This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Showing posts with label லட்சம். Show all posts
Showing posts with label லட்சம். Show all posts

Friday, July 15, 2011

ரூ 45 லட்சம் விவகாரம்: வடிவேலு மீது பதிலுக்கு இணையதள ஆசிரியர் புகார்

சென்னை: வடிவேலுவால் ரூ 1 கோடி நஷ்டப்பட்ட மலேசிய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சார்பாக நடிகர் வடிவேலு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார் இணைய ஆசிரியர் செல்வகுமார்.

நடிகர் வடிவேலுவின் மேனேஜர் சங்கர் நேற்று முன் தினம் போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து புகார் மனு ஒன்று கொடுத்தார்.

அப் புகார் மனுவில், "ரூ.45 லட்சம் பணம் கேட்டு, வடிவேலுவை ஒரு இணைய தள ஆசிரியர் செல்வகுமார் போனில் பேசி மிரட்டுகிறார். மலேசியாவில் கலைநிகழ்ச்சி நடத்த ஒப்புக்கொண்டுவிட்டு வரவில்லை என்றும் இதற்காக பணம் தரவேண்டும்.

இல்லாவிட்டால் இணைய தளத்தில் தவறான தகவல்களை வெளியிட்டு அசிங்கப்படுத்திவிடுவேன் என்றும் அந்நபர் அடிக்கடி மிரட்டுகிறார். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,"என்று கூறப்பட்டிருந்தது.

பதிலுக்கு புகார்...

இந்த நிலையில், வடிவேலு மீது இணையதள ஆசிரியர் செல்வகுமார் மோசடி புகார் மனு அளித்துள்ளார்.

அப்புகார் மனுவில், "நடிகர் வடிவேலு மலேசியாவில் நடந்த நட்சத்திர கலை விழாவுக்கு வருவதாக முன்பணம் பெற்றார். 2007-ம் ஆண்டு மலேசியாவை சேர்ந்த மைக்கேல் கானாவிடம் ரூ. 4 லட்சம் வாங்கினார். அந்த பணத்தை இன்றுவரை திருப்பித் தராமல் ஏமாற்றி வருகிறார்.

இந்திய தூதரகம் மூலமும் வடிவேலுக்கு பல கடிதங்கள் அனுப்பப்பட்டன. அப்போதைய முதல்வர் கருணாநிதிக்கும் கடிதம் அனுப்பப்பட்டது. ஆனாலும் பயன் இல்லை.

கலைநிகழச்சிக்கு வடிவேலு போகாததால் ரூ.1 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே வடிவேலு மீது புகார் அளிக்க எனக்கு பொது அதிகாரபத்திரம் வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் புகார் அளிக்கிறேன். வடிவேலு மீதான புகாருக்கு போதுமான ஆதாரங்களையும், வீடியோ பதிவையும் கொடுத்துள்ளேன்,’’ எறு குறிப்பிட்டுள்ளார்.Topics: வடிவேலு, elvakumar, website ditor, இணையதளம், vadivelu, compensation

Thursday, July 14, 2011

ரூ.45 லட்சம் கேட்டு மிரட்டல்: இணையதள ஆசிரியர் மீது நடிகர் வடிவலு போலீசில் புகார்

சென்னை: ரூ 45 லட்சம் கேட்டு தன்னை இணையதள ஆசிரியர் ஒருவர் தன்னை மிரட்டுவதாக சென்னை மாநகர போலீசில் புகார் செய்துள்ளார் நடிகர் வடிவேலு.

நடிகர் வடிவேலுவின் மேனேஜர் சங்கர் நேற்று போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அதில், "ரூ.45 லட்சம் பணம் கேட்டு, வடிவேலுவை இணையதள ஆசிரியர் ஒருவர் போனில் பேசி மிரட்டுகிறார். மலேசியாவில் கலைநிகழ்ச்சி நடத்த ஒப்புக்கொண்டுவிட்டு வரவில்லை என்றும் இதற்காக பணம் தரவேண்டும். இல்லாவிட்டால் இணைய தளத்தில் தவறான தகவல்களை வெளியிட்டு அசிங்கப்படுத்திவிடுவேன் என்றும் மிரட்டல் நபர் அடிக்கடி பேசுகிறார். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புகார் மனு மீது விசாரணை நடத்த விருகம்பாக்கம் போலீசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.Topics: vadivelu, website editor, இணையதள ஆசிரியர், வடிவேலு, மிரட்டல்

Saturday, July 2, 2011

அமெரிக்கா போரில் கொன்றது 2.25 லட்சம் மக்கள்

July 2, 2011 | no commentsசெப்டம்பர் 11,2001 தாக்குதலுக்குப் பிறகு, அமெரிக்கா தொடுத்த போர்களால் இதுவரை 2,25,000 உயிர்ப் பலி ஏற்பட்டுள்ளது என்று பல்கலைக்கழக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

ஈராக், ஆப்கானிஸ்தானில் தொடுத்த போர்கள் மற்றும் பாகிஸ்தானிலும் ஏமனிலும் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத்துக்கு எதிரான தாக்குதல்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது பிரவுன் பல்கலைக்கழகம்.

அமெரிக்காவின் இந்தத் தாக்குதல்களில், சுமார் 2,25,000 பேர் உயிரிழந்துள்ளனர்; 3,65,000 பேர் காயமடைந்துள்ளதாக இந்த ஆய்வில் மதிப்பிடப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் அமெரிக்கர்கள் சுமார் 6,000 பேர் உள்பட 31,741 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இதில், ஈராக்கியர்கள் 9,900 பேர், ஆப்கானியர்கள் 8,800 பேர், பாகிஸ்தானியர்கள் 2,300 பேர் மற்றும் 2,300 அமெரிக்க தனியார் பாதுகாப்பு அதிகாரிகளும் அடங்குவர்.

இந்தத் தாக்குதல்களில் இதுவரை பலியான சிவிலியன்களின் எண்ணிக்கை 1,72,000. இதில், 1,25,000 ஈராக்கியர்களும், 35,000 பாகிஸ்தானியர்களும், 12,000 ஆப்கானியர்களும் பலியாகியுள்ளனர்.

மேலும், 168 பத்திரிகையாளர்கள் மற்றும் 266 தன்னார்வ தொண்டு ஊழியர்களும் இறந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்கப் போர்களால் இதுவரை 78 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறியுள்ளனர் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

செப்டம்பர் 11 சம்பவத்துக்குப் பிறகு, அமெரிக்காவால் தொடுக்கப்பட்ட போர்களுக்கு இதுவரை 4.4 டிரில்லியன் டாலர்கள் அளவில் செலவிடப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழக ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

இவை அனைத்தும் அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள மதிப்பீடுகளைக் காட்டிலும் மிக அதிகம் என்பது கவனத்துக்குரியது.

Wednesday, June 29, 2011

தமிழகம் முழுவதும் 10 லட்சம் மரக் கன்றுகள் நடும் காமெடியன் விவேக்

திருச்சி: தமிழ்நாடு முழுவதும் 10 லட்சம் மரங்களை வளர்க்க முடிவு செய்திருப்பதாக நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் யூத் எக்ஸ் னோரா இன்டர் நேசனல் அமைப்பு மற்றும் நடிகர் விவேக் ரசிகர் மன்றம் சார்பில் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் விவேக் கலந்து கொண்டு மரக்கன்றுகள் வழங்கி பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம், பேசிய வி வேக், “ இந்தியாவில் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் 100 கோடி மரக்கன்று நடவேண்டும். தமிழ் நாட்டில் 100 லட்சம் மரக்கன்றுகள் நட முடிவு செய்து உள்ளோம். டிசம்பர் 2011க்குள் 10 லட்சம் மரக்கன்றுகளை நட முடிவு செய்து இதற்காக மரக்கன்றுகள் வழங்கி வருகிறோம். வனத்துறை அமைச்சர், சமூக நல ஆர்வலர்கள், தொழில் அதிபர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் உதவிகளையும் நாடி வருகிறோம் என்று கூறினார்.

நான் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை சந்தித்த போது மரங்களின் நிலமை பற்றி ஒரு கவிதை புத்தகத்தை என்னிடம் கொடுத்தார். அதில் மரம் தனது அவலநிலைப்பற்றி கூறுவதுபோல கவிதை இருந்தது. அதுதான் இதுபோன்ற ஒரு நிகழ்ச்சி நடைபெற காரணம் என்றும் விவேக் தெரிவித்தார்.

நான் அடுத்து கந்தா படத்தில் நடித்து வருகிறேன். இதில் மரங்களை அழித்து ரியல் எஸ்ட்டேட்டில் நிலத்தை விற்ற விவசாயி கடைசியில் சித்தாளாக மாறியதுடன் இலவச அரிசிக்கு வரிசையில் காத்திற்கும் அவலம் பற்றி கூறியுள்ளேன். மரங்களை வளர்த்தால் தான் எதிர்காலம் வளமாகும்’’ என்று கூறினார்.Topics: tamil cinema, மரக்கன்று, vivek fans, donation, விவேக், மரக்கன்றுகள்