Thursday, July 14, 2011

திருமணம் முடிவாகட்டும், அறிவிக்கிறோம்: கரீனா

தானும், சைப் அலிகானும் பிரியவில்லை என்றும், திருமணம் முடிவானதும் அறிவிப்பதாக நடிகை கரீனா கபூர் தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டின் முன்னணி கதாநாயகி கரீனா கபூரும், நடிகர் சைப் அலி கானும் நீண்டடடடட காலமாக காதலிப்பது அனைவரும் அறிந்ததே. அன்மையில் இருவருக்கும் லடாய், அதனால் பிரிந்துவிட்டனர் என்று செய்திகள் வந்தன.

இந்த செய்தி காற்றோடு கலந்து கரீனா காதுக்கும் சென்றுள்ளது.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த கரீனாவை நிருபர்கள் மொய்த்துவிட்டனர். அப்போது கரீனாவிடம் சைப் அலி கானை பிரிந்துவிட்டீர்களாமே என்று கேட்க அதற்கு அவர் நாங்கள் இருவரும் ஒன்றாகத் தான் இருக்கிறோம். பிரிந்துவிட்டோம் என்று வரும் செய்திகள் எல்லாம் வெறும் வதந்தி. எங்களுக்கு திருமணம் நிச்சயமானதும், அனைவருக்கும் அறிவிப்போம் என்றார்.

கடந்த ஆண்டே கரீனாவும், சைப் அலி கானும் திருமணம் செய்துகொள்ளப்போவதாக செய்திகள் வந்தன. ஆனால் அடுத்த ஆண்டும் பிறந்துவிட்டது, இன்னும் திருமணம் முடிந்தபாடில்லை.

எப்பம்மா அறிவிப்பீங்க?Topics: kareena kapoor, saif ali khan, marriage, கரீனா கபூர், சைப் அலி கான், திருமணம்

0 comments:

Post a Comment