Monday, July 18, 2011

ஹிலாரி இலங்கை குறித்து ஜெயாவுடன் கலந்துரையாடுவார் - ரொபேட் ஓ பிளேக்

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் மற்றும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொள்ளவுள்ள சந்திப்பின் போது இலங்கை குறித்து கலந்துரயாடப்படும் என ஹிலாரி கிளிண்டனுடன் விஜயம் மேற்கொள்ளவுள்ள பராக் ஓபாமாவின் நிர்வாகக் குழுவைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் என சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இதேவேளை முதல்தடவையாக சென்னை விஜயம் மேற்கொள்ளவுள்ள ஹிலாரி கிளிண்டன், அரச சார்பற்ற நோக்கத்துக்காகவே இந்திய விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என்பதனால் இலங்கை குறித்து கலந்துரையாட மாட்டார் என இந்திய வட்டாரங்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச ஊடக நிறவனம் ஒன்றுக்கு ஐக்கிய அமெரிக்காவுக்கான பிரதி ராஜாங்கச் செயலாளர் ரொபேட் ஓ பிளேக் வழங்கிய செவ்வியின் போது தமிழக மக்கள் 60 மில்லியன் பேர் இலங்கை தொடர்பில் கவனத்தில் கொண்டுள்ளதனால் இலங்கை குறித்து கலந்துரையாடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment