This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Showing posts with label இலங்கை. Show all posts
Showing posts with label இலங்கை. Show all posts

Tuesday, July 26, 2011

விபச்சாரக் கும்பலாக மாறிய இலங்கை டிவி நடிகைகள்- 20 பேருக்கு வலைவீச்சு

சிங்கள டிவி நடிகைகள் பெருமளவில் விபச்சாரத்தில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். மிகப் பெரிய அளவில் விபச்சாரத்தில் ஈடுபட்டு வரும் 20 நடிகைளைத் தேடி வருவதாக இலங்கை போலீஸார் தெரிவித்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரு குழுவாக இயங்கி வருவதாகவும் போலீஸார் கூறுகின்றனர்.

கடந்த சில வாரங்களில் நான்கு நடிகைகள் பிடிப்டுள்ளனர். இவர்கள் கொழும்பு நகரின் பல்வேறு பகுதிகளில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக போலீஸார் தெரிவித்தனர். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் பகுதிகளில்தான் இவர்கள் சுற்றிச் சுற்றி வருகிறார்களாம்.

டிவி தொடர்கள், நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான பல நடிகைகள் இதுபோல விபச்சாரத்தில் ஈடுபட்டு வருவது இலங்கை அரசையும், காவல்துறையையும் அதிர வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது 20 முக்கிய நடிகைகளைப் பிடிக்க போலீஸார் நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளனர். இவர்கள் குறித்த தகவல் தெரிந்தால் தெரிவிக்குமாறு பொதுமக்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இதை விட கேவலமான பல செயல்களும் இலங்கையில் தற்போது அதிகரித்து வருகிறதாம். அங்குள்ள கிளப்களில் பல வெளிநாட்டு பெண்களைக் கொண்டு விபச்சாரத்தை ஓஹோவென நடத்தி வருகிறார்களாம்.

பெண்கள், குழந்தைகள் என பாரபட்சமே இல்லாமல் பெருமளவில் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தகவல் ஒன்று தெரிவிக்கிறது. அனுராதபுரத்தில்தான் இது தலைவிரித்தாடி வருவதாகவும் அது கூறுகிறது.

இத்தனை காலமாக வருமானமே இல்லாமல் செத்துப் போய்க் கிடந்த இலங்கை சுற்றுலாத்துறைக்கு வருமானம் சேர்ப்பதற்காக அரசே மறைமுகமாக விபச்சாரத்தை ஆதரிப்பதாகவும் ஒரு குற்றச்சாட்டு இருப்பது நினைவு கூறத்தக்கது.Topics: prostitution, விபச்சாரம், டிவி நடிகைகள், srilanka, இலங்கை

Monday, July 18, 2011

ஹிலாரி இலங்கை குறித்து ஜெயாவுடன் கலந்துரையாடுவார் - ரொபேட் ஓ பிளேக்

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் மற்றும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொள்ளவுள்ள சந்திப்பின் போது இலங்கை குறித்து கலந்துரயாடப்படும் என ஹிலாரி கிளிண்டனுடன் விஜயம் மேற்கொள்ளவுள்ள பராக் ஓபாமாவின் நிர்வாகக் குழுவைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் என சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இதேவேளை முதல்தடவையாக சென்னை விஜயம் மேற்கொள்ளவுள்ள ஹிலாரி கிளிண்டன், அரச சார்பற்ற நோக்கத்துக்காகவே இந்திய விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என்பதனால் இலங்கை குறித்து கலந்துரையாட மாட்டார் என இந்திய வட்டாரங்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச ஊடக நிறவனம் ஒன்றுக்கு ஐக்கிய அமெரிக்காவுக்கான பிரதி ராஜாங்கச் செயலாளர் ரொபேட் ஓ பிளேக் வழங்கிய செவ்வியின் போது தமிழக மக்கள் 60 மில்லியன் பேர் இலங்கை தொடர்பில் கவனத்தில் கொண்டுள்ளதனால் இலங்கை குறித்து கலந்துரையாடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Sunday, July 17, 2011

இலங்கை தொடர்பான விடயங்களை சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிக்க முடியாது

இலங்கை, இஸ்ரேல், அமெரிக்கா போன்ற ரோம் சாசனத்தில் கைச்சாத்திடாத நாடுகள் தொடர்பான விடயங்களை சர்வதேச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது என்று அந்த நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சாங் கியூன் சோங் கூறியுள்ளார்.

இலங்கை யுத்தத்தின் இறுதி நாட்கள் தொடர்பாக கருத்துத் தெரிவித்த அவர் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் இலங்கை என்பன ரோம் சாசனத்தில் கைச்சாத்திட்டிருக்கவில்லையென்று தெரிவித்துள்ளார்.

ஆதலால் ஐ.நா. பாதுகாப்புச் சபையினால் நீதிமன்றத்திற்கு விடயத்தை பாரப்படுத்தாமல் சர்வதேச நீதிமன்றம் அந்த விடயம் தொடர்பாக செயற்பட முடியாது என்று அவர் தெரிவித்ததாக த அவுஸ்திரேலியன் பத்திரிகை தெரிவித்துள்ளது.

அதேசமயம் தேசிய சட்ட முறைகளுக்கு மேலான முறையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இயங்குவதாக அவர் கூறியுள்ளார்.

குற்ற நீதிக்கான தேசிய முறைமைகளை தனது நீதிமன்றம் கொண்டிருப்பதாகக் கூறியுள்ள சோங், ஆனால், சில விமர்சகர்கள் குறிப்பாக அமெரிக்கா, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை தேசிய இறைமைக்கு அச்சுறுத்தலென வர்ணித்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

அவ்வாறான அச்சுறுத்தல் இருந்தால் 116 நாடுகளில் அந்த அச்சுறுத்தல்கள் சிறியளவிலான தாக்கத்தையே கொண்டிருக்குமென்று அவர் தெரிவித்துள்ளார்.

கொள்கை ரீதியின் பிரகாரம் இந்த நாடுகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு அதிகாரத்தை அளித்துள்ளன. தமது ஆயுதப் படைகளின் செயற்பாடு தொடர்பாக தீர்ப்பை வழங்குவதற்கு அவை அங்கீகாரமளித்திருக்கின்றன.

நீதிமன்றத்தின் பங்களிப்புத் தொடர்பாக தவறான புரிந்துணர்வின் அடிப்படையிலேயே தேசிய இறைமை பற்றிய சகல கவலைகளும் காணப்படுவதாக சோங் கூறியுள்ளார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றமானது இறுதியாக தஞ்சமடையும் இடமாக உள்ளது. போர்க் குற்றங்களுக்கான சிறப்பு விடுபாட்டை முடிவுக்குக் கொண்டு வருவதை அதன் சட்ட பரிமாணம் மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கின்றது. அத்துடன், இதேபோன்ற பாரதூரமான குற்றச்செயல்களும் சிறியளவிலேயே உள்ளன என்று அவர் கூறுகிறார்.

ரோம் சாசனத்தை அங்கீகரித்துள்ள நாடுகளின் விடயங்களையே சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் கையாள முடியும். அதேவேளை, தேசிய சட்ட முறைமைகள் செயற்பட முடியாத தன்மையைக் கொண்டிருந்தால் அல்லது விருப்பமின்றியிருந்தால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் நடவடிக்கையெடுக்க முடியும்.

இறைமையுள்ள நாடுகளின் தேசிய எல்லைகளுக்கப்பால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றமானது எந்தவொரு சூழ்நிலையிலும் மேலாகச் சென்றுவிட மாட்டாது, செல்ல முடியாது,செல்லக்கூடாது. அத்துடன், இறைமையுள்ள நாடொன்றின் சட்ட முறைமையின் வழமையான செயற்பாட்டை பாதிக்கும் விதத்தில் செயற்பட முடியாது என்று சோங் கூறியுள்ளார்.

தேசிய சட்ட முறைமையின் நடவடிக்கைக்கு வெளிப்புறமாகவே அடிப்படையில் நாங்கள் இருந்து வருகிறோம். விருப்பமில்லாத தன்மை அல்லது இயலாத தன்மை ஏற்படும்வரை காத்திருக்கின்றோம் என்று அவர் கூறியுள்ளார்.

சிட்னியில் கடந்த வாரம் இடம்பெற்ற பொதுநலவாய சட்ட அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு தென்கொரியாவின் முன்னாள் ஜுரரும் கொரிய இராணுவத்தின் முன்னாள் நீதிபதி, சட்டத்தரணியுமான சோங், த அவுஸ்திரேலியன் பத்திரிகையுடன் உரையாடியுள்ளார்.

கடந்த ஒரு வருடமாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கும் பொதுநலவாய அமைப்பிற்குமிடையே இடம்பெற்ற கலந்துரையாடல்களைத் தொடர்ந்து கடந்த புதன்கிழமை இரு அமைப்புகளும் புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அங்கீகாரமளித்துள்ளன.

2002 இல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஆரம்பிக்கப்பட்டது. நான்கு வருடங்களில் 66 நாடுகள் அங்கீகரித்திருந்தன. மேலும், பல நாடுகள் விரைவில் இணைந்துகொள்ளவுள்ளன. இந்த விடயத்தில் நாங்கள் முன்னேற்றமடைந்து வருகிறோம்.

துனீசியா இந்த சாசனத்தில் கடைசியாக கைச்சாத்திட்டுள்ளது. அரபுலகில் கைச்சாத்திடப்பட்ட முதலாவது நாடாக துனீசியா உள்ளது. எகிப்தும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இணைந்துகொள்ள விருப்பம் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தைச் சாராத தரப்பினரால் மேற்கொள்ளப்படும் சர்வதேச பயங்கரவாத நடவடிக்கைகளை கையாளுவதற்கு நீதிமன்றத்திற்கு முடியாத தன்மை காணப்படுகிறது. அதனால் அந்த விடயம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் கைவிடப்பட்ட விடயங்களில் ஒன்றாகும்.

மற்றொரு கைவிடப்பட்ட விடயமாக இருப்பது இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின் போது இலங்கை இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட துஷ்பிரயோகங்கள் தொடர்பாக ஆவணப்படுத்தப்பட்ட விடயமாகும். இந்த விடயங்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் சட்டப் பரிமாணத்திற்கு அப்பாற்பட்டவையாக உள்ளன.

இனப்படுகொலை, போர்க் குற்றங்கள், மனிதத்துவத்திற்கு எதிரான குற்றம் போன்ற விடயங்களை இந்த நீதிமன்றம் கையாளுகிறது. பயங்கரவாதத்தையும் இதில் இணைத்துக்கொள்ள முயற்சி காணப்பட்டது. ஆனால், இன்றுவரை அந்த விடயத்தில் வெற்றிபெற்றிருக்கவில்லை என்று சோங் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதம் தொடர்பான பிரச்சினை நீதிமன்றத்தை எட்டுவதற்கு நீங்கள் விரும்புகிறீர்களா? என்று கேட்கப்பட்டபோது, அவர் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டார். இந்த விடயம் அரச தரப்புகளை சார்ந்த விடயம் என்றும் நீதிமன்றம் சம்பந்தப்பட்டதல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. பாதுகாப்புச் சபையினால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குப் பாரப்படுத்தப்படாமல் இலங்கை விடயம் குறித்து குற்றவியல் நீதிமன்றத்தால் செயற்பட முடியாதென்று அவர் தெரிவித்திருக்கிறார்.

உலகின் மூலைகளில் குறிப்பிட்ட கொடூரங்கள் நடக்கும்போது அவை குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குப் பாரப்படுத்தலாமென சகலரும் நினைப்பதாகத் தோன்றுகிறது. நாங்கள் நீதிமன்றம் தொடர்பாக அதிகரித்துவரும் அங்கீகாரத்தையிட்டு நாங்கள் மகிழ்ச்சியடைந்துள்ளோம். மறுபுறத்தில் ரோம் சாசனத்தில் விசேடப்படுத்தப்பட்ட சட்ட விதிகளுக்கு அமைவாகவே நாங்கள் செயற்பட வேண்டியுள்ளது.

ஆதலால் இலங்கை, இஸ்ரேல், அமெரிக்கா போன்ற சாசனத்தில் கைச்சாத்திடாத நாடுகள் தொடர்பாக நீதிமன்றத்தால் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

இந்தியாவில் உள்ள ஈழதமிழ் அகதிகள் இலங்கை திரும்ப விருப்பம் UNHCR-தெரிவிப்பு ..!

இந்தியாவில் உள்ள ஈழதமிழ் அகதிகள் இலங்கை திரும்ப விருப்பம் UNHCR-தெரிவிப்பு ..! இலங்கையில் நடைபெற்ற உள்ளூர் யுத்தத்தினால் இடம் பெயர்ந்த இலங்கை தமிழர்கள்இரண்டு லட்சத்து எண்பதாயிரம்தமிழர்கள் இந்தியா சென்றனர் . இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டு புலிகள் ஆயுத .அரசியல் மவுனப்பிற்கு   பின்னர் சிங்கள இனவாத  அரசுதமிழர் தாயகத்தினை ஆக்கிரமித்த பின்னர் தற்போது அங்கு சென்று தமது சொந்த மண்ணில் வாழ இந்த  ஏதிலிகள்ஆர்வம் கொண்டுள்ளனர் என சர்வதேச UNHCRதொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது .

Saturday, July 16, 2011

இலங்கை பிரச்சினை தொடர்பில் இந்தியா மௌனமாக உள்ளது

இலங்கை பிரச்சனை, ஊழல் குறித்து பாராளுமன்ற கூட்டத்தொடரில் கேள்வி எழுப்புவோம் என இந்திய கம்யூனியஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் :-

இலங்கையில் யுத்தம் முடிந்து 2 ஆண்டுகள் கடந்தும் அங்கு இலங்கை தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு ஏற்படவில்லை. இலங்கையில் யுத்தத்தின் போது நடைபெற்ற மனித மீறல்களின் இறுவட்டுக்களைப் பார்த்து பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் நாடுகளின் வெளியுறவுத்துறை கண்டித்துள்ளது.

ஆனால் இலங்கை பிரச்சினையில் சர்வதேச அளவில் விசாரணை நடத்த வேண்டும் என்பதில் இந்தியா மௌனமாக உள்ளது. இலங்கை பிரச்சனை என்பது தமிழக மக்களின் பிரச்சினை மட்டுமல்லாது தேசிய அளவிலான பிரச்சினை ஆகும். இதனையும் பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது கேள்வி எழுப்புவோம், என்றார்.

ஈரானின் உதவியை மறுத்தது இலங்கை

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் வெளியீட்டினை 50,000 பரல்களில் இருந்து 100,000 பரல்களாக அதிகரிக்கும் ஈரானின் உதவி செயற்திட்டத்தினை இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

தற்போது சபுகஸ்கந்தயில் நாளந்தம் 40,000 பரல்கள் சுத்திகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Friday, July 15, 2011

87 இலங்கை அகதிகள் குறித்து நியூசிலாந்து பாராளுமன்றில் விவாதம்

ஜோன் கீ எல்ஸியா கப்பலில் வந்த தமிழ் அகதிகளின் வேண்டுகோள்களை நியூசிலாந்து தலைமை அமைச்சர் நிராகரித்துள்ளது குறித்து கிறீன் கட்சியைச் சேர்ந்த கீய்த் லொக்கி பாராளுமன்றத்தில் நடந்த விசேட விவாதத்தின் போது அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

இந்த அகதிகள் நியூசிலாந்தை நோக்கி வந்த வழியில் இந்தோனேஷியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்தார்.

அகதிகளை இங்கு வரவேற்கவில்லை என்பது ஒரு சாதாரண செய்தியாக இருக்கலாம். ஆனால் அது அந்த அகதிகளின் உயிர் பிரச்சினை என்பதை ஏன் உணரவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இது நியூசிலாந்து மக்களின் மனிதாபிமான உணர்வுகளுக்கு எதிரானதாகும். பெரும் துன்பங்களை அனுபவித்து துயரிலிருந்து தப்புவதற்காக தப்பி ஓடிவருபவர்களைப்பார்த்து இவ்வாறு கூறுவது இதயமற்றவர்களின் செயலாகும் என அவர் விமர்சித்துள்ளார்.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று கப்பலில் வந்துள்ளவர்கள் கியூ வரிசையிலிருந்து பாய்ந்து வந்தவர்கள் என்று ஜோன் கீ கூறியுள்ளார்.

ஜோன் கீ யின் தாய் 1939 ஆண்டு யுத்தத்தில் நாஸி ஜேர்மனியிலிருந்து அகதியாக தப்பி வந்து பிரித்தானியாவில் தஞ்சம் கோரியவர்.

யூத அகதிகளுக்கு அப்போது கியூ வரிசையில் சேர வேண்டியிருந்ததில்லை. அவர்கள் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சட்டவிரோதமாக எல்லை தாண்டி கடவுச்சீட்டு இன்றி பிரித்தானியாவில் தஞ்சம் அமைந்தவர்கள் என்றும் கீய்த் லொக்கி தெரிவித்தார்.

இதன் போது குறுக்கிட்ட சபாநாயகர் தலைமை அமைச்சரின் தனிப்பட்ட குடும்ப விடயங்களை பேசுவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டார்.

இலங்கை வீரர்கள் மீதான தாக்குதல் - மேலும் மூவருக்குப் பிணை

இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது தாக்குதல் நடத்தினர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மேலும் மூவருக்கு லாகூர் தீவிரவாத எதிர்ப்பு நீதிமன்றம் பிணை வழங்க அனுமதியளித்துள்ளது.

மாலிக் அப்துல் ரகுமான், ஜவீட் அன்வர், உபைதுல்லா ஆகியோருக்கே இவ்வாறு பிணை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் இவர்கள் மீது சுமத்தப்பட்டுவந்த குற்றம் அரச தரப்பினரால் சரிவர நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இலங்கை அணி வீரர்கள் சென்ற பஸ் தாக்குதலுக்கு திட்டமிட்ட பிரதான சூத்திரதாரி என சந்தேகிக்கப்பட்ட பாகிஸ்தானின் லஷ்கர்-இ-ஜஹாங்வி என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவரான மாலிக் ஷா இஷாக்கை 14 ஆண்டுகள் சிறை வாசத்திற்கு பின் அந்நாட்டு உச்சநீதிமன்றம் பிணையில் விடுதலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா செனட் வரை சென்றுள்ள சனல் 4வின் இலங்கை கொலைக்களம் ..!

அமெரிக்கா செனட் வரை சென்றுள்ள சனல் 4வின் இலங்கை கொலைக்களம் ..! அமெரிக்காவின் செனட் சபயில் விரைவில் சனல் 4தொலைகாட்சி ஒளிபரப்பியஇலங்கை கொலைக்களம் திரையிட்டு காண்பிக்க படவுள்ளது . இதில் அமெரிக்க கொள்கைகளை வகுப்பவர்களுக்கும், செனட்டர்களுக்கும் மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கும்இந்த அதிர்ச்சி கரமான தமிழர் அழிப்பின் கொலைக்களம் ஆவண படுத்த படவுள்ளன . அவ்வாறு அனைவரும்  இந்த காட்சியினை பார்த்த பின்னர் இலங்கைக்கு பாரிய எதிர்ப்பு கிளம்புவதுடன்தமிழர்களுக்கு அவர்தாம் வாழ்வதற்கான   அரசியல் அழகு வழங்க படும் என நோக்கர்கள் தெரிவித்துள்ளனர் .>!

Thursday, July 14, 2011

பிலிப்பைன்ஸில் இலங்கை மதகுரு கைது

பிலிப்பைன்ஸ் நாட்டில் பசே நகரத்தில் இலங்கையைச் சேர்ந்த மதகுரு ஒருவர் 9 வயது சிறுமி ஒருவரை தவறான நோக்குடன் தொட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பசே நகரத்தில் லிபிடப் பிரதேசத்தில் உள்ள உணவு விடுதியொன்றில் தாயாருடன் இருந்த சிறுமியொருவரின் பிறப்புறுப்புக்களை குறித்த மதகுரு தொட்டார் என பாதிப்புக்குள்ளாகிய பெண் தெரிவித்துள்ளார்.

.சம்பவத்தை நேரில் கண்ட தாய் வீதி சுத்திகரிப்பில் ஈடுபட்டிருந்த ஒருவரின் உதவியை நாடி குறித்த இலங்கை மதகுருவை கைது செய்வதற்கான நடவடிக்கை எடுத்துள்ளார்.

43 வயதான குறித்த சந்தேக நபர் மனிலாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் கடமையாற்றி வந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவர் மீது பாலியல் மற்றும் சிறுவர் துஷ்பிரயோக சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சந்தேக நபர் அவரது சட்டத்தரணியுடன் மாத்திரம் கலந்துரையா வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

87 இலங்கை அகதிகள் - மன்மோகனை தலையிடுமாறு வைகோ கோரிக்கை

நியூசிலாந்து நாட்டில் அடைக்கலம் தேடி சென்ற 87 இலங்கை தமிழர்களை இந்தோனேஷியா அரசு பிடித்து வைத்திருக்கும் விவகாரத்தில் இந்திய பிரதமர் தலையிட வேண்டும் என மதிமுக., பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 12ம் திகதி இலங்கையிலிருந்து ஒரு படகில் 87 இலங்கை தமிழர்கள் அடைக்கலம் தேடி நியூசிலாந்து நாட்டிற்கு சென்றனர்.

அவர்கள் இந்தோனேஷிய கடல் எல்லையில் நுழைந்த போது அத்துமீறி நுழைந்ததாக கூறி அந்நாட்டு அரசு அவர்கள் பிடித்து மீண்டும் இலங்கை திரும்ப வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வைகோ எழுதிய கடிதத்தில், இலங்கை தமிழர்கள் 87 பேரும் சட்டவிரோதமாக அங்கு செல்ல முயற்சிக்க வில்லை. சர்வதேச விதிகளின்படி அடைக்கலம் கோருவது அவர்களின் உரிமை.

இவ்விவகாரத்தில் பிரதமர் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி இந்தோனேஷியாவிலிருந்து அவர்களை விடுவிக்க உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கை வான்தளத்தில் இருந்து போலி பாஸ்போட்டில் இத்தாலி செல்ல முயன்ற இரானியர் கைது .

இலங்கை வான்தளத்தில் இருந்து போலி பாஸ்போட்டில் இத்தாலி செல்ல முயன்ற இரானியர் கைது .

இலங்கை கட்டுநாயக்க வான்தளத்தில் இருந்து போலி கடுவுசீட்டு மூலம்
இத்தாலிக்கு செல்ல இருந்த இரானியர் ஒருவர் குடிவரவு குடியகல்வு
அமைச்சினால் கைது செய்ய பட்டுள்ளார் .

குறித்த நபரை எதிர்வரும் இருபத்தி எழாம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு
நீர்கொழும்பு நீதவான் தெரிவித்துள்ளார் ..!

Wednesday, July 13, 2011

இந்தியாவில் இலங்கை குறித்து பேசமாட்டாராம் ஹிலாரி

சென்னைக்கு ஜூலை 19ம் திகதி விஜயம் செய்யவுள்ள ஹிலாரி கிளிண்டன் இலங்கை குறித்தோ அல்லது வெளிநாட்டு கொள்கைகள் குறித்தோ கலந்துரையாடமாட்டார் என சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தகுற்றங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள ஐக்கிய நாடுகளுக்கு இடங்கொடுக்க வேண்டும் என அமெரிக்க வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Monday, July 11, 2011

இலங்கை 162 மில். டொலர்களை ஸ்டான்டர்ட் சார்டர்ட் வங்கிக்கு வழங்க வேண்டும்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் சுமார் 162 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் அதற்கான வட்டியுடன் சேர்த்து ஸ்டான்டர்ட் சார்டர்ட் வங்கிக்கு வழங்க வேண்டும் என லண்டன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஹெஜிங் உடன்படிக்கைக்கு அமைவாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் தொடர்பில் நாம் கனியவள அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்திடம் கேட்டபோது, இது தொடர்பான சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கான ஆலோசனைகளை பெற்று வருவதாக தெரிவித்தார்.

ஜூன் மாதம் இலங்கை மின்சார சபைக்கு 20 மில்லியன் ரூபா வருமானம்

ஜூன் மாதம் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் மூலம் இலங்கை மின்சார சபைக்கு 19,787,155.14, ரூபா வருமானமாக கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதில் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட அபராதங்களில் இருந்து 3,705,000 ரூபா இலங்கை மின்சார சபைக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக பாவனையாளர்களால் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத செயற்பாடுகளால் பல மில்லியன் நட்டம் மின்வலு, எரிசக்தி அமைச்சு ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையை இலாபமீட்டும் ஒரு நிறுவனமாக மாற்றுவதற்கு சிறப்பு குழுவொன்றை அமைத்து அதன் மூலம் மின்சார சபைக்கு ஏற்படும் நட்டத்ததை தவிர்ப்பதற்காக மின்வலு, எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகினறமை குறிப்பிடத்தக்கது.

முறைகேடாக வாசிப்பு மானியில் மேற்கொள்ளப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் 228 வழக்குகளும் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றமை தொடர்பில் 350 வழக்குகளும் பதிவுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.

Friday, July 1, 2011

இலங்கை கிரிக்கெட் வாரியம் அவுட்

July 2, 2011 | no commentsஇலங்கை கிரிக்கெட் வாரியத்தை திடீரென கூண்டோடு கலைத்து விட்டனர். உருப்படியில்லாத ஒரு கிரிக்கெட் வாரியம் இலங்கை கிரிக்கெட் வாரியம். நிர்வாகத் திறமையின்மை, ஊழல், அரசியல் குறுக்கீடுகள் என குண்டக்க மண்டக்க செயல்பட்டு வரும் அமைப்புதான் இலங்கை கிரிக்கெட் வாரியம். இலங்கை அரசியல்வாதிகளின், குறிப்பாக ராஜபக்சே குடும்பத்தினரின் ஆதிக்கம் இங்கு அதிகம்.

சமீபத்தில் ஹாங்காங்கில் நடந்த ஐசிசி வருடாந்திர மாநாட்டில் தேசிய கிரிக்கெட் வாரியங்களில் அரசியல்வாதிகளுக்கு இடமில்லை என்ற அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது இலங்கை கிரிக்கெட் வாரியத்தை அந்த நாட்டு அரசு கலைத்து விட்டது. விரைவில் புதிய கமிட்டி அமைக்கப்படும் என்று இலங்கை விளையாட்டுத்துறை செய்தித் தொடர்பாளர் ஹர்ஷா அபயக்கூன் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசின் கட்டுப்பாட்டுக்கு தற்போது கிரிக்கெட் வாரியம் போய்விட்டதால் ஐசிசியால், இலங்கை கிரிக்கெட் வாரியம் சஸ்பெண்ட் செய்யப்படும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கடந்த 7 ஆண்டுகளாக அரசியல்வாதிகளுக்கு ஆதரவானவர்களை உடைய இடைக்கால கமிட்டிதான் நிர்வகித்து வருகிறது.

2012-க்குள் சுதந்திரமான தேர்தல்களை கட்டாயம் நடத்த வேண்டும் என்பதற்காக விதிமுறைகளை திருத்துவதற்கு இந்த வாரம் நடைபெற்ற ஐசிசியின் ஆண்டுக்கூட்டத்தில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.

ஊழல் குற்றச்சாட்டு காரணமாக தேசிய டெஸ்ட் கிரிக்கெட்டின் முன்னாள் பந்துவீச்சாளர் சோமச்சந்திர டி சில்வா தலைமையிலான நிர்வாகம் தற்போது பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் வாரியம் தற்போது ஒரு பெரும் கடனாளி அமைப்பாகும். கிட்டத்தட்ட 15 மில்லியன் டாலருக்கு மேல் அது கடன் வைத்துள்ளது. இந்தக் கடனை அடைக்க அது இந்திய கிரிக்கெட் வாரியத்தைத்தான் நம்பியுள்ளது. எல்லாம் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிகளை நடத்தியதால் வந்த வினை. உலக அளவில் தனது நாடு பாதுகாப்பாகவும் பந்தாவாகவும், இருப்பதாக காட்டிக் கொள்ள பெரும் பணத்தை வாரியிறைக்க வைத்து புதிய ஸ்டேடியங்கள் கட்டவும், பழைய ஸ்டேடியங்களை பிரமாண்டமாக புதுப்பிக்கவும் கட்டாயப்படுத்தினார் ராஜபக்சே. விளைவு, இப்போது தலைக்கு மேல் போய் விட்டது கிரிக்கெட் வாரியத்தின் கடன்.

ஹம்பந்தோட்டா அருகே புதிய கிரிக்கெட் ஸ்டேடியத்தைக் கட்டி அதற்கு ராஜபக்சே பெயரைத்தான் வைத்துள்ளனர். இதுதான் பெரும் கடன் சுமையை ஏற்றி விட்டதாம். இந்தக் கடனை சமாளிக்க மானியம் தருமாறு அரசிடம் கேட்டபோது அரசு அதைக் கண்டு கொள்ளவே இல்லை. காரியம் முடிந்ததும் கையைக் கழுவி விட்டது இலங்கை அரசு. இப்போது வாரியத்தையும் கலைத்து விட்டது.