Thursday, July 14, 2011

இந்தியில் தயாராகும் ‘கோ’

Friday, Jul 15, 2011கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவா, கார்த்திகா, பியா, அஜ்மல் நடிப்பில் வெளியான படம் "கோ".
 
இதில் ஜீவா பத்திரிகை நிருபராக நடிக்க, மற்றொரு துடிப்பான இளைஞன் கதாபாத்திரத்தில் அஜ்மல் நடித்திருக்கிறார். முன்னாள் நடிகையான ராதாவின் மகள் கார்த்திகா இப்படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக அறிமுகமாகினார்.
 
பத்திரிகை உலகில் பத்திரிகையாளர்கள் சந்திக்கும் சவால்களும், அரசியல் தலைகளை பத்திரிகையாளர்கள் சந்திக்கும் விதங்களையும் இப்படத்தில் தத்ரூபமாக காண்பித்திருந்தார் கே.வி.ஆனந்த்.
 
இத்துணை பெருமை பெற்ற கோ படத்தை இந்தியில் எடுப்பது குறித்து கே. வி. ஆனந்த் ஆலோசித்து வருவதாக அந்த படத்தில் நடித்த அஜ்மல் தெரிவித்தார்.
 
இந்தியில் ஜீவா கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூர் அல்லது ஷாகித் கபூரை நடிக்க திட்டமிட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment