Thursday, July 14, 2011

நயன்தாராவை நான் கூப்பிடவில்லை: சிம்பு மறுப்பு

Thursday, Jul 14, 2011சில தினங்களுக்கு முன்பு சிம்பு நடிக்கும் ‘ஒஸ்தி’ படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு குத்தாட்டப் பாடலுக்கு, நடிகை நயன்தாராவை சிம்பு ஆட அழைத்ததாக செய்தி வெளியானது. இதுகுறித்து சிம்புவிடம் தொடர்பு கொண்டு கேட்டதற்கு ‘நான் யாரையும் கூப்பிடவில்லை’ என்று மறுத்திருக்கிறார்.

ஹிந்தியில் அபார வெற்றி பெற்ற ‘தபாங்’ படத்தினை தமிழில் ‘ஒஸ்தி’ என்ற பெயரில் ரீமேக் செய்து வருகிறார்கள். சல்மான்கான் நடித்த வேடத்தில் நடித்த, சிம்பு நடிக்கிறார். ஹிந்தி படத்தில் ஒரு குத்தாட்டப் பாடல் இடம்பெற்றிருக்கிறது.

அதே பாடல் தமிழ் ரீமேக்கிலும் இடம் பெறுகிறது. அந்த பாடலுக்கு குத்தாட்டம் போட வரும்படி நயன்தாராவை சிம்பு அழைத்ததாக செய்தி வெளியாகின. இதுகுறித்து சிம்புவிடம் கேட்டதற்கு;

“அந்த பாடலை இன்னும் கம்போஸ் பண்ணவே இல்லை. அதற்குள் இப்படியொரு செய்தியை யார் பரப்பியது?. இப்படலே இன்னும் தயாராகவில்லை. அதற்குள் எப்படி ஆட்டம் ஆட கூப்பிடுவேன். இப்பாடல் தயாரான பிறகுதான், இப்பாடலுக்கு எந்த நடிகை பொறுத்தமாக இருப்பார் என்று பார்த்து அழைப்போம்” என்றார்.

தரணியின் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

0 comments:

Post a Comment