Monday, Jul 18, 2011அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார், ‘மங்காத்தா’ படத்தின் கேரக்டர் குறித்து முதன் முதலாக வாய் திறந்திருக்கிறார். இப்படத்தில் மிகவும் மோசமான கேரக்டரில் நடித்திருப்பதாக அஜித் குமார் தெரிவித்துள்ளார். இப்படம் குறித்தும், இப்படத்தில் இவருடைய கேரக்டர் குறித்தும் பேசியதாவது;
“மங்காத்தா படத்தில் 5 விதமான கேரக்டர்கள் வருகின்றன. இந்த 5 கேரக்டர்களுமே மோசமானவார்கள். இதிலே மிகவும் மோசமானவனாக, ரொம்ப கெட்டவனாக நடித்திருக்கிறேன்.
நான் பார்த்த இயக்குனர்களில் வெங்கட் பிரபு சிறந்த உழைப்பாளி. அவர் திரையில் என்ன கொண்டு வர வேண்டும் என்று விரும்பினாரோ அதை சரியாக கொண்டு வந்திருக்கிறார். அவரது அர்பணிப்பும், உழைப்பும் படத்தை தரமானதாக கொண்டுவந்திருக்கிறது
இப்படத்தில் நடித்த அனைவருமே தங்களது பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள். தீனா, பில்லா போன்ற படங்களுக்கு அற்புதமாக இசையமைத்து வெற்றி தேடித் தந்த யுவன் சங்கர் ராஜா, இப்படத்திலும் தனது திறைமையை நிரூபித்திருக்கிறார். படத்திற்காக உங்களோடு சேர்ந்து நானும் காத்திருக்கிறேன்” என்றார்.
இப்படத்தில் அஜித் குமாருடன், ஆக்ஷன் கிங் அர்ஜுன், திரிஷா, ஆண்ட்ரியா, லட்சுமி ராய், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலரும் நடிதுதள்ளனர். அடுத்த மாதம் 12-லிருந்து 19-ம் தேதிக்குள் இப்படம் ரிலீஸாக இருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment