருக்கும் அதேவேளை சீராக காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை தெற்கு லண்டனில், கென்னிங்டனில் உள்ள உணவகத்திற்கு வெளியில் ஜாடன் மெக்கல் 3 தடவை துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார். துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான ஜாடன் உடனடியாக தனது நண்பனுக்கு தொலைபேசி மூலம் தொடர்பை ஏற்படுத்தி தான் துப்பாக்கிச்சூட்டுக்குள்ளாகியதாக தெரிவித்துள்ளார்.
மறைந்திருந்து துப்பாக்கிச்சூடு மேற்கொண்ட இரு இளைஞர்களும் மோட்டார் சைக்கிளில் தப்பியோடிவிட்டனர். சிறுமியான துஷா கமலேஸ்வரன் கடந்த மார்ச் மாதம் ஸ்டொக்வெல் நகருக்கு அருகில் உள்ள சுப்பர் மார்க்கட்டில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கானார்.
தற்போது சுடப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற ஜாடன் மெக்கலின் சகோதரனான 19 வயதுடைய அந்தனி மெக்கல் துஷா மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டமையால் கொலைக்குற்றச்சாட்டின் பேரில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச்சூட்டில் சிறுமி துஷா கமலேஸ்வரனுக்க நெஞ்சுப்பகுதியிலும், 35 வயது ரோஷன் செல்வக்குமாருக்கு தலையிலும் காயங்கள் ஏற்பட்டது. தற்போது துஷாவுக்கு இடுப்புக்கு கீழே செயலிழந்து காணப்படுகிறது.
ஜாடன் மெக்கல் மீது துப்பாக்கிப் பிரயோம் மேற்கொண்ட சந்தேகநபர்களை கைது செய்வதற்க 30 பேர் கொண்ட காவல் துறையினர் அவர்கள் தங்கியிருந்த இடத்தை சுற்றிவளைத்துள்ளனர். அங்கிருந்து 7 பேரையும் பொலிஸார் கைது செய்தனர்.
0 comments:
Post a Comment